This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

ஞாயிறு, 30 நவம்பர், 2008

அரசியல் வாதிகளே! மனித உரிமை காவலர்களே!! எங்கு ஒளிந்து கொண்டீர்கள்?

கடந்த நான்கு நாட்களாக, இந்தியாவை, ஏன் உலக நாடுகளையே உலுக்கி வரும் மும்பாய் நகரத்தின் மீது தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகளைப்பற்றிதான் அனைத்து டி.வி. மற்ற பிற் மீடியாக்களில் செய்தி வருகிற்து. 'செக்யூலர்' அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் காங்கிரஸ் அரசே, பாகிஸ்தானை சுட்டி காண்பிக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சரும், மகாராஷ்டிரா முதலமைச்சரும் ராஜ்னாமா செய்து விட்டதாக செய்திகள் வருகின்றன. இந்திய் பொருளாதாரத்தை பாழ்படுத்திய சிதம்பரத்தை எப்படி தூக்குவது என்று எண்ணிய வேளையில், சாமர்திய்மாக அவரை உள்துறைக்கு தள்ளிவிட்டார்கள். (ஒரே கல்லில் இரண்டு மாங்காய்). மகராஷ்டிர துணை முதல்வர் 'இது ஒரு சிறிய நிகழ்வு' என்கிறார். என்ன வெட்கக்கேடு.

இந்த பயங்கரவாததிற்கு பிறகு, அனைத்து டி.வி.களிலும் பொதுமக்கள் அரசியல் வாதிகள் மீது தங்கள் வெறுப்பினை உமிழ்கிறார்கள். ஒவ்வொரு தலைவருக்கும், எவ்வளவு பாதுகாப்பு. ஆனால் மக்களூக்கு மட்டும் இல்லை. தீவிரவாதிகளை நியாயப்படுத்தி பேச்சு வேறு. பார்லிமெண்டை தாக்கிய் தீவிரவாதியை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் தூக்கில் இட முடியவில்லை. 'சிமி' அமைப்பு தடை செய்யப்டும் போது, அவர்களுக்கு ஆதரவாக லல்லுவின் தாண்டவம். இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகளின் தலைவர் பிர்பாகரனின் பிறந்த நாளை, சென்னை உயர்நீதினற வளாகத்தில் கொண்டாடுவது போன்ற ப்ல நிகழ்வுகளால், மக்கள் அரசியல் வாதிகள் மீது மிகுந்த வெறுப்பு அடைந்துள்ளார்கள். அந்த இயக்கத்தின் ஒரு தலைவர் மறையும் போது, இந்திய அரசியல் சட்டதிற்கு உட்பட்ட தமிழக முதல்வர் 'கவிதை அஞ்சலி' செலுத்துகிறார். இந்த தலைவர்களெல்லாம், மும்பை ஹோட்டலில் மாட்டிக்கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவர்க்ள் தீவிரவாதத்தின் கொடுமையை உணர்ந்திருப்பார்கள்.

இந்திய கமாண்டோக்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றினார்கள். அவர்களது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செய்ததை டி.வி. கண்ட போது, அவர்கள்தான் உண்மையான ஹீரோக்களாக இருந்தார்கள். அங்கு வந்த அரசியல்வாதிகளை மக்கள் திட்டியதையும் காண்பித்தார்கள்.

தீவிரவாதிகளை தாக்கி பேசினாலே, ஒரு குறிப்பிட்ட மததினரை தாக்குவதாக நினைத்து கொண்டு, தீவிரவாததிற்கு மறைமுகமாக அனைத்து தலைவர்களும் ஆதரவளித்து, தீவிரவாததை நியாயப்படுத்துகிறார்கள். அந்த குறிப்பிட்ட மததினரும், இவர்களின் குள்ள நரித்தனத்தை புரிந்து கொள்ளாமல், ஏதோ அவர்கள் தான் தங்கள் காவலர்கள் போன்று நினைக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அவர்களும் தைரிய்மாக வெளியே வந்து, தீவிரவாததிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு ஜாதி மதம் கிடையாது. அவர்கள் மனித இனத்தின் எதிரிகள். மும்பையில் நடந்த தாக்குதலில் அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் இறந்திருக்கிறார்கள்.

மனித உரிமை இயக்கங்களோ, சொல்லவே வேண்டாம். தீவிரவாதிகளை கைது செய்யும் போதும், தூக்கில் இடும் போதும், அவர்களுக்கு ஆதரவாக வெடகமின்றி கத்துவார்கள். அந்த தீவிரவாதிகள், மக்களை தாக்கும் போது, அந்த மனித உரிமை ஆர்வலர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். தீவிரவாதம் என்பது மனித உரிமை மீறல். மும்பையில் 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தைபற்றி எந்த மனித உரிமை அமைப்புகளாவது சிந்தனை செய்ததுண்டா? ஆனால், தீவிரவாதிகளை தூக்கில் இடும்போது மட்டும், தீவிரவாதிகளின் குடும்பம் நினைவுக்கு வந்து விடுகிறது. இதுவரை எந்த மனித உரிமை அமைப்புகளும் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. அவர்கள் தீவிரவாத அமைப்புகளீன் ஏஜண்டுகளாக இருப்பவர்கள்.

தீவிரவாதத்தை மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ ஆதரிப்பவர்கள், அவர்கள் அரசியல் வாதிகளாகட்டும் அல்ல்து மனித உரிமை ஆர்வலர்களாக்ட்டும், அவர்களும் 'தீவிரவாதிகளே'. இதை மக்கள் உணரும் காலம் வந்து விட்டது.

மக்களுடன் இருக்க வேண்டிய தலைவர்கள், ஒரு பெரிய பாதுகாப்பு படையுடன் செல்கிறார்கள். அவர்கள், தீவிரவாதிகளை ஆதரிப்பதால், தீவிர்வாதிகளிடமிருந்து எந்த ஆபத்தும் இல்லை. பிறகு எதற்கு இந்த பாதுகாப்பு? பந்தாவிற்கா அல்லது மக்களுடைய கோபத்திலிருந்து பாதுகாத்து கொள்ளவா? ஆனால் மக்களுக்கு மட்டும் எந்த பாதுகாப்புமில்லை.

வியாழன், 13 நவம்பர், 2008

சட்டத்தை மீறும்் சட்டக்கல்லூரி மாணவர்கள்

சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் பயிலும் இரு பிரிவு மாணவர்களிடையே நேற்று நடந்த வன்முறை, இன்றைய (நவம்பர் 13, 2008) நாளிதழ், மற்றும் தொலைகாட்சிகளில் தலைப்பு செய்தியாகி விட்டது.

(போட்டோ" நன்றி தி இந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்)

விஷயம் இதுதான்.


தேவர் திருமகனாரின் ஜயந்தி விழாவிற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் அடித்த போஸ்டரில், கல்லூரியின் பெயரை குறிப்பிடும் போது 'டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி' என்று குறிப்பிடாமல் 'அரசு சட்டக்கல்லூரி' என்று குறிப்பிட்டு இருந்ததுதான் காரணம் என்கிறார்கள். அதுதான், வன்முறையில் முடிந்து விட்டது.

தவிரவும், மாண்வர்கள் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் வன்முறையில் ஈடுபட்டதுதான் விவகாரமாகிவிட்டது.

1. டாக்டர் அம்பேத்கார் மற்றும் தேவர் திருமகனார் இருவருமே, ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பிறந்து இருந்தாலும், அவர்கள் தங்கள் சாதனையால் , தேசிய தலைவர்களாக உருவானவர்கள். அவர்களை, அந்தந்த வகுப்பினர், தங்க்ள் பிரிவிற்குள் அடக்குவதால் தான், இந்த வன்முறைகள் நிகழ்கின்ற்ன. ஒவ்வொரு ஆண்டும், அனைத்து அரசியல் தலைவர்களும், தேவர் திருமகனாரின் குரு பூஜைக்கும், டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினத்திற்கும் வரிசை வரிசையாக சென்று அதை பெரிய நிகழ்ச்சியாக ஆக்கிவிட்டனர். அந்த மாபெரும் தேசிய தலைவர்களை ஒரு 'வோட்டு வங்கியாக' ஆக்கி விட்டனர். அதனால் தான், இந்த பிஞ்சு குழந்தைகளின் மனத்தில் விஷ விதை விதைத்து, நஞ்சை வளர்கின்றனர்.

அந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களின் மீது மரியாதை இருந்தால், அவர்களை ஒத்த மற்ற தலைவர்களான இராஜாஜி, நேதாஜி, பாரதியார், சி. சுப்ரமணியன், பக்தவத்சலம், சத்யமூர்த்தி, காமராஜர், போன்ற மற்ற மாமனிதர்களுக்கும் அல்லவா, போட்டி போட்டுக் கொண்டு மரியாதை செலுத்த வேண்டும். அவர்களையெல்லாம், வோட்டு வங்கியாக, மற்ற அரசியல் மற்றும் ஜாதி தலைவர்கள் உருவாக்க வில்லை.

டாக்டர் அம்பேத்கார், தேவர் திருமகனார், ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட தேசிய தலவர்கள். அவர்களுக்கு ஜாதி சாயம் பூசி அவர்களை சிறுமைப்படுத்த வேண்டாம். தங்களுடைய குறுகிய நோக்கத்திற்காக, அரசியல் தலைவர்களும், ஜாதி தலைவர்களும் மாபெரும் மனிதர்களை இழிவு படுத்த வேண்டாம். அவர்கள் இன்று நம்மிடையே உயிருடன் இருந்தால், அவர்களே விரும்ப மாட்டார்கள். பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்காதீர்கள்.

2. இரண்டாவது, ச்ட்டத்தை காப்பாற்ற வேண்டிய சட்ட மாணவர்களே, அரிவாள், கத்தி, கட்டை ஆகிய வன்முறை ஆயுதங்களை எடுத்துக் கொள்வது, கவலை அளிக்கிறது. நாளைய நீதிபதிகள், இந்த மாணவர்களிலிருந்துதான் வருகிறார்கள். சுதந்திர போராட்டங்களை வழிநடத்தி வெற்றி பெற்ற் காந்தி, நேரு, இராஜாஜி, சதியமூர்த்தி, அம்பேத்கார், போன்றவர்களெல்லாம், சட்டத்துறை வல்லுநர்களே. நம் நாட்டில், சட்ட வல்லுநர்களுக்கு, எப்போதுமே, ஒரு தனி மரியாதை உண்டு.

3. மூன்றாவது, தங்கள் கன் முன்னால் வன்முறை நிகழும் போது, போலீஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த செய்தி மிகவும் வேதனையானது. கல்லுரி வளாகத்தில், அனுமதியில்லாமல் நுழைய கூடாது என்று ஒரு சப்பைகட்டு கட்டி கொண்டு, வேடிக்கை பார்ப்பது போலீஸ் நிர்வாகத்திற்கு அழகல்ல. ஒரு கல்லூரியில், பகிரங்கமாக, போலீஸ் முன்னிலையில் ஒரு கொலையோ, அல்லது, கற்பழிப்போ நடந்தால், போலீஸ் என்ன செய்வார்கள். கல்லூரி நிர்வாகத்தின் அனுமதிக்காக காத்திருப்பார்களா?

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...