நேற்று (7 ஏப்ரல் 09) மதியம், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது, ஜர்னைல் சிங் என்கிற ஒரு இந்தி பத்திரிகை நிருபர், 1984ல் சுமார் 3000 சீக்கியரகளை கொன்ற வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஜகதீஷ் டைட்லரை சி.பி.ஐ விடுவித்தது பற்றி வினவினார். சிதம்பரம் தந்த மழுப்பனான பதிலில் திருப்தி ஆகாத ஜர்னைல் சிங், தனது காலிலிருந்த ஒரு ஷூ வை கழட்டி சிதம்பரத்தை நோக்கி வீசி தன்னுடைய அதிருப்தியை காட்டினார்.
இது அனைத்து டி.வி.க்களிலும், மீடியாக்களிலும் தலைப்பு செய்தியாக இன்று வந்துள்ளது. நான் இன்று மதியம் ஜர்னைல் சிங்கை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பாட்யூனிவர்சலுக்காக ஒரு பேட்டி கண்டேன். அவர் எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்று வினவினேன்.
அவர் தன்னுடைய நடத்தைக்காக மிகவும் வருத்தப்பட்டார். தான் சிதம்பரத்தை தாக்க வேண்டும் என்கிற நோக்கில் ஷூவை வீசவில்லை என்றும், அவரிடம் தன்னுடைய அதிருப்தியை காட்டவும், சிதம்பரத்தின் அருகிலிருந்த ஒரு வெற்றிடத்தை நோக்கி ஷூவை வீசியதாகவும் என்னிடம் தெரிவித்தார். 1984ம் ஆண்டு நடந்த சீக்கியர்களின் படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்று் கூறினார். சிதம்பரத்தை சந்திக்கும்போது, அவரிடம் 'வருத்தம்' தெரிவிப்பதாகவும் கூறினார்.
அவரது முழு ஆங்கில பேட்டியை கீழ்கண்ட தளத்தில் கேட்கலாம்.
http://www.poduniversal.com/2009/04/what-prompted-jarnail-singh-to-throw.html
0 கருத்துகள்:
கருத்துரையிடுக