This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

புதன், 3 செப்டம்பர், 2008

சென்னையில் பிரம்மாண்டமான வினாயக சதுர்த்தி விழா


இன்று செப்டம்பர் 3ம் தேதி வினாயக சதுர்த்தி. இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு விழா. அரசு விடுமுறை வேறு. அனைத்து டி.வி. சேனல்களிலும் 'வினாகய சதுர்த்தியை முன்னிட்டு' சிறப்பு நிகழ்ச்சிகள். ஆனால் கலைஞர் டி.வியில் வினாயக சதுர்த்திக்காக இல்லாவிட்டாலும், 'விடுமுறையை முன்னிட்டு' சிறப்பு நிகழ்ச்சிகள். ( அனைத்து விடுமுறை நாட்களிலும் சிறப்பு நிகழ்ச்சி உண்டா என்று கேட்டு விடாதீர்கள். மதச்சார்பின்மை மாசு பட்டுவிடும்).

ஒவ்வொரு ஆண்டும், சென்னை தி.நகர் வெங்கட்நாராயாணா சாலையிலுள்ள JYM திருமண மண்டப வாசலில் எழுந்தருளப்பட்டுள்ள வினாயகருக்கு ஒரு தனி சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் விதவிதமான முறையில் சிலை செய்து வழிபடுவார்கள். 1008 கிலோ காய்கறிக்ளால் அமைக்கப்பட்டுள்ள இந்த வினாயகரின் எடை சுமார் 2000 கிலோ. 30 தொழிலாளிகள் சுமார் 10 நாட்கள் வேலை செய்து உருவாக்கப்பட்ட 15 அடி உயரமுள்ள இந்த வினாயகரை, இன்று துவக்க நாளன்றே, சுமார் 10 ஆயிரம் பேர் தரிசித்தனர்.

இந்த வினாயகருக்கு, கட்சி வேறுபாடின்றி, அனைத்து கட்சியினரும் பக்தர்களே. மத்திய அமைச்சர் திரு டி.ஆர். பாலு கூட் கட்ந்த ஆண்டுகளில் தரிசிக்க வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தான் வினாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்து வருகிறார்.

வீதிகளில் வினாயகரை வைத்து வழிபடும் முறை சென்னையில், மேற்கு மாம்பலத்தில் அப்போது 15 வயது நிரம்பிய கணேஷ் மற்றும் அவரது நண்பர்களால் 1983ல் துவக்கப்பட்டது. அப்போது 3 இடங்களில் வினாயகரை வைத்து வழிபட்டன்ர். அன்று குட்டியாக இருந்த 'குட்டி கணேஷ்' தான் ஒவ்வொரு ஆண்டும் வெங்கட்நாராயணா சாலையிலுள்ள வினாயகரை அமைத்து வருகிறார்.

தற்போது 25 ஆண்டுகள் கழிந்து வெள்ளி விழா கொண்டாடும் இந்த ஆண்டில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட இடங்களில், வினாயகர் சிலைகளை மக்கள் நிறுவி வழிபட்டு வருகிறார்கள்.

எனக்கு தனிப்பட்ட முறையில் வினாயகப்பெருமானின் மீது ஒரு பக்தி உண்டு. எந்த ஒரு செயலையும் வினாயகனை நினைக்காமல் துவங்க மாட்டேன். வினாயகனை மட்டும் தான், மக்கள் த்ங்களுக்கு விருப்பமான முறையில் அலங்கரித்து வழிபடுவர்கள். அதுதான் வினாயகரின் சிறப்பு.

இந்த தி.நகர் வினாயகரின் சிலை நிறுவப்பட்டுள்ள இந்த இடத்திற்கு அருகில், தி.நகர் பேருந்து நிலையத்தில் தான் 1972ல் தந்தை பெரியார் ஒரு வினாயகர் சிலையை பொது மக்கள் முன்னிலையில் உடைத்து ஒரு பெரிய பரபரப்பை அந்த நாட்களில் உருவாகினார் என்பது சரித்திரம். அன்று உடைபட்ட ஒரு பிள்ளையார் இன்று ஐந்தாயிரம் பிள்ளையாராக பிரும்மாண்டமாக வளர்ந்து, சென்னை முழுவதும் சாலைகளீல் அமர்ந்து, இன்று பெரியார் சீடர்களையே தன்னை வணங்க வைத்துள்ளார்.

அதுதான் வினாயகனின் மகிமை.



4 கருத்துகள்:

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...