This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

திங்கள், 26 டிசம்பர், 2011

லோக்பால் மசோதாவை அன்னா ஹசாரே எதிர்ப்பது ஏன்?

இந்தியாவில் கடந்த 10 மாதங்களாக, அன்னா அலை வீசுகிறது.  45 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் லோக்பால் மசோதாவை சட்டமாக்குவதற்கு, அன்னா ஹசாரே கடந்த ஏப்ரல் 2011ல் போராட்டத்தைத் துவக்கியபோது, இந்த அளவு அரசியல் கட்சிகளுக்கு ஒரு தலைவலியை கொடுக்கும் என்று எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள்.

கடந்த ஆகஸ்ட் 2011 மாதத்தில், அன்னா, உண்ணாவிரதம் இருந்தபோது, இந்த போராட்டம் பாராளுமன்றத்தையே கலங்க அடித்தது.  மக்களவையே, ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அன்னாவின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தது.

காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் போன்ற பெரிய ஊழல்களால் வெறுப்படைந்த மக்கள், இந்த போராட்டத்திற்கு அலை அலையாக ஆதரவு அளித்து வருகிறார்கள்.  குறிப்பாக மாணவர்களும், இளைஞர்களூம் அளித்து வரும் ஆதரவு பெரிய அளவில் உள்ளது.

கடந்த டிசம்பர் 23ம் தேதி, மக்களவையில், இந்திய அரசு, லோக்பால் மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா, டிசம்பர் 27 முதல் மக்களவையில் விவாதத்திற்கு வர உள்ளது.

இந்த மசோதாவை எதிர்த்து, அன்னா குழுவினர் 27ம் தேதி முதல் உண்ணாவிரதமும், சிறை நிரப்பும் போராட்டமும் நடத்த உள்ளனர்.  இதனிடையில், நடிகர் ரஜனிகாந்தும், சென்னையில் இன்று மாலை, அன்னா குழுவினரை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இத்ன் பின்னணியில், அன்னா குழுவினருக்கு, அரசு அளித்துள்ள வரைவு மசோதா மீது என்ன பிரச்சனை என்பது பற்றி வெற்றி குரலுக்காக, அன்னா குழுவை சார்ந்த திரு முரளிதரனுடன் ஒரு பேட்டி கண்டேன்.  இந்த பேட்டியை (11 நிமிடங்கள்), கேட்கவும்.

இந்த பேட்டியை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=jgEB_Ab-bpU

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...