மேலும், ஏதாவது சாதனை புரிந்து, மக்களிடம் பிரபலமாக வேண்டுமென்று நினைக்க மாட்டார்கள். அதற்கு சாதனை புரிய வேண்டும். பல நாட்கள், வருடங்கள் கூட ஆகலாம். அதற்கு குறுக்கு வழி அவர்களுக்கு தெரியும். வழக்கமாக மக்களின் மரபுகளுக்கு மாறாக ஏதாவது செயவார்கள் அல்லது சொல்வார்கள். எல்லாரும் காலால் நடந்தால், நான் மட்டும் கையால் நடப்பேன் என்பார்கள்; ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதுதான் மரபு என்றால், அவர்கள், ஏன் ஆணும் , கரடியும் திருமணம் செய்யக்கூடாது என்பார்கள். இதைதான் 'வக்ரமாக சிந்திப்பது' என்று தமிழிலும், 'pervertion' என்று ஆங்கிலத்திலும் கூறுவதுண்டு. பொதுவாக இந்த அறிவு ஜீவிகள், மக்களின் கவனத்தைத்தான் திருப்ப முடியும். ஆனால், அனைவரும் அதை ஒரு காமெடியாக எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள்.
கடந்த 9.7.2008 தேதியிட்ட 'குமுதம்' வார இதழில், 'ஓ பக்கங்கள்' என்கிற பகுதியில் நண்பர் ஞாநி அவ்ர்கள் "காபபாற்றுங்கள் கலாம் " என்கிற் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். நீலகிரி மலையில் அரசு திட்டமிட்டுள்ள 'நியூட்ரினோ' ஆராய்ச்சி கூடத்தைப்பற்றி விமர்சனம் செய்துள்ளார். அது தவ்றா அல்லது சரியா என்று கூற நான் அறிவு ஜீவி அல்ல. எனக்கு தெரியாத விஞ்ஞான பகுதியில் தலையிட விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை இந்திய அணு சக்தி விஞ்ஞானிகள் உலக தரம் வாய்ந்தவர்கள். விக்ரம் சாராபாய், ஹோமி பாபா முதல் அனவரும் இந்தியாவின் பெருமைமிகு விஞ்ஞானிகளக இருந்து, நாட்டிற்கு நன்மை பயத்தனர்.
என்னுடையவும், மற்ற தேசிய நலனை விரும்பும் பலரது கருத்துகளும், அந்த கட்டுரையில், திரு அப்துல் கலாமை கிண்டலடித்து எழுதியது தான். துவக்கமே இப்படித்தான்:
"எல்லாரையும் கனவு காணச் சொல்லியே உங்கள் குடியரசுத் தலைவர் பதவிக்காலத்தை ஓட்டி முடித்துவிட்டீர்கள். குழந்தைகள் முதல் உங்கள் வயதுக்காரர்கள் வரை கனவு கண்டுகொண்டே இருக்கிறார்கள். எல்லார் கனவுகளையும் தொகுக்க முடியுமானால், அவற்றைப் படித்து ஆராய்ந்து இந்தியாவிலிருந்து இன்னொரு சிக்மண்ட் ஃபிராய்ட் உருவாகும் வாய்ப்பு கூட இருக்கிறது.
உங்கள் கனவுகள் என்ன என்று அறிந்துகொள்வதற்கு எனக்கு எப்போதும் ஆவல்தான். அக்கினிச் சிறகுகள், விஷன் 2020 மாதிரி ஆவணங்களைப் படித்தால் எனக்கு தூக்கம் வந்துவிடுகிறது. அப்புறம் என் கனவுகள் ஆரம்பமாகிவிடுகின்றன. உங்கள் கனவு என்னவென்று தெரியாமலே போய்விடுகிறது."
மற்றொரு இடத்தைல் நண்பர் ஞாநி கூறுகிறார்:
"உங்களை நான் நம்பாவிட்டாலும் எண்ணற்ற இளம் தலைமுறையினர் பெரிதும் நம்புகிறார்கள். அரசியல், நிர்வாகம், அறிவியல் அனைத்து துறையினருக்கும் நீங்கள் ஒரு ரோல் மாடல் என்று இளைஞர்கள் பலர் நம்புகிறார்கள்."
விவேகாநந்தர், மகாத்மா காந்திக்கு பிறகு, இன்று இளைஞர்களை அதிக அளவில் கவர்க்கூடிய தன்மை உடையவர் திரு க்லாம் அவர்கள் மட்டும் தான். ஜனாதிபதி பதவி முடிந்த ஒரு வருடத்தில் மட்டும், அவர் 16 மாநிலங்களுக்கும், 6 வெளிநாடுகளுக்கும் சென்று சுமார் 250 கூட்டங்களில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை சந்தித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களூக்கு முன்பு, 4 மணிக்கு துவங்க இருந்த ஒரு விழாவிற்கு, அவரது பேச்சை கேட்க, 2 மணிமுதல் சென்னை நாரத கான சபாவில் இளைஞர்கள் காத்திருந்தது, பத்திரிகைகளில் வெளியானது. அது அரசியல் கூட்டம் போல் கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. இளைஞர்கள் தாங்களே வரும் கூட்டம்.
நான் இந்தியா விஷன் 2020 என்கிற ஒரு யாஹூ குரூப் நடத்துகிறேன். அதில் சுமார் 2000 இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு இளைஞனின் பின்னால் பல இளைஞர்கள் இருக்கிறார்கள். ப்லரது பேட்டிகளை எடுத்து இந்தியாவிஷன்2020 என்கிற என்னுடைய தளத்திலும் வெளியிட்டுள்ளேன்.
இந்த இளைஞர்கள் கலாமின் செயல் மற்றும் அறிவுரைகளால் கவரப்பட்டு, தங்களால் ஆன சமூக பணிகளை அமைதியாகவும், ஆரவாரமில்லாமலும், செய்து வருகிறார்கள்.
திரு கலாம், 77 வயது தாத்தா. இளைஞர்கள் அவரை ஒரு ரோல் மாடலாக ஏன் எடுத்துக்கொள்ளவெண்டும்? ஏன் நம்பிக்கை வைக்கிறார்கள்? இதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும். சுதந்திரப்போராட்ட காலங்களீல், அந்த கால இளைஞர்கள் ம்காத்மா காந்தி மேல் நம்பிக்கை வைத்தார்கள். இளைஞர்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமானால், அவர்களுக்கு நம்பிகையூட்டும் வகையில் தலைவர்கள் வாழ்ந்து காட்டவேண்டும். அதைத்தான் காந்தியும் செய்தார். கலாமும் செய்கிறார்.
'அப்துல் கலாமின் கன்வுகளைப்பற்றி' கொச்சைப்படுதி எழுதியுள்ளார். கனவுகள் என்பது ஒரு குறிக்கோள். இந்தியா ஒரு வளர்ந்த நாடாக 2020ல் (developed Nation) ஆக வேண்டும் என்று ஒரு குறிக்கோள். அதற்கு வழிமுறைகளையும் இளஞரகளூக்கு வழங்கியுள்ளார். (1) எவ்வாறு கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள இடைவெளியை குறைப்ப்து (2) இளைஞர்கள் எவ்வாறு எழை மாணவர்களுக்கு உதவுவது போன்ற நல்ல திட்டங்களை இளைஞர்களின் மனத்தில் விதைத்துள்ளார். 'இந்தியா 2020' என்கிற் மந்திரத்தை மக்கள் மனத்தில் விதைத்துள்ளார்.
அண்மையில், லண்டன் மெட்ரோ பலகலைகழகத்திலிருந்து (ஐரோப்பாவில் பெரிய பல்கலை கழகம். லண்டனில் உள்ளது) மேலதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பிர்சித்த பெற்ற சாதனையாளர்களை அழைத்து, பன்னாட்டு மாண்வர்களிடையே கலந்துரையாட வைப்பார்கள். இந்த ஆண்டு திரு கலாமை கூப்பிட இருக்கிறோம் என்றார்கள். திரு கலாம் உலக அளவில் மதிக்க்த்தக்க மாபெரும் மனிதராக இருப்பது, தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமையே.
இதனால் தான் , இந்தியா விஷன் இளைஞர்கள், திரு க்லாமை 'இந்தியாவின் நல்லெண்ண தூதுவராக' (Goodwill ambassador or brand ambassador) அரசு அங்கீகரிக்க கோரி, ஒரு கையெழுத்து வேட்டை நடத்துகிறார்கள்.
கட்டுரை ஆசிரிய்ருக்கு நல்ல மனிதர்கள் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். அது அவரது உரிமை. நல்லவர்களை கொச்சைபடுத்தாமல் இருந்தாலே அது ஒரு பெரிய தேச சேவை. பல அறிவு ஜீவிகள் ஒரு சுண்டு விரலை கூட சமுதாயத்திற்காக அசைப்பதில்லை. ஆனால் சுய விளம்பரத்திற்காக, தங்களால் சாதிக்க முடியவில்லை என்றாலும், சாதிப்பவர்களை கேவலப்படுத்துவார்கள். அதனால் தான் நான் தலைப்பில் கூறினேன். " ஆதவனை நோக்கி அண்ணாந்து பார்த்து எச்சில் உமிழ்ந்தால், ஆதவனுக்கு எதுவுமில்லை. அது நம் மீது தான் விழும்".
திரு கலாம் அவர்களே. அவர்களை மன்னியுங்கள். நீங்கள் நீடுழி வாழ்ந்து, இளைஞர்களூக்கு வழிகாட்ட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.