
கட்ந்த சில மாதங்களுக்கு முன்னால், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையே நிகழ்ந்த கலாட்டாவில், போலீசார் தலையிட்டு நிகழ்வுகளை தடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு. அப்போது, நானே, அதை கண்டித்து எழுதினேன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சுப்பரமணிய சுவாமியை நீதிமன்றத்தில், மாண்புமிகு நீதிபதிகள் முன்பு, அழுகிய முட்டையால் அடித்து, ஒரு சில வக்கீல்கள் நீதிமன்றத்திற்கு ஒரு தலை குனிவை ஏற்படுத்தினார்கள். அப்போது ஒரு சில வக்கீல்கள், அங்கிருந்த ஒரு துணை ஆணையரையும் தாக்கினர். அந்த போலீஸ் அதிகாரியும் ஒன்றும் செய்ய இயலாமல், த்ன்னுடைய நிலையை நொந்து கொண்டு நின்று கொண்டிருந்தார். இதே போன்று, உயர்நீதிமன்ற வளாகத்தில், ஒரு துணை ஆணையரும், வக்கீல்களால், சில வாரங்களுக்கு முன்னால் தாககப்பட்டார். அப்போதும் போலீஸ் என்ன செய்வது என்று தெரியாமல், கையை பிசைந்து கொண்டு நின்றனர்.

இவ்வளவுக்கும் பிறகு, போலீசார், ரவுடித்தனம் செய்த வக்கீலகளை நேற்று கைது செய்தனர். உடனே சில வக்கீல்கள் அவர்களை கைது செய்யக்கூடாது என்று வன்முறையில் இறங்கினர். காவல் நிலையம் எரிக்கப்பட்டது.
கடந்த சில் ஆண்டுகளாக, சென்னையில், வெட்கப்படும் வகையில், ஒரு சில வக்கீல்கள் ரவுடித்தனம் செய்து, தாங்கள், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். அவர்களின் அடாவடித்தனத்திற்கு பயந்து கொண்டு, மற்ற நல்ல வக்கீல்கள் வாயை திறப்பதில்லை.
இந்த நிகழ்வுகளுக்கு பிறகு, ஏதோ, வக்கீல்கள் நியாயமாக நடந்து கொண்டது போலவும், காவல் துறையினர் ரவுடித்தனம் செய்தது போலவும் சித்தரிக்கப்டுவது, அபாயகரமானது. அரசியல் வாதிகளும், வக்கீல்களும், அவர்களுக்கு தோன்றியதை மீடியாவில் உரத்த குரலில் பேசமுடிய்ம்'; போராடமுடியும். ஆனல், காவல் துறையினர் அவ்வாறு பேச முடியாது. அதற்காக் அவர்கள் தரப்பு நியாயங்களை ஒதுக்கி விட முடியாது.
இன்று காலை ஒரு மூத்த வக்கீலிடம் பேசினேன். ஒரு சில வக்கீல்கள் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதால், இந்த தொழிலுக்கும், நீதித்துறைக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறார்கள் என்றார்.
நீதிதுறை வல்லுநர்களுக்கும், மற்ற நியாயமான வக்கீல்களுக்கும், பொதுமக்கள் சார்பில் ஒரு பணிவான வேண்டுகோள்:
தயவு செய்து, வக்கீல்கள் என்கிற போர்வையில், ரவுடித்தனம் செய்பவர்களை ஆதரிக்காதீர்கள். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டம் தன் கடமையை செய்ய அனுமதியுங்கள். சாதாரண குடிமகனின் கடைசி நம்பிக்கை 'நீதி மன்றங்களே'. அந்த நம்பிக்கையை தகர்த்து விடாதீர்கள். யார் ரவுடித்தனம் செய்தாலும், அவர்கள் வக்கீல்களாக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இதை நீங்கள் செய்யவிலை என்றால், மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழப்பார்கள்.
(படங்கள் : தி ஹிந்து, ஸிஃபை டாட் காம்)