This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

புதன், 25 டிசம்பர், 2019

பாரளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் என்ன செய்தார்கள் - தமிழகத்தில் முதலிடம் யாருக்கு? - ஒரு அலசல்

கடந்த டிசம்பர் 13ம் தேதி அன்று, மக்களையின் குளிரகால கூட்டத்தொடர் முடிவடைந்தது.  17வது பாராளுமன்றத்தின் முதல் நாள் முதல், நடந்து முடிந்த கூட்டத்தொடர் வரை தமிழக எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம்.  இந்த ஆய்வு பி.ஆர்.எஸ் இந்தியா என்ற அமைப்பு வெளிடிடுள்ள விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.  

பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனும் (Prime Point Foundation) , ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் (PreSense)  கடந்த பத்து ஆண்டுகளாக, அகில இந்திய அளவில் சிறந்த பாரளுமன்று உறுப்பினர்களுகு சன்சத் ரத்னா (Sabsad Ratba)  விருது ஒவ்வொரு ஆண்டும் மே மாத்த்தில் வழங்கி கவுரவிக்கிறது.  தவிர, பாரளுமன்ற ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்தவுடன், தமிழக அளவிலும், அகில இந்திய அளவிலும் உறுப்பினர்கள் எவ்வாறு பணியாற்றினர் என்று அலசி ஆய்வு கட்டுரை வெளியிடுகிறது.  

பணி மதிப்பிடு

பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு  விவாதங்களில் பங்கேற்பது, தனி நபர் மசோதா தாக்கல் செய்வது, முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்புவது ஆகியவை முக்கிய பணிகாளாகும்.  அதன் அடிப்ப்டையில் அவர்களது பணி மதிப்பிடப்படுகிறது.

இந்த ஆய்வு, பாரளுமன்றத்தின்  முதல் அமர்விலிருந்து டிசம்பர் 13 வரையிலான உறுப்பினர்களின் பணிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. 

ஒட்டுமொத்த எண்ணிக்கை - முதலிடம்


விவாதங்கள், தனி நபர் மசோதா, கேள்விகள் ஆகியவற்றின் ஒட்டு மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழக எம்.பிக்களில், கன்னியகுரை  காங்கிரஸ் எம்.பி திரு வசந்தகுமார் 109 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறார்.  கடந்த முதல் கூட்டத்தொடரிலும் அவர்தான் முதலிடம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 28 விவாதங்கள், 2 தனியார் மசோதாக்கள் மற்றும் 79 கேள்விகள் கேட்டு, முதலிடம் வகிக்கிறார்.  95 சதவிகித கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். 

திரு வசந்தகுமர் கட்ந்த முதல் கூட்டத்தொடரில்  மொத்த மக்களவையிலும் 27ம் இடத்தை பெற்று இருந்தார்.  தற்போது, 2 இடங்கள் முன்னேறி 25ம் இடத்தை பெற்றுள்ளார்.  

தமிழகத்தில் இரண்டாம் இடத்தை திரு எம். செல்வராஜ் (சி.பி.ஐ - நாகப்பட்டினம்), இவர் 28 விவாதங்களில் பங்கேறும் 55 கேள்விகள் எழுப்பியும் (மொத்த பாயிண்டுகள் 84) இரண்டம் இடத்தை பெற்றுள்ளார்.  79 சதவிகிட அமர்வுகளில் பங்கேற்றுள்ளார். 

தேனி அண்ணாதிமுக எம்.பி திரு ரவீந்திரநாத் அவர்களும், காஞ்சிபுரம் திமுக எம்.பி  ஜி. செல்வம் அவர்களும் தலா 78 புல்ளிகள் பெற்றி மூன்றாம் இடம் வகிக்கிறார்கள்.  

விவாதங்கள்

தேனி எம்.பி. திரு ரவீந்திரநாத் தமிழ்நாட்டு எம்.பிக்களில் அதிக விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார்.  அவர் 42 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 

தனிநபர் மசோதா

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு உறுப்பினர்கள் முக்கியமான பிரச்சனைகளில் தனி நபர் மசோதா கொண்டுவரலாம்.  கடந்த இரண்டு கூட்டத்தொடரிலும் சேர்த்து 146 தனிநபர் மசோதாக்கள் அகில இந்திய அளவில்  அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.  இதில் தமிழகத்திலிருந்து 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

திரு வசந்தகுமார், திருமதி கனிமொழி, திரு நவாஸ்கனி தலா 2 மசோதாக்கள் தாக்கல் செய்துள்ளனர்.  திரு ரவிகுமார் 1 மசோதா தாக்கல் செய்துல்ளார்.  

கேள்விகள்

திரு வசந்தகுமார் 79 கேள்விகள் எழுப்பி முதலாமிடத்திலும், திரு ஜி. செல்வம் 75 கேள்விகள் எழுப்பி இரண்டாம் இடத்திலும் தமிழக அளவில் இருக்கிறார்கள்.  

கட்சிகளின் செயல்திறன்

தமிழகத்திலிருந்து சென்றுள்ள 39 எம்.பிக்களும், 7 கட்சிகளில் உள்ளனர்.  கட்சிகள் மொத்த செயல் திறன் எப்படி இருந்தது என்று பார்க்கலாம்.

24 எம்.பிகள் கொண்ட திமுக வின் சராசரி 38.4.  இரண்டு  உறுப்பினர்க்ள் கொண்ட சி.பி.ஐ (71.5), 
2 உறுப்பினர்கள் கொண்ட சி.பி.ஐ. எம் (57.5), 
8 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் (51), 
ஒரு உறுப்பினர் கொண்ட வி.சி.கே (44), 
ஒரு உறுப்பினர் கொண்ட முஸ்லீம் லீக் (64) மற்றும்
ஒரு உறுப்பினர் கொண்ட அண்ண திமுக (78) சராசரி புள்ளிகள் பெற்று உள்ளனர். 

தமிழ்நாட்டின் சராசரி புள்ளி 45.5.  அகில இந்திய சராசரி 42.7. 

மகாராஷ்டிராவின் சராசரி 80.1
கேரளாவின் சராசரி 71.1
அகில இந்திய அளவில் இவை முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளன.

அகில இந்திய அளவில், 6 உறுப்பினர் கொண்ட தேசிய்வாத காங்கிரஸ் 104.5 புள்ளிகள் எடுத்துள்ளது.  

பிரைம் பாயிண் ஃபவுண்டேஷன் சார்பிலும், ப்ரீசென்ஸ் மின் இதழ் சார்பிலும், தமிழகத்தின் சிறந்த எம்.பிக்களை பாராட்டுகிறோம்.  

தமிழக எம்.பிக்களின் செயல்திறன் தரவு கீழேகொடுக்கப்படுள்ளது.  

பிரைம் பாயிண்ட் சீனிவாசன்
Data Source : PRS India


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

பாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன? தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு?

பாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன?   தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு?

பாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன?
தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு?

2019 பொத் தேர்தலுக்கு பிறகு, முதல் பாராளுமன்ற கூட்ட்த்தொடர் கடந்த 2019 ஜூன் 17 முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடைபெற்றது.   கடந்த 20 ஆண்டுகலில் சிறந்த கூட்டத் தொடராக கருதப்படும் இந்த அமர்வுகளில் 38 சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.  அதில் 28 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறின.  இந்த கூட்டத் தொடர் 37 நாட்களில் 281 மணி நேரம் அமர்ந்து பணியாற்றியது.  இது திட்டமிட்டதைவிட 135 சதவிகிதம் அதிகப்படியானது. 

பி.ஆர்.எஸ் இந்தியா தொகுத்த தகவல்களின் படி, பிரைம் பாயிண்ட் பவுண்டேஷனும், சன்சத் ரத்னா விருது குழுவும தேசிய அளவிலும், தமிழக அளவிலும் எம்.பிக்கள்  எவ்வாறு அவையில் எவ்வாறு பணியாற்றுகிறார்கள் என்று கடந்த பத்து ஆண்டுகளாக ஆராய்ந்து விருதுகளும் வழங்கி வருகிறது.   17ம் பாராளுமன்ற முதல் கூட்டத் தொடரில் கட்சிகளும், எம்.பிக்களும் எவ்வாறு பணியாற்றினர் என்று ஆய்வு செய்தோம். 

அனைத்து எம்.பிக்களும் இரண்டுவிதமாக பங்கேற்க  முடியும்.  கட்சியின் கட்டளை தேவையில்லாமல் செய்யப்படும் பங்கேற்பு  (கேள்விகள், 377 மற்றும் ஸீரோ அவர் விவாதங்கள், தனியார் மசோதாக்கள், முதலியன) மற்றும் கட்சியின் உத்தரவின் படி செய்யும் விவாதங்கள்.  எங்கள் ஆய்வுக்கு, ஒவ்வொரு எம்.பிக்களின் தனிப்பட்ட  பங்கேற்பை  மட்டும் உட்படுத்துவோம். 

தனிப்பட்ட முயற்சியில் செய்யப்படும் விவாதங்கள் ( Initiated debates),  தனியார் மசோதாக்கள் (Private Members Bills)  மற்றும் கேள்விகள் ( Questions raised) ஆகிய மூன்றையும் எடுத்து ஆய்வு செய்வோம்.  அதன்படி, இந்த மூன்றின் சராசரி கூட்டு ப்புள்ளி அகில இந்திய அளவில் 25.7 வருகிறது.   இது தான் அடிப்படை. 

தேசிய அளவில், மகாரர்ஷ்ட்ரா 55.7 புள்ளிகளும், கேரளா 42 புள்ளிகள் எடுத்து முன்னைலை வகிக்கின்றன.  தமிழ்நாடு சராசரி புள்ளிக்கு கீழ் அதாவது 22.4 புள்ளிகள் எடுத்து 13ம் இடத்தில் இருக்கிறது.  கடந்த 14, 14 16 பாராளுமன்றங்களில், மகாராஷ்ட்ராதான் முன்னிலை வகித்தது என்பது குறிபிடத்தக்கது.

அதேபோல், அரசியல் கட்சிகளும் எவ்வாறு செயல் பட்டன என்றும் பார்க்கலாம்.  ஆர்.எஸ்.பி (ஒரு உறுப்பினர்) 96.0 புள்ளிகளும்,  தேசிய வாத காங்கிரஸ் 82.0 புள்ளிகளும், சிவ்சேனா கட்சி 52.6 புள்ளிகள் எடுத்து  தேசிய அளவில் முன்னைலை வகிக்கின்றன.  கடந்த பாராளுமன்றங்களிலும், தேசியவாத காங்கிரஸும்\, சிவசேனாவும் தான் முன்னிலை வகித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 அண்ணா திமுக 48 புல்ளிகள் எடுத்துள்ளது.  மதிமுக 31 புள்ளிகளும், விடுதலை சிறுத்தைகள் 29 புள்ளிகளும் எடுத்துள்ளன. (மூன்று கட்சிகளும் ஒரு உறுப்பினர் கொண்டவை)   22 உறுப்பினர் கொண்ட திமுக 14.4 புள்ளிகள் பெற்று தேசிய சராசரியான 25.7க்கும் கீழே இருக்கின்றது.   தமிழக எம்.பிக்களின் தனிப்பட்ட பங்களிப்பு கீழே தரப்படுள்ளது. 

தமிழகத்தின் முதலிடம்

திரு வசந்தகுமார் 
கன்னியாகுமரி தொகுதி எம்.பி (காங்கிரள்)  திரு வசந்த குமார் 72 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறார். அவர் 14 விவாதங்களிலும், 2 தனியார் மசோதக்கள், 56 கேள்விகள் மூலம் முதலிடம் வகிக்கிறார்.  தமிழநாட்டு எம்.பிக்களில் அதிக கேள்விகள் கேட்டவரும் இவரே.

தேனி எம்.பி. (அதிமுக) திரு ரவீந்திரநாத் குமார்,  29 விவாதங்களில் பங்கேற்று தமிழநாட்டு எம்.பிக்களில் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்றார். 

இர்ரமநாதபுரம் எம்.பி. திரு நவாஸ்கனி  (முஸ்லீம் லீக்) மற்றும் திரு வசந்த்குமார் தலா இரண்ரு தனியார் மசோதாக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அனைவருக்கும் தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துக்கள். காங்கிரஸ்,   திமுக போன்ற பெரிய கட்சிகள் தங்கள் எம்.பிக்களுக்கு பயிற்சி அளித்து, அடுத்த கூட்டத்தொடரில், மகாரஷ்ட்ராவையும் , கேரளாவையும் முந்த வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் ஆவல்.

பிரைம் பாயிண்ட் சீனிவாசன்


ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

2019 மக்களவை தேர்தல் - யாருக்கு வாக்களிப்பது?


14 ஏப்ரல் 2019

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.   பல மாதங்களுகளுக்குப் பிறகு, இந்த புத்தாண்டு முதல், என்னுடைய கருத்துக்களை, மீண்டும் தமிழில் பகிரலாம் என்று விரும்புகிறேன். 

17வதுமக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்  தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.  பி.ஜே.பி தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், பிற மாநில் கட்சிகளும் மத்திய ஆட்சியை பிடிக்க களத்தில் உள்ளன.  இந்நிலையில் யாருக்கு வோட்டளிப்பது என்று பல ஆலோசனைகள் வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 

சிலர் நோட்டவிற்கு வாககளிக்குமாறு வற்புருத்துகின்றனர்.  சிலர் படித்தவர்களை விரும்புகின்றனர்.   வோட்டளிப்பது ஒருவரின் தனிப்பட உரிமை என்றாலும்,  அந்த உரிமையை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, உணர்ச்சிவயப்ப்டாமல், மக்களவை நடைமுறக்களை அறிந்து தெளிவுடன் வாக்களிப்பது அவசியம்.  அதற்கு முன் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்திய அரசியல் அமைப்ப்ச் சட்டத்தின் படி, மூன்று அமைப்புகள் மக்களால் நேரடியாக தேர்ந்தெருக்கப்படுகின்றன.

1.  பாராளுமன்றத்தின் மக்களவை
2.  மாநிலங்களில் சட்டமன்றம்
3.  உள்ளாட்சி அமைப்புக்கள். (பஞ்சாயத்துக்கள், நகரசபை, மாநகர மன்றம்)

ஒவ்வொன்றிலும் தேர்ந்த்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் பணிகள் வேறானவை.  மக்களவைக்கு தேர்ந்துக்கப்படும் உறுப்பினர்கள் (1) தேசிய அளவில் சட்டமியற்றுதல், (2) மத்திய் அரசின் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிப்பது, (3) மக்களவை மற்றும் நிலை குழுக்களின் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு மத்திய அரசின் நிர்வாகத்தை கண்கணிப்பது மற்றும் (4) தொகுதி மாநில மற்றும் தேசிய பிரச்சனைகளை மக்களவையின் கவனத்திற்கு கொண்டுவந்து தீர்வு காண்பது ஆகிய முக்கிய பணிகளை செய்ய வேண்டும்.  மத்திய அரசின் திட்டங்களை தொகுதிக்கும், மாநிலத்திற்கும் கொண்டு வருவதும், இதில் அடங்கும்.

மக்களவைக்கு தேர்ந்தெடுப்பவர்களிடமிருந்து, தெருக்களை சுத்தம் செய்வது, தெரு விளக்குகளை கண்காணிபது, போன்ற பணிகளை எதிர்பார்க்கக்கூடாது.  இந்த பணிகளெல்லாம் , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் செய்யவேண்டியவை.  கவுன்சிலர்கள் செய்ய வேண்டிய பணிகளை மக்களவை உறுப்பினர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால், சிறிய சிறிய பணிகளை மக்கள் எதிர்ப்பார்த்து சந்தோஷம் அடைவதால், சில மக்களவை உறுப்பினர்கள், தாங்கள்  செய்ய வேண்டிய பெரிய பணிகளை செய்யாமல் உள்ளூர் மக்களிடம் நல்ல பெயர் எடுத்து விடுகிறார்கள்.  பாராளுமன்ற பணிகளை செய்வதில்லை.

ஒரு கம்பெனியில், ஒருவரை ஜெனரல் மானேஜருக்கு பணியில் அமர்த்திவிட்டு, அவரிடம் சாதாரண வேலையை வாங்குவது போல் தான் இது. 

மக்களவையும் அரசியல் கட்சிகளும்

மக்களவை தேர்தல் முடிந்தவுடன் மத்திய அரசு அமைக்கப்படும். அரசியல் அமைப்பு சட்டப்படி, எவர் ஒருவர் மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களது நம்பிக்கையை பெறுவார் என்று குடியரசு தலைவ்ர் கருதுகிறாரோ அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.   இந்திய அரசியல் அமைப்பு சட்டம், அரசியல் கட்சிகள் பற்றி குறிப்பிடாவிட்டாலும், நடைமுறையில், பெரும்பானமை கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார்.  அவர்தான் பிரதமராக பதவி எற்பார்.

தறிபோதைய நிலவர்ப்படி, 543 உறுப்பினர் கொண்ட மக்களவையில், 272 உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற்ற ஒருவர் தான் பிரதமராக வரமுடிய்ம்.  எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கோ மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், மத்திய அரசில் குழப்ப நிலை உருவாகி பல பொருளாதார மற்றும் நிரவாக பாதிப்ப்க்கள் ஏற்படும்.   இதற்கு பல முன் உதாரணங்கள் உண்டு.

முந்தைய அரசுகள்

1.  1989ல் 9 வது மக்களவையில், மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி அமைத்த வி.பி.சிங் ஆட்சி 11மாதங்கள் நீடித்தது.  பிறகு ஆட்சி அமைத்த சந்திரசேகர் ஆட்சி 6 மாதங்க்ளில் கவிழ்ந்தது.  இந்தியா பொருளாதாரம் பெறுமளவில் பாதிக்கப்ப்ட்டது.  வெளிநாட்டில் கடன் வாங்குவதற்கு, அரசு தங்கத்தை அடகு வைக்க வேண்டியதாகிற்று.

2. 1991ல் 10வது மக்களவையில், நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ், மெஜரிட்டி கொஞ்சம் குறைவாக இருந்தாலும், ஐந்தாண்டு காலம் நிலையான ஆட்சி அளித்தது.  அவரது ஆட்சியில் தான பல பொருளாதார மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 

3.  1996ல் 11வது மக்களவையில், எந்த கட்சியும் பெறும்பானமை பெறாத நிலையில், அதிக இடங்க்ளைப்பெற்ற வாஜ்பாயி பிரதமாராக பதவி ஏற்றார்.  13 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.  பிறகு தேவகவுடாவும் குஜ்ராலும் அடுத்தடுத்து  பிரதமராக பதவி ஏற்றார்கள்.  18 மாதங்கள் நீடித்த இந்த மக்களவை, நிலையான ஆட்சி கொடுக்க முடியவில்லை.  அதிக அளவில் பொருளாதாரம் பாதிக்ப்பட்டது. சிறிய கட்சிகள், மாநில தலைவர்களின் பதவி பேராசையால், நாடு பெரும் இழப்பை சந்தித்தது. அரசியல் குழப்ப நிலை நீடித்தது.

4. 1998ல் நடந்த தேர்தலில் அமைக்கப்பட்ட 12வது மக்களவையிலும் எந்த கட்சியும் பெறும்பானமை பெறவில்லை.  182 இடங்களைப் பெற்ற வஜ்பாயி தலைமையிலான பி.ஜே.பி சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.  அதுவும் 13 மாதங்களில் ஆட்சியை ஒரு வோட்டில் இழந்தது. 

5. 1999ல் நடந்த 13வது மக்களவை  தேர்தலில், பி.ஜே.பி. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 270 இடங்களைப் பெற்று, ஐந்து ஆண்டு காலம் வாஜ்பாயி தலைமையில் நிலையான ஆட்சி அமைந்தது.  இந்த கால கட்டத்தில், இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்றது. 

6.  2004ல் நடைபெற்ற 14வது மக்களவை தேர்தலில், காங்கிரஸ் 141 இடங்களும், பி.ஜே.பி. 130 இடங்களும் பெற்றன.  பிற மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மன்மோகன் சிங் தலைமையில் யு.பி. ஏ. அரசு அமைந்தது.  ஐந்து ஆண்டுகாலம் இந்த ஆட்சி நீடித்தாலும், கூட்டணி கட்சிகளின் அழுத்ததால்,  பல ஊழல்கள் நடைபெற்றன. 

7.  2009 மர்றும் 2014 ம் ஆண்டில் நடைபெற்ற 15வது மற்றும் 16வது மக்களவை தேர்தல்களில், காங்கிரஸ் கூட்டணியும், பி.ஜே.பி. கூட்டணியும் நிலையான ஆட்சிகளை அளித்தன.  பொருளாதார வளர்ச்சியும் அடைந்தது.

எப்பொழுதெல்லாம் எந்த கட்சி அல்லது கூட்டணிக்கு மெஜரிட்டி இல்லாமல் ’தொங்கு பாராளுமன்றம்’ உருவாகிறதோ,  அப்பொழுதெல்லாம், அரசியல் குழப்ப நிலை உருவாகி, பொருளாதாரம் பாதிகப்படுகிறது. 

நான் ஒவ்வொரு வாக்காளரையும் பணிவுடன் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான்.

1.    தற்போது பாரத நாட்டை ஆளக்கூடிய திறமை உள்ள கட்சிகள் பி.ஜே.பியும், காங்கிரசும் தான்.  அவர்கள் தலைமையில் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். எந்த அணி நிலையான ஆட்சி தர முடியும், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும், நாட்டை பாதுகாக்க முடியும், அவர்களது தலைவர்களின் திறமை போன்றவற்றை உணர்ச்சி வயப்படாமல், நடுநிலையாக ஆழ்ந்து சிந்தியுங்கள்.  உங்கள் கருத்தில் எந்த அணி நிலையான, நேர்மையான ஆட்சி தரமுடியும் என்று நினக்கிறிகளோ, அவர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

2.  அனைத்து கட்சிகளும் / கூட்டணிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுவிட்டன.  சிறிய கட்சிகள் கூறும் எந்த உறுதிகளையும் செயல்படுத்தமுடியாது. மக்களவை தேர்தலில் அவை வெறும் காகிதங்களே.  சிறிய கட்சிகள் சட்ட மன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வெளியிடும் அறிக்கைகள் முக்கியமானவை.  மக்களவை தேர்தலைப் பொறுத்தவரை,  பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் முக்கியமானவை.  அவைகளை நன்கு படிக்கவும்.

3.  வாக்களிப்பத்ற்கு எவரும் பணமோ, பொருளோ கொடுத்தால் அதை நிராகரியுங்கள்.  உங்கள் வாக்கு புனிதமானது. விற்பனைக்கு அல்ல.  வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட.

4.  கூட்டணியில் இல்லாத சிறிய கட்சிகள், சுயேச்சைகள் அதிக அளவில் மக்களவையில் தேர்ந்தெடுக்க்ப்பட்டு, ஒரு கட்சியோ, அணியோ, மெஜாரிட்டி பெற வில்லை என்றால், குதிரை பேரங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.  அவர்கள் கேட்கும் விலையை அரசு கொடுக்க வேண்டியிருக்கும்.  சிறிய கட்சிகளும், சுயேச்சைகளும், சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று பல சாதனைகள் செய்ய முடியும்.  ஆனால் மக்களவையில் செய்ய முடியாது.

5.  பலர் ‘நோட்டா’விற்கு வோட்டு போடும்படு பரச்சாரம் செய்கிறார்கள்.  இது மிகவும் ஆபத்தானது.  நோட்டாவிற்கு ஓட்டு போடுவது ஒரு செல்லாத ஓட்டுக்கு சமம்.  தற்போதைய விதிகளின் படி, 99 சதவிகிதம் நோட்டா வோட்டுக்கள் பதிவாகியிருந்தாலும், மீதி 1 சதவிகித ஓட்டில் யார் அதிக ஓட்டு பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். 

ஆகவே, அனைவரும் நிதானமாக உணர்ச்சிவயப்படாமல் நன்கு சிந்தித்து நிலையான ஆட்சியைத்தரும் ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

வாழ்க பாரதம்.

பிரைம் பாயிண்ட் சீனிவாசன், சென்னை

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...