கடந்த் ஜூன் 2010 ல் கோவையில் செம்ம்பொழி மாநாடு நடநத போது, அமைதியான முறையில்
வைணவம் வளர்க்கும் தமிழ் பற்றி ஒரு பதிவும், ஒரு பேட்டியும் வெளிய்ட்டு இருந்தோம். அது மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த பதிவில், வைணவக்கோயில்களில், வைகுண்ட ஏகாதசிக்கு பத்து நாட்கள் முன்பும், பின்பும் ஒரு தமிழ் திருவிழாவாக நடைபெறுவதையும் குறிப்பிட்டு இருந்தோம்.
திருவரங்கனின் தமிழ் பற்று
|
திருவரங்கம் இராஜ கோபுரம் |
தற்போது, வைணவக்கோயில்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து என்கிற விழா துவங்கியுள்ளது. எனக்கு எப்போதும் திருவரங்கத்தில் அரங்கன் போற்றும் தமிழ் பற்றி ஒரு பெரிய மதிப்பு உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பன்னிரண்டு ஆழ்வார்கள், 108 திவ்ய தேசங்கள் என்பபடும் வைணவத்த்லங்களுக்கு சென்று 4000 பாசுரங்களில் அழகு தமிழில் திருமாலை போற்றி பாடியுள்ளனர். இதற்கு நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் என்று பெயர். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாதமுனிகள், இந்த நாலாயிர பாசுரங்களையும் தொகுத்து மக்களுக்கு வழங்கினார். நாதமுனிகளுக்கு பின்பு அவதரித்த இராமானுஜர், அனைத்து வைணவத் திருத்தலங்களிலும், காலையில் திருமாலை துயில் எழுப்புவது முதல், இரவு பள்ளியறைக்கு எழுந்தருள செயவது வரை வழிபாட்டிற்கு தமிழை முன்னிலைப்படுத்தி, புதிய முறைகளை புகுத்தினார். இராமானுஜர் வகுத்த இந்த வழிமுறைகள் தான் இன்று வரை அனைத்து வைணவத் திருக்கோவில்களிலும் பின்பற்றப் பட்டு வருகின்றன.
நாதமுனிகளும், இராமானுஜரும் திருவரங்கத்தில் வாழ்ந்ததாலோ என்னவோ, திருவரஙகனுக்கு, தமிழ் மீது அதிக பற்றும் பாசமும் உண்டு. பன்னிரண்டு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள் திருவரஙகன் மீது பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள். அந்த ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களின் எண்ணிக்கை 247. தமிழில் ஆய்த எழுத்து உட்ப்ட மொத்த எழுத்துக்கள் 247. அதிகாலையில், திருவரஙகனை துயில் எழுப்பவும், திருப்பள்ளி எழுச்சி என்கிற தமிழ் பாசுரங்களை வீணையில் இசைத்து தான் துயில் எழுப்புவார்கள்.
அரையர்கள் வரலாறு
நாலாயிர திவ்ய பரபந்தங்களை தொகுத்த நாதமுனிகள், அதை மக்களிடம் கொண்டு செல்வதற்காக, மேலை அகத்து ஆழ்வான் மற்றும் கீழை அகத்து ஆழ்வான் என்கிற தன்னுடைய இரண்டு மருமகன்களுக்கும், நாலாயிர பிரபந்தங்களை பண் மற்றும் தாளத்துடன் கற்பித்து, அவர்களை திருவரங்கன் முன்பு இசைப்பதற்காக ‘அரையர்கள்’ என்கிற ஒரு கூட்டத்தை உருவாக்கினார். இது 1200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அரையர்கள் அனைவரும் ஆண்களே.
இந்த அரையர்கள் பரம்பரையில் வந்தவர்கள், அரங்கன் முன்பு தமிழ் பாசுரங்களை பண்ணுடன் பாடுவதற்காகவும், நடனமாடுவதற்கும் பயிற்சி பெற்றவர்கள். அந்த அரையர்கள் அனைவரும், கோயிலுக்கு கிழக்கு மதில் சுவரை ஒட்டியுள்ள வீதியில் வசித்து வந்தனர். இராமானுஜர் காலத்தில், அந்த வீதிக்கு ‘செந்தமிழ் பாடுவார் வீதி’ என்கிற பெயர் இருந்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. தற்போது இந்த தெரு ‘கிழக்கு உத்தர வீதி’ என்று அழைக்கப்படுகிறது.
நாதமுனியின் பரம்பரையில் வந்தவர்கள், திருவில்லிபுத்தூர், திருநாராயணபுரம், ஆழ்வார் திருநகரியிலும் தமிழ் தொண்டுகளை செய்து வந்தனர். அரையர்கள் என்றால், ‘இசை அரசர்கள்’ என்று பொருள். அவர்கள் தமிழ் பாசுரங்களை சேவிக்கும் போது (ஓதுவது என்பதை வைணவர்கள் மரியாதையாக சேவிப்பது என்பார்கள்), ஒரு நீண்ட கூம்பு வடிவிலுள்ள ஒரு குல்லாயும், அரங்கனுக்கு அணிவிக்கப்பட்ட ‘தொங்கு பரிவட்டம்’ என்கிற ஒரு நீண்ட அங்கவஸ்திரத்தையும் அணிந்திருப்பார்கள்.
இந்த அரையர்கள், திருவரஙகனுக்கு தமிழ் தொண்டு ஒன்றைத்தான் கடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் பாசுரங்களுக்கு முன்பு சொல்லக்கூடிய வடமொழி ஸ்லோகங்களுக்கு பதிலாக, ‘கொண்டாட்டம்’ என்று கூறக்கூடிய தமிழ் பாசுரங்களைத்தான் சொல்வார்கள். அந்த அள்விற்கு, வடமொழி கலப்பில்லாத தமிழை பயன்படுத்துபவர்கள். உதசவ காலங்களில் பாசுரங்களை பண்ணுடன் இசைப்பார்கள். மேலும், சில விசேட நாடக்ளில், அரங்கனுக்கு, அமுது படைக்கும் போது, அரையர்கள், அரங்கன் அருகில் சென்று திருப்பாவை பாசுரங்களை, பண் மற்றும் தாளத்துடன் பாடுவார்கள். மேலும், அரங்கன் தேரில் எழுந்தருளியிருக்கும் போது, அரையர்கள், தேரில், அரங்கனுக்கு வெகு அருகில் அமர்ந்து கொண்டு, தமிழ் பாசுரங்களை பண்ணுட்னும் தாளத்துடனும் இசைப்பார்கள்.
ப்கல் பத்து இராப்பத்து - ஒரு முத்தமிழ் திருவிழா
(Photo courtesy: http://alexpandian.blogspot.com/)
ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு பத்து நாட்கள், பகல் பத்து என்றும், பிறகு வரும் பத்து நாட்கள், இராப்பத்து என்றும் கூறுவார்கள். அந்த இருபது நாட்களில், அனைத்து வைணவக் கோயிலகளிலும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களை சேவிப்பார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் ந்டைபெறும் ஒரு பெரிய தமிழ் திருவழா.
திருவரங்கத்தில், அரையர் சேவை என்பது ஒரு புகழ் பெற்றது. இந்த நாட்களில், அரங்கனும், பன்னிரண்டு ஆழ்வார்க்ளும். இராமானுஜர் உட்பட ப்ல வைணவ ஆச்சாரியார்கள் மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார்கள். இந்த இருபது நாட்களில், அரையர்கள், தங்கள் குல்லாய் மற்றும் தொங்கு பரிவட்டம் அணிந்து, ஆழ்வார்கள் புடை சூழ எழுந்தருளியிருக்கும் அரங்கன் முன்பு தமிழ் பாசுரங்களை பண் மற்றும் தாளத்துடன் இசைத்தும், நடனமாடியும் தமிழுக்கும் ஆழ்வார்களுக்கும் பெருமை சேர்ப்பார்கள். இது தவிர, ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களுக்கு, முன்னோர்கள் செய்த விளக்கத்தையும் கூறுவார்கள். பாசுரங்களிலிருந்து, இராவண வதம், க்ம்ச வதம் போன்ற பகுதிகளையும், நடித்தும் காண்பிப்பார்கள். இந்த 20 நாட்களும், ஒரு முத்தமிழ் விழாவாக நடைபெறும்.
அரையர்கள், இந்த பாசுரங்களையும், விளக்கங்களையும் மனப்பாடமாக கூறுவது தான் ஒரு சிறப்பு அம்சமாகும். இதற்கு கிட்டத்தட்ட, சுமார் இருபது ஆண்டுகள் தங்கள் பெரியவர்கள் மூலமாக பயிற்சி எடுக்கிறார்கள். அரங்கன் முன்பு தமிழ் பணி செய்வதே இவர்களின் ஒரே நோக்கம். அரையர் சேவை என்பது இந்த் இருபது நாட்கள் மட்டும் தான். இவர்கள் அரங்கன் முன்பு தவிர வேறு எங்கும் இதை செய்ய மாட்டார்கள். இதை போட்டோ, வீடியோ எடுக்கவும் அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு நாளும், அரங்கன் சார்பில், ஒரு கோவில் அலுவலர், அரையர்கள் வீட்டிற்கு சென்று, அவர்களை கொவில் மரியாதைகளுடன் அழைத்து வருவார்கள். இவர்களுக்கு எந்த சன்மானமும் கிடையாது. அரங்கன் சார்பில் அளிக்கப்படும் மரியாதை மட்டும் தான்.
சென்னையிலுள்ள சபாக்கள், இந்த அரையர்களை, தங்கள் சபாக்களில், ‘அரையர் சேவை’ செய்ய அழைத்தார்கள். அதிக பணம் தருவதாகவும் கூறினார்கள். கோடி கோடியாக கொடுத்தாலும், அரையர்கள், அரங்கன் முன்பு தவிர வேறு எங்கும் செய்வதில்லை என்று மறுத்து விட்டார்கள். ‘அரையர் சேவையை’ அனுபவிக்க வேண்டுமென்றால், இந்த இருபது நாட்களில், திருவரங்கம் சென்று தான் அனுபவிக்க வேண்டும்.
தமிழுக்கு நேரவிருக்கும் அவமானம் - அதிர்ச்சியான தகவல்
தமிழ்பணிகளுகாகவே, தங்களை அர்ப்பணித்துள்ள இந்த அரையர்களுக்கு ஒரு பெருமையான மரியாதை பல நூறு ஆண்டுகளாக திருவரங்கன் சார்பில் வழங்கப்படுகிறது. விளக்குவதற்காக ஒரு உதாரணம் கூறுகிறேன். அப்துல் கலாம் போன்ற மரியாதைக்குரிய ஒரு பெரியவரை நாம் சந்தித்து முடித்தபின், அந்த பெரியவர், தன்னுடைய உதவியாளரை அழைத்து, நம்மை அவரது காரிலேயே, தன்னுடைய ஓட்டுநர் மூலமாக நம்மை வீட்டில் விட்டு வர சொலவது எவ்வளவு நமக்கு ஒரு பெரிய பெருமையையும் அங்கீகாரத்தையும் தரும் என்பதை நினைவில் கொள்ளவும்.
திருவரஙகத்தில், அரங்கனை ‘கேடயம்’ என்கிற ஒரு பல்லக்கில் எழுந்தருளசசெய்து, ஸ்ரீபாதம் தாங்கிகள் சுமந்து செல்வார்கள். இந்த பல்லக்கு அரஙகனுக்கு மட்டும் உபயோகப்படுத்தக்கூடியது. அது தவிர எந்த கோவில்களிலும், கோவிலுக்குள், இறைவனுக்கு மட்டும் தான் மரியாதை. மனிதர்களுக்கு, இறைவனுக்கு அளிக்கும் பெருமைகளை அளிப்பதில்லை. அரையர்கள், நாலாயிர பிரபந்தங்க்ளை முடித்தபின், கடைசி நாளன்று, அரங்கன் சார்பில், ஒரு கோவில் ஸ்தானிகர், “நம் பாடுவானை, வீட்டிலே விட்டு வா” என்று கட்டளையிடுவார்.
இந்த கட்டளையை ஏற்று, தமிழ் பாடிய அரையர்கள் குழு தலைவரை, தமிழ் பாசுரங்களின் ஓலை சுவடிகளுடன், அரங்கன் உப்யோகப்படுத்தும், பல்லக்கில் அமர்த்தி, அரங்கனை சுமக்கும் ஸ்ரீ பாதம் தாங்கிகள், கோவில் உட்புறத்திலிருந்தே, கோவில் மரியாதைகளுடன் அவரது வீட்டில் விட்டு வருவார்கள். இந்த வழக்கம் ஒரு ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த வழக்கம், தனிப்பட்ட ஒருவருக்கு செய்யும் மரியாதை இல்லை. தமிழுக்கும், தமிழ் பாசுரங்களுக்கு அளிக்கும் ஒரு பெருமை.
அரங்கனுக்கே சவால் விடும் அறநிலைய துறை
இந்த ஆண்டு முதல் (2010), அறங்காவலர் குழுவிலுள்ள ஒரு சில நாத்திகர்களீன் முயற்சியால், பல்லக்கில் சுமந்து வீட்டில் விட்டு வரும் வழக்கம் நிறுத்தப்பட உள்ளது.
|
திரு அ. கிருஷணமாச்சாரியார் |
இது குறித்து, பாஞ்சசன்யம் இதழின் ஆசிரியர் திரு கிருஷ்ணமாச்சாரியாரிடம் கருத்து கேட்ட போது, அவர் ‘மனிதனை மனிதன் சுமப்பது இழிவு’ என்கிற ஒரு தத்துவத்தின் அடிப்படையில் அறநிலைய துறை, அரங்கனின் கட்டளையை மீறும் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்தார். ஒரு சில நாத்திகர்களின் முயற்சியால், தமிழுக்கு அவமதிப்பு ஏற்படுத்த இருப்பதாக மன்ம் வருந்தினார். .
அரங்கனைப் பொருத்தவரை, தமிழும், பக்தியும் தான் முக்கியம். ஜாதி மதஙகளுக்கு அப்பாற்பட்டவன். ஆழ்வார்கள் பன்னிருவ்ரும், அனைத்து ஜாதியிலிருந்தும் வந்தவர்கள். அவர்களை நாம் தெய்வமாக வணங்குகிறோம். தமிழில் பாசுரம் பாடிய திருப்பாணாழ்வாரை (தாழ்ந்த குலத்தில் அவதரித்தவர்), அவமதித்த குற்றத்திற்காக, லோக சாரங்க முனிவர் என்கிற ஒரு அந்தணரை, தன்னுடைய தோளில் திருப்பாணாழ்வாரை சுமந்து கோவிலுக்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டவன் தான் அரங்கன்.
க்டந்த ஒரு ஆயிரம் ஆண்டுகளில், அரங்கன் சந்தித்த சோதனைகள் ஏராள்ம். சுல்தான்களின் படையெடுப்பின் போது, சுமார் 50 ஆண்டுகள், கோவில் திருப்பணிகள் முடங்கின. அரஙகனே, பாதுகாப்பு கருதி, பல ஊர்களில் இருந்ததாக வரலாறு. ஒவ்வொரு முறையும் சோதனைகள் வரும்போதும், சோதித்தவர்கள் தான் வீழ்ந்தார்களே அன்றி அரங்கன் வீழவில்லை.
தற்போது, அற்நிலைய துறையினால், அரங்கனின் அன்பை பெற்ற, தமிழ் பாடும் அரையர்களுக்கு ஏற்படவிருக்கும் அவமதிப்பு, அரையர்களுக்கோ, அரங்கனுக்கோ அல்ல. ஆயிரம் ஆண்டுகளாக செய்து வரும் தமிழ் பணிகளை அமைதியாக அவர்கள் தொடர்ந்து செய்வார்கள். ‘அரையர் சேவை’ என்கிற ஒரு அற்புதமான கலையை அழியவிடாமல், தொடர்ந்து காத்து வருகிறார்கள்.
நாத்திகர்களின் கையில் அகப்பட்டுள்ள அறநிலைய துறை செய்யும் தமிழ் அவமதிப்பு, தமிழன் ஒவ்வொருவருக்கும் தலை குனிவு.