This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8
கடந்த மார்ச் 12ம் தேதி, (12.3.2012) அம்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், தமிழ்நாடு விஷன் 2023 என்கிற ஒரு ஆவணத்தை வெளியிட்டார். இதன் முக்கிய நோக்கம், தமிழகத்தை இன்னும் பத்து ஆண்டுகளில் ஒரு முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பது தான்.
இந்த தொலை நோக்கு திட்டத்தில், விவசாயம், கட்டமைப்பு, உற்பத்தி, சேவைதுறை பற்றிய ப்ல வகைகளில், தமிழகத்தை முன்னேற்றுவது குறித்து பேசப்படுகிறது. இந்த தொலைநோக்கு திட்டத்தின் ஆவ்ணத்தை கீழ்கண்ட தளத்தில் பெறலாம்.
இந்த விஷன் 2023 பற்றிய விவரங்களை, என்.டி.டி.வி - ஹிந்து தொலைகாட்சி, நேற்று இரவு (28 ஏப்ரல் 2012), திரு அப்துல் கலாமின் ஆலோசகர் திரு வி. பொன்ராஜ் அவர்களுடன் கல்ந்துரையாடி வெளிட்டது.
சுமார் 26 நிமிடங்க்ள ஒளிப்ரப்பான இந்த பேட்டியில், திரு பொன்ராஜ் பல முக்கிய தகவல்களை தருகிறார். இந்த பேட்டியை பதிவு செய்து வெளியிடுகிறோம்.
தற்போதைய 15வது பாராளுமன்றம் 2009,ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி முதல் செயல் படுகிறது. நமது பாராளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் தொடர், மழைக்கால தொடர் மற்றும் குளிர்கால தொடர் என்று மூன்று முறை கூடுகிறது. இதுவரை 9 தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. தற்போது, 15வது பாராளுமன்றத்தின் 10வது தொடர் நடந்து கொண்டிருக்கிறது.
வழக்கமாக பட்ஜெட் தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெறும். 2012 பட்ஜெட் தொடரின் முதல் பகுதி கடந்த மார்ச் 30ம் தேதி முடிந்ததது. இதன் இரண்டாம் பகுதி ஏப்ரல் 24 முதல் மீண்டும் துவங்கும். இதுவரை, 15ம் பாராளுமன்றம் 222 அமர்களை நடத்தியுள்ளது.
பாராளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்கள், அவையில் செய்ய வேண்டிய பணிகளை நான்கு வகையாக பிரிக்கலாம்.
(1) தொகுதி, மாநிலம் அல்லது தேசிய பிரச்சனைக்களைபற்றிய கேள்விகளை எழுப்புவது (Questions) (2) பாராளுமன்ற விவாதங்களில் பங்கேற்பது, அவசர விஷயங்களை எழுப்புவது (Debates) (3) தனி நபர் மசோதாக்களை அறிமுகப்படுத்துவது மற்றும் (Private Members Bills) (4) கூட்டங்களீல் தவறாமல் பங்கேற்பது (attendance) ஆகியவையாகும்.
பாராளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகளை தின்ந்தோறும், பாராளுமன்ற அலுவலகம் அவர்களது இணைய தளத்தில் வெளியிடுகிறது. அவைகளை தொகுத்து, பி.ஆர்.எஸ். இந்தியா என்கிற அமைப்பு வெளியிடுகிறது.
இந்த விவரங்களின் படி, பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் சிறந்த பணியாற்றும் எம்.பிக்களுக்கு ஆண்டு தோறும் பாராட்டு விழா நடத்துகிறது. 2012ம் ஆண்டின் விருது வழங்கும் விழா கடந்த ஏப்ரல் 14ம் தேதி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்தது.
முன்னாள் மேற்கு வங்க மாநில ஆளுநர் திரு கோபால கிருஷ்ண காந்தி அவர்கள் (இவர் மகாத்மா காந்தி, இராஜாஜிக்கு பேரன்), சிற்ந்த பணியாற்றிய எம்.பிகளுக்கு பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் சார்பில் ‘சன்சத் ரத்னா; விருது கொடுத்து கவுரத்தார். இந்த விழாவில், திரு இரா. செழியன் மற்றும் ஐ.ஐ.டி இயக்குநர் டாக்டர் பாஸ்கர் இராமமூர்த்தி கலந்து கொண்டார்.
இந்த விழாவில், ஹன்ஸ்ராஜ் கஙகாராம் அஹீர் (மகாராஷ்ட்ரா எம்.பி), ஆனந்த ராவ் அட்சல் (மகாராஷ்ட்ரா எம்.பி), எஸ். எஸ். இராமசுப்பு (தமிழ்நாடு எம்.பி) மற்றும் அர்சுன் ராம் மெக்வால் (இராஜஸ்தான் எம்.பி) கவுரவிக்கப்பட்டார்கள்.
இந்த விழாவின் முழு விவரங்களையும், திரு கோபால்கிருஷ்ண காந்தியின் முழு பேச்சையும் கேட்க www.sansadratna.in என்கிற இணைய தளத்திற்கு செல்லவும்.
திரு கோபால்கிருஷ்ண காந்தி
திரு இராமசுப்புவிற்கு விருது வழங்குகிறார்
திருநெல்வேலி எம்.பி. திரு இராமசுப்பு அவர்கள் தமிழ்நாட்டு எம்.பிக்களில் முதன்மையாகவும், அகில இந்திய அளவில், மூன்றாவது இடமும் வகிக்கிறார்.
இந்த நிகிழ்ச்சி பற்றி புதிய தலைமுறை டி.வி. விழாவிற்கு முதல் நாளும், விழாவன்றும் ஒரு செய்தி வெளியிட்டது. இந்த் செய்தி தொகுப்பு.
தமிழ்நாட்டு எம்.பிக்கள், இந்த 15ம் பாராளுனறத்தில் எந்த அளவு பங்கேற்றார்கள் என்கிற ஒரு விளக்கப்பட்டியல். (20 மார்ச் 2012 முடிய)