This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

சனி, 5 ஜூலை, 2008

அறிவு ஜீவிகளே! அண்ணாந்து பார்த்துக்கொண்டு எச்சில் உமிழாதீர்கள்!

அறிவு ஜீவிகளுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு அறிவு ஜீவிகளூக்கு ஒரு தன்மை உண்டு. தங்களுக்கு தெரியாத ஒன்றை, தெரிந்தது போல் பாவித்து, அதைப்பற்றி விலாவாரியாக வெளுத்து க்ட்டுவார்கள்.

மேலும், ஏதாவது சாதனை புரிந்து, மக்களிடம் பிரபலமாக வேண்டுமென்று நினைக்க மாட்டார்கள். அதற்கு சாதனை புரிய வேண்டும். பல நாட்கள், வருடங்கள் கூட ஆகலாம். அதற்கு குறுக்கு வழி அவர்களுக்கு தெரியும். வழக்கமாக மக்களின் மரபுகளுக்கு மாறாக ஏதாவது செயவார்கள் அல்லது சொல்வார்கள். எல்லாரும் காலால் நடந்தால், நான் மட்டும் கையால் நடப்பேன் என்பார்கள்; ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதுதான் மரபு என்றால், அவர்கள், ஏன் ஆணும் , கரடியும் திருமணம் செய்யக்கூடாது என்பார்கள். இதைதான் 'வக்ரமாக சிந்திப்பது' என்று தமிழிலும், 'pervertion' என்று ஆங்கிலத்திலும் கூறுவதுண்டு. பொதுவாக இந்த அறிவு ஜீவிகள், மக்களின் கவனத்தைத்தான் திருப்ப முடியும். ஆனால், அனைவரும் அதை ஒரு காமெடியாக எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

கடந்த 9.7.2008 தேதியிட்ட 'குமுதம்' வார இதழில், 'ஓ பக்கங்கள்' என்கிற பகுதியில் நண்பர் ஞாநி அவ்ர்கள் "காபபாற்றுங்கள் கலாம் " என்கிற் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். நீலகிரி மலையில் அரசு திட்டமிட்டுள்ள 'நியூட்ரினோ' ஆராய்ச்சி கூடத்தைப்பற்றி விமர்சனம் செய்துள்ளார். அது தவ்றா அல்லது சரியா என்று கூற நான் அறிவு ஜீவி அல்ல. எனக்கு தெரியாத விஞ்ஞான பகுதியில் தலையிட விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை இந்திய அணு சக்தி விஞ்ஞானிகள் உலக தரம் வாய்ந்தவர்கள். விக்ரம் சாராபாய், ஹோமி பாபா முதல் அனவரும் இந்தியாவின் பெருமைமிகு விஞ்ஞானிகளக இருந்து, நாட்டிற்கு நன்மை பயத்தனர்.

என்னுடையவும், மற்ற தேசிய நலனை விரும்பும் பலரது கருத்துகளும், அந்த கட்டுரையில், திரு அப்துல் கலாமை கிண்டலடித்து எழுதியது தான். துவக்கமே இப்படித்தான்:

"எல்லாரையும் கனவு காணச் சொல்லியே உங்கள் குடியரசுத் தலைவர் பதவிக்காலத்தை ஓட்டி முடித்துவிட்டீர்கள். குழந்தைகள் முதல் உங்கள் வயதுக்காரர்கள் வரை கனவு கண்டுகொண்டே இருக்கிறார்கள். எல்லார் கனவுகளையும் தொகுக்க முடியுமானால், அவற்றைப் படித்து ஆராய்ந்து இந்தியாவிலிருந்து இன்னொரு சிக்மண்ட் ஃபிராய்ட் உருவாகும் வாய்ப்பு கூட இருக்கிறது.

உங்கள் கனவுகள் என்ன என்று அறிந்துகொள்வதற்கு எனக்கு எப்போதும் ஆவல்தான். அக்கினிச் சிறகுகள், விஷன் 2020 மாதிரி ஆவணங்களைப் படித்தால் எனக்கு தூக்கம் வந்துவிடுகிறது. அப்புறம் என் கனவுகள் ஆரம்பமாகிவிடுகின்றன. உங்கள் கனவு என்னவென்று தெரியாமலே போய்விடுகிறது."

மற்றொரு இடத்தைல் நண்பர் ஞாநி கூறுகிறார்:

"உங்களை நான் நம்பாவிட்டாலும் எண்ணற்ற இளம் தலைமுறையினர் பெரிதும் நம்புகிறார்கள். அரசியல், நிர்வாகம், அறிவியல் அனைத்து துறையினருக்கும் நீங்கள் ஒரு ரோல் மாடல் என்று இளைஞர்கள் பலர் நம்புகிறார்கள்."

விவேகாநந்தர், மகாத்மா காந்திக்கு பிறகு, இன்று இளைஞர்களை அதிக அளவில் கவர்க்கூடிய தன்மை உடையவர் திரு க்லாம் அவர்கள் மட்டும் தான். ஜனாதிபதி பதவி முடிந்த ஒரு வருடத்தில் மட்டும், அவர் 16 மாநிலங்களுக்கும், 6 வெளிநாடுகளுக்கும் சென்று சுமார் 250 கூட்டங்களில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை சந்தித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களூக்கு முன்பு, 4 மணிக்கு துவங்க இருந்த ஒரு விழாவிற்கு, அவரது பேச்சை கேட்க, 2 மணிமுதல் சென்னை நாரத கான சபாவில் இளைஞர்கள் காத்திருந்தது, பத்திரிகைகளில் வெளியானது. அது அரசியல் கூட்டம் போல் கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. இளைஞர்கள் தாங்களே வரும் கூட்டம்.

நான் இந்தியா விஷன் 2020 என்கிற ஒரு யாஹூ குரூப் நடத்துகிறேன். அதில் சுமார் 2000 இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு இளைஞனின் பின்னால் பல இளைஞர்கள் இருக்கிறார்கள். ப்லரது பேட்டிகளை எடுத்து இந்தியாவிஷன்2020 என்கிற என்னுடைய தளத்திலும் வெளியிட்டுள்ளேன்.

இந்த இளைஞர்கள் கலாமின் செயல் மற்றும் அறிவுரைகளால் கவரப்பட்டு, தங்களால் ஆன சமூக பணிகளை அமைதியாகவும், ஆரவாரமில்லாமலும், செய்து வருகிறார்கள்.

திரு கலாம், 77 வயது தாத்தா. இளைஞர்கள் அவரை ஒரு ரோல் மாடலாக ஏன் எடுத்துக்கொள்ளவெண்டும்? ஏன் நம்பிக்கை வைக்கிறார்கள்? இதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும். சுதந்திரப்போராட்ட காலங்களீல், அந்த கால இளைஞர்கள் ம்காத்மா காந்தி மேல் நம்பிக்கை வைத்தார்கள். இளைஞர்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமானால், அவர்களுக்கு நம்பிகையூட்டும் வகையில் தலைவர்கள் வாழ்ந்து காட்டவேண்டும். அதைத்தான் காந்தியும் செய்தார். கலாமும் செய்கிறார்.

'அப்துல் கலாமின் கன்வுகளைப்பற்றி' கொச்சைப்படுதி எழுதியுள்ளார். கனவுகள் என்பது ஒரு குறிக்கோள். இந்தியா ஒரு வளர்ந்த நாடாக 2020ல் (developed Nation) ஆக வேண்டும் என்று ஒரு குறிக்கோள். அதற்கு வழிமுறைகளையும் இளஞரகளூக்கு வழங்கியுள்ளார். (1) எவ்வாறு கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள இடைவெளியை குறைப்ப்து (2) இளைஞர்கள் எவ்வாறு எழை மாணவர்களுக்கு உதவுவது போன்ற நல்ல திட்டங்களை இளைஞர்களின் மனத்தில் விதைத்துள்ளார். 'இந்தியா 2020' என்கிற் மந்திரத்தை மக்கள் மனத்தில் விதைத்துள்ளார்.

அண்மையில், லண்டன் மெட்ரோ பலகலைகழகத்திலிருந்து (ஐரோப்பாவில் பெரிய பல்கலை கழகம். லண்டனில் உள்ளது) மேலதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பிர்சித்த பெற்ற சாதனையாளர்களை அழைத்து, பன்னாட்டு மாண்வர்களிடையே கலந்துரையாட வைப்பார்கள். இந்த ஆண்டு திரு கலாமை கூப்பிட இருக்கிறோம் என்றார்கள். திரு கலாம் உலக அளவில் மதிக்க்த்தக்க மாபெரும் மனிதராக இருப்பது, தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமையே.

இதனால் தான் , இந்தியா விஷன் இளைஞர்கள், திரு க்லாமை 'இந்தியாவின் நல்லெண்ண தூதுவராக' (Goodwill ambassador or brand ambassador) அரசு அங்கீகரிக்க கோரி, ஒரு கையெழுத்து வேட்டை நடத்துகிறார்கள்.

கட்டுரை ஆசிரிய்ருக்கு நல்ல மனிதர்கள் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். அது அவரது உரிமை. நல்லவர்களை கொச்சைபடுத்தாமல் இருந்தாலே அது ஒரு பெரிய தேச சேவை. பல அறிவு ஜீவிகள் ஒரு சுண்டு விரலை கூட சமுதாயத்திற்காக அசைப்பதில்லை. ஆனால் சுய விளம்பரத்திற்காக, தங்களால் சாதிக்க முடியவில்லை என்றாலும், சாதிப்பவர்களை கேவலப்படுத்துவார்கள். அதனால் தான் நான் தலைப்பில் கூறினேன். " ஆதவனை நோக்கி அண்ணாந்து பார்த்து எச்சில் உமிழ்ந்தால், ஆதவனுக்கு எதுவுமில்லை. அது நம் மீது தான் விழும்".

திரு கலாம் அவர்களே. அவர்களை மன்னியுங்கள். நீங்கள் நீடுழி வாழ்ந்து, இளைஞர்களூக்கு வழிகாட்ட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

17 கருத்துகள்:

 1. கலாம் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது என்பதை நானே என் குமுதம் கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன். ஏன் என்பதை சென்ற வருடம் விகடன் கட்டுரையிலே எழுதியிருக்கிறேன். கிண்டல், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது. அவருடைய கனவு திட்டம் நீலகிரியை நாசமாக்கும் என்பதற்கு முடிவதால் பதில் சொல்லுங்கள். அவரையே பதில் சொல்லச் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஞானிக்கு கலாம் மீது எப்படி நம்பிக்கையில்லையோ அதுபோல எனக்கு ஞானி மீதும் நம்பிக்கை கிடையாது. எனவே ஞானிக்கு வக்காலத்து வாங்கி நான் இங்கு பின்னூட்டம் போடவில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.  சீனிவாசன் சார்!

  வெறுமனே குத்துக்காலிட்டு உட்கார்ந்து கனவு கண்டுகொண்டிருப்பதால் என்ன புரட்சி வெடித்துவிடுமென்று நீங்கள் நம்புகிறீர்கள் என்று புரியவில்லை. கனவுக்கு பின்னான தெளிவான செயல்திட்டம் எதையும் இன்னமும் கலாம் பெரிய அளவில் சொல்லிவிடவில்லை.

  பாலகுமாரன் பலமுறை சொன்னதுபோல கனவு கண்டுகொண்டேயிருப்பவன் நிகழ்வுகளில் தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடுகிறான்.

  அடுத்ததாக விவேகானந்தர், மகாத்மாவுக்கு பிறகு அதிக இளைஞர்களை கவர்ந்தவர் கலாம் என்ற உங்கள் கூற்றும் சரியானதா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. கலாம் எந்த விதத்திலும் என்னை சலனப்படுத்தவில்லை, நானும் ஒரு இளைஞன் தான். கலாம் சலனப்படுத்திய இளைஞர்கள் என் பார்வையில் மிக அரிதாகவே கிடைத்திருக்கிறார்கள். சலனப்படுத்தக்கூடிய அளவுக்கு அவர் என்ன செய்திருக்கிறார் என்றாவது சொல்லமுடியுமா? கலாம் ஏதாவது தத்துவங்கள் சொல்லியிருக்கிறாரா? கனவு காண்பதை தவிர்த்து வேறு ஏதேனும் சிந்தனைகளை இளைஞர்களுக்கு தூண்டியிருக்கிறாரா?

  ஆர்.வெங்கட்ராமன் அளவுக்கெல்லாம் ஆபத்தில்லாத ஜனாதிபதியாக கலாம் இருந்திருக்கிறார். அந்த அளவில் மட்டுமே அவரை எனக்கு பிடிக்கும். செயல் என்ற வகையில் பார்க்கப் போனால் கலாமை விட ராஜீவ்காந்தியே எவ்வளவோ மேல். ராஜீவ் காந்தியாவது எதிர்காலத்தில் பிறக்கப் போகிற தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கணித்து இந்திய இளைஞர்களை தயார்படுத்தினார்.

  அன்புடன்
  லக்கிலுக்

  பதிலளிநீக்கு
 3. Dear Mr. Srinivasan

  First of all I would like to congratulate Mr. Srinivasan for exposing the Intellectual negative like Ghani in the Tamilnadu. These kinds of fame hungry journalists are the negativism in the country that makes the nation moving forward and acts as a drag which acts against the lift for the aircraft to fly.

  Millions of youth understand Kalam, Kalam has given a vision, mission and action for the nation. People who does not understand a visionary like kalam, who has contributed for the nation in all respects, as well as igniting the young minds today, giving an action plan for transforming the nation into a developed nation and continuously working for it, reveals his status. Fellows who are sitting in the A/C and writes such kind of articles cannot make any impact on the minds of the youth like what Kalam is doing today.

  We are not bothered what people like Ghani says about Dr. Kalam, but Mr. Srinivasan, as I studied the article of Mr. Ghani in Kumudam and gone through the web regarding this project, let me give my thoughts first. First of all the Neutrino project is pioneered by Department of Atomic Energy, Mumbai and the approval for such a massive project has to be given by the Ministry of Environment, Govt. of India. When the scientists, beauracrats and the Government has sanctioned the Neutrino project, are they are not considered all the issues which are concerning the tiger populace in the Mudumalai sanctuary. A ministry which has not given sanction for Sea water Desalination project during the Jayalalitha government has given sanctioned during DMK Government, supported by the LEFT in which this intellectual negative Ghani pretend to belongs might have sanctioned the project.

  It seems from the website, that they are going to construct a tunnel similar to LHC tunnel at CERN, Switzerland which connects more than two countries and running underground for 27 km for which DAE India is also a research observer. This study is undertaken to understand the big bank theory to find out any deviation in the formation of this universe, so that it may reveal many factors of science leading to solution to many problems in the humanity.

  When such a great effort has been initiated by the Govt. which propels the scientific research in the country that too in the heart of the Mudumalai sanctuary where the tiger population is there, definitely there may be certain environmental concerns. It is the responsibilities of Govt and DAE to address the genuine grievances if any and resolve the issues amicably or find an alternative solution.

  In a democratic country like India, everybody has a right to raise a voice against anything which is happening in india, including the voice against Kushboo and our courts will also hear the petitions urgently leaving all other unwanted cases set aside. That is our democracy.

  In this kind of environment, people like Mr. Ghani who pretend to follow the journalistic ethics, first reveal the fact, what kind of response he got from DAE or Mr. Kalam before he written the article first by defaming Mr. Kalam for the sack of attracting the reader’s attention. Or if Kumudam editor has any journalistic ethics, he should reveal the fact whether he has checked with Mr. Kalam and whether he has got any response from him that Nuetrino is his dream project, or whether he has at least checked with DAE authorities before writing.

  As per Mr. Ghani article he has written based on some anonymous person’s word that it is a dream project of Kalam. As per his own words, Mr. Ghani is not beyond the criticism of its own kumudam readers.

  As a ardent reader of Kumudam, if Kumudam followed anyone of the above merits at least we can appreciate that they have a fundamental journalistic ethics, otherwise it will reveal the fact that Mr. Ghani is an empty intellectual idiot who looks for a cheap publicity writing negative about the popular personalities in the country and kumadam will be degraded as a bankrupt journal in the minds of its readers.

  பதிலளிநீக்கு
 4. இங்கு ஞாநி மட்டும் அல்ல, இன்னும் பலரும் கனவு என்றாலே தூக்கத்தில் வருவது மட்டும் தான் கனவு என்ற நம்பிக்கையில் அசைக்கமுடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

  நம் நாட்டில் உள்ள 110 கோடிக்கு மேற்பட்ட மக்களில், 60 கோடிக்குமேல் இளையோர் உள்ளார்கள் எனில் அத்தனை இளைஞர்களுக்கும் இதுதான் நீ செய்ய வேண்டும் என்று கலாம் ஒருவரே சொல்ல முடியாது. அவர் கனவு காணுங்கள் என்பது, தங்களுக்கென்று ஒரு லட்சியத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்பதைத் தான். அந்த லட்சியத்தை அடையும் வழிகளை கண்டுபிடியுங்கள், அதற்காக உழையுங்கள் என்பதை தான் அவர் சொல்லுகின்றார். இதைக்கூட புரிந்துகொள்ளாமல் அடவடியாக கனவு என்ற ஒரு வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு பேசுபவர்களை பற்றி என்ன செய்வது?

  பதிலளிநீக்கு
 5. Sir,

  I feel let us not bother much about the contents of the article referred. I feel by this we are giving undue publicity.

  Only one thing I would like to mention here. Though Congress high command was not interested to give Mr Abdul Kalam a second change for President post, which he deserves, still Mr Kalam gave his frank opinion about the Nuclear deal. He is a person who stands for National interest. Now when SP apporached him for his views on Nuclear deal, he gave his frank opinion. We are proud to have a person like Mr Kalam in our midst.

  Nation is proud of Mr Kalam.

  PNV

  பதிலளிநீக்கு
 6. கலாமின் நோக்கங்கள் மிக உயர்ந்தவை என்பதில் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை.

  ஒரு நல்ல விஞ்ஞானியு அறிவியலாளரும் கூட.

  ஆனால் தேச முதல் குடிமகனாக சில சமயம் சறுக்கினார்.(உறுப்பினர்கள் லாபம் தரும் பதவிகளில் அமரத் தடை மசோதா,356 மூலம் ஆட்சிக் கலைப்பு..)

  அவரது 2020 திட்டமும் முழுக்க ஒரு டாக்குமெண்டரி போல இருக்கிறது;ஓரளவு வாசிப்பார்வம் இருக்கும் என் போன்றவர்களுக்கே இந்தியா 2020 நல்ல வாசிப்பை அளிக்கமுடியவில்லை.விதயங்களை அறிந்து கொள்ளும் தாகம் இருப்பவர்களுக்கே அது விருப்ப வாசிப்பாக இல்லாத போது,ஆள்பவர்களோ,தலைவர்களோ அதன் அருகிலும் செல்வார்களா என்பது சந்தேகமே.

  ஆளுமைப் பதவியில் அமருபவர்கள் நேர்மையாளர்களாக இருப்பது 50 களுக்குப் பிறகு இந்தியாவில் மறைந்துவிட்டது;அந்த மறைந்து போன rare species க்கு ஒரு காட்டாக விளங்கியதால்,இன்னமும் நாட்டின் மீது நம்பிக்கை கொண்ட(என்னைப் போன்ற) இளைஞர்கள் அவரை ஆவலுடன் பார்க்கிறார்கள்.

  அவரின் செயல்பாடு(முதல் குடிமகனாக) என்னையும் கவர வில்லை;அவர் இன்னும் வலிமையான தலைவராக தன்னை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் !

  பதிலளிநீக்கு
 7. I found this from Gnani's blank weblog: http://ohgnani.blogspot.com/

  communicating through print, theatre, video, television and direct talk for the last 32 years. sharing concerns with anyone interested in dreaming along with me for a world of love and equality. now single and looking for a similar viewed companion.

  :)

  பதிலளிநீக்கு
 8. I was quite unhappy to read such comments about kalam. I will say that i was ignited and empowered by his books. Its the interest to read the book counts rather than the intention to read.

  I will proudly say that he has inspired me to work for India and i have so many of my friends who will say that he is inspiring force behind their activities of nation development.

  He is extrordinary men/legend of the millenium i would say. He has definitely inspired youth and every student who had listened his lecture in our college days will be the testimonial of it. I will say people are yet to discover his value.

  பதிலளிநீக்கு
 9. I am Saravanan, a college student at Mumbai. Every week, during the week ends, i have started helping poor students with education. I spend atleast four to five hours in teaching poor children. This is only because of the inspiration i gained from Kalam sir.In every meeting, he is advising students to help the poor children and teach them. There are lot of students here who are doing some service or other, inspired by Kalam sir.

  My humble request to Kumudam Editor and Gnani - If you can not do anything good for our country, please do not publish nonsense, which can demotivate the youngsters like us. People who have the love for our motherland will never involve in such activities.

  Kumudam and Gnani have insulted crores of young people, who are inspired by kalam sir.

  பதிலளிநீக்கு
 10. Few People who decide to write a topic are commited title rather than facts. May be you have few right points about environment does not mean they are commitinga crime.
  I know countless examples many young people who are inspired by Dr.kalam. Great people create a bond only through their vision & action. Not unncessary publicity.
  My attempt here is ask Mr.Jnani(I guess only name is for sake of it) to look at positive side of what Dr.Kalam has created. There are countless stories to gain popularity.
  Write you may, but history will read it right !! That's true of any great sould who have lived , Dr.Kalam is no exception.

  -shiva

  பதிலளிநீக்கு
 11. Dear sir,

  Very well said. Whoever wrote that way about our great Nation builder D.r kalam, is just behind cheap publicity. He is definately not contributing any thing good to the society and has the nerve to write about such a great legend sarcastically. Especially in this case "dream" for a better future is not understood by our poor writer who has misunderstood the concept and has just translated it that way deliberately and is having a few laughs at the expense of our ex-president's acheivements and goalsetting. I request that writer to come out of his own slumber and take a look at this world, and where it is heading and if not for our mahatma kalam, we will still be in a bad shape without any hope or goals for the future.

  Your stance and take on such a matter is very good. i enjoyed the article and i agree that by not jeering the acheivers itself we are doing good to the society-- leave alone the praise that they surely deserve.

  PS:- Here in europe Indian's have a prestigeous place and standing because of our attitudes,culture and more importantly our patience and acceptance of any situation,and our faith, hope and hardwork. Please do not spoil that Mr Ghani.

  Regards and thanks,

  PrithiRaj
  (Europe)

  பதிலளிநீக்கு
 12. What happened to Ghani and Kumudam??? Kalam is the most respected and lovable person by most of teh youths in this country.

  I started serving my India after seeing Kalam. His thoughts and vision have inspired me a lot. To make his dream come true, I started a team called Team Everest which has more than 1900+ volunteers now. We have reached out to more than 20,000 students in teh past and have helped to their academics.

  This is not possible if I would not have known about Kalam. He is a great leader!!! Never ever doubt this living God!!!

  And a word to Gnani:
  I have great respect on you. I have read many of your articles. What you mentioned in the article tells your interest to save the environment. But, the way you have told it is what matters now. I haven't expected this from you. If you don't like Kalam, you can keep quiet. But, by leaving a bad comment on him, you have hurted Kalam and many of the youngsters like me.

  Do not tell that he didn't inspire the youths. I'm the one who got inspired from Kalam. And there are lakhs of youths who got the same inspiration from Kalam. He is a role model.

  Next time, when I read your article, stop blamming a person who is the role model for many. If not, people like us will stop reading articles from people like you.

  பதிலளிநீக்கு
 13. கிணற்றுத் தவளைகளில் கத்தல், கிணறைத் தாண்டுவதில்லை, விட்டுத் தள்ளுங்கள். இதுபோன்ற தவளைகளுக்கு, கலாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.
  தவளையும் தன் வாயாலேயே கெடும்.

  பதிலளிநீக்கு
 14. ஞானிக்கு மதிப்புக்குறிய கலாம் அவர்கள் மேல் நம்பிக்கை இருக்கான்னு யாரு கவலைப்பட்டாங்க? இதெல்லாம் வெத்து பிணாத்தல்கள். விட்டுத்தள்ளுங்க.

  ஞானி மதிப்புக்குறிய கலாம் அவர்களின் புத்தகம் படிச்ச லச்சணம் தான் தெரியுதே அவருடய எழுத்தில். மதிப்புக்குறிய கலாம் அவர்கள் என்ன இவரைப்போல போகிறபோக்கில் சேற்றை வாரி இறைக்கும் போக்கில் எழுதினாறா? இல்லை கதை எழுதினாரா? இவருக்கு அதைப் படிக்கமுடியலயாம்!! என்னே ஒரு நகைச்சுவை?

  பதிலளிநீக்கு
 15. For those who have not understood how Dr.Kalam defines a 'dream', here is a famous quote of Dr.Kalam: "Dream is not something that you see in sleep; but it is something that does not let you sleep!". Dream transforms to thoughts and thoughts transform to actions. If every Indian has a dream to excel well in whatever he does, his activities would naturally be aligned towards this goal and that would naturally contribute in a great way to India's development.

  There is no doubt that Dr.Kalam has inspired millions of Indians and he continues to do so every day!. The count of people who are inspired by Dr.Kalam increases by huge leaps and bounds every day. I am confident that with Dr.Kalam's preachings, the day is not too far away when the entire Nation(minus a few handful ignorant people) shall vibrate at high energy levels and patriotism and would contribute their best for nation's development and continued prosperity!.

  பதிலளிநீக்கு
 16. Gnani pondra khizvargaluku Dr.APJ Sir mel nambigai illamal ponadhil orru athisyamum illai. Athu Ooo pakam alla, khizavan pakam. Forget it friends! We have better work to do as per our Dr.APJ sir's words than aswering people like him.

  பதிலளிநீக்கு
 17. //எல்லாரும் காலால் நடந்தால், நான் மட்டும் கையால் நடப்பேன் என்பார்கள்;//

  நச்சுனு சொன்னீங்க..

  //கட்டுரை ஆசிரிய்ருக்கு நல்ல மனிதர்கள் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். அது அவரது உரிமை. நல்லவர்களை கொச்சைபடுத்தாமல் இருந்தாலே அது ஒரு பெரிய தேச சேவை. பல அறிவு ஜீவிகள் ஒரு சுண்டு விரலை கூட சமுதாயத்திற்காக அசைப்பதில்லை. ஆனால் சுய விளம்பரத்திற்காக, தங்களால் சாதிக்க முடியவில்லை என்றாலும், சாதிப்பவர்களை கேவலப்படுத்துவார்கள்//

  கலக்கல் போங்க..:-)

  //Joseph Paulraj said...
  அவர் கனவு காணுங்கள் என்பது, தங்களுக்கென்று ஒரு லட்சியத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்பதைத் தான். அந்த லட்சியத்தை அடையும் வழிகளை கண்டுபிடியுங்கள், அதற்காக உழையுங்கள் என்பதை தான் அவர் சொல்லுகின்றார். இதைக்கூட புரிந்துகொள்ளாமல் அடவடியாக கனவு என்ற ஒரு வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு பேசுபவர்களை பற்றி என்ன செய்வது?//

  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

  குறை கூறுபவர்களை என்றுமே திருப்தி படுத்த முடியாது.

  அருமையான பதிவு

  பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...