This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

2019 மக்களவை தேர்தல் - யாருக்கு வாக்களிப்பது?


14 ஏப்ரல் 2019

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.   பல மாதங்களுகளுக்குப் பிறகு, இந்த புத்தாண்டு முதல், என்னுடைய கருத்துக்களை, மீண்டும் தமிழில் பகிரலாம் என்று விரும்புகிறேன். 

17வதுமக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்  தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.  பி.ஜே.பி தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், பிற மாநில் கட்சிகளும் மத்திய ஆட்சியை பிடிக்க களத்தில் உள்ளன.  இந்நிலையில் யாருக்கு வோட்டளிப்பது என்று பல ஆலோசனைகள் வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 

சிலர் நோட்டவிற்கு வாககளிக்குமாறு வற்புருத்துகின்றனர்.  சிலர் படித்தவர்களை விரும்புகின்றனர்.   வோட்டளிப்பது ஒருவரின் தனிப்பட உரிமை என்றாலும்,  அந்த உரிமையை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, உணர்ச்சிவயப்ப்டாமல், மக்களவை நடைமுறக்களை அறிந்து தெளிவுடன் வாக்களிப்பது அவசியம்.  அதற்கு முன் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்திய அரசியல் அமைப்ப்ச் சட்டத்தின் படி, மூன்று அமைப்புகள் மக்களால் நேரடியாக தேர்ந்தெருக்கப்படுகின்றன.

1.  பாராளுமன்றத்தின் மக்களவை
2.  மாநிலங்களில் சட்டமன்றம்
3.  உள்ளாட்சி அமைப்புக்கள். (பஞ்சாயத்துக்கள், நகரசபை, மாநகர மன்றம்)

ஒவ்வொன்றிலும் தேர்ந்த்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் பணிகள் வேறானவை.  மக்களவைக்கு தேர்ந்துக்கப்படும் உறுப்பினர்கள் (1) தேசிய அளவில் சட்டமியற்றுதல், (2) மத்திய் அரசின் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிப்பது, (3) மக்களவை மற்றும் நிலை குழுக்களின் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு மத்திய அரசின் நிர்வாகத்தை கண்கணிப்பது மற்றும் (4) தொகுதி மாநில மற்றும் தேசிய பிரச்சனைகளை மக்களவையின் கவனத்திற்கு கொண்டுவந்து தீர்வு காண்பது ஆகிய முக்கிய பணிகளை செய்ய வேண்டும்.  மத்திய அரசின் திட்டங்களை தொகுதிக்கும், மாநிலத்திற்கும் கொண்டு வருவதும், இதில் அடங்கும்.

மக்களவைக்கு தேர்ந்தெடுப்பவர்களிடமிருந்து, தெருக்களை சுத்தம் செய்வது, தெரு விளக்குகளை கண்காணிபது, போன்ற பணிகளை எதிர்பார்க்கக்கூடாது.  இந்த பணிகளெல்லாம் , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் செய்யவேண்டியவை.  கவுன்சிலர்கள் செய்ய வேண்டிய பணிகளை மக்களவை உறுப்பினர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால், சிறிய சிறிய பணிகளை மக்கள் எதிர்ப்பார்த்து சந்தோஷம் அடைவதால், சில மக்களவை உறுப்பினர்கள், தாங்கள்  செய்ய வேண்டிய பெரிய பணிகளை செய்யாமல் உள்ளூர் மக்களிடம் நல்ல பெயர் எடுத்து விடுகிறார்கள்.  பாராளுமன்ற பணிகளை செய்வதில்லை.

ஒரு கம்பெனியில், ஒருவரை ஜெனரல் மானேஜருக்கு பணியில் அமர்த்திவிட்டு, அவரிடம் சாதாரண வேலையை வாங்குவது போல் தான் இது. 

மக்களவையும் அரசியல் கட்சிகளும்

மக்களவை தேர்தல் முடிந்தவுடன் மத்திய அரசு அமைக்கப்படும். அரசியல் அமைப்பு சட்டப்படி, எவர் ஒருவர் மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களது நம்பிக்கையை பெறுவார் என்று குடியரசு தலைவ்ர் கருதுகிறாரோ அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.   இந்திய அரசியல் அமைப்பு சட்டம், அரசியல் கட்சிகள் பற்றி குறிப்பிடாவிட்டாலும், நடைமுறையில், பெரும்பானமை கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசு தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார்.  அவர்தான் பிரதமராக பதவி எற்பார்.

தறிபோதைய நிலவர்ப்படி, 543 உறுப்பினர் கொண்ட மக்களவையில், 272 உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற்ற ஒருவர் தான் பிரதமராக வரமுடிய்ம்.  எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கோ மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், மத்திய அரசில் குழப்ப நிலை உருவாகி பல பொருளாதார மற்றும் நிரவாக பாதிப்ப்க்கள் ஏற்படும்.   இதற்கு பல முன் உதாரணங்கள் உண்டு.

முந்தைய அரசுகள்

1.  1989ல் 9 வது மக்களவையில், மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி அமைத்த வி.பி.சிங் ஆட்சி 11மாதங்கள் நீடித்தது.  பிறகு ஆட்சி அமைத்த சந்திரசேகர் ஆட்சி 6 மாதங்க்ளில் கவிழ்ந்தது.  இந்தியா பொருளாதாரம் பெறுமளவில் பாதிக்கப்ப்ட்டது.  வெளிநாட்டில் கடன் வாங்குவதற்கு, அரசு தங்கத்தை அடகு வைக்க வேண்டியதாகிற்று.

2. 1991ல் 10வது மக்களவையில், நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ், மெஜரிட்டி கொஞ்சம் குறைவாக இருந்தாலும், ஐந்தாண்டு காலம் நிலையான ஆட்சி அளித்தது.  அவரது ஆட்சியில் தான பல பொருளாதார மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 

3.  1996ல் 11வது மக்களவையில், எந்த கட்சியும் பெறும்பானமை பெறாத நிலையில், அதிக இடங்க்ளைப்பெற்ற வாஜ்பாயி பிரதமாராக பதவி ஏற்றார்.  13 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.  பிறகு தேவகவுடாவும் குஜ்ராலும் அடுத்தடுத்து  பிரதமராக பதவி ஏற்றார்கள்.  18 மாதங்கள் நீடித்த இந்த மக்களவை, நிலையான ஆட்சி கொடுக்க முடியவில்லை.  அதிக அளவில் பொருளாதாரம் பாதிக்ப்பட்டது. சிறிய கட்சிகள், மாநில தலைவர்களின் பதவி பேராசையால், நாடு பெரும் இழப்பை சந்தித்தது. அரசியல் குழப்ப நிலை நீடித்தது.

4. 1998ல் நடந்த தேர்தலில் அமைக்கப்பட்ட 12வது மக்களவையிலும் எந்த கட்சியும் பெறும்பானமை பெறவில்லை.  182 இடங்களைப் பெற்ற வஜ்பாயி தலைமையிலான பி.ஜே.பி சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.  அதுவும் 13 மாதங்களில் ஆட்சியை ஒரு வோட்டில் இழந்தது. 

5. 1999ல் நடந்த 13வது மக்களவை  தேர்தலில், பி.ஜே.பி. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 270 இடங்களைப் பெற்று, ஐந்து ஆண்டு காலம் வாஜ்பாயி தலைமையில் நிலையான ஆட்சி அமைந்தது.  இந்த கால கட்டத்தில், இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்றது. 

6.  2004ல் நடைபெற்ற 14வது மக்களவை தேர்தலில், காங்கிரஸ் 141 இடங்களும், பி.ஜே.பி. 130 இடங்களும் பெற்றன.  பிற மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மன்மோகன் சிங் தலைமையில் யு.பி. ஏ. அரசு அமைந்தது.  ஐந்து ஆண்டுகாலம் இந்த ஆட்சி நீடித்தாலும், கூட்டணி கட்சிகளின் அழுத்ததால்,  பல ஊழல்கள் நடைபெற்றன. 

7.  2009 மர்றும் 2014 ம் ஆண்டில் நடைபெற்ற 15வது மற்றும் 16வது மக்களவை தேர்தல்களில், காங்கிரஸ் கூட்டணியும், பி.ஜே.பி. கூட்டணியும் நிலையான ஆட்சிகளை அளித்தன.  பொருளாதார வளர்ச்சியும் அடைந்தது.

எப்பொழுதெல்லாம் எந்த கட்சி அல்லது கூட்டணிக்கு மெஜரிட்டி இல்லாமல் ’தொங்கு பாராளுமன்றம்’ உருவாகிறதோ,  அப்பொழுதெல்லாம், அரசியல் குழப்ப நிலை உருவாகி, பொருளாதாரம் பாதிகப்படுகிறது. 

நான் ஒவ்வொரு வாக்காளரையும் பணிவுடன் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான்.

1.    தற்போது பாரத நாட்டை ஆளக்கூடிய திறமை உள்ள கட்சிகள் பி.ஜே.பியும், காங்கிரசும் தான்.  அவர்கள் தலைமையில் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். எந்த அணி நிலையான ஆட்சி தர முடியும், பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும், நாட்டை பாதுகாக்க முடியும், அவர்களது தலைவர்களின் திறமை போன்றவற்றை உணர்ச்சி வயப்படாமல், நடுநிலையாக ஆழ்ந்து சிந்தியுங்கள்.  உங்கள் கருத்தில் எந்த அணி நிலையான, நேர்மையான ஆட்சி தரமுடியும் என்று நினக்கிறிகளோ, அவர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

2.  அனைத்து கட்சிகளும் / கூட்டணிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுவிட்டன.  சிறிய கட்சிகள் கூறும் எந்த உறுதிகளையும் செயல்படுத்தமுடியாது. மக்களவை தேர்தலில் அவை வெறும் காகிதங்களே.  சிறிய கட்சிகள் சட்ட மன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வெளியிடும் அறிக்கைகள் முக்கியமானவை.  மக்களவை தேர்தலைப் பொறுத்தவரை,  பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் முக்கியமானவை.  அவைகளை நன்கு படிக்கவும்.

3.  வாக்களிப்பத்ற்கு எவரும் பணமோ, பொருளோ கொடுத்தால் அதை நிராகரியுங்கள்.  உங்கள் வாக்கு புனிதமானது. விற்பனைக்கு அல்ல.  வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட.

4.  கூட்டணியில் இல்லாத சிறிய கட்சிகள், சுயேச்சைகள் அதிக அளவில் மக்களவையில் தேர்ந்தெடுக்க்ப்பட்டு, ஒரு கட்சியோ, அணியோ, மெஜாரிட்டி பெற வில்லை என்றால், குதிரை பேரங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.  அவர்கள் கேட்கும் விலையை அரசு கொடுக்க வேண்டியிருக்கும்.  சிறிய கட்சிகளும், சுயேச்சைகளும், சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று பல சாதனைகள் செய்ய முடியும்.  ஆனால் மக்களவையில் செய்ய முடியாது.

5.  பலர் ‘நோட்டா’விற்கு வோட்டு போடும்படு பரச்சாரம் செய்கிறார்கள்.  இது மிகவும் ஆபத்தானது.  நோட்டாவிற்கு ஓட்டு போடுவது ஒரு செல்லாத ஓட்டுக்கு சமம்.  தற்போதைய விதிகளின் படி, 99 சதவிகிதம் நோட்டா வோட்டுக்கள் பதிவாகியிருந்தாலும், மீதி 1 சதவிகித ஓட்டில் யார் அதிக ஓட்டு பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். 

ஆகவே, அனைவரும் நிதானமாக உணர்ச்சிவயப்படாமல் நன்கு சிந்தித்து நிலையான ஆட்சியைத்தரும் ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

வாழ்க பாரதம்.

பிரைம் பாயிண்ட் சீனிவாசன், சென்னை

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...