This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வியாழன், 3 ஏப்ரல், 2008

ஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்!

ஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்

வெற்றி ஒலி - இதழ் 1

மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலிருந்து சென்னை வந்து குடியேறிய, மராத்திய மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் ஜெயஸ்ரீயிடம் பத்து நிமிடம் பேசிப்பாருங்கள். ஆங்கிலம் கலப்பில்லாத அழகு தமிழில் பாரதியாரையும், திருவள்ளுவரையும் நிமிடத்திற்கு ஒருமுறை மேற்கோள் காட்டி ஆரவாரம் இல்லாமல் அசத்துகிறார்.


சென்னையில் பொறியியல் பட்டம் பெற்று, தற்போது பெங்களூரில், சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் இந்த இளம் நங்கை, தமிழ் மொழி மீது அளவில்லா காதல் கொண்டு, பள்ளியில் இரண்டாம் பாடமாக தமிழை எடுத்து படித்தார். திருவல்லிக்கேணியில் இருந்ததாலோ என்னவோ, முண்டாசு கவிஞன் பாரதிமீது பற்று கொண்டு, பாரதி கண்ட ஒரு புதுமை பெண்ணாக வலம் வருகிறார். பாரதி பாடல் அனைத்தும் இவருக்கு மனப்பாடம்.


அவர் படித்த பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் துவக்கி, மானவர்களிடையே தமிழ் ஆர்வத்தை தூண்டினார். 'தமிழ் தமிழ்' என்று நொடிக்கொருமுறை ஆரவாரம் செய்யும் அரசியல் வாதிகளும், அரசும், அண்ணா பல்கலைகழகமும், பொறியியல் கல்லூரிகளில் ஏன் இது போன்று 'தமிழ் மன்றங்களை' துவக்கி, இளஞர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்கவில்லையே என்று இந்த மராத்திய பெண் ஆதங்கப்படுகிறார்.


'Multi faceted personality' என்று கூறுவார்கள். தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறந்த பேச்சாளரான ஜெயஸ்ரீக்கு, தமிழக முதல்வர்கள் திரு கருணாநிதியும், செல்வி ஜெயலலிதாவும் பாராட்டி கவுரத்திருக்கிறார்கள்.


ஜெயா டிவி, விஜய் டிவி, தூர்தர்ஷன் ஆகிய டி.வி.களில் சுமார் 200 நிகழ்ச்சிகளுக்கு மேல் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ஒரு சிறந்த டன்ஸர் கூட. டாகுமெண்டரி படங்களில் நடித்தும் உள்ளார். தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்புகளையும் உதறித் தள்ளிவிட்டு, சாஃப்ட்வேர் தொழிலுக்கு சென்று விட்டார்.


டாகடர் கலாமின் அறிவுரைப்படி, சமூக சேவைகளில் அதிக அளவில் பெங்களூரில் ஈடுபட்டு வருகிறார். கட்டிட தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபடுகிறார். வசதியற்ற மக்களின் கல்விப்பணிக்காக பாடுபடுவதே தன்னுடைய வாழ்க்கை இலட்சியமாக கொண்டுள்ளார்.

அவர் அண்மையில் 'இந்தியா விஷன் 2020' பற்றிய ஒரு கூட்டத்திற்கு வந்திருந்தபோது, இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நொடியில் அனைவரையும் தன்னுடைய பேச்சால், கவரக்கூடிய தலைமை பண்புகள் கண்டு வியந்தேன். பாரதி கண்ட ஒரு புதுமை பெண் இவர் தானோ!
வருங்கால இந்தியாவிற்கு ஒரு பெண் தலைவர் உருவாகி வருவதாக எனக்கு தோன்றிய்து. சாதிக்கத்துடிக்கும் இவரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கலாமே என்கிற எண்ணத்தில், உடனே அவரிடம் ஒரு பேட்டி எடுத்தேன். கிளிக் செய்து இந்த பேட்டியை கேட்டு மகிழலாமே! ( 14 நிமிடங்கள்) உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்களேன்.
Video thumbnail. Click to play
Click to play
இந்த ஒலி இதழை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்

7 கருத்துகள்:

 1. hi iam sudha from us. excellent interview given by miss jayasree. not only that she is very good person also. iam very proud of my sister. and iam very happy that she is having a very good interest in tamil though it not our mother tounge. now a days tamil language is dieing but through the students like this it is still holding its breath. very good interview by jayasree all the best and let the god bless here with all sucess in life

  பதிலளிநீக்கு
 2. செவ்விக்கு நன்றி. மனம் மகிழ்வடைகிறது.

  ஒரு கருத்து: செவ்விகளில் பின்னணி இசை இல்லாமலிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  மீண்டும், நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு.

  வாழ்த்துகள்.

  எனது பிளாக்கில் நானும் இவ்வாறு செய்ய இயலுமா..??

  பதிலளிநீக்கு
 4. //எனது பிளாக்கில் நானும் இவ்வாறு செய்ய இயலுமா..??//

  வண்ணத்து பூச்சியாரே! தங்கள் கேள்வி எனக்கு விளங்கவில்லை. தங்கள் கேள்வியை விளக்க்மாக எனது இமெயிலுக்கு prpoint@gmail.com க்கு அனுப்பிவைத்தால், எனது கருத்துக்களை எழுதுகிறேன். தங்கள் வருகைக்கு நன்றி. சீனிவாசன்

  பதிலளிநீக்கு
 5. i know jayasree when she was in engineering student. she is great person.

  பதிலளிநீக்கு
 6. அற்புதம் அற்புதம் திரு சீனிவாசன். மிக அருமையான பதிவை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.ஜெயஸ்ரீ அவர்களின் பாரதி பற்றிய கருத்துகள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளன. புதுமைப்பெண்ணாகட்டும் இளைஞர்களைப்பற்றியாகட்டும் அவருடையகருத்துகள் நேர்மையாக வெளிவருகிறது. மராத்திய பெண் என்று எண்ணமுடியாமல் மிக தெளிவாக பேசும் ஜெயஸ்ரீ அவர்களுக்கு தமிழ் மேல் காதல் கொண்ட அனைவரும் பாராட்டுக்களை உரித்தாக்குவோம்.

  பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. ஆஹா! அற்புதம் அருமை....
  இது நான் பெற்ற பேறு...
  இவள் பாரதி கூறிய புதுமைப் பெண்ணே!
  இத்தனை ஆழ்ந்து பாரதியின் கவிக்கடலிலே
  மூழ்கி முத்தெடுத்த முத்துப் பெண்!
  உலகமகாகவி பாரதியின் கவிதைகளிலே
  பித்துக் கொண்டு சித்து பெற்ற செந்தமிழ் செல்வி இவள்...

  அம்மா! உனது கம்பீரக் குரலிலே ஒருச் சூரிய பிரகாசத்தைக் கண்டேன்... திருவல்லிக் கேணி மண்ணின் மகிமையோ, பாரதியின் சுவாசத்தை கருவிலே நீ பெற்றுவிட்டாயோ! என்ற எண்ணம் கூட மேலிடுகிறது!!!

  இந்த உலகமே அமரத்துவம் (கலியை வென்று கிருதயுகம் படைக்க வேண்டி) பெற வேண்டி.. அவதாரம் மேற்கொண்டும், அதன் செயல் முறையை, வேதாந்தத்தின் வழியே பாமரனுக்கும் கூறியும், அதன் வழியை இந்த உலகிற்கே இந்தியா அளிக்கும் என்று உறுதி படக் கூறிய; அந்த உலக மகாகவியின், இந்த யுக புருஷனின் அமரத்துவம் நிறைந்த கவிதையின் பால் இத்தனை காதலா? என்று வியக்க வைத்தும்; என் கண்களை ஆனந்தக் கண்ணீரில் நீந்தச் செய்தும்; என் ஹிருதயத்தையும் நெகிழ செய்த உனது, தமிழ் பற்று என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது...

  இதோ பாரதி கண்ட புதுமைப் பெண்... வேதம் புதுமை செய்ய வந்து விட்டால் என்று இமயத்தின் உச்சியில் ஏறி நின்றே சத்தமிட வேண்டும் எனத் தவிக்கிறது எனது மனம்.

  வாழ்த்துக்கள் சகோதிரி... வாழ்க, வளர்க தங்களது மானுடத் தொண்டு என்று வாழ்த்தியும்,

  இந்த நல்ல பதிவை தந்து என்போன்ற பாரதி பித்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய திருவாளர் கே.ஸ்ரீநிவாசன் அவர்களே தங்களுக்கும் எனது நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

  அன்புடன்
  ஆலாஸ்யம் கோ.
  சிங்கப்பூர்.

  பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...