15வது மக்களவை
1950ல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட பிறகு, முதல் மக்களவைக்கான முதல் தேர்தல் அக்டோபர் 1951 முதல் பிப்ரவரி 1951 வரை நடந்தது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் அமைக்கப்பட்டது தான் 'முதல் மக்களவை'.
கடந்த 2009 மே மாதம் நடந்த 15வது பொதுத் தேர்தல் மூலம் தற்போது நடந்து முடிந்த 15வது மக்களவை உருவாக்கப் பட்டது. 16வது மக்களவை அமைக்க வருகிற 2014 மே மாதம் 16வது பொது தேர்தல் நடைபெற உள்ளது.
15வது மக்களவை 2009ம ஆண்டு ஜுன் 1ம தேதி அமைக்கப்ட்ட்டது. ஜுன் 4ம தேதி முதல் மக்களவை அலுவல்கள் துவங்கப்பட்டன. பாராளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை கூடுகிறது. பிப்ரவரி - மார்ச மாதங்களில் பட்ஜெட் தொடரும், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் மழைக்கால தொடரும், நவம்பர் - டிசம்பர் மாதங்களில் குளிர்கால தொடரும் நடைபெறும்.
நடந்து முடிந்த 15வது மக்களவை 15 தொடர்களை நடத்தியது. கடந்த 2013 டிசம்பர் 18ம தேதி முடிய 345 அமர்வுகளை நடத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகள்
பொதுவாக மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதே தெளிவாக தெரிவதில்லை. பள்ளிகள் கல்லூரிகளில் தங்க்கள் குடும்பத்தினரை சேர்ப்பதற்கும், தங்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு மற்றும் இட மாற்றங்ககளுக்கும் மக்களவை உறுப்பினர்கள் உதவ வேண்டும் எனறு எதிர்பார்க்கிறார்கள். அது தவிர தெரு விளக்குகள், சுகாதாரம் போன்ற பிரச்சனைகளையும் மக்களவை உறுப்பினர்கள் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள். சுருக்கமாக கூறினால் மக்களவை உறுப்பினர்களை பஞ்சாயத்து தலைவர்களைப் போல் தான் கருதுகிறார்கள்.
சரியான விழிப்புணர்வு இல்லாததால், மக்களவை உருப்பினரகளது பணிகளை சரியாக மக்கள் மதிப்பீடு செய்வதில்லை. நமது அரசியல் சட்டங்கள் பார்வையில், மக்களவை உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகள் தான் என்ன?
1. பாராளுமன்றத்தில் விவாதங்களில் பங்கேற்று சட்டங்கள் இயற்றுவது.
2. அரசின் பணிகளை கண்காணிப்பது. குறைகளை பாரளுமன்றத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டுவருவது.
3. அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டை அலசி அரசுக்கு ஆலோசனைகளை பாராளுமன்றத்தில் அளிப்பது.
4. வாக்காளர்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு பாராளுமன்றம் மூலமாக கொண்டு வந்து தீர்வு காண்பது.
பாராளுமன்றம் அளித்துள்ள வழிமுறைகள்
1. விவாதங்கள் (debates) மூலம் அரசுக்கு ஆலோசனகளை அளிக்கலாம். இதன் மூலம் மக்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு காணமுடியும்.
2. தனியார் மசோதாக்கள் மூலம் (private members bills), கட்சி கட்டுபாட்டு இல்லாமல், மக்களுக்கு தேவையான மசோதாக்களை அறிமுகப்படுத்தி விவாதத்தை உருவாக்கலாம். பல தனியார் மசோதாக்கள் அரசால் ஏற்கப்பட்டு அரசு மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேறியதும் உண்டு.
3. தொகுதி, மாநில மற்றும் தேசிய பிரச்சனைகளை கேள்விகள் (Questions) மூலம் எழுப்பி அரசின் பார்வைக்கு கொண்டு வந்து தீர்வு காணலாம்.
4. உறுப்பினர்கள் பாராளுமன்றம் கூடும் நாட்களில் தவறாமல் கலந்து கொண்டு பங்கேற்க வேண்டும். இதற்கு வருகை பதிவேடு (attendance) என்று பெயர்.
தமிழக எம்.பி க்களின் சாதனை என்ன?
15வது மக்களவையில் தமிழ் நாட்டு மக்களவை உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்கிற விவரம் மக்களவை அலுவலகம் அளித்த தகவலின் அடிப்படையில் PRS India என்கிற அமைப்பு வெளியிட்டு உள்ளது. இந்த விவரம் 15வது மக்களவை துவங்கிய 2009 ஜுன் 4ம தேதி முதல் 2013 டிசம்பர் 18ம முடிய உறுப்பினர்கள் பங்கேற்ற விவாதங்கள், தனியார் மசோதாக்கள், கேள்விகள், வருகை பதிவேடு அடிப்படையில் தயரிக்ப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி திரு ராமசுப்பு (திருநேல்வேலி) கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இருக்கிறார். இவர் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
கிருஷ்ணகிரி எம்.பி திரு சுகவனமும் (திமுக) தருமபுரி எம்.பி திரு தாமரை செல்வன் (திமுக) ஒட்டு மொத்த பங்கேற்பில் தமிழ் நாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள்.
அண்ணா திமுக எம்.பிக்கள் திரு சிவசாமியும் (திருப்பூர) மற்றும் திரு செம்மலையும் (சேலம்) நான்கு மற்றும் ஐந்து இட்டங்க்ளை பெறுகிறார்கள் .
அமைச்சர்களாக இருக்கும் உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்க முடியாது. கேள்விகள் கேட்கமுடியாது. அவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது. அமைச்சர்களாக இருந்தவர்கள் பதவி விலகிய நாள் முதல், விவாதங்களில் ப்ங்கேற்றல் , கேள்விகள் கேட்பது போன்ற பணிகளில் ஈடுபடலாம். வருகை பதிவேடும் உண்டு.
சிறந்த பணியாற்றிய மக்களவை உறுப்பினர்களுக்கு தமிழ் நாடு மக்கள் சார்பாக பாராட்டுக்கள்.
அனைத்து எம்.பி க்களின் முழு விவரம்
MP name | Constituency | Political party | Age | Debates | Private Member Bills | Questions | Total | Atten dance |
S.S. Ramasubbu | Tirunelveli | INC | 63 | 164 | 2 | 1020 | 1186 | 97% |
E.G. Sugavanam | Krisnagiri | DMK | 56 | 23 | 0 | 866 | 889 | 58% |
R. Thamaraiselvan | Dharmapuri | DMK | 50 | 109 | 3 | 697 | 809 | 80% |
C. Sivasami | Tiruppur | AIADMK | 56 | 57 | 0 | 659 | 716 | 74% |
S. Semmalai | Salem | AIADMK | 68 | 122 | 4 | 539 | 665 | 87% |
P. Viswanathan | Kancheepuram | INC | 49 | 38 | 0 | 626 | 664 | 87% |
S. R. Jeyadurai | Thoothukkudi | DMK | 44 | 12 | 0 | 643 | 655 | 58% |
K. Sugumar | Pollachi | AIADMK | 53 | 40 | 0 | 609 | 649 | 87% |
P. Kumar | Tiruchirappalli | AIADMK | 42 | 55 | 0 | 557 | 612 | 88% |
S. Alagiri | Cuddalore | INC | 61 | 25 | 0 | 561 | 586 | 68% |
Abdul Rahman | Vellore | DMK | 54 | 35 | 0 | 546 | 581 | 68% |
N.S.V. Chitthan | Dindigul | INC | 79 | 59 | 2 | 459 | 520 | 89% |
Manicka Tagore | Virudhunagar | INC | 38 | 38 | 0 | 447 | 485 | 88% |
Munisamy Thambidurai | Karur | AIADMK | 66 | 99 | 0 | 365 | 464 | 86% |
P. Venugopal | Tiruvallur | AIADMK | 61 | 30 | 0 | 432 | 462 | 89% |
P.R. Natarajan | Coimbatore | CPIM | 63 | 33 | 0 | 411 | 444 | 90% |
C. Rajendran | Chennai South | AIADMK | 53 | 47 | 0 | 390 | 437 | 74% |
A.K.S. Vijayan | Nagapattinam | DMK | 52 | 29 | 0 | 404 | 433 | 57% |
A. Ganeshamurthi | Erode | MDMK | 66 | 30 | 0 | 391 | 421 | 71% |
J.M. Aaron Rashid | Theni | INC | 63 | 60 | 0 | 361 | 421 | 67% |
P. Lingam | Tenkasi | CPI | 47 | 83 | 0 | 332 | 415 | 96% |
K. Murugesan Anandan | Viluppuram | AIADMK | 62 | 22 | 1 | 217 | 240 | 91% |
Davidson J. Helen | Kanniyakumari | DMK | 42 | 45 | 0 | 182 | 227 | 82% |
M. Krishnaswamy | Arani | INC | 73 | 22 | 0 | 196 | 218 | 90% |
Adhi Sankar | Kallakurichi | DMK | 56 | 11 | 0 | 178 | 189 | 57% |
Sivakumar @ J.K. Ritheesh. K | Ramanthapuram | DMK | 40 | 16 | 0 | 155 | 171 | 39% |
Thalikkottai Rajuthevar Baalu | Sriperumbudur | DMK | 72 | 35 | 0 | 108 | 143 | 83% |
O. S. Manian | Mayiladuthurai | AIADMK | 59 | 48 | 0 | 48 | 96 | 69% |
T.K.S. Elangovan | Chennai North | DMK | 59 | 55 | 0 | 15 | 70 | 93% |
Thirumaa Valavan Thol | Chidambaram | VCK | 51 | 35 | 0 | 23 | 58 | 50% |
Danapal Venugopal | Tiruvannamalai | DMK | 82 | 27 | 0 | 5 | 32 | 65% |
Dayanidhi Maran | Chennai Central | DMK | 47 | 1 | 0 | 0 | 1 | 63% |
S. Gandhiselvan | Namakkal | DMK | 50 | 1 | 0 | 0 | 1 | 70% |
Andimuthu Raja | Nilgiris | DMK | 50 | 0 | 0 | 0 | 0 | 36% |
D. Napoleon | Perambalur | DMK | 50 | 0 | 0 | 0 | 0 | 6% |
M. K. Alagiri | Madurai | DMK | 62 | 0 | 0 | 0 | 0 | 6% |
S. Jagathrakshakan | Arakkonam | DMK | 65 | 0 | 0 | 0 | 0 | 25% |
S.S. Palanimanickam | Thanjavur | DMK | 63 | 0 | 0 | 0 | 0 | 36% |
Palaniappan Chidambaram | Sivaganga | INC | 68 |
Source: PRS India www.prsindia.org
Very great post. I simply stumbled upon your blog and wanted to say that I have really enjoyed browsing your weblog posts. After all I’ll be subscribing on your feed and I am hoping you write again very soon!
பதிலளிநீக்கு