செந்தமிழ் மாநாடு கோவையில், கடந்த மூன்ற் நாட்களாக நடந்து கொண்டு வருகிற்து. சுமார் 600 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் இந்த ஆடம்பர விழாவைப்பற்றிய விமரசனங்களும் வரத்தொடங்கிவிட்டன.
துவக்க விழாவில், பத்திரிகையாளர்களுக்கு சரியாக இடம் ஒதுக்கப்படவில்லை. நடிக ந்டிகையர் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டனர். மேடையில் பேசிய பெரும்பாலோர் ஆங்கிலத்தில் பேசினர் என்றும் அதை மொழி பெயர்க்க ஏற்பாடு செய்யாததால், கிராமத்து மக்கள் அவதிப்ப்ட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்ற்ன.
எல்லாவற்றையும் விட, ஜெயலலிதா குற்றம் சாட்டியபடி, இந்த மாநாடு 'தன்னல தம்பட்ட விழாவாகவும் குடும்ப விழாவாகவும்' இந்த மூன்று நாட்களில் மாறிவிட்டது. பேசிய அனைவரும், கலைஞரை புகழ்வதில்தான் கவனம் செலுத்தியது, டி.வி. நேரடி ஒளிபரப்பில் தெரிந்தது. வைரமுத்து ஒரு படி மேலே போய், "கலைஞர், வள்ளுவரை விட மேலானவர்" என்று பாடினார். வள்ளுவர் அறம், பொருள், இன்பம் மூன்று தான் தந்தார். ஆனால், கலைஞரே, வீடும் கொடுத்தார், என்று கவிதை பாடியது, முகம் சுளிக்க வைத்தது. இதனால் தான் என்னவோ, கலைஞரும், மூன்றாவது நாள் இறுதியில், தன்னை புகழ்ந்தது போதும், இனி தமிழை புகழுங்கள் என்று கூறினார். நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும். இந்த குறிப்பை புரிந்து கொண்டவர்கள், கலைஞரையும் தமிழையும் ஒன்றாக்கி பேச ஆரம்பித்து விடுவார்கள்.
ஜால்ரா அடிப்பதில், எல்லோருக்கும் போட்டி. பத்திரிகைகளும் சளைக்கவில்லை. விளம்பரங்களை வாரி வாரி கொடுத்து விட்டதால், கொஞ்ச நஞ்சம் விமரிசித்தவர்களும், ஜால்ரா போட ஆரம்பித்து விட்டனர். அரசு பிரிண்ட் மற்றும் டி.வி. களைத்தான் வரிந்து வரிந்து கவனித்துக் கொண்டார்கள். ஆனல், இணைய தளத்துடன் சம்பந்தப்பட்ட பதிவாளர்களை கண்டு கொள்ளவில்லை. அதனால், கூகுளில் 'செம்மொழி மாநாடு' என்று தேடினால், நூற்றுக்கு 90 பதிவுகள், எதிர்மறை விமர்சனமாக இருக்கிற்து.
இது தவிர இலங்கை தமிழர்கள், அதிக அளவில், இணைய தளத்தில் பதிவு எழுதுகிறார்கள். அவர்களுக்கும் கலைஞர மேல் அதிக கோபம். இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு காண முயலவில்லை என்கிற கோபம் வெறு. சென்ற ஆண்டு கலைஞர இருந்த உண்ணாவிரத டிராமா (காலை டிபனுக்கும், மதிய உணவுக்குமிடையில்)வேறு அவர்களை வெறுப்பேற்றியுள்ளது. அத்னால், இணைய தளங்களில், எதிமறையான விமர்சனங்களே அதிகம் காணலாம். இதனால், உலக அளவில், தமிழர்களிடையே, கலைஞருக்கு, அதிக அளவில், இந்த செம்மொழி விழா ஒரு பெருமையை சேர்க்காது.
முதல் நாள் விழா ஆரம்பித்தவுடன், ஏன் க்லாமை அழைக்க வில்லை என்று ஒரு குறுஞ்செய்தி ( sms), தமிழ்நாடு முழுவதும் உலாவர ஆரம்பித்து விட்டது. கலாம் அவர்கள், குடியரசுத்தலைவராக இருந்த போது தான், தமிழை செம்மொழியாக்கி, உத்தரவு பிறப்பித்தார். அவர் எந்த நாட்டில் போசினாலு, இன்றுவரை, தமிழிலிருந்து மேற்கோள் காட்டாமல் பேசுவதில்லை. உல்கம் மூழுவதும், தமிழனை தலை நிமிரச் செய்த கலாம் போன்றவர்களை, அரசு அழைக்காதது ஒரு துரதிருஷ்டமே. கலாம் வந்திருந்தால், அனனத்து இளைஞர்கள் மற்றும், மீடியா பார்வையும், அவர் பக்கம் போயிருக்கும். மேலும், கலைஞர், தமிழ் நாட்டு சட்டசபைக்கு வந்து கலாம், தன்னை புகழ வேண்டும் என்று விரும்பியபோது, கலாம் அவர்கள் தவிர்த்து விட்டதால், கலைஞர் , கலாம் அவர்களை அழைக்க விரும்பாமலும் இருந்திருக்கலாம்.
கலாம் அவர்கள், குடியரசுத் தலைவராக இருந்த போது, ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றத்தில், அவர்களது, பொன்விழாவை ஒட்டி ஒரு சிறப்பு உரை ஆற்றினார். அந்த சமயம், "யாதும் ஊரே' யாவரும் கேளிர்" என்கிற பாடலை கூறி அதன் விளக்கத்தையும், ஆங்கிலத்தில் கூறி, தமிழின் பெருமையை உலகறிய செய்தார். அதை கேட்ட அனைவரும் எழுந்து நின்று கை தட்டி வாழ்த்தினர். அந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தவர், கலாம் அவர்களை கட்டி தழுவி பாராட்டினார்.
அந்த நிகழ்ச்சியை, எனது நண்பர் தனபால் தயாரித்த "லிட்டில் டிரீம்" என்கிற கலாம் அவர்கள் பற்றிய குறும்படத்திலிருந்து, கீழே கொடுத்துள்ளேன்.
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை" என்கிற் கண்ணதாசன் வரிகள் தான் என் நினைவுக்கு வருகிற்து.
இந்த குறும்படத்தை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=Uu-0vTOHJ44