அண்மையில் "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பத்திரிகை "லீட் இந்தியா" போட்டியை அறிவித்துள்ளார்கள். இந்த போட்டியின் நோக்கம் தலைமை பண்புகள் உள்ள ஒரு இளைஞரை தேர்ந்தெடுப்பது. பல கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டி இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த போட்டியை பற்றி விளம்பரபடுத்துவதற்காக தங்களுடைய "டைம்ஸ் நவ்" டி.வி. யில் தலைமை பண்புகள் பற்றிய ஒரு குறும் படத்தை ஒளிபரப்பி வருகிறார்கள்.
இரண்டு நிமிடமே ஓடும் இந்த குறும் படம் தலைமை பண்புகளை எப்படி வளர்த்து கொள்வது என்பது பற்றி உணர்ச்சி ததும்ப விளக்குகிறது. சாலையில் ஒரு மரம் விழுந்து கிடக்கிறது. அனைவரும் தங்களுக்கு என்ன என்கிற வகையில் இருக்கும் போது, ஒரு பள்ளி மாணவன், ஒரு பெரிய மரத்தை தான் ஒருவனாகவே தள்ள முயற்சிக்கிறான். அதைகண்ட மற்ற சிறுவர்களும் இவனுடன் சேர்ந்து மரத்தை தள்ள முயல்கிறார்கள். மற்ற பெரியவர்களும், சிறுவர்களுடன் சேர்ந்து, மரத்தை அப்புற்படுத்துகிறார்கள். போக்குவரத்து சீராகிறது. இரண்டே நிமிடத்தில் அந்த மெஸேஜை அழகாக செல்கிறார்கள். நல்ல எண்ணங்கள் கொண்டவனை மக்கள் தலைவனாக ஏற்கிறார்கள்.
நீங்களும் அனுபவியுங்களேன். யாரோ யூடியூபில் போட்டிருப்பதை இங்கு தருகிறேன். கிளிக் செய்து பாருங்கள்.
நீங்களும் அனுபவியுங்களேன். யாரோ யூடியூபில் போட்டிருப்பதை இங்கு தருகிறேன். கிளிக் செய்து பாருங்கள்.
இந்த 2 நிமிட படக்காட்சி சொல்லும் செய்தி உணர்வூட்டக் கூடியதே;ஆயினும் இன்றைய சென்னை மக்கள் இவ்விதம் கைகோர்க்கும் பண்புள்ளவர்களா??????
பதிலளிநீக்கு