அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு தினத்தை ஒரு இனிமையான முறையில் துவக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. நுங்கம்பாக்கம் கல்சுரல் அகடமி சார்பில் நடைபெற்ற இசை விழாவில், எனது நெடுங்கால நண்பர் திரு H. இராமகிருஷ்ணன் அவர்களின் கச்சேரி கேட்க சென்று இருந்தேன். திரு இராமகிருஷ்ண்ன் அவர்கள் சென்னை தூர்தர்ஷனில் செய்தி பிரிவின் இயக்குநராக இருந்து, ஒய்வு பெற்றவர். (படத்தில் நடுவில் இருப்பவர்)
அவர் தூர்தர்ஷனில் பல ஆண்டுகள் தமிழ் செய்தி வாசித்திருக்கிறார். 'வானமே எல்லை' என்கிற் திரைப்படத்தில் தன்னம்பிக்கையை உருவாக்கும் ஒரு பாத்திரமாக் நடித்திருக்கிறார்.

உண்மையிலேயே, அவர் ஒரு தன்னம்பிக்கை நட்சத்திரம். சிறு வயதிலேயே, போலியோ நோயால் தாக்கப்பட்டு, இரு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையிலும் வெற்றி நடை போட்டு வருகிறார். அவரது தற்போதைய வயது 65 என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.
தன்னுடைய 52 வயதுக்கு மேல், சென்னை சட்டக்கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து, மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பு பெற்று முதல் வகுப்பில் தேர்வு பெற்றார். மத்திய அரசின் ஒரு உயர் அதிகாரியாக இருந்தாலும், மூன்று ஆண்டுகளில் ஒரு நாள் கூட மாலை நேர வகுப்பிற்கு 'கட்' அடித்ததில்லை. அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், தன்னை வழககுறைஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு, சென்னை உயர் நீதி மன்றத்தில் தினமும் ஆஜராகிறார்.
தன்னுடைய 45 வயதில், கர்நாடக சங்கீதம் கற்க வேண்டும் என்கிற தணியாத ஆவலில், திருவல்லிக்கேணியில் திரு நாராயண அய்யங்கார் என்கிற சங்கீத விற்பன்னரிடம் மாணவனாக சேர்ந்தார். சுமார் 12 ஆண்டுகள் பயிற்சிக்கு பின், தன்னுடைய 57 வயதில், சங்கீத அரங்கேற்றம் செய்தார். இந்நாள் வரை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாள் ஒரு ச்பாவில், காலை 10 மணி முதல் 11 மணி வரை கச்சேரி செய்கிறார் என்றால் பார்த்துகொள்ளுங்களேன்.
இதில் ஆச்சரிய்ம் என்னவென்றால், பிரபல சங்கீத விமர்சகரும், அனத்து இசை வல்லுநர்களூம் கண்டு பயப்படும் திரு சுப்புடு அவர்களே திரு இராமகிருஷ்ணனுக்கு பக்கவாத்தியம் வாசித்தார் என்பதே.
எனக்கு திரு இராமகிருஷ்ணன் மேல் அதிக மரியாதை உண்டு. அவரது தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும் என்னை மிகவும் கவர்ந்தது. அவரது கச்சேரியை புத்தாண்டான இன்று காலை கேட்டதில் ஒரு உற்சாகம் கிடைத்தது. கச்சேரி முடிந்தவுடன், அவரை பாராட்டிவிட்டு, "உங்களது வெற்றியின் ரகசியம் என்ன" என்று கேட்டேன்.

ஒரு கணம் கூட யோசிக்காமல் " சாதிப்பதற்கு குறைகளோ, வயதோ தடையில்லை; மனம் இருந்தால் மார்கம் உண்டு" என்றார்.
Dear Sir,
பதிலளிநீக்குThanks for sharing this. It is indeed very inspiring to know about Mr.Ramakrishnan's new initiatives.. Wow!.. What a strong will power !!.. He has inspired me a lot right from his Doordarshan days!..
His way of managing time and energy (at this age!) does inspire people like me to manage our time better.. I am one of those folks, who always struggle to manage time. I have now got the spark of energy, after reading this article, to manage myself better!
Thank you !
Regards,
Jayatheerthan