அண்மையில் இந்தியாவிஷன் ஆன்லைன் குரூப், "Celebrate Democray - Vote India" என்கிற பிரச்சாரத்தை துவக்கியது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களும், இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்து தன்னுடைய கருத்துகளையும் பதிவு செய்தார். இந்த பிரச்சாரத்தின் நோக்கம், இந்திய குடிமகன் ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என்பதே. தேர்தல் தினத்தன்று, அனைவரும், ஒட்டளிக்கும் இடத்திற்கு சென்று, ஓட்டளிக்க வேண்டும் என்பதே.
நாம் ஒட்டளிக்க வேண்டும் என்பதற்காகத்தான், நம் முன்னோர்கள் 200 ஆண்டுகாலம், அந்நியருடன் போராடி, சிறை சென்று, தங்கள் வாழ்வை தியாகம் செய்தார்கள். அவர்கள் செய்த தியாகத்தின் பலனை இன்று நாம் அனுபவிக்கிறோம். நம்முடைய கடமை, அவர்கள் வாங்கி கொடுத்த ஜனநாயகத்தை சிற்ப்பாக்க வேண்டும்.
ம்காகவி பாரதியார் இந்த சுதந்திர போராட்டங்களை பற்றி கூறுகையில், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா, கண்ணீரால் காத்தோம். கருகத்திருவுளமோ" என்று சுதந்திரம் வருவதற்கு முன்பே பாடினார். நம் முன்னோர்கள், கண்ணீரால் காத்த இந்த சுதந்திரத்தை சிறப்பாக்க வேண்டிய கடமை, அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு உண்டு. இந்த கருத்துகளைத்தான், இந்தியா விஷன் உறுப்பினர்கள், பரப்பி வருகிறார்கள்.
கடந்த சனிக்கிழமை (4 ஏப்ரல் 2009), சென்னை லைவ், FM ரேடியோ, என்னை, இதுபற்றி பேட்டி எடுத்தனர். இளைஞர்களான சனோபார் என்கிற தயாரிப்பாளரும், அஜய் என்கிற் ரேடியோ ஜாக்கியும், சென்னை லைவ் FM எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
இந்த பேட்டியை நீங்களும் கேளுங்களேன். கீழ்காணும் பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். ( இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், டவுன்லோடு செய்து, mp3 பிளேயரில் கேட்கலாம்)
இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857388

0 கருத்துகள்:
கருத்துரையிடுக