This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

திங்கள், 18 மே, 2009

அரசியல் வியாபாரிகளின் ஆட்டம் ஓய்ந்தது! சிவகங்கை தொகுதி முடிவில் குளறுபடி!!

இந்தியாவில் 15வது பொது தேர்தல் முடிந்து விட்டது.  கருத்துக்கணிப்புகள், தடை செய்யப்பட்ட நிலையில், பத்திரிகைகள் வெளியிட்ட  யூகங்கள் பொய்யாகி விட்டன.  மத்தியில், மன்மோகன் சிங் அரசு மீண்டும்,  நிலையான ஆட்சி அமைக்க மக்கள் ஓட்டளித்துள்ளார்கள்.பாஜக அணி, எதிர்பார்த்தைவிட குறைவாகவே இடங்களை பெற்றுள்ளது.  பிரதமர் கனவுடன் போட்டியிட்ட, மூன்றாம் அணி, நான்காம் அணிகள் மண்ணை கவ்வின.  நாளொருதோறும், மன்மோகன் சிங் அரசை மிரட்டியே தங்களை வளர்த்துக்கொண்ட இடது சாரிகள், குறைந்த இடங்களையே பெற்றுள்ளனர். 

தமிழகத்தில், பெரிய கூட்டணியாக கருதப்பட்ட அதிமுக கூட்டணி, எதிர்பார்த்த அளவு இடங்களை பெறவில்லை.  ஒவ்வொரு தேர்தலிலும் அணி மாறி, தங்கள் நலனையே பாதுகாத்துக்கொண்ட பாமக, ஏழு இடங்களிலும் மண்ணை கவ்வின.மதிமுக ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றது. 

திமுக அணி மீது, அதிக அளவில் வாக்காளர்களூக்கு பணம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிவகங்கை தொகுதியில் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றதில் பெரிய சந்தேகம் உள்ளது.  தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்ததாக மீடியாக்கள் கூறுகின்றன.  எதிர் கட்சிகள், நீதிமன்றத்துக்கு சென்றால், நீதி கிடைக்க குறைந்தது 6 அல்லது 7 வருடங்களாவது ஆகும்.  தேர்தல் கமிஷனின் நடுநிலை மக்களால் சந்தேகிக்கப்டுகின்றன.  ந்வீன் சாவ்லாமீது, எதிகட்சிகள் குற்றம் சாட்டப்படும் நிலையில், இது அவரது நம்பகத்தன்மையை குறைக்கிறது. 

பொதுவாக, மக்கள், இந்திய அளவில், ஒரு நிலையான ஆட்சி அமைக்க விருப்பம்  தெரிவித்துள்ளார்கள்.  பிஜேபி உட்பட அனைத்து கட்சிகளூம் இதிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள் உள்ளன.  அதே சமயம், காங்கிரஸும் வெற்றி ஆணவத்தில் இருந்தால், அவர்களும், அடுத்த தேர்தலில் தோல்வியை தழுவ வேண்டியிருக்கும்.

தமிழக மற்றும் தேசிய அரசியல் நிலை பற்றி, பிரபல பத்திரிகையாளர் திரு சிகாமணீயிடம் நான் தொலைபேசியில் பேட்டி கண்டேன். அந்த பேட்டியை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் ' பிளே' பட்டனை அழுத்தி, கேட்கவும்.    இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும்.  ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்ட்டாப்பில் சேமித்து கேட்கவும் ( 19 நிமிடங்கள்)இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857421

வெள்ளி, 15 மே, 2009

கருத்து கணிப்புகள் (exit poll) - நம்பக்கத்தக்கவையா? ஒரு சூடான விவாதம்

கடந்த மே 13ம் தேதி மாலை 5 மணிக்கு ஐந்து கட்டங்களாக நடந்த இந்திய மக்களவை தேர்தல் முடிந்து விட்டது. இந்த தேர்தலில், தேர்தல் ஆணையம், ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடியும் வரை, கருத்து கணிப்புக்களையோ அல்லது எக்ஸிட் போல் எனப்படும் கணிப்புக்களையோ வெளிடக்கூடாது என்று ஆணை பிறப்பித்திருந்த்து. அதனால், அனைத்து டி.வி. சேனல்களும் 13ம் தேதி, மாலை 5 மணிமுதல், அவரவர்களது கணிப்புக்களை வெளியிட்டார்கள்.

இது போன்ற கணிப்புக்கள், கடந்த 2004 பொது தேர்தல், குஜராத் மற்றும் உத்தர்பிரதேஷ் மாநில சட்டசபை தேர்தல்களில் பொய்த்து விட்டன. அதனால், இந்த கணிப்புக்கள் மக்களிடையே ஒரு பெரிய நம்பிக்கையை தோற்றுவிக்கவில்லை. டி.வி. சேனல்களையும் குறை கூறமுடியாது. அவர்களும், மக்களின் எதிர்பார்ப்புகளூக்கு ஏதாவது சூடாக கொடுக்க வேண்டும். கொடுத்துவிட்டார்கள். அதன் நிலை அவ்வளவுதான்.

நான் இமேஜ் ஆடிட் என்கிற 'perception study' செய்யும் தொழிலில் இருப்பவன். www.imageaudit.com என்கிற இணைய தளத்தில் பல கருத்துக்களை பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். எந்த கணிப்புக்களிலும், மக்களின் ம்ன ஓட்டத்தை அறிய வேண்டுமானால், கீழ்கண்ட மூன்று கருத்துக்களும் முக்கியமானவை.

1. sample size என்ப்படும், மாதிரி கருத்துக்கள். அந்த sample, பொர்துவாக அனைத்து மக்களின் கருத்துக்களையும் பிரதிபலிக்குமாறு தேர்ந்து எடுக்கவேண்டும். இதில் தவறு இருந்தால், முடிவுகள் சரியாக வராது.

2. எவ்வாறு கருத்து கணிப்புக்களை நடத்துவது என்பது இரண்டாவது முக்கியமான ஒன்று. அதில் கேட்கப்படும் கேள்விகள், அதை செயல் படுத்துவரின் திறமை, அவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி முக்கியமானவை.

3. முதல் இரண்டும் சரியாக இருந்தாலும், கடைசியாக, அந்த கருத்துக்களை சொல்லும் மக்கள், ஒளிவு மறைவு இல்லாமல், வெளிப்படையாக கருத்து சொல்ல வேண்டும். அவை honest அல்லது transparent கருத்துக்களாக இருப்பது மிகவும் இன்றியமையாதது.

ஆனால் நடைமுறையில், இந்த கருத்து கணிப்புக்கள், அவசர அவசரமாக நடத்த்ப்படுகின்றன. sample size சரியாக இருப்பதில்லை. பயிற்சி பெறாத பல மாணவர்கள் இந்த கணிப்புகளுக்காக அமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கு, அவர்கள் எடுக்கும் பாரங்களூக்கு தகுந்தவாறு அல்லது நாட்கணக்கில் ஊதியம் வழ்ங்கப்படுகிறது. அதில் அதிக தவறுகள் நடக்கின்றன. மேலும், கருத்து சொலலும் மக்கள், பல காரணங்களூக்காக தங்கள் உண்மையான கருத்துக்களை தேர்தல் சம்பத்தப்பட்ட விஷயங்களில் சொல்வதில்லை. இந்த தேர்தல் கணிப்புக்கள் மிகவும் சென்சிடிவான் விஷயம். மிகவும் நுட்பமாக கையாள வேண்டும்.

கருத்து கணிப்புக்கள் அறிவு சார்ந்த, அறிவியல் பூர்வமான ஒன்று. அதில் குறை கூற முடியாது. ஆனால், பல நடைமுறை சிக்கல்களால், இந்தியாவில், பொய்த்துப்போகின்றன. அவர்கள் மதிப்பிடும் எண்களில் தவறு நேரிட்டாலும், ஒரு மாதிரியாக trend தெரிய் வாய்ப்பு உள்ள்து.

இது ச்ம்பந்தமாக, நேற்று இரவு (14 மே 2009) 9.30 மணிக்கு என் நண்பர் மாலன் நடத்தும் 'மக்கள் தீர்ப்பு 2009' நிகழ்ச்சியில், என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள , ஒரு 'வல்லுநர்' என்கிற முறையில் என்னையும் அழைத்து இருந்தார்கள். இந்த் முழு நிகழ்ச்சியையும், (29 நிமிடங்கள்), 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த வீடியோவை, பிராட்பேண்டில் சீராக கேட்க முடியும். சீராக வரவில்லை என்றால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் wmv ஃபைலாக சேமித்து கேட்கவும்.இந்த வீடியோவை, கீழ்கண்ட த்ளத்டிலும் கேட்கலாம்.
http://blip.tv/file/2115592/

புதன், 13 மே, 2009

தேர்தல் குளறுபடிகள் - யார் பொறுப்பு?

தமிழகத்தில் ஒரு வழியாக தேர்தல் முடிந்து விட்டது. பல இடங்களில், பலர் வாக்காளர்களின் பட்டியலில் இடம் பெற வில்லை. பலர் வாக்காளர் அடையாள அட்டைகள் பெற்றிருந்தும், அவர்கள் பெய்ர் பட்டியலில் இல்லை. பல குளறுபடிகள்.

மக்களவை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், இந்தியா விஷன் சார்பாக ""Celebrate Democracy - Vote India" என்கிற பிரச்சாரத்தை, டாக்டர் அப்துல் கலாமின் வாழ்த்துரையுடன் நான் துவங்கியது நினைவிருக்கலாம். இது தவிர, மற்ற அமைப்புகளீலும் சேர்ந்து, அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் வோட்டளிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வந்திருந்தேன்.

கட்ந்த மாதம், இந்த பிரச்சாரத்தை துவக்கியபின், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணைய தளத்தில், எங்கள் பகுதியின் வாக்காளர் பட்டியலை பார்த்தேன். எங்கள் குடும்பத்தில் அனைவரது பெயரும் காணப்படவில்லை. தற்போதுள்ள விலாசத்திலேயே கடந்த 25 ஆண்டுகளாக அனைத்து தேர்தல்களிலும் வாக்க்ளித்துள்ளேன். வாக்காளர் பட்டியலை திருத்தும் போது, அதிகாரிகள் வீட்டிற்கு வந்து, புகைப்படம் எடுத்துள்ளார்கள். அனைத்தும் சரியாக இருக்கிறது என்பதன் அடையாளமாக ஒரு ஸ்டிக்கரையும், வீட்டு நிலைப்படியில் ஒட்டி சென்றுள்ளனர். இருந்தும், எங்களது பெயர்கள் விடுபட்டது குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.

உடனடியாக தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி திரு நரேஷ் குப்தாவிடமும் தொலைபேசியில், இது போன்று பலரது பெயர்கள் விடுபட்டிருக்கும் என்று முதல் தகவல் கொடுத்தேன். அவரது அறிவுரையின், பேரில், சென்னை மாநகராட்சியின் எட்டாவது மண்டலத்தின் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தேன். உடனடியாக அவர் ஒரு அதிகாரியை அனுப்பி, எனது புதிய விண்ணப்த்தை வாங்கிக் கொண்டார்.

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக எனது பெயர், துணை பட்டியலில் சேர்ந்ததா என்பது பற்றி விஜாரிக்க ஆரம்பித்தேன். துணை பட்டியலை அவர்களது இணைய தளத்திலும் வெளியிடவில்லை. அரசியல் கட்சியின் எங்கள் பகுதி பொறுப்பாளர்களிடமும் இந்த துணை பட்டியல் இல்லை.

இன்று காலை (13 மே 2009), ஒரு மணி நேரம், தேர்தல் சாவடியில், கியூவில் நின்று, அங்கிருந்த பொறுப்பாளர்களீடம் கேட்டதில், அவர்கள் என் பெயர் பட்டியலில் இல்லை என்று கை விரித்து விட்டார்கள்.

மற்றவர்களை ஓட்டு போடும் படி பிரச்சாரம் செய்த எனக்கே ஓட்டு இல்லை என்கிற வருத்தத்தில், மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இந்த த்கவலை தெரிவித்தேன். அவர்கள் ஒரு மணி நேரத்தில், என்னுடைய பெயர் துணைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், என்னுடைய நம்பரையும் தெரிவித்தார்கள். நான் ஒரு பத்திரிகைத்துறையைச் சேர்ந்தவன் என்பதாலும், பல உயர் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ள் வாய்ப்பு உள்ளவனாதனாலும், என்னுடைய நீக்கப்பட்ட பெயர்கள் திரும்பவும் சேர்க்கப்பட்டன. (அப்படியும் எங்கள் குடும்பத்தில் ஒரு பெயரை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

இந்த தேர்தலில் பலரது பெயர்கள் பட்டியலில் விடுபடுள்ளன. தங்கள் பெயர் இல்லை என்று தெரிந்து ஏமாற்றத்துடன் பலர் திரும்பியதை நான் பார்த்தேன். எந்த ஒரு சிபாரிசும் இல்லாத ஒரு சராசரி குடிமகனுக்கு இதுபோன்று, பெயர் நீக்கப்பட்டால், அவர்கள் என்ன செய்வார்கள். துணைப்பட்டியலிலும் பல பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். துணைப்பட்டியலும் வெளியிடுவதில் தாமதம். வாக்காளர் பட்டியலிலும், போட்டோக்கள் மாறி மாறி ஒட்ட்ப்பட்டுள்ளன. சொதப்பல் அதிகமாக இருந்தது.

வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு, தேர்தல் ஆணையம் ஆயிரக்கணக்கான கோடிரூபாய்களை செலவு செய்கிறது. இவ்வளவு செலவு செய்தும், எனோ தானோ என்று பொறுப்பற்ற முறையில், அரசு உழியர்கள் பணியாற்றுகிறார்கள். கணினி யுகத்தில், ஏன் இவ்வாறு நடக்கிறது என்பது தெரியவில்லை.

தேர்தல் ஆணையம் உடனடியாக, வாக்காளர் பட்டியலை திருத்தும் பணீகளை ஆய்வு செய்து, குறைபாடுகளை களைய வேண்டும். இந்த செலவுகளை, இந்திய தபால் துறைக்கு கொடுத்தால், அவர்கள் இந்த பட்டியலை சரி செய்து கொடுப்பார்கள். த்பால் துறை ஊழியர்கள், நாட்டின் அனைத்து கிராமங்கள், நகரங்களையும் சிறப்பான முறையில் அறிந்து வைத்துள்ளார்கள்.

பூனைக்கு யார் மணி கட்டுவது?

திங்கள், 11 மே, 2009

தமிழக தேர்தல் வேட்பாளர்களின் சொத்து, கடன், குற்ற பின்னணி விவரங்கள்


வெற்றி குரல் இதழ் 14

இந்த இடுகையை எழுதும் நேரத்தில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஒய்ந்து விட்டது. வருகிற மே 13ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்க இருக்க இருக்கிறது. இந்த நிலையில், தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கம், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்து, கடன், மற்றும் குற்ற பின்னணி ஆகியவைகளை அவர்கள் சம்ர்ப்பித்த மனுக்களிலிருந்து தொகுத்து பத்திரிகைகள் மூலமாக ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் முதல் நாள் வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி, தமிழக வேட்பாளர்களைப்பற்றிய விவரங்களையும் இன்று பத்திரிகையாளர்கள் முன் வெளியிட்டார்கள்.

இந்த தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கத்தில் பல பேராசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஒய்வு பெற்ற ஐ.ஏ.ஸ் அதிகாரிகள், நீதிபதிகள் இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பல இடங்களிலிருந்தும் பலர், முக்கியமாக மாணவர்கள், இண்டர்நெட் மூலமாக இந்த விவரங்களை தொகுத்தனர்.

வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்தபின், அந்த மனுக்களை 'ஸ்கேன்' செய்து சென்னையிலுள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பர். தலைமை தேர்தல் அதிகாரி, அந்த விவரங்களை, jpeg ஃபைலாக அவர்களது இணைய தளத்தில் வெளியிடுவர். தம்ழகத்தில் 877 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பல ஃபைல்களை பதிவிறக்கம் கூட செய்ய முடியவில்லை என்று, தேசிய தேர்தல் கண்காணிப்பு நிர்வாகிகள் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணையம், இந்த விவரங்களை சரியாக உடனடியாகவும் தங்கள் இணைய தளத்திலும் வெளியிடவில்லை. இந்த கம்பூட்டர் யுகத்தில், இது போன்று, காலம் தாழ்த்தியும், பதிவிறக்கம் செய்ய முடியாமலும் வெளியிட்டால், மக்கள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்து வரும் சட்டசபை, மற்றும் மக்களவை தேர்தலிலாவது, கணினி மூலம் இந்த விவரங்களை அளிக்கலாம். லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு விண்ணப்ங்களையே சமாளிக்கும் அரசாங்கம், இந்த விண்ணப்ங்களை மனம் இருந்தால், சரியாக வழங்க முடியும்.

அகில இந்திய அளவில், அனைத்து வேட்பாளர்களின் விவரங்களையும் http://www.myneta.info என்கிற் இணைய தளத்தில், தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கம் வெளியிடுகிறது.

இது சம்பந்தமாக, தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கத்தின் தமிழக நிர்வாகிகளை, பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேட்டி கண்டேன். அவர்களது பேட்டியை கீழ்காணும் பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் சேமித்து கேட்கவும். (12 நிமிடங்கள்)இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857419

ஞாயிறு, 3 மே, 2009

தமிழக அரசியல் அணிகளின் பலமும், பலவீனமும்!

Tada Periaswamy
வெற்றி குரல் இதழ் 13

இலங்கை பிரச்சனை என்றுமில்லாத அளவிற்கு தமிழக மீடியாக்கள் மூலமாகவும் அரசியல் கட்சிகள் மூலமாகவும் ஒரு தேர்தல் பிரச்சனையாக்கப்பட்டுள்ளது. திமுக அணியும், அதிமுக அணியும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் நாடகங்களை தினந்தோறும் அரங்கேற்றம் செய்கின்றன. உண்மையிலேயே, அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் மீது பாசம் இருந்தால், மத்திய அரசில் இன்று வரை அங்கம் வகிக்கும் திமுகவும், சில மாதங்களுக்கு முன்பு வரை அரசை ஆட்டிப்படைத்த இடது சாரிகளும், சில தினங்கள் முன்புவரை அரசில் அங்கம் வகித்த பாமகவும் எவ்வளவோ செய்திருக்க முடியும். பாமகவும், இடதுசாரிகளும் அணிமாறியதால், அவர்கள் இலங்கை பிரச்சனையில், மத்திய அரசின் நிலைப்பட்டினை குறை சொல்ல முடியாது. மத்திய அரசின் அனைத்து முடிவுகளுக்கும், அவர்களூம் பொர்றுபேற்க வேண்டும். ஜெயலலைதாவோ ஒரு அந்தர் பல்டி அடித்து விட்டார். திடீரென்று இலங்கை தமிழர்கள் மீது பாசத்தை பொழிகிறார். தமிழ் ஈழத்தை உருவாக்கி தருகிறேன் என்கிறார்.

இந்த நாடகங்களை மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் சுய லாபத்திற்கு, இலங்கை மக்களை வசதியாக உபயோகப்படுத்திக்கொள்வதாக மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். தேர்தல் முடிந்த அடுத்த நாள், அதாவது மே 14ம் தேதி, அவர்களது சிந்தனையில், இலங்கையாவது, தமிழர்களாவது. அவர்களது செய்கையெல்லாம், அடுத்த அரசுக்கான ரகசிய பேரங்களே.

இந்த சூழ்நிலையில், தமிழக அரசியல் அணிகளின் பலம் என்ன? பலவீனம் என்ன என்பது பற்றி மூத்த தலித் தலைவர் திரு தடா பெரியசாமியிடம் ஒரு தொலைபேசி பேட்டி கண்டேன். வெளிப்படையாக பல கருத்துக்களை பேட்டியில் தெரிவித்தார்.

அவரது பேட்டியை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் ' பிளே' பட்டனை அழுத்தி, கேட்கவும். (இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும். தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து , டெஸ்க்டாப்பில் சேமிக்கவும். (13 நிமிடங்கள்)இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857406

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...