This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

புதன், 25 டிசம்பர், 2013

தமிழக எம்.பிக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களவையில் என்ன செய்தார்கள்? முழு விவரங்கள்



15வது மக்களவை 

1950ல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட பிறகு, முதல் மக்களவைக்கான முதல் தேர்தல் அக்டோபர் 1951 முதல் பிப்ரவரி 1951 வரை நடந்தது.  அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் அமைக்கப்பட்டது தான் 'முதல் மக்களவை'.
கடந்த 2009  மே மாதம் நடந்த 15வது பொதுத் தேர்தல் மூலம் தற்போது நடந்து முடிந்த 15வது மக்களவை உருவாக்கப் பட்டது.   16வது  மக்களவை அமைக்க வருகிற 2014 மே மாதம் 16வது பொது தேர்தல் நடைபெற உள்ளது.

15வது மக்களவை  2009ம ஆண்டு ஜுன்  1ம தேதி அமைக்கப்ட்ட்டது.   ஜுன் 4ம தேதி முதல்  மக்களவை   அலுவல்கள்  துவங்கப்பட்டன.  பாராளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை கூடுகிறது.  பிப்ரவரி - மார்ச மாதங்களில் பட்ஜெட் தொடரும், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் மழைக்கால தொடரும், நவம்பர் - டிசம்பர் மாதங்களில் குளிர்கால தொடரும் நடைபெறும்.

நடந்து முடிந்த 15வது மக்களவை  15 தொடர்களை நடத்தியது. கடந்த 2013 டிசம்பர் 18ம தேதி முடிய 345 அமர்வுகளை நடத்தியுள்ளது.

பாராளுமன்ற   உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகள் 

பொதுவாக  மக்களுக்கு  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதே தெளிவாக தெரிவதில்லை. பள்ளிகள் கல்லூரிகளில்  தங்க்கள் குடும்பத்தினரை சேர்ப்பதற்கும், தங்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு மற்றும் இட மாற்றங்ககளுக்கும் மக்களவை உறுப்பினர்கள் உதவ வேண்டும் எனறு எதிர்பார்க்கிறார்கள்.  அது தவிர தெரு விளக்குகள், சுகாதாரம் போன்ற பிரச்சனைகளையும் மக்களவை உறுப்பினர்கள் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள்.  சுருக்கமாக கூறினால் மக்களவை உறுப்பினர்களை பஞ்சாயத்து தலைவர்களைப் போல் தான் கருதுகிறார்கள்.

சரியான விழிப்புணர்வு இல்லாததால், மக்களவை உருப்பினரகளது பணிகளை சரியாக மக்கள் மதிப்பீடு செய்வதில்லை.  நமது அரசியல் சட்டங்கள் பார்வையில், மக்களவை உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகள் தான் என்ன?

1.  பாராளுமன்றத்தில் விவாதங்களில் பங்கேற்று சட்டங்கள் இயற்றுவது.
2.  அரசின் பணிகளை கண்காணிப்பது.  குறைகளை பாரளுமன்றத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டுவருவது.
3. அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டை அலசி அரசுக்கு ஆலோசனைகளை பாராளுமன்றத்தில் அளிப்பது.
4.  வாக்காளர்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு பாராளுமன்றம் மூலமாக கொண்டு வந்து தீர்வு காண்பது.

பாராளுமன்றம் அளித்துள்ள வழிமுறைகள் 

1.  விவாதங்கள் (debates) மூலம் அரசுக்கு ஆலோசனகளை அளிக்கலாம்.  இதன் மூலம் மக்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு காணமுடியும்.

2.  தனியார் மசோதாக்கள் மூலம் (private members bills),  கட்சி கட்டுபாட்டு இல்லாமல், மக்களுக்கு தேவையான மசோதாக்களை அறிமுகப்படுத்தி விவாதத்தை உருவாக்கலாம். பல தனியார் மசோதாக்கள் அரசால் ஏற்கப்பட்டு அரசு மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேறியதும் உண்டு.

3.   தொகுதி, மாநில மற்றும் தேசிய பிரச்சனைகளை கேள்விகள் (Questions) மூலம் எழுப்பி அரசின் பார்வைக்கு கொண்டு வந்து தீர்வு காணலாம்.

4.  உறுப்பினர்கள் பாராளுமன்றம் கூடும் நாட்களில் தவறாமல் கலந்து கொண்டு பங்கேற்க வேண்டும்.  இதற்கு வருகை பதிவேடு (attendance) என்று பெயர்.

தமிழக எம்.பி க்களின் சாதனை என்ன?

15வது மக்களவையில் தமிழ் நாட்டு மக்களவை உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்கிற விவரம் மக்களவை அலுவலகம் அளித்த தகவலின் அடிப்படையில் PRS India என்கிற அமைப்பு வெளியிட்டு உள்ளது.  இந்த விவரம் 15வது மக்களவை துவங்கிய 2009 ஜுன் 4ம தேதி முதல் 2013 டிசம்பர் 18ம முடிய உறுப்பினர்கள் பங்கேற்ற விவாதங்கள், தனியார் மசோதாக்கள், கேள்விகள், வருகை பதிவேடு  அடிப்படையில் தயரிக்ப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி திரு ராமசுப்பு (திருநேல்வேலி) கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இருக்கிறார். இவர் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

கிருஷ்ணகிரி எம்.பி திரு சுகவனமும் (திமுக) தருமபுரி எம்.பி திரு தாமரை செல்வன் (திமுக) ஒட்டு மொத்த பங்கேற்பில் தமிழ் நாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள்.

அண்ணா திமுக எம்.பிக்கள் திரு சிவசாமியும் (திருப்பூர) மற்றும் திரு செம்மலையும் (சேலம்) நான்கு மற்றும் ஐந்து இட்டங்க்ளை பெறுகிறார்கள் .

அமைச்சர்களாக இருக்கும் உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்க முடியாது.  கேள்விகள் கேட்கமுடியாது.  அவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது.  அமைச்சர்களாக இருந்தவர்கள் பதவி விலகிய நாள் முதல், விவாதங்களில் ப்ங்கேற்றல் , கேள்விகள் கேட்பது போன்ற பணிகளில் ஈடுபடலாம். வருகை பதிவேடும் உண்டு.

சிறந்த பணியாற்றிய மக்களவை உறுப்பினர்களுக்கு தமிழ் நாடு மக்கள் சார்பாக பாராட்டுக்கள்.

அனைத்து எம்.பி க்களின் முழு விவரம் 
MP name Constituency Political party Age Debates Private Member Bills Questions  Total  Atten
 dance
S.S. Ramasubbu Tirunelveli INC 63 164 2 1020  1186 97%
E.G. Sugavanam Krisnagiri DMK 56 23 0 866 889 58%
R. Thamaraiselvan Dharmapuri DMK 50 109 3 697 809 80%
C. Sivasami Tiruppur AIADMK 56 57 0 659 716 74%
S. Semmalai Salem AIADMK 68 122 4 539 665 87%
P. Viswanathan Kancheepuram INC 49 38 0 626 664 87%
S. R. Jeyadurai Thoothukkudi DMK 44 12 0 643 655 58%
K. Sugumar Pollachi AIADMK 53 40 0 609 649 87%
P. Kumar Tiruchirappalli AIADMK 42 55 0 557 612 88%
S. Alagiri Cuddalore INC 61 25 0 561 586 68%
Abdul Rahman Vellore DMK 54 35 0 546 581 68%
N.S.V. Chitthan Dindigul INC 79 59 2 459 520 89%
Manicka Tagore Virudhunagar INC 38 38 0 447 485 88%
Munisamy Thambidurai Karur AIADMK 66 99 0 365 464 86%
P. Venugopal Tiruvallur AIADMK 61 30 0 432 462 89%
P.R. Natarajan Coimbatore CPIM 63 33 0 411 444 90%
C. Rajendran Chennai South AIADMK 53 47 0 390 437 74%
A.K.S. Vijayan Nagapattinam DMK 52 29 0 404 433 57%
A. Ganeshamurthi Erode MDMK 66 30 0 391 421 71%
J.M. Aaron Rashid Theni INC 63 60 0 361 421 67%
P. Lingam Tenkasi CPI 47 83 0 332 415 96%
K. Murugesan Anandan Viluppuram AIADMK 62 22 1 217 240 91%
Davidson J. Helen Kanniyakumari DMK 42 45 0 182 227 82%
M. Krishnaswamy Arani INC 73 22 0 196 218 90%
Adhi Sankar Kallakurichi DMK 56 11 0 178 189 57%
Sivakumar @ J.K. Ritheesh. K Ramanthapuram DMK 40 16 0 155 171 39%
Thalikkottai Rajuthevar Baalu Sriperumbudur DMK 72 35 0 108 143 83%
O. S. Manian Mayiladuthurai AIADMK 59 48 0 48 96 69%
T.K.S. Elangovan Chennai North DMK 59 55 0 15 70 93%
Thirumaa Valavan Thol Chidambaram VCK 51 35 0 23 58 50%
Danapal Venugopal Tiruvannamalai DMK 82 27 0 5 32 65%
Dayanidhi Maran Chennai Central DMK 47 1 0 0 1 63%
S. Gandhiselvan Namakkal DMK 50 1 0 0 1 70%
Andimuthu Raja Nilgiris DMK 50 0 0 0 0 36%
D. Napoleon Perambalur DMK 50 0 0 0 0 6%
M. K. Alagiri Madurai DMK 62 0 0 0 0 6%
S. Jagathrakshakan Arakkonam DMK 65 0 0 0 0 25%
S.S. Palanimanickam Thanjavur DMK 63 0 0 0 0 36%
Palaniappan Chidambaram Sivaganga INC 68


Source: PRS India www.prsindia.org

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...