கடந்த 19ம் நூற்றாண்டிலிருந்து, ஆரியம் மற்றும் திராவிடம் என்கிற வார்த்தைகள், இன ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அதிக அளவில் உபயோகப்ப்டுத்தப் படுத்தப்பட்டு வருகின்றன.
பண்டைக்காலங்களில் ஆரியம் - திராவிடம்
பண்டைய இலக்கியங்களில் ‘ஆரிய’ என்கிற சொல், மேன்மை தங்கிய அல்லது மதிப்பிற்குரிய என்கிற வகையில் தான் வழக்கத்தில் இருந்தது. இராமயணத்தில், கும்பகர்ணன் இராவணனை, ‘ஆரிய’ என்று அழைக்கிறான். சீதை, இராமனை, ‘ஆரிய’ என்று அழைக்கிறார். ‘ஆரிய’ என்கிற சொல் பண்பை குறிப்பதாக கூறுகிறார்கள். இலங்கையை ஆண்ட அரசர்கள் தங்கள் பெயருக்கு முன்னால், ‘ஆரிய’ என்கிற பெயரையும் சேர்த்து வந்தனர்.
அதுபோன்று, ‘திராவிடம்’ என்கிற சொல், ஒரு நில பரப்பை குறிப்பதாக கூறப்படுகிறது. பண்டைய பாரதத்தில், 56 தேசங்கள் இருந்ததாக வரலாறு. அதில் ‘திராவிட நாடும்’ ஒன்று. அந்த திராவிட நாடு, இன்றைய காஞ்சிபுரத்திற்கும் ஆந்திராவிலுள்ள நெல்லூருக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.
இது தவிர, வைணவ இலக்கியங்க்ளில், தமிழை திராவிடம் என்று குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக பத்திரிக்கையாளர் சுப்பு எழுதிய கட்டுரையை இந்த லிங்கில் படிக்கலாம்.
http://www.tamilhindu.com/2012/01/aryan-dravidan-literary-evidences/
நூறு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இது சம்பந்தமாக ப்ல ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய பேச்சை ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதை கீழ்கண்ட தளத்தில் படிக்கலாம்.
http://www.kamakoti.org/tamil/KURAL4.htm
ஆரிய திராவிட இன பேதங்கள் உருவானது எப்படி?
19ம் நூற்றாண்டில், கால்டுவெல் பாதிரியார் இந்தியாவிற்கு வந்த போது, அவர் ஆரியர் - திராவிடர் என்பதை தனிதனி இனமாக குறிப்பிட்டார். இது ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியாக கருதப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கார் அவர்கள், வேதங்களை நன்கு படித்தவர். அவர் ஒரு அறிஞர். அவரே, இந்த ஆரிய-திராவிட இன பாகுபட்டை ஏற்கவில்லை. அந்த கருத்தை மறுத்தார்.
நாமக்கல் கவிஞர் போன்ற ப்ல அறிஞர்களும் இந்த ஆரிய-திராவிட இன வேற்றுமை கருத்தை ஏற்கவில்லை. அவர் “ஆரியமாவது - திராவிடமாவது;" என்கிற நூலில், ஆரிய-திராவிட இன பேதங்களை சாடுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன், சுதந்திர போராட்ட தியாகி திரு நெல்லை ஜெபமணி அவர்கள் கூட துக்ளக்கில், ‘கழகங்களை கண்டு கொள்வோம்’ என்கிற தொடரில், திராவிட கழகங்களை தோலுருத்திக் காட்டினார்.
திராவிட இயக்கங்களின் வளர்ச்சி
1917 ம் ஆண்டில், நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட ‘தென்னிந்திய நல உரிமை சங்கம்’ (South Indian Liberal Federation) பிராமணர் அல்லாதவ்ர்களால் உருவாக்கப்பட்டது. 1920 முதல் 1937 வரையான கால கட்டங்களில், 13 ஆண்டுகள் சென்னை மாகாணத்தையும் இந்த கட்சி ஆண்டது. பிராமண எதிர்ப்பும், இந்த காலங்களீல் அதிகமானது.
1943ல், திரு அண்ணதுரை அவர்கள் ‘ஆரிய மாயை’ என்கிற ஒரு நூலை எழுதினார். இந்த் புத்தகத்தில், வட இந்தியர்களூம், பிராமணர்களூம் ஆரிய்ர்கள் எனவும், மற்றவர்கள் திராவிடர்கள் எனவும் விவரித்தார். ஆனால், இந்த புத்தகம் அன்றைய காங்கிரஸ் அரசின் முதல்வரான் திரு குமாரசாமி ராஜா அவர்களால் தடை செய்யப்ப்பட்டது. திரு அண்ணா அவர்கள் 1967ல் முதல்வராக வந்தபோதும், அவர் அந்த தடையை நீக்கவில்லை. அவருக்கு பின்னால் திரு கருணாநிதியால் நீக்கப்பட்டது.
1944ல் திராவிட கழகம், திரு ஈ.வே.ரா. பெரியாரால் துவக்கப்பட்டது. இது ஒரு பிராமண எதிர்ப்பு இயக்கமாகவே உருவானது. இதனால், பிராமணர்களை அவர்கள், தங்கள் இயக்கத்தில் உறுப்பினராக சேர்க்கவில்லை. இந்தியாவிற்கு சுத்ந்திரம் வருவதையும் அவர்கள் எதிர்த்தார்கள் என்பது வரலாறு.
1948ல், திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) அண்ணா அவர்கள் தலைமையில் உருவானது. இதுவரை, திராவிட கழகத்தில் தளபதியாக இருந்த அண்ணா, அதிலிருந்து பிரிந்து, திமுக வை உருவாக்கினார். பிராமணர்களை ஆரியர்களாக தனது ‘ஆரிய மாயை’ நூலில் எழுதிய அண்ணாவே, திமுக துவங்கியபோது, பிராமணர்களையும், திமுகவில் இணைக்க ஆதரவு அளித்தார்.
திராவிட வாதங்களின் வீழ்ச்சி
1977ல், திரு எம்.ஜி.ஆர் அவர்கள் அ இ அ தி மு க் துவங்கி, பின்பு ஆட்சி அமைத்தபோது, இந்த் திராவிட வாதம் நீற்று போக ஆரம்பித்தது. தன்னுடைய கட்சியின் பெயரில், “அகில இந்திய” என்று சேர்த்து, தன்னை ஒரு தேசியவாதியாக அடையாளம் காட்டிக்கொண்டார். திமுக துவங்கியது முதல், நாத்திகர்களாகத்தான் தங்களை திமுகவினர் அடையாளம் காட்டிக்கொண்டனர். எம்.ஜி.ஆரின் புது கட்சிக்கு பிறகு, அவரே, மூகாம்பிகை கோவிலுக்கு த்ன தொண்டர்களுடன் செல்ல ஆரம்பித்தார். சென்னையிலிருந்து, மூகாம்பிகை கோவிலுக்கு நேரடி பேருந்தும் விட்டார்.
பிராமண எதிர்ப்பு கொள்கையை முன் வைத்து, திராவிடம் பேசி ஆட்சிக்கு வந்தனர் திமுகவினர். அதே வழியில் அண்ணாவை தனது குருவாக ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர். தனது ஆட்சியில் முதன் முறையாக பிராமணரான திரு ஹண்டேவை அவரது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். இது போதாதென்று, பிராமணரான செல்வி ஜெயலலிதாவையும், தனது வாரிசாக அறிவித்தார். இன்றைக்கும், அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் நெற்றியில் குங்குமம் அல்லது திருநீறு இல்லாமல் வெளியில் வரமாட்டார்கள்.
எம்.ஜி.ஆர் காலத்திற்கு பிறகு, ஆரிய-திராவிட இன பேதங்கள் மறைந்து விட்டாலும், தான் எப்போதெல்லாம், மக்களால் நிராகரிக்கப்டுகிறாரோ, அப்போதெல்லாம், கலைஞர் அவர்கள், ஆரிய-திராவிட வாதங்களையும், பிராமண எதிர்ப்பு வாதங்களையும் புதுப்பித்துக்கொள்வார். கட்ந்த வாரம், முரசொலியில், இது பற்றிய கட்டுரை வந்தது.
கலைஞர் அவர்கள் எவ்வளவு தான் நாத்திகம் பேசினாலும், திராவிட வாதங்களால் பிராமண எதிர்ப்பு பேசினாலும், அவரது குடும்பத்தினர், கனிமொழி கைதுக்குப் பிறகு, ஹோமங்கள் செய்தது, பல பிரபல கோவிலகளுக்கு சென்றது எல்லாம் அண்மையில் விவரமாக ஊடகங்களில் வந்தன.
திராவிட் மாயை - ஒரு பார்வை
இதன் பின்னணியில், பிரபல பத்திரிக்கையாளர் திரு சுப்பு அவர்கள், கடந்த ஆண்டில், “திராவிட மாயை - ஒரு பார்வை” என்கிற ஒரு புத்தகத்தை வெளிட்யிட்டுள்ளார். இந்த புத்தகம் எழுதுவதற்காக, அவர் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, ப்ல நூல்களை படித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.
இந்த் நூலில், 42 அத்தியாயங்களில், 1917 முதல் 1944 வரை நடந்த் நிகழ்வுகளை ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார். அதாவது, நீதிக்கட்சி துவக்கியது முதல் (1917) திராவிட கட்சி உருவானது (1944) வரை எழுதியுள்ளார். இந்த தமிழ் புத்தகத்தை, ஆங்கிலத்திலும் வெளியிட, மொழிபெயர்ப்பு செய்து கொண்டிருக்கிறார்.
இந்த புத்தகத்தின் இரண்டாவது பகுதியை திராவிட கட்சி துவங்கிய ஆண்டு முதல் (1944), எம்.ஜி.ஆர் அ.இ.அ.தி.மு.க் துவக்கியது (1977) வரை எழுத இருக்கிறார்.
வெற்றிகுரல் இதழ் 26
பத்திரிக்கையாளரும், “திராவிட மாயை - ஒரு பார்வை” நூலின் ஆசிரியருமான திரு சுப்பு அவர்களுடன், வெற்றிகுரலுக்காக ஒரு பேட்டி எடுத்தேன். அவரது பேட்டியை கீழே கேட்கலாம்.
திரு சுப்புவை
subbupara@yahoo.co.in என்கிற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பேட்டியை, கீழ்கண்ட தளத்திலும் காணலாம்.
http://www.youtube.com/watch?v=CqFJBYCJtRY