வெற்றிகுரல் இதழ் 16
போக்குவரத்து துறையில் ஆர்.டி.ஓ ( Regional Transport officer) ஆபீஸ் என்றாலே,பொதுவாக மக்களுக்கு ஞாபகம் வருவது லஞ்சம், அலட்சியம்,தரகர்கள் மற்றும் தாமதம் தான். அண்மையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் பல ஆர்.டி.ஓ ஆபீஸ்களில் அதிகாரிகள் மேஜையிலிருந்து கட்டு கட்டாக பணத்தை கைப்ப்ற்றியதெல்லாம் பத்திரிகைகளீல் வந்தன. ஒரு எல்.எல்.ஆர் வாங்கவேண்டுமென்றால் கூட லஞ்சம் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு மனநிலை. இது ஒரு புறமிருக்க படித்த மக்களே, தங்கள் சுய நலத்திற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சுலபமாக சாதித்துகொண்டு, அரசு அதிகாரிகளின் மீது லஞ்ச பழி சுமத்துவ்தாகவும் ஒரு வாதம் உண்டு.
எனது டிரைவிங் லைசென்ஸை புதுப்பிப்பதற்கும் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு 15 ஆண்டுகளூக்கு பிறகு ஃபிட்னஸ் சர்டிபிகேட் வாங்கவும் இன்று சென்னை கே.கே. நகரிலுள்ள ஆர்.டி.ஓ ஆபீசிற்கு போகவேண்டியிருந்தது. எந்த இடை தரகர்களும் இல்லாமல், லஞ்சம் கொடுக்காமல் எனது காரியம் நடக்குமா என்பதை சோதனை செய்வதற்காக, நானே நேரில் சென்றேன்.
சென்னை கே.கே. நகர் ஆர்.டி. ஓ ஆபீஸ் ஐ.எஸ். ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. நான் அங்கே போனவுடன் ஆச்சரியப்பட்டேன். எப்போதுமே, அரசு அலுவலகத்தை அசுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று தங்கள் பாரம்பரியத்தை கட்டி காக்கும், அரசு ஊழியர்களிடையே ஒரு மாற்றம். ஒரு ஐ.டி. கம்பெனிக்குள் நுழைந்த உணர்வு. காற்றோட்டமான விசாலமான ஒரு வெயிட்டிங் ஹால். பல கம்யூட்டர் இணைப்புகள். எல்.எல்.ஆர் லைசென்ஸ் வாங்குவதற்கு கூட கம்யூட்டர் மூலம் டெஸ்ட் வைக்கிறார்கள். எல்காட் மற்றும் , என்.ஐ.சி நிறுவனங்கள் தொழில்நுட்ப உதவி அளிக்கிறார்கள்.
சரியாக காலை 9.30 மணிக்கு மக்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் வந்து விட்டனர். அவரவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். சுமார் 3 மணி நேரத்தில், நான் வந்த வெலைகள் முடிந்து விட்டன. அரசு குறிப்பிட்ட தொகை மட்டும் தான் கட்டினேன். ரசீதும் கொடுத்தார்கள். ஒரு ரூபாய் கூட லஞசம் கொடுக்காமல் என்னால், என் செயல்களை முடித்து கொண்டேன்.
இந்த அமைதியான புரட்சிக்கு வித்திட்ட அந்த அலுவலகத்தின் ஆர்.டி.ஓ கே.வி. கார்த்தலிங்கன் (49) அவர்களும், அந்த வெயிட்டிங் ஹாலில் ஒரு டேபிளில் உட்கார்ந்து கொண்டு மக்களுக்கு உதவிகள் செய்து வந்தார். பிறகு என்னை அவ்ரிடம் அறிமுகப்ப்டுத்திக் கொண்டு, அவரை பாராட்டிவிட்டு, ஒரு பேட்டியும் எடுத்தேன்.
அரசு ஊழியர்கள் மக்கள் தான் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் எஜமானர்கள் என்ற எண்ணத்துடன் லஞ்சம் பெறாமல் வேலை செய்தால், மக்கள் வாழ்த்துவார்கள். மக்களும், தங்கள் சுயநலத்திற்காக, அரசு ஊழியர்களுக்கு இடை தரகர்கள் மூலம் லஞ்சம் கொடுத்து விட்டு, பிறகு லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடுவதில் பயனில்லை.
திரு கார்த்தலிங்கனின் பேட்டியை கீழ்காணும் 'பிளாஷ் பிளேயரில்' 'பிளே' பட்டனை கிளிக் செய்து கேட்கவும். ( 8 நிமிடங்கள்). இந்த ஆடியோவை பிராட்பேண்டில் சீராக கேட்க முடியும். தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து உங்கள் டெஸ்க் டாப்பில் mp3 ஃபைலாக டவுன்லோடு செய்து கேட்கவும். ( 7 mb)
இந்த ஆடியோவை, கீழ்கண்ட் தளங்க்ளிலும் கேட்கலாம்.