மார்கழியில் எப்போதுமே சென்னையில் இசை மழைதான். ச்பாக்களில், பூங்காக்களில், டி.விக்களில், ரேடியோவில் மற்ற எல்லா இடங்களிலும் இசை கச்சேரிகள். பல இளங்கலைஞர்களுக்கு தங்கள் திறமையை காட்ட பல வாய்ப்புகள். இன்று கிருஸ்த்மஸ் தின விடுமுறையானதால் (25 டிசம்பர் 2008), ப்ல சென்னை ச்பாக்களில் சிறப்பு நிகழ்ச்சிகள்.
நுங்கம்பாக்கம் கல்சுரல் அகடமியில் செல்வி ஸ்ரீ சித்ராவின் ஒரு மணி நேர கச்சேரியை கேட்க ஒரு வாய்ப்பு வந்த்து. 15 வயதே ஆன ஒரு பள்ளி சிறுமி. அஷோக் நகரில் ஜவ்ஹர் மேல்நிலை பள்ளியில் பிளஸ் டூவில் முதலாம் ஆண்டு படிக்கிறார்.
இசை அறிவு இல்லாத என்னைப்போன்றவர்கள் கூட ரசிக்கக்கூடிய ஒரு குரல் வளம். சிறுமியாக இருந்தாலும், ஒரு சீனியர் பாடகருக்குள்ள தெளிவு.
கலைஞர் டி.வி மற்றும் இமயம் டிவிககளில் ஒரு தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். பரத நாட்டியமும் தெரியும். 10ம் வகுப்பு பொது தேர்வில் 95 மார்க் வாங்கி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். என்.சி.சியில் சார்ஜண்ட் வேறு. பள்ளியில் மாணவர் தலவர் வேறு. பள்ளியில் 'பெஸ்ட் ஆல் ரவுண்டர்' அவார்டு வாங்கியவர்.
சென்ற் ஆண்டு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியில், அரை இறுதி வரை வென்றவர். மூன்று வயது முதல், இசை பயின்று வரும் இவர், இதுவரை 57 மேடை கச்சேரிகள் செய்துள்ளார். பல சபாக்களிலிருந்து அழைப்புகள் வ்ந்தாலும், பள்ளி படிப்பு பாதிக்கப்படாமல், ஒரு சில கச்சேரிகளை மட்டும், விடுமுறைநாட்களில் ஏற்கிறார்.
இசை பயில்வதுதான் தன்னுடைய பல ஆல் ரவுண்டு வெற்றிகளுக்கு காரணம் என்கிறார் ஸ்ரீ சித்ரா. எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், தனக்கு பிடித்த 'சாந்தி நிலவ வேண்டும்' என்கிற பாட்டை பாடும்போது, உற்சாகம் பிறக்கிறது என்கிறார் அமைதியாக.
பிளஸ் டூ முடித்தபிறகு, அப்துல் க்லாம் போல் 'ஏரொநாடிக்' இன்ஜினீயரிங் படிக்கவேண்டும் என்று ஆசை. அத்துடன் இந்துஸ்தானி இசையும் கற்று சிற்ந்த பாடகியாக வெண்டும் என்று ஆர்வமுடன் இருக்கிறார். (அப்துல் கலாம் அவ்ர்களும் இசையில் சிறந்த் விற்பன்னர்).
திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் வந்தாலும், பள்ளி படிப்பு இருப்பதால, பிளஸ் டூ முடித்தபிறகுதான் அதைப்பற்றி சிந்திக்க முடியும் என்கிறார். இந்திய திரை உலகிற்கு, ஒரு சிறந்த பாடகி உருவாகி வருகிறார் என்ற நிறைவுடன், சபாவை விட்டு வெளியே வந்தேன்.
இந்த ஆல்ரவுண்டர் ஸ்ரீ சித்ராவின் வெற்றிக்கு ஊக்கமளித்து வரும் அவரது பெற்றோர்கள் விஜயகுமாருக்கும் , சிந்துவுக்கும் பாராட்டுக்கள்.