நடிகர் எஸ். வி சேகர், கடந்த 2006 தேர்தலில், அண்ணா திமுக சார்பில் சென்னை மயிலாப்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செல்வி ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், அண்ணா திமுகாவிலிருந்து நீக்கப்பட்டு, கட்சி சாரா எம். எல். ஏ ஆக பணியாற்றியவர்.
எஸ். வி சேகர், பிரபல நடிகராக இருந்தாலும், எளிமையானவராகவும், எந்நேரமும் எவராலும் மொபைல் போனில் தொடர்பு கொள்ளக்கூடியவராகவும் இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் (2011), காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நடிகர் எஸ். வி. சேகர் |
இந்த பின்னணியில், மயிலாப்பூர் தொகுதியில், நன்கு அறிமுகமான இவரையே வேட்பாளராக அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
காங்கிரஸ் மேலிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அவர்களின் மனைவியை வேட்பாளராக அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் தொண்டர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
தேர்தல் அதிகாரிகள் தங்கபாலுவின் மனைவியின் வேட்பு மனுவை நிராகரித்தனர். அந்த அம்மையார் வேட்பு மனுவில் கையெழுத்து இடவில்லை என்பது தான் காரணம். டம்மி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரே கட்சியில் அதிகாரபூர்வ வேட்பாளரானார். இருப்பினும், குறுக்கு வழியில் வேட்பாளரான தங்கபாலுவுக்கு காங்கிரஸ் தொண்டர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த சூழ்நிலையில், நான், கடந்த மார்ச் 31ம் தேதி, எஸ் வி சேகருடன் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேட்டி எடுத்தேன். தங்கபாலு விவகாரம், அவரை ஏன் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை, 2ஜி விவகாரம், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பு, நரேந்திர மோடி பற்றிய அவரது எண்ண்ங்கள், ஆகிய பல விஷயங்களை அவரது பாணியில் பரபரப்பாக பேட்டி அளித்தார். அவரது பேட்டியை (15 நிமிடங்கள்), கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் ‘பிளே’ பட்டனை சொடுக்கி கேட்கவும்.
இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக