This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

சனி, 25 டிசம்பர், 2010

இந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்

கட்ந்த 23ம் தேதி டிசம்பர் (2010), மன்மதன் அம்பு என்கிற ஒரு தமிழ் படம் வெளிவந்துள்ளது.  கே.எஸ். ரவிகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், கமலஹாசனும் நடித்துள்ளார்.  இதில் நடிப்பது தவிர, தானே ஒரு பாடலையும் எழுதி, அதை பாடியும் நடித்துள்ளார்.
இந்த பாடலின் சி.டி. வெளியானபோது, அதில்,  இந்து மக்கள் கொண்டாடும் வரலட்சுமி விரதத்தையும், லட்சும், திருமால் உட்பட இந்து மக்கள் வணங்கும் கடவுளர்களையும் கொச்சைப்படுத்தி பாடல் எழுதி பாடியுள்ளது தெரிய வந்தது. இந்த பாடல் ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரையும் புண்படுத்தியது.  
உடனே, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இந்து அமைப்புக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன.  இந்த பாடலை, திரைப்படம் வெளியிடும் முன்பு, நீக்கி விட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு, எந்த ஒரு பதிலும் வராததால், இந்து முன்னணியினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.  உயர் நீதிமன்றமும், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டலினுக்கும், இயக்குநர் கே.எஸ். ரவிகுமாருக்கும், நடிகர் கமலுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், கேரளாவில் ஒரு விழாவில் பேசிய கமல், “இந்த பாடலை நீக்குவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. சென்சார் சர்டிபிகேட் வந்து விட்டது” என்கிற பாணியில் பேசினார்.
இந்த அகந்தையான பேச்சில், கோபமுற்ற இந்து முன்னணி தொண்டர்கள் சுமார் 200 பேர், சென்னை நகர் இந்து முன்னணி பொது செயலாளர் டி.இளங்கோவன் தலைமையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள கமலது இல்லத்தை முற்றுகையிட்டனர்.இந்த படத்தை தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் வெளியிடாமல் தடுப்பதாகவும், மீறி வெளியிட்டால், மக்கள் இந்த படத்தை பார்க்கவராமல் தடுப்பதாகவும் சூளுரைத்தனர்.  உட்னே போலீஸ் படை குவிக்கப்பட்டது.
தங்கள் வியாபரம் தடைப்படும் என்கிற பயத்திலும், முதலீடு செய்துள்ள முதல்வர் குடும்பம் பாதிக்கப்படும் என்கிற பயத்திலும், உடனடியாக, இந்து முன்னணி அமைப்பின் பிரதிநிதிகளை கமலும், கே.எஸ். ரவிகுமாரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.  இந்து முன்னணி சாரிபில், டி. இளங்கோவும் காஞ்சி கண்ணனும் கலந்து கொண்டனர்.  போலீஸ் தரப்பிலும் பார்வையாளராக கலந்து கொண்டு, பேச்சு வார்த்தைகளை வீடியோ படமாகவும் எடுத்தனர்.  
இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட டி. இளங்கோவினை வெற்ற்குரலின் சார்பில் நான் பேட்டி எடுத்தேன்.  பேசிசு வார்த்தையின் போது, கமல் தான் ஒரு நாத்திகன் என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்றும் கூறியதாக இளங்கோ கூறினார்.  இறுதியல், அந்த சர்ச்சைக்குறிய பாடலை நீக்கிவிட்டு, பட்த்தை வெளியிட சம்மதித்தனர்.  
கமல் நாத்திகனாக இருப்பதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.  அது அவரது தனிப்ப்ட்ட உரிமை.  ஆனால், ஆன்மீகத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் இருப்பவர்கள் கோடானுகோடி மக்கள்.  அவர்களது உணர்வுகளை புண்படுத்துவதில், என்ன மகிழ்ச்சி என்று எனக்கு புரியவில்லை. நல்ல வேளையாக, வியாபாரம் பாதிக்கப்படும் என்கிற ஒரே நோக்கில்தான், இந்த பாடலை நீக்குவதற்கு கமல் சம்மதித்தார்.  
பொதுவாகவே,  தமிழ்நாட்டு நாத்திகர்களுக்கு ஒரு தனி சிறப்பு.அவர்கள் த்ங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்ய மாட்டார்கள்.ஏனென்றால், நாத்திகர்கள் கூட்டம் போட்டால், கேட்பதற்கு தமிழ்நாட்டில் யாருமே இல்லை. நாத்திக பேசுபவர்களது குடும்பதினரே, இன்று அதிக அளவில் ஆன்மிகத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்து கடவுள் வழிபாட்டை கேவலப்ப்டுத்தியே, தங்கள் பங்கை முடித்து கொள்வார்கள்.  பிறர் மனம் புண்ப்டுகிறதென்றால், அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.  இதைதான் ஆங்கிலத்தில், “சேடிஸம்” என்பார்கள்.  அதாவது, ஒரு சிலர், ஒரு கரப்பான் பூச்சியை ஊசியால் குத்தி குத்தி, அது தவிப்பதைக்கண்டு அதிகமாக மகிழ்வார்கள். பிறரை புண்படுத்தி, ஹிட்லர் போல், மகிழ்ச்சி கொள்பவர்கள் தான் ‘சேடிஸ்ட்”. 
அதே போன்று தான், கமல் போன்ற போலி நாத்திக வாதிகள், பிறரை காயப்படுத்தி,  அதிக மகிழ்ச்சி அடைபவர்கள்.  இந்திய குற்றவியல் சட்ட்படி, மத உணர்வுகளை புண்படுத்துவது, தண்டனக்குரிய குற்றம்.  சாது மிரண்டால், காடு கொள்ளாது என்பது ஒரு பழைய மொழி. 
இளங்கோவின் பேட்டியை கீழ்கண்ட பிளேயரில் கேட்கவும்.  (7 நிமிடங்கள்)


இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=wDswmPApF9M

6 கருத்துகள்:

 1. கமல் போன்ற போலி பகுத்தறிவுவாதிகளும், போலி அறிவுஜீவிகளும், போலி நடிகர்களும்தான் இன்றைய தலையாய பிரச்சினை. இவர்கள் செய்யும் காபி பேஸ்ட் படங்களுக்கெ இந்த அல்டாப்புகளும், சமூகசிந்தனை என்ற ஒன்று அவர்களுக்கு இருக்குமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றன கமல் என்ற அறிவிலியின் கோமாளியின் நாடகங்களைப் பார்க்கும்போது.. இவர்களையெல்லாம் வயிற்றில் அடித்தால் மட்டுமே திருந்துவார்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஆழ்வார்க்கடியான்25 டிசம்பர், 2010 அன்று PM 7:29

  மிக நல்ல செயல். உங்கள் நற்பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  இப்படத்தின் வெளிநாட்டு ப்ரிண்ட்களில் இப்பாடல் கட் செய்யப்படாமலேயே வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

  -ஆழ்வார்க்கடியான்

  பதிலளிநீக்கு
 3. Good thrashing for KA(mala)hAsaN
  Hats off to you for the bold write up on Kamal's doble standards.

  VAsu

  பதிலளிநீக்கு
 4. கடவுளைப் பிடிக்காதவர்கள் வேற நல்ல வேலைகளைச் செய்யலாம். அல்லது வெளிப்படையான விவாதத்திற்கு வரலாம்.

  கமல் போன்றவர்கள் மற்றவர்களை சீண்டுவதில் ஒரு இன்பமும் விளம்பரமும் தேடுகிறார்கள்.

  கண்டிப்பாக இது கண்டிக்கத்தக்கது.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் பணி தொடரட்டும்
  உண்மையை வெளிக் கொணர்ந்த உங்கள் பதிவுக்க வாழ்த்தக்கள்.
  Video தொகுப்பு பேட்டி அருமை.

  அன்புடன்

  வராகன்.

  பதிலளிநீக்கு
 6. The only solution for this to create Hindu Vote Bank and show them the silent power of helpless Hindu people. Congratulations to Mr Elango for his wonderful work. by Arjun Sampath, President, Hindu Makkal Katchi

  பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...