கடந்த திமுக ஆட்சியில், அனைத்து பள்ளிகளிலும் ஒரே சீரான மற்றும் தரமான கல்வியை வழங்குவதற்காக செப்டம்பர் 2006ல், முன்னாள் துணைவேந்தர் திரு முத்து குமரன் அவர்கள் தலைமையில், ஒன்பது பேர் கொண்ட் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஜூலை 2007ல், அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் தனது அறிக்கையை அளித்தது. முத்துகுமரன் அறிக்கையில், தரமான கல்வி அளிக்க 109 சிபாரிசுகள் செய்யப்பட்டிருந்தன. பாடப்புத்த்கங்களின் தரத்தை உயர்த்துவதுடன், மாணவர்கள்-ஆசிரியர்கள் விகிதம், தேர்வு முறையில் மாற்றம் போன்ற பல சிறந்த சிபாரிசுகள் கொடுக்கப்பட்டிருந்தன.
முத்துகுமரன் குழு அளித்த சிபாரிசுகள் எதையும் கண்டுகொள்ளாமல், திமுக அரசு தங்களுடைய ஆட்சியின் கடைசி கால கட்டத்தில், அனைத்து வகுப்புகளுக்கும் சம்ச்சீர் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது. அவசர அவசரமாக பாடபுத்த்கங்களும் அச்சடிக்கப்பட்டன. அந்த கால கட்டத்திலேயே, பல கல்வியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கடந்த மே மாததில், ஜெயலலைதா ஆட்சி வந்தவுடன், சமச்சீர் கல்வியை ஓர் ஆண்டிற்கு ஒத்தி வைத்தார். அரசியல் நெருக்கடி காரணமாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாகவும், இந்த ஆண்டிலேயே, புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகிக்கபட்டு, சமச்சீர் கல்வி அறிமுகமாகி உள்ளது.
முத்துகுமரன் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்காமல், அவசர அவசரமாக பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்று சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் மனவேதனைப்படுகிறார்கள்.
மாணவர்கள் பயிலும் பாடபுத்தகங்கள் தவறாகவும், உண்மைக்கு மாறாகவும், திமுகவின் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் கருவியாகவும் இருந்தால், பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைப்பது போலாகாதா என்று வினவுகிறார்கள்.
பத்திரிகையாளர் திரு வேதா ஸ்ரீதரன், கல்வி பற்றிய ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் எழுதி வருபவர். சமச்சீர் கல்வி புத்தகங்களீல், ஆயிரக்கணக்கான தவறுகள் இருப்பதாக வேதனைப்படுகிறார். அவரது பேட்டியை, ‘பிளே’ பட்டனை அழுத்தி பார்க்கவும்.
இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=DajVg8uoURA