This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள்? ஒரு அலசல்









தற்போதுள்ள 15வது மக்களவையின் மழைக்கால தொடர், கட்ந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்தது.  பொதுவாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்கள் அவர்களது (1) பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளும் விவாதங்கள், எழுப்பபடும் கேள்விகள், தனியார் மசோதாக்கள் ஆகியவற்றாலும், (2) பாராளுமன்ற வருகை பதிவேடு மற்றும் (3) எம்பிலேட் எனப்படும் தொகுதி நிதியை செலவிடும் தன்மை ஆகியவைகளால் மதிப்பிடப்படுகிறது.  

ஒவ்வொருமுறை பாராளுமன்றம் கூடும் போதும், பாரளுமன்ற உறுப்பினர்களின் விவாத்ங்கள், மற்றும் அனைத்து தகவல்களும், பாராளுமன்ற இணையதளங்களீல் வெளியிடப்படும்.  PRS Legislative Research போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் அந்த விவரங்களை தொகுத்து வெளியிடுகிறது.  
அமைச்சர்களுக்கும், எதிர்கட்சி தலைவருக்கும், வருகை பதிவேடு கிடையாது.  மற்ற உறுப்பினர்கள், வருகை பதிவேடில் கையெழுத்து இட வேண்டும் அமைச்சர்கள், விவாதங்களீல் பங்கேற்பதில்லை.  கேள்விகள் எழுப்ப முடியாது.  அவர்கள், பதில் சொல்லும் பதவியில் இருக்கிறார்கள்.  
தமிழ்நாட்டிலிருந்து, 39 எம்.பிக்கள் மக்களவையில் உள்ளார்கள்.  அவர்களில் 8 பேர் அமைச்சராக உள்ளார்கள்.  ஆகவே, இதர 31 எம்.பிக்கள் எவ்வாறு தங்கள் பணியினை செய்தார்கள் என்பதை, கீழ்கண்ட விவரங்கள் மூலம் அறியலாம். 
நடந்து முடிந்த மழைக்கால தொடரில், மக்களவையில் தமிழ்நாட்டு எம்.பிக்கள் பங்கேற்ற விவாதங்கள், எழுப்பிய கேள்விகளின் விவரங்களும், அவர்கள் வருகை பதிவேடு விவரங்களும் அட்டவணை 1 ல் கொடுக்க்ப்பட்டுள்ளது.  விருதுநகர் தொகுதி திரு மாணிக் தாகூரும், வட சென்னை தொகுதி திரு இளங்கோவனும், அனைத்து அமர்வுகளிலும் (100 சதவிகிதம்) கலந்து கொண்டுள்ளார்கள்.
திரு எஸ். எஸ். இராமசுப்பு
மக்களவையில் விவாதங்களில் பங்கேற்பது, மற்றும் கேள்விகள் எழுப்புவது என்கிற் வகையில், திருநெல்வேலி எம்.பி திரு எஸ். எஸ். இராமசுப்பு முன்னிலையை தக்கவைத்துள்ளார்.  கடந்த பட்ஜெட் கூட்ட தொடரின் முடிவில், அகில இந்திய அளவில், 8வது இடத்தில் இருந்த அவர், தற்போது அகில இந்திய அளவில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  கடந்த மே மாதம், அவருடைய பணிகளை பாராட்டி, பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் சார்பில், விருது வழங்கப்ப்ட்டது குறிப்பிடத்தக்கது. அவரை பாராட்டி நான் தொலைபேசியில் பேசியபோது, அவர் இந்த பாராளுமன்றத்தில், முதலிடத்தை பிடித்து, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உறுதி அளித்தார்.  வெற்றிபடிகள் சார்பாக, அவருக்கு நம் பாராட்டுகளை தெரிவிக்கிறோம்.  
திரு இராமசுப்பு தவிர, காஞ்சி திரு விசுவநாதன், கிருஷ்ணகிரி திரு சுகவனம், தர்மபுரி திரு தாமரை செல்வன் ஆகிய எம்.பிக்களும் சிறந்த பங்கேற்றுள்ளார்கள்.  
இந்த மழைக்கால தொடரில், ம்காராஷ்டிரா எம்.பிக்களின் சராசரி பங்கேற்பு (விவாதங்கள், கேள்விகள், தனியார் மசோதா)  32.80.  தமிழ்நாட்டு எம்.பிக்களின் சராசரி 32.70.  பாராளுமன்றத்தில் சிறந்த பணியாற்றிய அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாக பாராட்டுக்க
மழைக்கால தொடரின் மக்களவை எம்.பிக்களின் பங்கேற்பு விவரங்கள் அட்டவணை 1ல் கொடுக்கப்பட்டுள்ளது.  15வது மக்களவை அமைக்கப்பட்டது முதல், மழைக்கால தொடர் வரை, இந்த மக்களவையில், தமிழ்நாட்டு எம்.பிக்களின் பங்கேற்பு விவரங்கள், அட்டவணை 2ல் கொடுக்கப்பட்டுள்ளது.
அட்டவணை 1


அட்டவணை 2, 15வது மககளவையின் ஆரம்பம் முதல், மழைக்கால தொடர் வரையிலான விவரங்கள்.  Total என்பது, ஆரம்பம் முதல், மழைக்கால தொடர் வரை, உறுப்பினர்கள் பங்கேற்ற விவாதங்கள், கேட்ட கேள்விகள் மற்றும், அறிமுகப்படுத்திய தனியார் மசோதாக்களின் கூட்டுத்தொகை.  நான் முன்பே கூறியபடி, திரு இராம சுப்பு, அகில இந்திய அளவில் 8ம் இடத்திலிருந்து, 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அட்டவணை 2








அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...