போக்குவரத்து துறையில் ஆர்.டி.ஓ ( Regional Transport officer) ஆபீஸ் என்றாலே,பொதுவாக மக்களுக்கு ஞாபகம் வருவது லஞ்சம், அலட்சியம்,தரகர்கள் மற்றும் தாமதம் தான். அண்மையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் பல ஆர்.டி.ஓ ஆபீஸ்களில் அதிகாரிகள் மேஜையிலிருந்து கட்டு கட்டாக பணத்தை கைப்ப்ற்றியதெல்லாம் பத்திரிகைகளீல் வந்தன. ஒரு எல்.எல்.ஆர் வாங்கவேண்டுமென்றால் கூட லஞ்சம் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு மனநிலை. இது ஒரு புறமிருக்க படித்த மக்களே, தங்கள் சுய நலத்திற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சுலபமாக சாதித்துகொண்டு, அரசு அதிகாரிகளின் மீது லஞ்ச பழி சுமத்துவ்தாகவும் ஒரு வாதம் உண்டு.
எனது டிரைவிங் லைசென்ஸை புதுப்பிப்பதற்கும் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு 15 ஆண்டுகளூக்கு பிறகு ஃபிட்னஸ் சர்டிபிகேட் வாங்கவும் இன்று சென்னை கே.கே. நகரிலுள்ள ஆர்.டி.ஓ ஆபீசிற்கு போகவேண்டியிருந்தது. எந்த இடை தரகர்களும் இல்லாமல், லஞ்சம் கொடுக்காமல் எனது காரியம் நடக்குமா என்பதை சோதனை செய்வதற்காக, நானே நேரில் சென்றேன்.
சென்னை கே.கே. நகர் ஆர்.டி. ஓ ஆபீஸ் ஐ.எஸ். ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. நான் அங்கே போனவுடன் ஆச்சரியப்பட்டேன். எப்போதுமே, அரசு அலுவலகத்தை அசுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று தங்கள் பாரம்பரியத்தை கட்டி காக்கும், அரசு ஊழியர்களிடையே ஒரு மாற்றம். ஒரு ஐ.டி. கம்பெனிக்குள் நுழைந்த உணர்வு. காற்றோட்டமான விசாலமான ஒரு வெயிட்டிங் ஹால். பல கம்யூட்டர் இணைப்புகள். எல்.எல்.ஆர் லைசென்ஸ் வாங்குவதற்கு கூட கம்யூட்டர் மூலம் டெஸ்ட் வைக்கிறார்கள். எல்காட் மற்றும் , என்.ஐ.சி நிறுவனங்கள் தொழில்நுட்ப உதவி அளிக்கிறார்கள்.
சரியாக காலை 9.30 மணிக்கு மக்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் வந்து விட்டனர். அவரவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். சுமார் 3 மணி நேரத்தில், நான் வந்த வெலைகள் முடிந்து விட்டன. அரசு குறிப்பிட்ட தொகை மட்டும் தான் கட்டினேன். ரசீதும் கொடுத்தார்கள். ஒரு ரூபாய் கூட லஞசம் கொடுக்காமல் என்னால், என் செயல்களை முடித்து கொண்டேன்.
இந்த அமைதியான புரட்சிக்கு வித்திட்ட அந்த அலுவலகத்தின் ஆர்.டி.ஓ கே.வி. கார்த்தலிங்கன் (49) அவர்களும், அந்த வெயிட்டிங் ஹாலில் ஒரு டேபிளில் உட்கார்ந்து கொண்டு மக்களுக்கு உதவிகள் செய்து வந்தார். பிறகு என்னை அவ்ரிடம் அறிமுகப்ப்டுத்திக் கொண்டு, அவரை பாராட்டிவிட்டு, ஒரு பேட்டியும் எடுத்தேன்.
அரசு ஊழியர்கள் மக்கள் தான் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் எஜமானர்கள் என்ற எண்ணத்துடன் லஞ்சம் பெறாமல் வேலை செய்தால், மக்கள் வாழ்த்துவார்கள். மக்களும், தங்கள் சுயநலத்திற்காக, அரசு ஊழியர்களுக்கு இடை தரகர்கள் மூலம் லஞ்சம் கொடுத்து விட்டு, பிறகு லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடுவதில் பயனில்லை.
திரு கார்த்தலிங்கனின் பேட்டியை கீழ்காணும் 'பிளாஷ் பிளேயரில்' 'பிளே' பட்டனை கிளிக் செய்து கேட்கவும். ( 8 நிமிடங்கள்). இந்த ஆடியோவை பிராட்பேண்டில் சீராக கேட்க முடியும். தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து உங்கள் டெஸ்க் டாப்பில் mp3 ஃபைலாக டவுன்லோடு செய்து கேட்கவும். ( 7 mb)
இந்த ஆடியோவை, கீழ்கண்ட் தளங்க்ளிலும் கேட்கலாம்.
அட்டகாசம்.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதிரு கார்த்தலிங்கன் பணி பெருமை படக்கூடியது.அரசாங்க அலுவலகங்களின் மேல் ஒரு மதிப்பை பெற்றுத்தரக்கூடியது.அவருக்கு துணையாக வேலை செய்பவர்கள் தங்கள் பணியை திறம்பட செய்து மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
தங்கள் பணிக்கு 3 மணி நேரமா? கொஞ்சம் அதிகமாக இல்லை?
நன்றி. வடுவூர் குமார். நான் இரண்டு பணிகளுக்காக சென்றேன் என்று கூறியிருந்தேன். என்னுடைய உரிமத்தை புதிப்பது மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகான F.C. பெறுவது. அதற்குரிய டாகுமெண்டுகளை சரியாக கொண்டு போக வேண்டும். அது தவிர சுமார் 1000 பேர் தினசரி வந்து போகும் இடத்தில், பொதுமக்களாகிய நாமும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்கும் அதை பார்த்து, வெரிஃவை செய்து ஒரு குறைந்த படசம் நியாயமான கால அவகாசம் தேவை. எனது பணிகளுக்கு மூன்று மணி நேரம் குறைந்த படசம் தேவை.
பதிலளிநீக்குஅதற்கு பெரும்பாலான மக்களுக்கு பொறுமை இருப்பதில்லை. ஆனால், அவர்களே மற்ற துறைகளில் பணிபுரியும் போது, மக்களிடம் பொறுமையை எதிர்பார்ப்பார்கள்.
நம்முடைய சுயநலத்திற்காக, நாமும் இடைதரகர்கள் மூலமாக கையூட்டு கொடுத்து வழக்கமாக்கி விடுகிறோம். பிறகு நாமே அதை குறையும் சொல்கிறோம்.
நம்முடைய டாகுமெண்ட்டுகளை சரியாக எடுத்துக்கொண்டு சென்று, அதற்கு தேவையான நேரத்தையும் செலவிட்டால், லஞ்சம் ஒழிந்து விடும். நம்மை அவர்கள் தேவையில்லாமல் இழுத்தடித்தாலோ அல்லது லஞ்சம் கேட்டாலோ, மேலதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள். அல்லது, விஜிலன்ஸில் புகார் கொடுத்து பிடித்து கொடுங்கள். இது போன்ற இணைய தளங்களில் வெளியிடுங்கள்.
நாம் லஞசம் கொடுப்பதை நிறுத்தினால், லஞ்சம் ஒழிந்து விடும்.
அரசு அலுவலகம் என்றாலே எனக்குள் ஒரு வெறுப்பு உண்டு, மற்றும் சோம்பேறியாக வேலை செய்வார்கள், தாமதமாக வேலையை துவங்குவார்கள். ஆனால் உங்கள் செய்தியை படித்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். திரு.கார்திலிங்கனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதே சமயம் அந்த சூழ்நிலையை பார்த்துவிட்டு பைசா செலவு இல்லாமல் வேலை முடிந்ததுடா சாமின்னு செல்லாமல் அதை செய்தியாகவும் மற்றும் அவரை பேட்டியாகவும் எடுத்து வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்குவாழ்க உங்கள் சேவை...!
Nice dispatch and this mail helped me alot in my college assignement. Thank you on your information.
பதிலளிநீக்கு