கட்ந்த ஏப்ரல் 13ம் தேதி (2011) தமிழக பேரவை தேர்தல் அமைதியாக 234 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்தது. . தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால், வாக்காளரகளுக்கு பணம் கொடுப்பது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. தேர்தல் தினத்தன்று, பூத் ஸிலிப்களையும் தேர்தல் ஆணையமே வழங்கியது, கள்ள் ஒட்டுகளை தவிர்த்தது. பாதுகாப்புகளை அதிகரித்ததால், வாக்காளர்கள் பெருமளவில் வந்து அச்சமின்றி வாக்களித்தார்கள். பல மாவட்டங்களில், 80 சதவிகிதத்ற்கு மேல், வாக்கு பதிவு ஆகியது. வழக்கமாக தேர்தல் நாளன்று ஓய்வு எடுக்கும் நடுத்தர வகுப்பு இளைஞர்களும் முதியவர்களும் கூட ஆர்வமுடன் காலை 7.30 மணிக்கே வந்து ஒரு மணீ நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று வாக்களித்தது ஒரு மவுன் புரட்சியா என்பது மே 13ம் தேதி தான் தெரியவரும்.
இந்த தேர்தலின் முதல் வெற்றி, தேர்தல் ஆணைத்திற்கும், அதில் பணிபுரிந்த பல ஆயிரக்கணக்கான அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தான்.
யாருக்கு வெற்றி? |
தமிழ்நாட்டில் 78 சதவிகித வாக்கு பதிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில், இந்த அளவு வாக்குபதிவு ஆனது இதுதான் முதல் முறை. 1967ல், 76 சதவிகித வாக்குபதிவு ஆனதுதான், இதுவரை ரிகார்டாக இருந்தது. அந்த தேர்தல், காங்கிரஸை வீழ்த்தி, திமுக முதலில் ஆட்சி அமைக்க உதவியது. இந்த 78 சதவிகித வாக்கு பதிவால் யாருக்கு லாபம்? கருணாநிதிக்கா அல்லது ஜெயலலிதாவுக்கா? நானும் தமிழ்நாட்டின் கடைசி கோடி வரை பல தரப்பினருடன் தொடர்பு கொண்டு பேசினேன். பொதுமக்கள், திமுக, அதிமுக அணிக்காக உழைத்த அரசியல் தொண்டர்கள், நடு மட்ட தலைவர்கள் போன்ற பலருடனும் பேசினேன். ஊடகங்களில் வந்த செய்திகளையும் வைத்து பார்த்தால், நான்கு வகையான முடிவுகளைத்தான் தெரிவிக்கிறார்கள். ஆட்சி அமைக்க 118 சீட்கள் தேவை.
1. திமுக அணி மெஜாரிட்டி பெறும் (118க்கு மேல்). திமுக ஆட்சி அமைக்கும்.2. திமுக சுமார் 80 சீட்கள் பெறும். அதிமுகவும் அதே அளவு சுமார் 80 பெறும். அதிமுக தவிர மற்ற கட்சிகளை அணைத்து, திமுகவே ஆட்சி அமைக்கும். அதிமுக அணியிலுள்ள மற்ற கட்சிகள் திமுகவிற்கு தாவும்.3. அதிமுக 80 முதல் 90 சீட்கள் பெறும். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, அதிமுக ஆட்சி அமைக்கும்.4. அதிமுக தனிப்பட்ட முழு மெஜாரிட்டி பெறும். அத்துடன், அதிமுக அணி 160 முதல் 180 இடங்களை கைப்பற்றும். அதிமுக ஆட்சி அமைக்கும்.
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளையும் மீறி, சுமார் 3000 கோடி முதல் 5000 கோடி வரை திமுக செலவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. முதல்வர் நிற்கும் தொகுதியான திருவாரூரிலும், ஸ்டாலின் நிற்கும் குளத்தூரிலும் அதிக பணம் செலவு செய்திருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.
அதிக அளவு பணம் பட்டுவாடா செய்ததாலும், திமுக இலவசங்க்ளை முன்பு கொடுத்திருப்பதாலும், ஆட்சி அமைத்தால், கிரைண்டர் மிக்ஸி லேப்டாப் போன்றவைகளை இலவசமாக கொடுக்க திமுக வாக்குறுதி கொடுத்திருப்பதாலும், திமுக அணியினர் தாஙகள் தான் ஆட்சி அமைப்போம் என்று உறுதியாக கூறுகிறார்கள். (மேலே பாயிண்ட் 1 மற்றும் 2).லஞ்சம் ஊழல், 2ஜி போன்றவை கிராம மக்களிடம் எடுபடவில்லை என்றும் திமுகவினர் கூறுகின்றனர். இருந்தாலும், பல திமுக தலைவர்களிடையே, கலக்கமும் உள்ளது.
தாங்கள்தான் ஆட்சி அமைக்க இருப்பதாக திமுக பலமாக முழங்கி வருவதால், அதிமுகவினரும், ‘உண்மையாக இருக்குமோ’ என்று குழப்பத்தில் உள்ளனர். அதே சமயம் பல இடங்களில், திமுக பணத்தை சரியாக பட்டுவாட செய்யவில்லை என்றும், இடையிலேயே அமுக்கி விட்டார்கள் என்றும் திமுக வட்டாரங்களில் விஜாரித்ததில் தெரிகிறது. சுமார் 200 முதல் 500 வரை பல இடங்களீல் கொடுக்க்பட்டதாகவும் தெரிகிறது. அப்படியே பணம் வாங்கியவர்கள், திமுகவின் அடிப்படை வாக்காளர் தவிர மற்றவர்கள், திமுகவிற்கே வாக்களித்திருப்பார்களா என்றும் தெரியவில்லை. பலர், மனசாட்சிபடி வாக்களித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
வக்களிக்க பணம் வழங்கியதையே காரணம் காட்டி, அதற்குள்ள அத்தாட்சிகளூடன், தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்து, திமுக வின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் சில அமைப்புக்கள் தயாராகி வருகின்றன என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நான் சென்னையிலிருந்து, கன்னியாகுமரி வரை கிரமங்கள் முதல் நகரங்கள் வரை பல தர்ப்பினருடனும் பேசினேன். தமிழ்நாடு முழுவதும், காலை 7.30 மணிமுதல், மக்கள் ஆர்வமுடன் வோட்டு பதிவுக்கு வரிசையில் நின்று இருந்தனர். Under Current என்ப்படும் , மக்களிடையே ஒரு அலை இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, திமுகவின் குடும்ப அரசியல், ஊழலில் கருணாநிதியன் குடும்ப பங்கு ஆகியவை மக்கள் மனதில் அதிகம் பாதித்திருப்பதாக தெரிகிறது. பணம் கொடுத்தும், இலவசங்களை உறுதிமொழி கொடுத்தும், மக்களின் அடிப்படை தேவைகளை மறந்து விடச்செயவது ஒரு கடினமான ஒன்று. பணம் பெற்றவர்களும், திமுகவினர் கொள்ளை அடித்ததை தானே கொடுத்தார்கள் என்ற மனப்பங்கிலும் இருந்திருப்பதாக தெரிகிறது. அதனால், அவர்கள், தங்கள் வாக்குகளை, மனசாட்சி படி பதிவு செய்திருக்கலாம். அந்த வாக்குகள், திமுகவிற்கு எதிரானதாகவே அமையும்.
நகர்ப்புறம் மற்றும் நடுத்த்ர மக்கள், இளைஞர்கள் மத்தியில் ஒரு கோப அலை இருப்பதும் தெளிவாக இருந்தது. அவர்களூம் மாற்றத்தை விரும்பி, திமுகவிற்கு எதிராகவே வாக்களித்திருப்பார்கள்.
78 சதவிகித வாக்கு பதிவு, மக்களின் கோப அலையா, அல்லது பணபட்டுவாடாவிற்கு வந்த அலையா என்று பார்த்தால், 80 சதவிகிதம் கோப அலையாக இருக்கத்தான் வாய்ப்பு உண்டு.
எனது நண்பரும், பிரப்ல பத்திரிகையாள்ருமான சுதாங்கள் அவர்கள் ஒரு வட இந்திய டிவி பேட்டியில், “திமுக வென்றால், குடும்பத்திற்கு லாபம்; திமுக தோற்றால், திமுகவிற்கு லாபம்” என்றார். அவரை தொடர்பு கொண்டு ஏன் இப்படி கூறினீர்கள் என்ற் கேட்டபோது, திமுக தோற்றால், அவர்கள் சுய பரிசோதனை செய்வதற்கு நேரம் கிடைக்கும். அது, திமுகவினை, குடும்ப அரசியலிருந்து விடுவித்து, மீண்டும் ஒரு புத்த்துணர்ச்சியுடன் எழுந்து வர ஒரு வாய்ப்பாக அமையும் என்று விளக்கினார்.
அனைத்து விவரங்களையும், கூட்டி, கழித்து பார்த்தால், எனது கணிப்பில், அதிமுக முழு மெஜாரிடி பெறும் என்றும், அதிமுக கூட்டணியினர் 160 முதல் 180 இடம் வரை கைப்பற்றுவார்கள் என்றும் எண்ணுகிறேன். திமுகவின் பல அமைச்சர்கள் தோல்வியுறவும் வாய்ப்பு உள்ளதாகவும் நினைக்கிறேன்.
“வோட்டு இயந்திரங்கள் அமைதியாக தூங்குகின்றன. ஆணால், எங்களூக்குத்தான் தூக்கம் இல்லை” என்று ஒரு அரசியல் நண்பர் கூறியதைத்தான் நினைவு கொள்கிறேன். இந்த கூற்று, அரசியல்வாதிகளூக்கு மட்டுமல்ல, வாக்களித்த நம் அனைவருக்குமே பொருந்தும்.
.
வருகிற மே 13ம் தேதிவரை பொறுத்துக்கொள்வோம்.