This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

செவ்வாய், 31 மார்ச், 2009

நடிகர் எஸ்.வி. சேகரின் மனம் திறந்த பரபரப்பான பேட்டி

S.Ve. Shekher, MLA of Mylaporeவெற்றிகுரல் இதழ் 8

பிரபல நடிகரும், மயிலாப்பூர் எம்.எல்.ஏயுமான திரு எஸ். வி. சேசர், அண்ணா திமுகவினால் ஓரம் கட்டப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர், கட்சி கூட்டங்களில் பங்கேற்க தலைமை அழைப்பதில்லை.

இதனிடையில் எஸ். வி. சேகர், நேற்று (30 மார்ச் 2009) தமிழக முதல்வர் திரு கருணாநிதியை சந்தித்து, பிராமணர்களூக்கு 7 சதவிகித இட ஒடுக்கீடு வேண்டும் என்று ஒரு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அது இன்றைய செய்திதாள்களில் ஒரு முக்கிய செய்தியாக வந்துள்ளது. இது குறித்து, எஸ். வி. சேகரிடம் தொலைபேசியில், வெற்றிகுரலுக்காக பேட்டி எடுத்தேன்.

நான் சற்றும் எதிர்பாராத வகையில், அவரது பேட்டி, மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்து விட்டது. திடீரென்று ஏன் பிராமணர்களுக்காக 7 ச்தவிகித ஒதுக்கீடு கேட்டார், அண்ணா திமுக அவரை ஓரம் கட்டுவதனி பின்னணி, ஜெயலலிதாவின் முரண்பாடான நிலை, அண்ணா திமுக வில் ஓரம் கட்டப்ட்ட நிலையில் அவரை கட்சி வெளியேற்றினாலோ அல்லது அவராகவே வெளி வந்தாலோ அவரது எதிர்கால அரசியல் நிலை, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்கள் முதலமைச்சர் கனவுடன் அலைவதைப்பற்றி அவரது கருத்து, காஞ்சி சங்கராச்சாரியார் கைது பற்றிய அவரது வெளிப்படையான கருத்து மற்றும் அவருக்கு பிடித்த தேசிய அளவிலான தலைவர் ஆகியவை பற்றி மனம் திறந்து பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியை கீழ்காணும் பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். (இந்த ஆடியோ, பிராண்ட்பாண்டில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், டவுன் லோடு செய்து mp3 பிளேயரில் கேட்கவும்) - 27 நிமிடங்கள்



இந்த பேட்டியை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857384

திங்கள், 30 மார்ச், 2009

அத்வானி போட்ட குண்டு - சுவிஸ் வங்கியில் இந்திய கள்ள பணம் 25 லட்சம் கோடி!!

H Raja, Vice President, BJP, Tamilnaduவெற்றி குரல் இதழ் 8

அரசியல் களம் தேசிய அளவில் சூடு பிடிக்க ஆரம்பிக்க விட்டது. நேற்று ((29 மார்ச் 2009) பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளர் திரு எல். கே. அத்வானி செய்தியாளர்களிடம் பேசிய போது ஒரு புதிய குண்டை போட்டார். சுவிஸ் வங்கிகளில் இந்திய கள்ள பணம் 25 லட்சம் கோடி முதல் 70 லட்சம் கோடி வரை இருப்பதாகவும், பிஜேபி ஆட்சிக்கு வந்தால், அந்த கள்ள பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதகவும் கூறினார்.

வருகிற் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஜி-20 மாநாட்டில், இந்த பிரச்சனையை பிற நாடுகள் எழுப்ப இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த சமயத்தில், திரு அத்வானி இந்த பிரச்சனைய எழுப்புவது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விவகாரத்தில் எத்தனை பெரிய தலைகளின் பெயர் அடிபடப்போகிறதோ - இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

இது பற்றி தமிழக பிஜேபியின் மாநில துணை தலைவர் திரு ஹெச். ராஜா அவர்களுடன் தொலைபேசியில் வெற்றிகுரலுக்காக பேட்டி எடுத்தேன். திரு ராஜா ஒரு சார்ட்டர்டு அக்கவுண்டண்ட். உயர் பதவியிலுள்ள பலருக்கு, சுவிஸ் வங்கியில் பணம் இருப்பதாக கூறினார். அவரது முழு பேட்டியையும், கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஆடியோ சீராக இல்லையென்றால், டவுன்லோடு செய்து mp3 பிளேயரில் கேட்கவும். (14 நிமிடம்)



இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857383



ஞாயிறு, 29 மார்ச், 2009

நடிகர் விஜயகாந்தின் நிலை விசித்திரமானதா?

மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் டி. சிகாமணீவெற்றிக்குரல் இதழ் 7

தமிழகத்தில் விஜயகாந்த் தன்னை நம்பியே பல இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அந்த இடங்களில் பாரதீய ஜனதா கட்சியுடனும், காங்கிரசுடனும் மோத இருக்கிறார். இந்த தேர்தல், மக்களவைக்கான தேர்தல். டில்லியில் யார் ஆட்சி அமைப்பது பற்றிய தேர்தல். இந்த தேர்தலில் விஜயகாந்த் யாரை முன்னிறுத்தி ஓட்டு கேட்பார்? தமிழக சட்டசபை தேர்தல் என்றாலும், அவர் தன்னை முதல்வராக முன்னிறுத்தி ஓட்டு கேட்கலாம். மற்றவர்கள் விஜயகாந்தை உசுப்பி விட்டு, உசுப்பி விட்டு தன்னை ஒரு எம்.ஜி.ஆராகவே நினைத்து கொண்டு விட்டார் என்றும் விமர்சிக்கிறார்கள்.

இந்த தேர்தலில் தமிழகத்தில், பாஜக மற்றும் பி.எஸ்.பி நிலைப்பாடுகள் என்ன?

தற்போது, காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் எதிராக பிரச்சாரம் செய்து ஒட்டு வாங்கும், அதிமுக, மதிமுக, பாமக, விஜயகாந்த், கம்யூனிஸ்ட்கள், தேர்தலுக்கு பிறகு, காங்கிரசையோ அல்லது, ப்ஜேபியையோ ஆதரித்து, ஆட்சியில் பங்கு பெற்றால், அந்த நிலைமை, மக்களை ஏமாற்றுவது போல ஆகாதா?

இந்த் தேர்தலில், விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, உள் நாட்டு பாதுகாப்பு போன்ற அத்தியாவசமான பிரச்சனைகளை முன்னிறுத்துவார்களா? வருண் காந்தி விவகாரம் ஒரு டிராமாவா?

மேற்கண்ட வினாக்களுக்கு, தொலைகாட்சிகளில் அரசியலை அலசும், பிரப்ல பத்திரிகையாளர் திரு டி. சிகாமணியை வெற்றிகுரலுக்காக பேட்டி கண்டேன். அந்த பேட்டியை கீழே உள்ள பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். ( இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், ஆடியோவை டவுன்லோடு செய்து mp3 பிளெய்ரில் கேட்கவும்)



இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857382

வெள்ளி, 27 மார்ச், 2009

தேர்தலுக்கு பிறகு அணிகள் மாறுமா? ஒரு யதார்த்தமான அலசல்

வெற்றிக்குரல் - இணைய ஒலி இதழ் 6

தமிழகத்தில் இப்போது 4 அணிகள் இருக்கின்றன. திமுக அணி, அதிமுக அணி, விஜயகாந்த அணி மற்றும் பிஜேபி அணி. மாயவதி கட்சி, தனியாக முதன் முறையாக களம் இறங்குவதால், அவர்கள் ஒரு அணியாக கருதலாமா என்பது தெரியவில்லை.

திமுக அணியில் காங்கிரஸ் இருக்கிறது. மாநிலத்திலும், மத்தியிலும் இரண்டு கட்சிகளுமே ஆட்சி செய்கின்றன. அதனால் ஏற்படக்கூடிய 'anti establishment' என்று கூறப்படும் வோட்டு இழப்பு இருவருக்கும் பாதிக்க்லாம். தவிரவும், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அணியிலிருந்து வெளியேறிவிட்டன. இதனால் கூட வோட்டு இழப்பை திமுக அணி சந்திக்க வேண்டியிருக்கிறது. திமுக அணிக்கு எதிரான வாக்குகள், அதிமுக அணி, பாஜக அணி, விஜயகாந்த் அணி ஆகிய அணிகளிடையே பிரிந்து போகவும் வாய்ப்பு உள்ளது.

மேலும், மைனாரிடி வாக்குகள் எவ்வாறு செல்லும் என்பதும் முக்கியமான விஷயமாகும்.

தேசிய அளவிலும், மாநில அளவிலும், தேர்தலுக்கு பிற்கு அணிகள் மாறவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது பற்றி பிரபல அரசியல் பத்திரிகையாளர் திரு நுருல்லா அவர்களை 'வெற்றிக்குரலுக்காக' இன்று காலை (27.3.09) தொலைபேசியில் பேட்டி எடுத்தேன்.. திரு நுருல்லா அவர்கள், தினமலர், தினகரன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர். த்ற்போது, தினசுடர் பத்திரிகையில் பணியாற்றுகிறார். சென்ற பொது தேர்தலில் (2004), அவர் தினமலரில் எழுதிய கட்டுரைகள் மிகவும் பிரபலமனவை. அனைத்து அரசியல் தலைவர்களும் அவரது கருத்தை அறிய விரும்பினர்.

அவரது பேட்டியை, கீழே காணும் பிளாஷ் பிளேயரில், 'play' பட்டனை அழுத்தி, கேட்கவும் ( 18 நிமிடங்கள்). இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஆடியோவில் தடங்கல் இருந்தால், இந்த ஆடியோவை டவுன்லோடு செய்து, mp3 பிளேயரில் கேட்கவும்.



இந்த பேட்டியை கீழ்கண்ட இணைய்தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857381

வியாழன், 26 மார்ச், 2009

தேசிய கட்சிகளை ஏன் மாநில கட்சிகள் வறுத்து எடுக்கின்றனர்?

தடா பெரியசாமிவெற்றிக்குரல் - இதழ் 5

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் இல்லாத ஒரு நிலை தேசிய கட்சிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில், ஒரு பெரிய கட்சி தலைமையில், கூட்டணி ஆட்சி என்கிற நிலை வந்துள்ளது. இந்த தேர்தலில், மாநில கட்சிகள், காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய இரு கட்சிகளையுமே, மாநில கட்சிகள் ஓரம் கட்ட ஆரம்பித்து விட்டன. பெரிய கட்சிகள பரிதாப்மாக சிறிய கட்சிகளை பேரம் பேசி தாஜா செய்ய வேண்டிய நிலை இப்போது வந்துள்ளது.

இந்த நிலைமை தேசிய நலனுக்கு உகந்ததா என்பது பற்றி, தேசிய அக்கறை கொண்ட அனைவரது எண்ணத்திலும் வந்துள்ளது. இது குறித்து, நான் திரு தடா. பெரியசாமியிடம் ஒரு பேட்டி கண்டேன். திரு பெரியசாமி, ஒரு காலத்தில் தீவிரவாதத்தில் இருந்து, மனம் மாறி, தற்போது, பெரிய அளவில் தலித் மேம்பாட்டிற்கு 60 இரவு பள்ளிக்கூடங்கள் நடத்தி சமூக சேவை செய்து வருகிறார். அவரால், சுமார் 3000 தலித் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் அமைப்பை திருமாவளவனுடன் இணைந்து நிறுவினார். அரசியல் மற்றும் தலித் சமூக பணிகளில் ஈடுபட்டிற்கும் இவர், தமிழக அரசியலில் ஒரு முக்கியமான குறிபிடத்தக்க தலித் தலைவர்.

(1) தேசிய கட்சிகளின் இன்றைய பரிதாப நிலைக்கு காரணம், (2) 60 ஆண்டுகளுக்கு பிறகும் ஏன் தலித மக்கள முன்னேற முடியவில்லை, (3) தேசிய நலனுக்காக காங்கிரஸும், பி.ஜே.பியும் ஒரு தேசிய அரசு அமைக்க வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி மன்ம் திறந்து உரையாடினார்.

அவரது பேட்டியை 'கிளிக்' செய்து கேட்கவும். (இந்த ஆடியோ, பிராட்பேண்ட் இணைப்பில் சரியாக கேட்கலாம். ஆடியோ சரியாக வரவில்லை என்றால், இந்த ஆடியோவை டவுன்லோடு செய்து, mp3 பிளேயரில் கேட்கலாம்)



இந்த பேட்டியை கீழ்கண்ட இணைய தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857380

இனி வரும் நாட்களில், பல அரசியல் தலைவர்களீன் தமிழ் பேட்டிகளை இங்கு வெளியிட இருக்கிறேன். பதிவுகளை இமெயிலில் பெற வலது பக்கத்திலுள்ள அதற்குரிய கட்டத்தில், உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும்.

புதன், 25 மார்ச், 2009

தேர்தலில் சிறந்தவர்களை தேர்ந்தெடுக்க டாக்டர் கலாமின் வேண்டுகோள்


இந்தியா விஷன் ஆன்லைன் குழுமத்தின் சார்பில் "Celebrate Democracy - Vote India" என்கிற பிரச்சாரத்தை துவக்கியுள்ளோம். அதற்காக முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களை தொலைபேசியில் பேட்டி கண்டேன்.

இந்திய் குடிமக்கள் அனைவரும், வாக்குரிமையை ஒரு புனிதமான கடமையாகக் கருதி, நல்ல மக்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், 15வது மக்கள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு ஐந்து அம்ச குறிக்கோளை ஏற்று தங்கள் தொகுதி மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றார். மக்களும், மீடியாக்களும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குறிக்கோளை அடிப்படையாக வைத்து உறுப்பினர்களை மதிப்பிடவேண்டும் என்றார்.

டாக்டர் கலாமின் முழு ஆங்கில பேட்டியையும் ( 7 நிமிடம் 50 செகண்ட்), பாட்யூனிவர்சல் இணைய தளத்தில் கேட்கலாம்.

http://www.poduniversal.com/2009/03/dr-abdul-kalam-exhorts-to-vote-for.html


ஞாயிறு, 15 மார்ச், 2009

ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய செயல்களை மக்களிடம் அளிக்கும் வித்தியாசமான் பாண்டிச்சேரி எம்.பி

Prof. M Ramadass, Member of Parliament from Pondicherry along with his annual performance report
பாண்டிச்சேரியின் பா.ம.க எம்.பி பேராசிரியா ராமதாஸ், ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. பொருளாதார பேராசிரியராக இருந்து முதல் முறையாக 2004ம் ஆண்டில், பா.ம.க சார்பில் மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். பாரளுமன்றம் செய்ல் பட்ட நாட்களில் 96 சதவிகிதம் கல்ந்து கொண்டவர். 504 கேள்விகளுக்கு மேல் கேட்டு, அவை நட்வடிக்கைகளில் பங்கேற்றவர். எம்.பி. தொகுதி நிதியை 100 சதவிகிதத்திற்கு மேல் உபயோகப்படுத்தி, பாராளுமன்றத்தில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர். விடுமுறை நாட்களில் கூட, பாராளுமன்ற நூலகத்தை பயன் படுத்தியவர்.

அதையெல்லாம் விட, ஒவ்வொரு ஆண்டும், தன்னுடைய செயல்களை கண்க்கிட்டு, வெளிப்படையாக மக்களீடம் அறிக்கை சமர்ப்பிக்கிறார். பெரிய கம்பெனிகளில், அலுவலர்கள், ஒவ்வொரு ஆண்டும், தங்கள் செயல்களை 'performance appraisal' என்கிற பெயரில், தங்கள் மேலதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தான், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பிரமோஷன் கொடுக்கப்படும். அதே பாணியில், பேராசிரியர் ராமதாசும், தன்னுடைய செயல்களை விளக்கி ஒவ்வொரு ஆண்டும், தன்னை தேர்ந்து எடுத்த மக்கள் என்கிற முதலாளிக்கு அறிக்கை அளிக்கிறார். இந்த பாணியை, எல்லா கட்சிகளும், தங்கள் உறுப்பினர்கள் கடைபிடிக்க உத்தரவிடலாமே. கொஞசம் தர்ம சங்கடமாக இருந்தாலும், பயனுள்ளதாக இருக்கும்.

அவருடன் நான் எடுத்த பேட்டியை (ஆங்கிலம்) என்னுடைய பாட்யுனிவர்சலில் கேட்கலாம். (ஒரு தமிழன் பெருமையை உலகிற்கு எடுத்து சொல்லலாமே என்பதால் தான், ஆங்கிலத்தில் பேட்டியை எடுத்தேன்)

http://www.poduniversal.com/2009/03/prof-m-ramadass-only-mp-releasing-his.htm
l

பேராசிரியா ராமதாசுக்கு நம் வாழ்த்துக்கள். அவர் மீண்டும் வெற்றி பெற்று மக்களவை செல்லவேண்டுமென்று வாழ்த்துகிறேன். கட்சி பேதமின்றி நல்ல உறுப்பினர்கள் மக்களவையில் இருக்கவேண்டும் என்பதே மக்களின் ஆதங்கம்.

புதன், 11 மார்ச், 2009

தமிழ் நாட்டு கழகங்களின் அரசியல் நாகரீகம் - ஒரு அலசல்

இன்றைய ஜீனியர் விகடனில் ஒரு செய்தி படித்தேன். நடிகர் ராதர்ரவியின் தாயார் கடந்த வாரத்தில் மறைந்த போது, தி.மு.க தலைவர் ஸ்டாலினும், நடிகர் விஜயகாந்த்தும் துக்கம் விஜாரித்தார்களாம். அதனால், தங்கள் கட்சியைச் சார்ந்த ராதாரவியின் வீட்டு துக்கத்திற்கு, அண்ணா திமுக விலிருந்து யாரும் போகக் கூடாது என்று உத்தரவாம்.

இன்று மற்றொரு நிகழ்ச்சி. மருத்துவ மனையிலிருந்த முதல்வர் திரு கருணாநிதியை, ம.தி.மு.க தலைவர் திரு கண்ணப்பன் சென்று பார்த்தாராம். கட்சி தலைவர்கள் விரும்பவில்லை. கட்சியிலிருந்து அவர் விலகுகிறார்.

திமுக வும், அண்ணா திமுக விற்கு சளைத்தவர்களில்லை.

தமிழ் நாட்டு அர்சியலில் கழகங்கள் எந்த அளவு அரசியல் அநாகரீத்தை ஏலம் விடுகின்றன என்பதற்கு இவை ஒரு சாம்பிள்.

டில்லியில், காங்கிரஸும், பிஜேபியும் பரம எதிரிகள். பாராளுமன்றத்தில், தீவிரவாததின் மீது விவாதம் எழுந்த போது, அரசை ஆதரித்து பேசிய பி.ஜே.பி. தலைவர் திரு அத்வானியை, அவர் வீட்டிற்கு சென்று சோனியாவும், மன்மோகன் சிங்கும் நன்றி தெரிவித்தார்கள்.

உடல் நலம் குன்றி இருந்த திரு வாஜ்பாயை, அவரது வீட்டிற்கே சென்று அவர்கள் இருவரும் நலம் விஜாரித்தார்கள்.

டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், அத்வானியை, அரசியலில் ஒரு 'ரோல் மாடல்' என்று அண்மையில் பாராட்டினார். எதிர் கட்சியின் பிரதமர் வேட்பாளரான அத்வானியை ஒரு காங்கிரஸ் முதல்வர் பாராட்டியதற்காக காங்கிரஸ் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்காக பி.ஜே.பியும், காங்கிரஸ் முதல்வர் பாராட்டியதற்காக போஸ்டர் ஒட்டிக்கொள்ளவில்லை. அதுதான் அரசியல் நாகரீகம். இது போன்று தமிழ்நாட்டில், கழகங்களில் நடந்திருந்தால், நினைக்கவே பயமாக இருக்கிறது.

பாரளுமன்ற கடைசி நாளன்று அத்வானி பேசும்போது, தன் அரசியல் எதிரிகளான சோம்நாத் சாட்டர்ஜியையும், பிரணாப் முகர்ஜியையும் பாராட்டி தள்ளினார்.

பாராளுமனறத்தில் சிறந்த பணீயாற்றிய உறுப்பினர்களை என்னுடைய பாட்யுனிவர்ஸலுக்காக பேட்டி எடுத்து வருகிறேன். இரண்டு நாட்கள் முன்பு, குஜராத்தில் இருக்கும் ஒரு காங்கிரஸ் எம்.பி. வி.கே. தும்மர் அவர்களை போனில் பேட்டி கண்டேன். உறுப்பினர்களின் தொகுதி நிதியை எவ்வாறு செலவிட்டீர்கள் என்றும், செலவிட்டதில், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்றும் கேட்டேன். சற்றும் தயங்காமல் உடனடியாக அவர், குஜராத்தில் உள்ள எம்.பி.க்களீல் தான் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும், தன்னுடைய பி.ஜே.பி. நண்பர் முதலாவதாக இருப்பதாகவும், பேட்டியில் கூறினார். இது போன்று தமிழ்நாட்டு திமுக அல்லது அதிமுக எம்.பி. இங்கு கூறியிருந்தால், அவர்கள் கதி என்ன ஆகியிருக்கும்?

பேட்டி முடிந்தவுடன் தும்மருடன், அவர்கள் மாநில பாலிடிக்ஸ் பற்றி பேசிக்கொண்டு இருந்தேன். அங்கு பிஜேபி யும் காங்கிரஸும் அரசியல் எதிரிகள். தேர்தல் முடியும் வரை அவர்கள் தேர்தல் களத்தில் முடிந்த வரை சண்டை போடுவதாகவும், தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன், எம்.பிக்கள் அனைவரும் இணைந்து, குஜராத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி கட்சி பேதமில்லாமல் பேசி முடிவெடுப்பதாகவும் கூறினார்.

தான் எப்போது வேண்டுமானாலும் முதல்வர் 'நரேந்திர்பாயிடம்' பேசி, தன்னுடைய் தொகுதிக்கு வேண்டிய உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறி அசத்தினார்.

தமிழ்நாட்டு அரசியலில் என்றுதான் நாகரீகத்தை கழகங்கள் கொண்டு வரப்போகின்றனவோ?

திங்கள், 9 மார்ச், 2009

தமிழகத்தை தலை நிமிர வைத்த இரண்டு எம்.பிக்கள்

Kharventhan, Member of Parliament
கடந்த 14வது மக்கள் சபை நிறைவு நாளன்று, மதிப்பிற்குறிய சபாநாயகர் திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள், 14வது மக்கள் சபை நடந்த விதம் பற்றி மனம் வருந்தி பேசினார். பெரும்பாலான உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதில்லை என்றும், கூச்சல் குழப்பங்களில் 24 சதவிகித நேரம் வேஸ்ட் ஆகிவிட்டதாக குறிப்பிட்டார்.

பத்திரிக்கைகளில், பாராளுமன்றத்தில் சிறந்த அளவில் பணியாற்றிய உறுப்பினர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் அவையில் செய்த பணிகளை நான்கு வகையில் மதிப்பிடலாம்.

(1) கேள்வி நேரங்களில் கேள்வி கேட்பது, (2) பாரளுமன்ற அலுவல்களில் பங்கேற்று பேசுவது, (3) விதி எண் 377 கீழ் தொகுதி மற்றும் நாட்டு பிரச்சனைகளை எழுப்புவது மற்றும் (4) அவைக்கு கட் அடிக்காமல் தவறாமல் வருவது என்கிற நான்கு வகைகளில் உறுப்பினர்கள் மதிப்பிடப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பழனி தொகுதி உறுப்பினர் திரு கார்வேந்தன், மேற்குறிப்பிட்ட வகைகளில், விதி எண் 377 கீழ் பிரச்சனைகளை எழுப்புவதில் முதலாவதாகவும், கேள்வி நேரங்களீல் கேள்வி எழுப்புவதில் மூன்றாவதாகவும் மதிப்பிடப்ப்ட்டு தமிழ்நாட்டிற்கே ஒரு பெருமை சேர்த்துள்ளார்.

அதே போல் திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் திரு என்.எஸ்.வி. சித்தன் விதி எண் 377 கீழ் பிரச்சனைகளை எழுப்புவதில் மூன்றாவதாக வந்துள்ளார்.

மேற்கண்ட நான்கு வகைகளிலும் சிறந்து விளங்கிய (ஒவ்வொரு வகையிலும் 5 பேர்) 20 பேரில் காங்கிரஸ் 8 பேரும், சமாஜ்வாதி கட்சி, சி.பி.எம் தலா 3 பேரும், சிவசேனா, பி.ஜே.டி., ஆர்.ஜே.டி ஆகிய மூன்றும் தலா 2 பேரும் உள்ளனர். பி.ஜே.பி கட்சியும், மாயாவதியின் பி.எஸ்.பி கட்சியும் இந்த ஆட்டத்திற்கே வரவில்லை. அவையில் சத்தம் போடுவதிற்கே அவர்களுக்கு நேரமில்லை; எங்கிருந்து அவர்கள் அவையில் கேள்வி எழுப்பமுடியும்?

திரு கார்வேந்தனுக்கும் திரு சித்தனுக்கும் நம்முடைய பாராட்டுக்கள். திரு கார்வேந்தனை நான் தொலைபேசியில் எடுத்த பேட்டியை (ஆங்கிலம்) கிளிக் செய்து கேட்கவும். திரு சித்தனிடம் பேட்டி கேட்டுள்ளேன். அவரிடமிருந்து பேட்டி கிடைத்த உடன் , இந்த பகுதியில் வெளியிடுகிறேன். (இதை கேட்பதற்கு, பிராட்பேண்ட் தேவை. சரியாக ஒலி வ்ராவிட்டால், இதை டவுன் லோடு செய்து கேட்கவும்)



இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857366

டவுன் லோடு செய்ய, இந்த லிங்கை வலது கிளிக் செய்து, சேமியுங்கள்.

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...