பாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன?
தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு?
2019 பொத் தேர்தலுக்கு பிறகு, முதல் பாராளுமன்ற கூட்ட்த்தொடர் கடந்த 2019 ஜூன் 17 முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகலில் சிறந்த கூட்டத் தொடராக கருதப்படும் இந்த அமர்வுகளில் 38 சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. அதில் 28 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறின. இந்த கூட்டத் தொடர் 37 நாட்களில் 281 மணி நேரம் அமர்ந்து பணியாற்றியது. இது திட்டமிட்டதைவிட 135 சதவிகிதம் அதிகப்படியானது.
பி.ஆர்.எஸ் இந்தியா தொகுத்த தகவல்களின் படி, பிரைம் பாயிண்ட் பவுண்டேஷனும், சன்சத் ரத்னா விருது குழுவும தேசிய அளவிலும், தமிழக அளவிலும் எம்.பிக்கள் எவ்வாறு அவையில் எவ்வாறு பணியாற்றுகிறார்கள் என்று கடந்த பத்து ஆண்டுகளாக ஆராய்ந்து விருதுகளும் வழங்கி வருகிறது. 17ம் பாராளுமன்ற முதல் கூட்டத் தொடரில் கட்சிகளும், எம்.பிக்களும் எவ்வாறு பணியாற்றினர் என்று ஆய்வு செய்தோம்.
அனைத்து எம்.பிக்களும் இரண்டுவிதமாக பங்கேற்க முடியும். கட்சியின் கட்டளை தேவையில்லாமல் செய்யப்படும் பங்கேற்பு (கேள்விகள், 377 மற்றும் ஸீரோ அவர் விவாதங்கள், தனியார் மசோதாக்கள், முதலியன) மற்றும் கட்சியின் உத்தரவின் படி செய்யும் விவாதங்கள். எங்கள் ஆய்வுக்கு, ஒவ்வொரு எம்.பிக்களின் தனிப்பட்ட பங்கேற்பை மட்டும் உட்படுத்துவோம்.
தனிப்பட்ட முயற்சியில் செய்யப்படும் விவாதங்கள் ( Initiated debates), தனியார் மசோதாக்கள் (Private Members Bills) மற்றும் கேள்விகள் ( Questions raised) ஆகிய மூன்றையும் எடுத்து ஆய்வு செய்வோம். அதன்படி, இந்த மூன்றின் சராசரி கூட்டு ப்புள்ளி அகில இந்திய அளவில் 25.7 வருகிறது. இது தான் அடிப்படை.
தேசிய அளவில், மகாரர்ஷ்ட்ரா 55.7 புள்ளிகளும், கேரளா 42 புள்ளிகள் எடுத்து முன்னைலை வகிக்கின்றன. தமிழ்நாடு சராசரி புள்ளிக்கு கீழ் அதாவது 22.4 புள்ளிகள் எடுத்து 13ம் இடத்தில் இருக்கிறது. கடந்த 14, 14 16 பாராளுமன்றங்களில், மகாராஷ்ட்ராதான் முன்னிலை வகித்தது என்பது குறிபிடத்தக்கது.
அதேபோல், அரசியல் கட்சிகளும் எவ்வாறு செயல் பட்டன என்றும் பார்க்கலாம். ஆர்.எஸ்.பி (ஒரு உறுப்பினர்) 96.0 புள்ளிகளும், தேசிய வாத காங்கிரஸ் 82.0 புள்ளிகளும், சிவ்சேனா கட்சி 52.6 புள்ளிகள் எடுத்து தேசிய அளவில் முன்னைலை வகிக்கின்றன. கடந்த பாராளுமன்றங்களிலும், தேசியவாத காங்கிரஸும்\, சிவசேனாவும் தான் முன்னிலை வகித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணா திமுக 48 புல்ளிகள் எடுத்துள்ளது. மதிமுக 31 புள்ளிகளும், விடுதலை சிறுத்தைகள் 29 புள்ளிகளும் எடுத்துள்ளன. (மூன்று கட்சிகளும் ஒரு உறுப்பினர் கொண்டவை) 22 உறுப்பினர் கொண்ட திமுக 14.4 புள்ளிகள் பெற்று தேசிய சராசரியான 25.7க்கும் கீழே இருக்கின்றது. தமிழக எம்.பிக்களின் தனிப்பட்ட பங்களிப்பு கீழே தரப்படுள்ளது.
தமிழகத்தின் முதலிடம்
திரு வசந்தகுமார் |
தேனி எம்.பி. (அதிமுக) திரு ரவீந்திரநாத் குமார், 29 விவாதங்களில் பங்கேற்று தமிழநாட்டு எம்.பிக்களில் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்றார்.
இர்ரமநாதபுரம் எம்.பி. திரு நவாஸ்கனி (முஸ்லீம் லீக்) மற்றும் திரு வசந்த்குமார் தலா இரண்ரு தனியார் மசோதாக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அனைவருக்கும் தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துக்கள். காங்கிரஸ், திமுக போன்ற பெரிய கட்சிகள் தங்கள் எம்.பிக்களுக்கு பயிற்சி அளித்து, அடுத்த கூட்டத்தொடரில், மகாரஷ்ட்ராவையும் , கேரளாவையும் முந்த வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் ஆவல்.
பிரைம் பாயிண்ட் சீனிவாசன்