அர்ஜுன் சம்பத் |
பெரும்பாலும் தமிழ்நாட்டில், ஈழ ஆதரவு கூட்டங்களில் பெரியார் படமும், பிரபாகரன் படமும் சேர்ந்தே காணப்படுகின்றன. தவிரவும், சமூக வலைதளங்களில் இலங்கை தமிழரக்ள் பெயரில் எழுதப்படும் கருத்துக்களில் நாத்திகமும், இந்திய இறையாண்மையை கேலி செய்து எழுதுவதும், பிராமண எதிர்ப்பும், கடவுள் மறுப்பும் அதிக அளவில் இருக்கின்றன. இதனால், இலங்கை தமிழர்கள் நாத்திகர்கள் போலவும், இறை நம்பிக்கை இல்லாதவர்கள் போலவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
இது தவிரவும், ராஜீவ் காந்தி கொலையாகும் போது, அவருடன் இருபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியானார்கள். பலர் காயமுற்றனர். இவைகளினால், தமிழ்நாட்டு தமிழர்களுக்கும், இலங்கை வாழ் தமிழர்களுக்கும் உள்ள பாசம் குறைந்து விட்டது. இதனால், இலங்கை தமிழர் பிரச்சனையை முன்னிருத்தி ஓட்டு வாங்குவது கடினமாகி விட்டது. வைகோ, சீமான் போன்றோருக்கு மக்கள் ஆதரவு அதிக அளவில் இல்லை.
பிரபாகரன் இற்ந்து விட்டதாக இலங்கை அரசு சான்றிதழ் வழங்கி விட்டாலும், தமிழ்நாட்டிலுள்ள வைகோ, சீமான் போன்ற தலைவர்கள், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பிரச்சாரம் செய்வதும், இலங்கை அரசின் கரத்தை பலப்படுத்தி வருகிறது.
இவ்வாறு தமிழ்நாட்டிலுள்ள தலைவர்கள் தங்கள் சுய நலத்திற்காக, தமிழக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வரும்வேளையில், நான் நேற்று (14 நவம்பர் 2012) இரவு, இந்து மக்கள் கட்சி தலைவர் திரு அர்ஜுன் சம்பத்துடன் மொபைல் போனில் ஒரு பேட்டி எடுத்தேன்.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், தங்கள் அணுகுமுறையால், இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று அர்ஜுன் சம்பத் கூறுகிறார். மேலும், இவர்கள் இலங்கை தமிழர்களைப்பற்றி தவறான கருத்தை இணைய தளங்களில் உருவாக்குகிறார்கள் என்கிறார். உண்மையில், இலங்கை தமிழர்கள் மிகச்சிறந்த சிவ பக்தர்கள் என்கிறார். பிரபாகரன் கூட ஒரு சிறந்த முருக பக்தர் என்று கூறும் அர்ஜுன் சம்பத், பெரியார் படத்தையும் பிரபாகரன் பட்த்தையும் சேர்த்து போடுவதால் ஏற்படும் குழப்பம் என்கிறார்.
நான் அர்ஜுன் சம்பத்துடன் நடத்திய தொலைபேசி கலந்துரையாடலை கேட்கவும்.(14 நிமிடங்கள்)
இந்த கலந்துரையாடலை கீழ்கண்ட யூடியூப் தளத்திலும் கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=qlURXlBurUQ&feature=youtu.be