சென்னை அண்ணாபல்கலை கழகத்தின் எலக்ட்ரானிக் மீடியா பயின்ற என்னுடைய முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு புதிய முயற்சியாக ஒரு மணி நேர ஆங்கில திரைப்படம் ஒன்றை DVD டிஜிடல் மார்க்கெட்டிற்காக த்யாரித்துள்ளார்கள். அதன் பிரிவியூ ஷோவிற்கு என்னையும் அழைத்திருந்தாரகள். IDM என்கிற் பேனரில் தயாரிக்கப்ப்ட்ட இந்த டிஜிடல் படத்திற்கு செய்த செலவு ஐம்பது லட்சம் ரூபாய்தான். முழு படத்தையும் இந்த இளைஞர்கள் (தயாரிப்பாளர் அறிவழகனும் ஒரு இளைஞர்தான்) நான்கு மாதத்தில் முடித்துள்ளார்கள். (வழக்க்மாக ஒரு திரைப்படம் தயாரிக்க ஆகும் குறைந்த பட்ச செலவு சுமார் 5 கோடிகள்).
இன்று (19 ஜனவரி 2008) நடந்த பிரிவியூ ஷோவிற்கு இந்த இளஞர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தது சிறப்பாக இருந்தது. அதுவும், துவக்கத்தை இளைஞர்களின் அன்னையர்கள் குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்தது மன நிறைவாக இருந்தது.
இந்த ஆங்கில டிஜிடல் திரைப்படம் "சேர்ந்து வாழ்வதை" (living together) என்கிற கருத்தை மைய்மாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேலை நாடுகளில் 'சேர்ந்து வாழும் கலாசாரம்" கொடி கட்டிப் பறக்கிற்து. அங்கு இருக்கும் பெரியவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் இந்த கலாசாரத்தை ஒழித்து, நம் நாடு போன்று ஒரு குடும்ப க்லாசாரத்தை உருவாக்க பெரும் பாடுபட்டு வருகிறார்கள். துரதிருஷ்டவசமாக, மேல் நாடுகள் எந்த க்லாசாரத்தை அறவே ஒழிக்க முயுற்சி செய்கிறார்களோ, அந்த "சேர்ந்து வாழும்" கலாசாரம் இந்தியாவின் பெரிய ந்கரங்களில் இளைஞர்களிடையே வேகமாக பரவி வருகிற்து.
இந்த கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த "The Perfect knot" என்கிற டிஜிடல் திரைப்படத்தில் ஒரு இளைஞனும் ஒரு இளைஞியும், திருமணமாகாமல் சேர்ந்து வாழ்கிறார்கள். அப்படி வாழும் போது, சமுதாயம் மற்றும் குடும்பத்தினரின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை அருமையாக கூறியிருக்கிறார்கள். ஒரு சர்ச்சைக்குறிய கருத்தை மையமாகக் கொண்டு எடுத்தாலும், மிகவும் மென்மையாக கையாண்டுள்ளார்கள். எந்தவொரு ஆபாசமும் இல்லாமல், குடும்பத்தினருடன் பார்க்ககூடிய அளவிற்கு, அதே சமயம், இளைஞர்களுக்கு ஒரு செய்தியாகவும் உள்ளது.
இந்த இளைஞர்களுக்கு இது ஒரு முதல் படமாக இருந்தாலும், ஒரு சீனியர் டீம் செய்ததைப்போல் இருக்கிற்து. இந்த ப்ரிவியூ ஷோவிற்கும், டி.வி.டி. வெளியீட்டு விழாவிற்கும், பிரபல திரைப்பட எடிட்டர் லெனின், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் ஜாம்பவான் பெரியவர் திரு கோபாலி , மற்றும் அண்ணா பல்கலை கழக பேராசிரியர்கள் வந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த டீமிலிருந்து ஒரு பாலசந்தர், ஒரு பாரதிராஜா, ஒரு பாக்யராஜ், ஒரு ரஹ்மான் உருவாக வாய்ப்புள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் அறிவழகன், இயக்குநர் கவுதம், இசை அமைப்பாளர் விஷால் மற்றும் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு "ஓ" போடுவோம்.