தற்போதுள்ள மக்களவை சுதந்திரம் பெற்ற பிறகு 15வது மக்களவையாகும். இந்த பேரவை கட்ந்த ஆண்டு 2009ல் ஜூன் 1ம் தேதி முதல் அமர்வுகளை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், மக்களவை மூன்று முறை கூடும். பட்ஜெட் தொடர், மழைக்கால தொடர் மற்றும் குளிர்கால தொடர்.
இதுவரை, 15வது மக்களவை ஆறு தொடர்களை நடத்தியுள்ளது. 135 நாட்கள் அமர்ந்துள்ளது. கடந்த் குளிர்கால தொடர் டிசம்பர் 13ம் தேதி, 2010ல் முடிந்தது.
இந்த 135 நாட்களில், நம் தமிழ்நாட்டிலிருந்த மக்களவைக்கு சென்ற நம் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதை கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்.
ஒவ்வொரு தொடர் முடிந்ததும், PRS இந்தியா என்கிற ஒரு அமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் பற்றிய விவரங்களை தொகுத்து வெளியிருகிறது. அதன் அடிப்படையில், இந்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்தார்களா என்பதற்கு, அவர்கள் கலந்து கொள்ளும் விவாதங்கள், தனியார் மசோதாக்களை எழுப்புவது, மக்கள் பிரச்சனைகளைப்பற்றிய கேள்விகளை எழுப்புவது, வருகைப்பதிவு ஆகிய்வைகளே சான்றாகும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, திருநெல்வேலி எம்.பி இராமசுப்பு அவர்கள் முன்னணியில் உள்ளார். அவரது மொத்த கூட்டுதொகை 466. அவர் 96 சதவிகித அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் மக்களவைக்கு முதல் முறை பணியாற்ற சென்றவர். முதல் கூட்டத்தொடரின் போதே அகில இந்திய அளவில் 9வது இடத்தை பெற்றிருந்தார். தற்போது, குளிர்கால தொடருக்கு பிறகு அகில இந்திய அளவில் 5வது இடத்தை கைப்பற்றியுள்ளார். அவருக்கு, தமிழக மக்கள் சார்பாக நமது பாராட்டுக்கள்.
கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.சுகவனம் கூட்டுத்தொகை 332 பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். அவருக்கும் நம் பாராட்டுக்கள்.
அனைத்து எம்.பிக்களின் விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவரவர்கள் தங்கள் தொகுதி எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
MP name | Constituency | Political party | Total of debates, pvt bills and questions | Attendance |
S.S. Ramasubbu | Tirunelveli | INC | 466 | 96% |
E.G. Sugavanam | Krisnagiri | DMK | 332 | 51% |
P. Viswanathan | Kancheepuram | INC | 258 | 83% |
S. Semmalai | Salem | AIADMK | 243 | 86% |
C. Sivasami | Tiruppur | AIADMK | 232 | 70% |
R. Thamaraiselvan | Dharmapuri | DMK | 226 | 79% |
S. R. Jeyadurai | Thoothukkudi | DMK | 208 | 57% |
N.S.V. Chitthan | Dindigul | INC | 187 | 90% |
J.M. Aaron Rashid | Theni | INC | 176 | 64% |
S. Alagiri | Cuddalore | INC | 170 | 70% |
P. Kumar | Tiruchirappalli | AIADMK | 161 | 80% |
Munisamy Thambidurai | Karur | AIADMK | 160 | 76% |
P. Lingam | Tenkasi | CPI | 151 | 96% |
Abdul Rahman | Vellore | DMK | 149 | 67% |
K. Sugumar | Pollachi | AIADMK | 137 | 80% |
A. Ganeshamurthi | Erode | MDMK | 128 | 81% |
C. Rajendran | Chennai South | AIADMK | 126 | 64% |
P.R. Natarajan | Coimbatore | CPI (M) | 123 | 79% |
K. Murugesan Anandan | Viluppuram | AIADMK | 101 | 84% |
Thalikkottai Rajuthevar Baalu | Sriperumbudur | DMK | 101 | 88% |
Manicka Tagore | Virudhunagar | INC | 79 | 86% |
A.K.S. Vijayan | Nagapattinam | DMK | 71 | 58% |
Adhi Sankar | Kallakurichi | DMK | 58 | 49% |
Sivakumar @ J.K. Ritheesh. K | Ramanthapuram | DMK | 56 | 40% |
Davidson J. Helen | Kanniyakumari | DMK | 55 | 75% |
T.K.S. Elangovan | Chennai North | DMK | 36 | 99% |
M. Krishnaswamy | Arani | INC | 32 | 86% |
P. Venugopal | Tiruvallur | AIADMK | 16 | 80% |
Thirumaa Valavan Thol | Chidambaram | VCK | 16 | 38% |
Danapal Venugopal | Tiruvannamalai | DMK | 15 | 70% |
O. S. Manian | Mayiladuthurai | AIADMK | 14 | 56% |
Andimuthu Raja | Nilgiris | DMK | 0 | 5% |
மதுரை சிங்கம் அழகிரிய கானணோம்.
பதிலளிநீக்குடெல்லி பிரபு.
Andimuthu Raja Nilgiris DMK 0 5%
பதிலளிநீக்குThirumaa Valavan Thol Chidambaram VCK 16 38%
J.K. Ritheesh. K Ramanthapuram DMK 56 40%
இந்த ஆண்டி முத்து ராஜ, தி.மு.க.
திருமா வளவன் வி. சி. க,ஜே. கே.
ரித்தீஷ் தி.மு.க.
இந்த மூவரும் கிரிமினல் குற்றவாளிகள் . அடுத்தமுறை இவர்கள் தேர்தலில் நிற்கவே லாயக்கற்ற நாடோடிகள்.
இவர்களை நாம் புறம் தள்ளவேண்டும்.
நல்ல பதிவு.
பாராளுமன்ற இரு அவைகளிலும், அமச்ச்ர்கள், சபாநாயகர் மற்றும் எதிர் கட்சி தலைவர் ஆகியவர்களுக்கு, வருகை பதிவேட்டில் கையெழுத்து இடுவதலிருந்து விதிவிலக்கு உள்ளது. அமைச்சர்கள் விவாதங்களில் பங்கேற்க முடியாது. கேள்விகள் கேட்க முடியாது. அவர்கள் அரசு சார்பில் பதில் அளிக்கும் பதவியில் உள்ளவர்கள். அதனால்தான், அவர்களைப்பற்றிய விவரங்களை கொடுக்கவில்லை.
பதிலளிநீக்கு