This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

ஞாயிறு, 20 ஏப்ரல், 2008

காங்கிரஸ்காரர்களே! ஜால்ராவையும், கோஷ்டி சண்டையையும் சற்றே நிறுத்தி, ராஜீவிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை பாருங்கள்.

இரண்டு நாட்கள் முன்பு, பிரியங்கா காந்தியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியும், வேலூர் சிறையில் இரகசியமாகவும், விதி முறைகளை மீறியும் சந்தித்தது பற்றிய பத்திரிகைகளில் வந்த செய்திகளை குறிப்பிட்டு இருந்தோம். அந்த இடுகையில், ஏன் பிரியங்காவோ, ராஜீவ் குடும்படத்தினரோ, மீடியாவோ அந்த துயர சம்பவத்தில், தீவிரவாததிற்கு பலியான பல குடும்பங்களை ஏன் கண்டு கொள்ளவில்லை என்று எழுதியிருந்தோம்.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா இதை ஒரு பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில், இந்த சம்பவத்தில் உயிர் நீத்த காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் சிலரது உணர்வுகளை வெளியிட்டுள்ளார்கள். மற்றும், உச்ச நீதிமன்றத்தில் தண்ட்னை குறைப்பு அப்பீலில், நீதிபதிகள் 1999ல் வெளியிட்டுள்ள தீர்ப்பையும் குறிப்பிட்டு உள்ளார்கள். அந்த தீர்ப்பில், நீதிபதிகள், இந்த துயர சம்பவத்தில் உயிர் நீத்த மற்றவர்களைப்பற்றி குறிப்பிடு உள்ளார்கள்.

சென்ற ஆட்சியில், ஜெயலலிதா, உயிர் நீத்த அனைத்து காவல் துறையினருக்கும் ஒரு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்திருந்தார். ஆட்சி மாறியது; காட்சிகள் மாறிவிட்டன.

ராஜீவ் காந்தியை ஏன் கொலை செய்தார்கள் என்று அறிய வேண்டுமானால், இந்த வழக்கை புலனாய்வு செய்த கார்த்திகேயனிடமோ அல்லது, உளவுத்துறையிடமோ கேட்டிருக்கலாமே. அதை விட்டு விட்டு, ஏன் விதிமுறைகளை மீறி, இரகசிய்மாக நளினியை சந்திக்க வேண்டும்? இது பல சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளதே!

ராஜீவிற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் பலத்த காயங்களுடன் தப்பிய காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் (ஓரிரு காங்கிரஸ்காரர்கள் உட்பட) ஆகியோரது குடும்பத்தினரை 17 ஆண்டுகளாக ஏன் சோனியா குடும்பத்தினர் சந்திக்கவில்லை. நளினிக்கு மகள் இருப்பதுபோல், பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தில் குழந்தைகள் இல்லையா? தலைவனை இழந்த அந்த குடும்பத்தினர் எவ்வாறு பாடுபட்டிருப்பார்கள்?

ஜால்ரா தட்டுவதிலும், கோஷ்டி சண்டையிலுமே காலத்தை தள்ளும் காங்கிரஸ்காரர்கள் என்ன செய்தார்கள்? (ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று கூறிய அர்ஜுன் சிங்கை, 'sycophant' அதாவது ஜால்ரா என்று ஜெயந்தி நடராஜன் கூறியது குறிப்பிடத்தக்கது)

கோகிலவாணி என்கிற ஒரு சிறிய பெண் குழந்தை, ராஜீவ் பற்றி தான் எழுதிய கவிதையை, ராஜீவிடம் படித்துக்கொண்டிருக்கும் போது, வெடிகுண்டில் சிதறியதே; அந்த பிஞ்சை இழந்த குடும்பம் இது நாள் வரை என்ன வேதனை பட்டுக்கொண்டிருக்கும்.

காங்கிரஸ் காரர்களே! கொஞ்ச நேரம் உங்கள் ஜால்ராவையும் , கொஷ்டி சண்டையையும் நிறுத்துங்கள். உங்கள் தலைவருக்காக உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்ட வர்களது குடும்பங்களை சந்தியுங்கள். புண்ணியமாக இருக்கும்.

கொலை குற்றத்தில் தண்டனை அனுபவிப்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் சோனியா மற்றும் காங்கிரஸ்காரர்கள், பாதிக்க்ப்பட்டவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது வெட்கக்கேடானது.

புதன், 16 ஏப்ரல், 2008

ராஜீவ் காந்தி படுகொலை - அவருக்காக உயிர் நீத்த 30 காவல் துறையினர் என்ன பாவம் செய்தார்கள்?

priyanka gandhi met Nalini at Vellore Prison தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரே பரபரப்பு. ஒரு பக்கம், தலைமை செயலாளர் போனை ஒட்டு கேட்டதாக வரும் செய்திகள். அதே நாளில் பிரியங்கா காந்தி, அண்மையில் வேலுர் சிறையில் நளினியை சந்தித்தாக வரும் செய்திகள்.

பிரியங்கா - நளினி சந்திப்பு அகில இந்திய அளவில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கி விட்டது. காரணம் எதுவாக இருந்தாலும், பல காரணங்கள் கூறப்படுகின்ற்ன. நளினியின் தூக்கு தண்டனை சோனியா காந்தியின் கருணையால் ரத்து செய்யப்பட்டது. நளினிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதால், அதை காரணம் காட்டி, மீடியாவும் கருணை மழையை பொழிந்தது. பிரியங்காவும், தன்னுடைய தகப்பனாரை கொன்றவர்களை மன்னித்து விட்டதாக கூறிவிட்டார். இது போராதா! நம்முடைய மீடியாக்களுக்கு - தலையில் வைத்துக்கொண்டு கூத்தாட!

இதில் நான் கருத்து கூற விரும்பவில்லை. இன்னா செய்தாருக்கும் நன்மை செய்வது அவரவர்கள் விருப்பம்.

ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்த அன்று, அவருடன் சுமார் 30 போலீஸ் காவலர்களும், அதிகாரிகளும் உயிர் துறந்தனரே! யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா! அவர்களுக்கும் குடும்பம் இல்லையா? குழந்தைகள் இல்லையா? பணியில், தீவிரவாததிற்கு பலியான, கடமை வீரரகளுக்காக சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் என்ன செய்தார்கள்? எந்த மீடியாவும் ஏன் வாய் திறக்கவில்லை.

காங்கிரஸ்காரர்கள் அவர்களது கோஷ்டி சண்டையில் செலுத்தும் நேரத்தில், நூற்றில் ஒரு பங்கை, தங்கள் தலைவருக்கு காவல் பணியில் இருந்து உயிர் நீத்த காவல் துறையினருக்காக செலவிடக்கூடாதா?

திங்கள், 14 ஏப்ரல், 2008

பாரதியின் பார்வையில் - மனமே வெற்றிக்கு விதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்வெற்றி குரல் . இதழ் 2

நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சென்ற முதல் இதழில் பாரதி கண்ட புதுமை பெண்ணாக, ஜெயஸ்ரீயை அறிமுகம் செய்து வைத்தோம். மராத்தியை தாய்மெழியாகக் கொண்ட ஜெயஸ்ரீ பாரதிமேல் அளவு கடந்த பக்தி கொண்டு இருப்பதையும் எழுதியிருந்தோம். பாரதி பார்வையில் ப்ல கருத்துக்களை ஏன் ஜெயஸ்ரீ வாயிலாக வெளியிடக்கூடாதா என்ற ஆலோசனைகள் வந்தன.
பெங்களூரில் சாஃப்ட்வேர் பணியிலிருந்தாலும், என்னுடைய் வேண்டுகோளை எற்று, "மனமே வெற்றிக்கு விதையாகும்" என்கிற கருத்தில், பாரதியின் பார்வையை அலசி நான்கு நிமிட ஒலி இதழை அனுப்பி விட்டார்.
கிளிக் செய்து நீங்களும் கேளுங்களேன். தங்கள் கருத்துக்களை என்னுடைய prpoint@gmail.com என்கிற இமெயிலுக்கு அனுப்ப வேண்டுகிறேன்


இந்த ஒலிபதிவை கீழ்கண்ட இணைய தளங்களிலும் கேட்கலாம்


வியாழன், 3 ஏப்ரல், 2008

ஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்!

ஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்
வெற்றி ஒலி - இதழ் 1

மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலிருந்து சென்னை வந்து குடியேறிய, மராத்திய மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் ஜெயஸ்ரீயிடம் பத்து நிமிடம் பேசிப்பாருங்கள். ஆங்கிலம் கலப்பில்லாத அழகு தமிழில் பாரதியாரையும், திருவள்ளுவரையும் நிமிடத்திற்கு ஒருமுறை மேற்கோள் காட்டி ஆரவாரம் இல்லாமல் அசத்துகிறார்.


சென்னையில் பொறியியல் பட்டம் பெற்று, தற்போது பெங்களூரில், சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் இந்த இளம் நங்கை, தமிழ் மொழி மீது அளவில்லா காதல் கொண்டு, பள்ளியில் இரண்டாம் பாடமாக தமிழை எடுத்து படித்தார். திருவல்லிக்கேணியில் இருந்ததாலோ என்னவோ, முண்டாசு கவிஞன் பாரதிமீது பற்று கொண்டு, பாரதி கண்ட ஒரு புதுமை பெண்ணாக வலம் வருகிறார். பாரதி பாடல் அனைத்தும் இவருக்கு மனப்பாடம்.


அவர் படித்த பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் துவக்கி, மானவர்களிடையே தமிழ் ஆர்வத்தை தூண்டினார். 'தமிழ் தமிழ்' என்று நொடிக்கொருமுறை ஆரவாரம் செய்யும் அரசியல் வாதிகளும், அரசும், அண்ணா பல்கலைகழகமும், பொறியியல் கல்லூரிகளில் ஏன் இது போன்று 'தமிழ் மன்றங்களை' துவக்கி, இளஞர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்கவில்லையே என்று இந்த மராத்திய பெண் ஆதங்கப்படுகிறார்.


'Multi faceted personality' என்று கூறுவார்கள். தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறந்த பேச்சாளரான ஜெயஸ்ரீக்கு, தமிழக முதல்வர்கள் திரு கருணாநிதியும், செல்வி ஜெயலலிதாவும் பாராட்டி கவுரத்திருக்கிறார்கள்.


ஜெயா டிவி, விஜய் டிவி, தூர்தர்ஷன் ஆகிய டி.வி.களில் சுமார் 200 நிகழ்ச்சிகளுக்கு மேல் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ஒரு சிறந்த டன்ஸர் கூட. டாகுமெண்டரி படங்களில் நடித்தும் உள்ளார். தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்புகளையும் உதறித் தள்ளிவிட்டு, சாஃப்ட்வேர் தொழிலுக்கு சென்று விட்டார்.


டாகடர் கலாமின் அறிவுரைப்படி, சமூக சேவைகளில் அதிக அளவில் பெங்களூரில் ஈடுபட்டு வருகிறார். கட்டிட தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபடுகிறார். வசதியற்ற மக்களின் கல்விப்பணிக்காக பாடுபடுவதே தன்னுடைய வாழ்க்கை இலட்சியமாக கொண்டுள்ளார்.

அவர் அண்மையில் 'இந்தியா விஷன் 2020' பற்றிய ஒரு கூட்டத்திற்கு வந்திருந்தபோது, இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நொடியில் அனைவரையும் தன்னுடைய பேச்சால், கவரக்கூடிய தலைமை பண்புகள் கண்டு வியந்தேன். பாரதி கண்ட ஒரு புதுமை பெண் இவர் தானோ!
வருங்கால இந்தியாவிற்கு ஒரு பெண் தலைவர் உருவாகி வருவதாக எனக்கு தோன்றிய்து. சாதிக்கத்துடிக்கும் இவரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கலாமே என்கிற எண்ணத்தில், உடனே அவரிடம் ஒரு பேட்டி எடுத்தேன். கிளிக் செய்து இந்த பேட்டியை கேட்டு மகிழலாமே! ( 14 நிமிடங்கள்) உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்களேன்.
Video thumbnail. Click to play
Click to play
இந்த ஒலி இதழை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்

செவ்வாய், 1 ஏப்ரல், 2008

தமிழில் இணைய ஒலி இதழ் - "வெற்றி ஒலி" - விரைவில்!

பிரைம் பாயிண்ட்டின் வெற்றி ஒலி, இணைய ஒலி இதழ் பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் சார்பில் இதுவரை, ஆங்கிலத்தில் பாட் யூனிவர்ஸல் (PodUniversal) என்கிற ஒரு இணைய ஒலி இதழை கடந்த ஓராண்டுக்கு மேலாக நடத்திவருகிறேன். இணயத்தில் பிளாக் (blog) போல், இந்த podcast என்கிற இணைய ஒலி இதழ்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. இதுவரை நான் 100 இணைய ஒலி இதழ்களை ஆங்கிலத்தில் பல தலைப்புகளில் வெளியிட்டுள்ளேன்.
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் கலாம் உட்பட பல அறிஞர்களை நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் பேட்டி எடுத்து, இணைய ஒலி இதழாக வெளியிட்டுள்ளேன். http://www.poduniversal.com/ சென்று பார்க்கலாம்.
அதே போன்று தமிழிலும் ஒரு இணைய ஒலி இதழை 'வெற்றி ஒலி' என்கிற தமிழ் ஒலி இதழை இந்த 'வெற்றி படிகளில்' தவழவிடலாம் என்று எண்ணியுள்ளேன். PodUniversal லில் உள்ளது போல், அனவருக்கும் என்றுமே பயன்படக்கூடிய விதத்தில் தரமான் முறையில் இருக்கும்.
ஒரு நான்கு அல்லது ஐந்து நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்களேன். 'வெற்றி ஒலி' கம்பீரமாக ஒலிக்க இருக்கிறது.
இதற்கு இடையில் உங்களுக்கு என்ன தேவை? தமிழில் வேறு யாராவது இந்த podcast என்ப்படும் ஒலி இதழ்களை வெளியிடுகிறார்களா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்களேன். உபயோகமாக இருக்கும்.

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...