கடந்த 14வது மக்கள் சபை நிறைவு நாளன்று, மதிப்பிற்குறிய சபாநாயகர் திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள், 14வது மக்கள் சபை நடந்த விதம் பற்றி மனம் வருந்தி பேசினார். பெரும்பாலான உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதில்லை என்றும், கூச்சல் குழப்பங்களில் 24 சதவிகித நேரம் வேஸ்ட் ஆகிவிட்டதாக குறிப்பிட்டார்.
பத்திரிக்கைகளில், பாராளுமன்றத்தில் சிறந்த அளவில் பணியாற்றிய உறுப்பினர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் அவையில் செய்த பணிகளை நான்கு வகையில் மதிப்பிடலாம்.
(1) கேள்வி நேரங்களில் கேள்வி கேட்பது, (2) பாரளுமன்ற அலுவல்களில் பங்கேற்று பேசுவது, (3) விதி எண் 377 கீழ் தொகுதி மற்றும் நாட்டு பிரச்சனைகளை எழுப்புவது மற்றும் (4) அவைக்கு கட் அடிக்காமல் தவறாமல் வருவது என்கிற நான்கு வகைகளில் உறுப்பினர்கள் மதிப்பிடப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பழனி தொகுதி உறுப்பினர் திரு கார்வேந்தன், மேற்குறிப்பிட்ட வகைகளில், விதி எண் 377 கீழ் பிரச்சனைகளை எழுப்புவதில் முதலாவதாகவும், கேள்வி நேரங்களீல் கேள்வி எழுப்புவதில் மூன்றாவதாகவும் மதிப்பிடப்ப்ட்டு தமிழ்நாட்டிற்கே ஒரு பெருமை சேர்த்துள்ளார்.
அதே போல் திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் திரு என்.எஸ்.வி. சித்தன் விதி எண் 377 கீழ் பிரச்சனைகளை எழுப்புவதில் மூன்றாவதாக வந்துள்ளார்.
மேற்கண்ட நான்கு வகைகளிலும் சிறந்து விளங்கிய (ஒவ்வொரு வகையிலும் 5 பேர்) 20 பேரில் காங்கிரஸ் 8 பேரும், சமாஜ்வாதி கட்சி, சி.பி.எம் தலா 3 பேரும், சிவசேனா, பி.ஜே.டி., ஆர்.ஜே.டி ஆகிய மூன்றும் தலா 2 பேரும் உள்ளனர். பி.ஜே.பி கட்சியும், மாயாவதியின் பி.எஸ்.பி கட்சியும் இந்த ஆட்டத்திற்கே வரவில்லை. அவையில் சத்தம் போடுவதிற்கே அவர்களுக்கு நேரமில்லை; எங்கிருந்து அவர்கள் அவையில் கேள்வி எழுப்பமுடியும்?
திரு கார்வேந்தனுக்கும் திரு சித்தனுக்கும் நம்முடைய பாராட்டுக்கள். திரு கார்வேந்தனை நான் தொலைபேசியில் எடுத்த பேட்டியை (ஆங்கிலம்) கிளிக் செய்து கேட்கவும். திரு சித்தனிடம் பேட்டி கேட்டுள்ளேன். அவரிடமிருந்து பேட்டி கிடைத்த உடன் , இந்த பகுதியில் வெளியிடுகிறேன். (இதை கேட்பதற்கு, பிராட்பேண்ட் தேவை. சரியாக ஒலி வ்ராவிட்டால், இதை டவுன் லோடு செய்து கேட்கவும்)
இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857366
டவுன் லோடு செய்ய, இந்த லிங்கை வலது கிளிக் செய்து, சேமியுங்கள்.
This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8
* இப்படியெல்லாம் கூட மதிப்பீடுகள் நமது ஜனநாயகத்தில் இருக்கின்றன என்பதே இப்போதுதான் தெரியுமெனக்கு... நான் நமது நாட்டில் "படித்த வர்க்கம்" என்கிற (அவர்களுக்கு உதவாத!) லிஸ்டில்தான் நமது அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்பு எடுக்கும் சர்வேயில் வருவேன்... இருப்பினும்கூட இது தெரியாமல் இருந்ததை நினைத்து கவலை கொள்கிறேன்...
பதிலளிநீக்கு* இதுவரை எனக்குத் தெரிந்து மக்களவையில் நம் எம்.பிக் களின் செயல்பாடுகளை முன்வைத்து யாரும் வோட்டுக் கேட்டதையும் நான் கவனித்ததில்லை..... ஒழுங்காக செயல்படாத எத்தனையோபேர் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்..... முக்கியத்துவம் தரப்பட வேண்டிய புள்ளி விவரம் இது...
மக்கள் இதையெல்லாம் உற்று நோக்குவார்கள் என்ற எண்ணம் இருந்தாலே மக்களவையின் மகத்தான நேரங்கள் வீணடிக்கப் படுவதன் வீரியத்தை உணர்வார்கள் அரசியல்வாதிகள்.....
அருமையான பதிவு... நுட்பமான பார்வை!! நன்றி....
இப்படியெல்லாம் கூட மதிப்பீடுகள் நமது ஜனநாயகத்தில் இருக்கின்றன என்பதே இப்போதுதான் தெரியுமெனக்கு... நான் நமது நாட்டில் "படித்த வர்க்கம்" என்கிற (அவர்களுக்கு உதவாத!) லிஸ்டில்தான் நமது அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்பு எடுக்கும் சர்வேயில் வருவேன்... இருப்பினும்கூட இது தெரியாமல் இருந்ததை நினைத்து கவலை கொள்கிறேன்...
பதிலளிநீக்குஇதுவரை எனக்குத் தெரிந்து மக்களவையில் நம் எம்.பிக் களின் செயல்பாடுகளை முன்வைத்து யாரும் வோட்டுக் கேட்டதையும் நான் கவனித்ததில்லை..... ஒழுங்காக செயல்படாத எத்தனையோபேர் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்..... முக்கியத்துவம் தரப்பட வேண்டிய புள்ளி விவரம் இது...
மக்கள் இதையெல்லாம் உற்று நோக்குவார்கள் என்ற எண்ணம் இருந்தாலே மக்களவையின் மகத்தான நேரங்கள் வீணடிக்கப் படுவதன் வீரியத்தை உணர்வார்கள் அரசியல்வாதிகள்.....
அருமையான பதிவு... நுட்பமான பார்வை!! நன்றி....
இருவர் நடவடிக்கையும் புதியவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்.
பதிலளிநீக்குதிரு கார்வேந்தன் மற்றும் சித்தனுக்கும் நம் வாழ்த்துக்கள்.
பேட்டியை பிறகு தான் கேட்கவேண்டும்.