நூற்றாண்டை நெருங்க இருக்கும், தமிழ் சினிமாவின் வளர்ச்சி அபரிமிதமானது. 1916ம் ஆண்டில், நடராஜ முதலியாரால் இயக்கி வெளியிடப்பட்ட ‘கீசகவதம்’ என்கிற ஆடியோ இல்லாத ஒரு மவுன படம்தான், தமிழ் சினிமாவின் முதல் படம் என்பது பலபேருக்கு தெரியாது.
அதற்கு பிறகு, ஒவ்வொரு காலகட்டத்திலும், இயக்குநர்கள், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றார்கள்.
1931ல் 50 பாடல்களுடன், எச். எம். ரெட்டி அவர்களின் இயக்கத்தில், மகாகவி காளிதாஸ் படம் முதல் பேசும் படமாக வெளியானது.
அதற்கு பிறகு, ஜெமினி வாசன், ஸ்ரீதர், எம்.ஜி.ஆர், பீம்சிங், ஏ.பி. நாகராஜன், கே. பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, மணிரத்னம் மற்றும் ஷங்கர் போன்ற இயக்குநர்கள், தமிழ் சினிமாவை அவர்களது பாணியில், அடுத்த நிலைக்கு அழைத்து சென்றார்கள்.
2000ம் ஆண்டுகளுக்கு பிறகு, புதிய தலைமுறை இயக்குநர்கள் பாலா, அமீர் மற்றும் செல்வராகவன் புதிய பாணிகளை உருவாக்கினர்.
இந்த வரிகையில், வருகிற பிப்ரவரியில் வெளிவர இருக்கும் கிருஷ்ண்வேணி பஞ்சாலை யின் இயக்குநர் இளைஞர் தனபால் பத்மனாபன் சினிமா தயாரிப்பில் கார்ப்போரேட் பாணியில், ஒரு professional த்தை, தமிழ் சினிமா உலகத்தில் முதன் முறையாக புகுத்தி ஒரு டிரெண்டை உருவாக்கியுள்ளார்.
தனபால் பத்மநாபன், தமிழ் சினிமாவில் முதன் முறையாக Casting Director என்கிற புதிய பதவியை, ஹாலிவுட் பாணியில் உருவாக்கி, நடிகர் அனைவருக்கும் ஒரு வாரம், படப்பிடிப்பு நடந்த இடத்திலேயே, ஒரு பயிலரங்கம் நடத்தினார்.
இது தவிர, அவர், 40 கல்லூரிகளிலிருந்து 103 எம்.பி.ஏ மாணவர்களை ஈடுபடுத்தி, சினிமா மார்க்கெட்டிங்கிலும் ஒரு புதுமையை உருவாக்கி யுள்ளார்.
இந்த படத்தின் ஆடியோவை, டைரக்டர் மகேந்திரன் வெளியிட, டாக்டர் அப்துல் கலாம் அய்யா அவர்கள் பெற்று கொண்டார்கள்.
வெற்றி குரல் இதழ் 25
முன் அனுபவம் இல்லாமல், முதன் முறையாக இயக்குநராக வந்து, பல புதுமைகளை அறிமுகப்படுத்தியுள்ள தனபால் பத்மநாபனுடன் நான் எடுத்த பேட்டியை கேட்கவும். இந்த பாட்காஸ்டில், தமிழ் சினிமாவின் திருப்புமுனை இயக்குநர்களைப் பற்றிய என்னுடைய விளக்கங்களையும் கேட்கலாம். ( 17 நிமிடங்கள்).
இந்த பேட்டியை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
உண்மையில் எதிர்பார்ப்போடு இருக்கிறேன்...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுபிடிப்பு)
The creation of 'Casting Director' is not new. In Gemini, as early as 1949, there was a position titled as ' casting assistant ' whose job is to fix suitable artistes for suitable roles. The person was Gemini Ganesan, who did his job well till he started acting in Gemini's films first and then on in Manam Pola Mangalyam , Missiamma, etc., R. Ramamurthy
பதிலளிநீக்குThanks Mr.Srinivasan for this podcast and good words on my project. Gemini SS.Vasan is a true visionary and the great legend in Indian Cinema. He has already established a bench mark in movie making process and marketing innovation. No one so for is even nearer to him in these aspects. He is a real role model for young film makers.
பதிலளிநீக்கு