This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வியாழன், 25 டிசம்பர், 2008

பிளஸ் டூ படிக்கும் ஸ்ரீசித்ரா ஒரு ஆல் ரவுண்டர்

ஸ்ரீ சித்ரா  Sri Chitra
மார்கழியில் எப்போதுமே சென்னையில் இசை மழைதான். ச்பாக்களில், பூங்காக்களில், டி.விக்களில், ரேடியோவில் மற்ற எல்லா இடங்களிலும் இசை கச்சேரிகள். பல இளங்கலைஞர்களுக்கு தங்கள் திறமையை காட்ட பல வாய்ப்புகள். இன்று கிருஸ்த்மஸ் தின விடுமுறையானதால் (25 டிசம்பர் 2008), ப்ல சென்னை ச்பாக்களில் சிறப்பு நிகழ்ச்சிகள்.

நுங்கம்பாக்கம் கல்சுரல் அகடமியில் செல்வி ஸ்ரீ சித்ராவின் ஒரு மணி நேர கச்சேரியை கேட்க ஒரு வாய்ப்பு வந்த்து. 15 வயதே ஆன ஒரு பள்ளி சிறுமி. அஷோக் நகரில் ஜவ்ஹர் மேல்நிலை பள்ளியில் பிளஸ் டூவில் முதலாம் ஆண்டு படிக்கிறார்.

இசை அறிவு இல்லாத என்னைப்போன்றவர்கள் கூட ரசிக்கக்கூடிய ஒரு குரல் வளம். சிறுமியாக இருந்தாலும், ஒரு சீனியர் பாடகருக்குள்ள தெளிவு.

கலைஞர் டி.வி மற்றும் இமயம் டிவிககளில் ஒரு தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். பரத நாட்டியமும் தெரியும். 10ம் வகுப்பு பொது தேர்வில் 95 மார்க் வாங்கி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். என்.சி.சியில் சார்ஜண்ட் வேறு. பள்ளியில் மாணவர் தலவர் வேறு. பள்ளியில் 'பெஸ்ட் ஆல் ரவுண்டர்' அவார்டு வாங்கியவர்.

சென்ற் ஆண்டு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியில், அரை இறுதி வரை வென்றவர். மூன்று வயது முதல், இசை பயின்று வரும் இவர், இதுவரை 57 மேடை கச்சேரிகள் செய்துள்ளார். பல சபாக்களிலிருந்து அழைப்புகள் வ்ந்தாலும், பள்ளி படிப்பு பாதிக்கப்படாமல், ஒரு சில கச்சேரிகளை மட்டும், விடுமுறைநாட்களில் ஏற்கிறார்.

இசை பயில்வதுதான் தன்னுடைய பல ஆல் ரவுண்டு வெற்றிகளுக்கு காரணம் என்கிறார் ஸ்ரீ சித்ரா. எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், தனக்கு பிடித்த 'சாந்தி நிலவ வேண்டும்' என்கிற பாட்டை பாடும்போது, உற்சாகம் பிறக்கிறது என்கிறார் அமைதியாக.

பிளஸ் டூ முடித்தபிறகு, அப்துல் க்லாம் போல் 'ஏரொநாடிக்' இன்ஜினீயரிங் படிக்கவேண்டும் என்று ஆசை. அத்துடன் இந்துஸ்தானி இசையும் கற்று சிற்ந்த பாடகியாக வெண்டும் என்று ஆர்வமுடன் இருக்கிறார். (அப்துல் கலாம் அவ்ர்களும் இசையில் சிறந்த் விற்பன்னர்).

திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் வந்தாலும், பள்ளி படிப்பு இருப்பதால, பிளஸ் டூ முடித்தபிறகுதான் அதைப்பற்றி சிந்திக்க முடியும் என்கிறார். இந்திய திரை உலகிற்கு, ஒரு சிறந்த பாடகி உருவாகி வருகிறார் என்ற நிறைவுடன், சபாவை விட்டு வெளியே வந்தேன்.

இந்த ஆல்ரவுண்டர் ஸ்ரீ சித்ராவின் வெற்றிக்கு ஊக்கமளித்து வரும் அவரது பெற்றோர்கள் விஜயகுமாருக்கும் , சிந்துவுக்கும் பாராட்டுக்கள்.

வெள்ளி, 19 டிசம்பர், 2008

சென்னை தி.நகரில் பெருகி வரும் அங்கீகாரமற்ற கட்டிடங்கள் - விதிமீறல்களை குண்டர் சட்டத்தில் சேர்க்க வேண்டும்.

சென்னை தி.நகரில் தற்போது பல பிரபல நிறுவனங்கள் தங்கள் பிரும்மாண்டமான கட்டிடங்களை எழுப்பி வருகின்றனர்.  இன்று காலை (19.12.08) வடக்கு உஸ்மான் சாலையிலுள்ள   ARR  சீவல் கட்டிடத்தை அதிகாரிகள் போலீஸ் துணையுடன் இடிக்க ஆரம்பித்துள்ளனர். 


இந்த கட்டிடத்தில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், வரை முறைகள் மீறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  பல முறை, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அங்கீகாரமற்ற கட்டிடங்களை  இடிக்க உத்திரவு கொடுத்தும், அதிகாரிகள் - அரசியல் வாதிகள் துணையுடன், பல கட்டிடங்கள் வரைமுறையை மீறி தி.நகரில் கட்ட்பபட்டு வருகின்றன. 


இந்த கட்டிடம் மட்டுமல்ல.  இன்னும் ப்ல கட்டிடங்கள் வரைமுறையை மீறி கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.  அதற்கு எல்லாம் என்று விடிவு வருமோ?
இந்த கட்டிட உரிமையாளர்கள், வரைமுறையை மீறி கட்டிக்கொடுத்த பொறியாளர்கள், இந்த வரைமுறைகளை கண்காணிக்க தவறிய (அல்லது லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்களை மூடிக்கொண்ட) அதிகாரிகள், அவர்களுக்கு ஊக்கம் கொடுத்த அரசியல் வாதிகள் அனைவரையும் 'குண்டர் சட்டத்தில்' கைது செய்தால்தான், இனி இது போன்ற அப்பட்டமான விதிமீறல்கள் தவிர்க்கப்படும்.

ஞாயிறு, 30 நவம்பர், 2008

அரசியல் வாதிகளே! மனித உரிமை காவலர்களே!! எங்கு ஒளிந்து கொண்டீர்கள்?

கடந்த நான்கு நாட்களாக, இந்தியாவை, ஏன் உலக நாடுகளையே உலுக்கி வரும் மும்பாய் நகரத்தின் மீது தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகளைப்பற்றிதான் அனைத்து டி.வி. மற்ற பிற் மீடியாக்களில் செய்தி வருகிற்து. 'செக்யூலர்' அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் காங்கிரஸ் அரசே, பாகிஸ்தானை சுட்டி காண்பிக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சரும், மகாராஷ்டிரா முதலமைச்சரும் ராஜ்னாமா செய்து விட்டதாக செய்திகள் வருகின்றன. இந்திய் பொருளாதாரத்தை பாழ்படுத்திய சிதம்பரத்தை எப்படி தூக்குவது என்று எண்ணிய வேளையில், சாமர்திய்மாக அவரை உள்துறைக்கு தள்ளிவிட்டார்கள். (ஒரே கல்லில் இரண்டு மாங்காய்). மகராஷ்டிர துணை முதல்வர் 'இது ஒரு சிறிய நிகழ்வு' என்கிறார். என்ன வெட்கக்கேடு.

இந்த பயங்கரவாததிற்கு பிறகு, அனைத்து டி.வி.களிலும் பொதுமக்கள் அரசியல் வாதிகள் மீது தங்கள் வெறுப்பினை உமிழ்கிறார்கள். ஒவ்வொரு தலைவருக்கும், எவ்வளவு பாதுகாப்பு. ஆனால் மக்களூக்கு மட்டும் இல்லை. தீவிரவாதிகளை நியாயப்படுத்தி பேச்சு வேறு. பார்லிமெண்டை தாக்கிய் தீவிரவாதியை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் தூக்கில் இட முடியவில்லை. 'சிமி' அமைப்பு தடை செய்யப்டும் போது, அவர்களுக்கு ஆதரவாக லல்லுவின் தாண்டவம். இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகளின் தலைவர் பிர்பாகரனின் பிறந்த நாளை, சென்னை உயர்நீதினற வளாகத்தில் கொண்டாடுவது போன்ற ப்ல நிகழ்வுகளால், மக்கள் அரசியல் வாதிகள் மீது மிகுந்த வெறுப்பு அடைந்துள்ளார்கள். அந்த இயக்கத்தின் ஒரு தலைவர் மறையும் போது, இந்திய அரசியல் சட்டதிற்கு உட்பட்ட தமிழக முதல்வர் 'கவிதை அஞ்சலி' செலுத்துகிறார். இந்த தலைவர்களெல்லாம், மும்பை ஹோட்டலில் மாட்டிக்கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவர்க்ள் தீவிரவாதத்தின் கொடுமையை உணர்ந்திருப்பார்கள்.

இந்திய கமாண்டோக்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றினார்கள். அவர்களது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செய்ததை டி.வி. கண்ட போது, அவர்கள்தான் உண்மையான ஹீரோக்களாக இருந்தார்கள். அங்கு வந்த அரசியல்வாதிகளை மக்கள் திட்டியதையும் காண்பித்தார்கள்.

தீவிரவாதிகளை தாக்கி பேசினாலே, ஒரு குறிப்பிட்ட மததினரை தாக்குவதாக நினைத்து கொண்டு, தீவிரவாததிற்கு மறைமுகமாக அனைத்து தலைவர்களும் ஆதரவளித்து, தீவிரவாததை நியாயப்படுத்துகிறார்கள். அந்த குறிப்பிட்ட மததினரும், இவர்களின் குள்ள நரித்தனத்தை புரிந்து கொள்ளாமல், ஏதோ அவர்கள் தான் தங்கள் காவலர்கள் போன்று நினைக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அவர்களும் தைரிய்மாக வெளியே வந்து, தீவிரவாததிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு ஜாதி மதம் கிடையாது. அவர்கள் மனித இனத்தின் எதிரிகள். மும்பையில் நடந்த தாக்குதலில் அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் இறந்திருக்கிறார்கள்.

மனித உரிமை இயக்கங்களோ, சொல்லவே வேண்டாம். தீவிரவாதிகளை கைது செய்யும் போதும், தூக்கில் இடும் போதும், அவர்களுக்கு ஆதரவாக வெடகமின்றி கத்துவார்கள். அந்த தீவிரவாதிகள், மக்களை தாக்கும் போது, அந்த மனித உரிமை ஆர்வலர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். தீவிரவாதம் என்பது மனித உரிமை மீறல். மும்பையில் 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தைபற்றி எந்த மனித உரிமை அமைப்புகளாவது சிந்தனை செய்ததுண்டா? ஆனால், தீவிரவாதிகளை தூக்கில் இடும்போது மட்டும், தீவிரவாதிகளின் குடும்பம் நினைவுக்கு வந்து விடுகிறது. இதுவரை எந்த மனித உரிமை அமைப்புகளும் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. அவர்கள் தீவிரவாத அமைப்புகளீன் ஏஜண்டுகளாக இருப்பவர்கள்.

தீவிரவாதத்தை மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ ஆதரிப்பவர்கள், அவர்கள் அரசியல் வாதிகளாகட்டும் அல்ல்து மனித உரிமை ஆர்வலர்களாக்ட்டும், அவர்களும் 'தீவிரவாதிகளே'. இதை மக்கள் உணரும் காலம் வந்து விட்டது.

மக்களுடன் இருக்க வேண்டிய தலைவர்கள், ஒரு பெரிய பாதுகாப்பு படையுடன் செல்கிறார்கள். அவர்கள், தீவிரவாதிகளை ஆதரிப்பதால், தீவிர்வாதிகளிடமிருந்து எந்த ஆபத்தும் இல்லை. பிறகு எதற்கு இந்த பாதுகாப்பு? பந்தாவிற்கா அல்லது மக்களுடைய கோபத்திலிருந்து பாதுகாத்து கொள்ளவா? ஆனால் மக்களுக்கு மட்டும் எந்த பாதுகாப்புமில்லை.

வியாழன், 13 நவம்பர், 2008

சட்டத்தை மீறும்் சட்டக்கல்லூரி மாணவர்கள்

சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் பயிலும் இரு பிரிவு மாணவர்களிடையே நேற்று நடந்த வன்முறை, இன்றைய (நவம்பர் 13, 2008) நாளிதழ், மற்றும் தொலைகாட்சிகளில் தலைப்பு செய்தியாகி விட்டது.

(போட்டோ" நன்றி தி இந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்)

விஷயம் இதுதான்.


தேவர் திருமகனாரின் ஜயந்தி விழாவிற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் அடித்த போஸ்டரில், கல்லூரியின் பெயரை குறிப்பிடும் போது 'டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி' என்று குறிப்பிடாமல் 'அரசு சட்டக்கல்லூரி' என்று குறிப்பிட்டு இருந்ததுதான் காரணம் என்கிறார்கள். அதுதான், வன்முறையில் முடிந்து விட்டது.

தவிரவும், மாண்வர்கள் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் வன்முறையில் ஈடுபட்டதுதான் விவகாரமாகிவிட்டது.

1. டாக்டர் அம்பேத்கார் மற்றும் தேவர் திருமகனார் இருவருமே, ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பிறந்து இருந்தாலும், அவர்கள் தங்கள் சாதனையால் , தேசிய தலைவர்களாக உருவானவர்கள். அவர்களை, அந்தந்த வகுப்பினர், தங்க்ள் பிரிவிற்குள் அடக்குவதால் தான், இந்த வன்முறைகள் நிகழ்கின்ற்ன. ஒவ்வொரு ஆண்டும், அனைத்து அரசியல் தலைவர்களும், தேவர் திருமகனாரின் குரு பூஜைக்கும், டாக்டர் அம்பேத்கார் பிறந்த தினத்திற்கும் வரிசை வரிசையாக சென்று அதை பெரிய நிகழ்ச்சியாக ஆக்கிவிட்டனர். அந்த மாபெரும் தேசிய தலைவர்களை ஒரு 'வோட்டு வங்கியாக' ஆக்கி விட்டனர். அதனால் தான், இந்த பிஞ்சு குழந்தைகளின் மனத்தில் விஷ விதை விதைத்து, நஞ்சை வளர்கின்றனர்.

அந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களின் மீது மரியாதை இருந்தால், அவர்களை ஒத்த மற்ற தலைவர்களான இராஜாஜி, நேதாஜி, பாரதியார், சி. சுப்ரமணியன், பக்தவத்சலம், சத்யமூர்த்தி, காமராஜர், போன்ற மற்ற மாமனிதர்களுக்கும் அல்லவா, போட்டி போட்டுக் கொண்டு மரியாதை செலுத்த வேண்டும். அவர்களையெல்லாம், வோட்டு வங்கியாக, மற்ற அரசியல் மற்றும் ஜாதி தலைவர்கள் உருவாக்க வில்லை.

டாக்டர் அம்பேத்கார், தேவர் திருமகனார், ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட தேசிய தலவர்கள். அவர்களுக்கு ஜாதி சாயம் பூசி அவர்களை சிறுமைப்படுத்த வேண்டாம். தங்களுடைய குறுகிய நோக்கத்திற்காக, அரசியல் தலைவர்களும், ஜாதி தலைவர்களும் மாபெரும் மனிதர்களை இழிவு படுத்த வேண்டாம். அவர்கள் இன்று நம்மிடையே உயிருடன் இருந்தால், அவர்களே விரும்ப மாட்டார்கள். பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்காதீர்கள்.

2. இரண்டாவது, ச்ட்டத்தை காப்பாற்ற வேண்டிய சட்ட மாணவர்களே, அரிவாள், கத்தி, கட்டை ஆகிய வன்முறை ஆயுதங்களை எடுத்துக் கொள்வது, கவலை அளிக்கிறது. நாளைய நீதிபதிகள், இந்த மாணவர்களிலிருந்துதான் வருகிறார்கள். சுதந்திர போராட்டங்களை வழிநடத்தி வெற்றி பெற்ற் காந்தி, நேரு, இராஜாஜி, சதியமூர்த்தி, அம்பேத்கார், போன்றவர்களெல்லாம், சட்டத்துறை வல்லுநர்களே. நம் நாட்டில், சட்ட வல்லுநர்களுக்கு, எப்போதுமே, ஒரு தனி மரியாதை உண்டு.

3. மூன்றாவது, தங்கள் கன் முன்னால் வன்முறை நிகழும் போது, போலீஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த செய்தி மிகவும் வேதனையானது. கல்லுரி வளாகத்தில், அனுமதியில்லாமல் நுழைய கூடாது என்று ஒரு சப்பைகட்டு கட்டி கொண்டு, வேடிக்கை பார்ப்பது போலீஸ் நிர்வாகத்திற்கு அழகல்ல. ஒரு கல்லூரியில், பகிரங்கமாக, போலீஸ் முன்னிலையில் ஒரு கொலையோ, அல்லது, கற்பழிப்போ நடந்தால், போலீஸ் என்ன செய்வார்கள். கல்லூரி நிர்வாகத்தின் அனுமதிக்காக காத்திருப்பார்களா?

புதன், 3 செப்டம்பர், 2008

சென்னையில் பிரம்மாண்டமான வினாயக சதுர்த்தி விழா


இன்று செப்டம்பர் 3ம் தேதி வினாயக சதுர்த்தி. இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு விழா. அரசு விடுமுறை வேறு. அனைத்து டி.வி. சேனல்களிலும் 'வினாகய சதுர்த்தியை முன்னிட்டு' சிறப்பு நிகழ்ச்சிகள். ஆனால் கலைஞர் டி.வியில் வினாயக சதுர்த்திக்காக இல்லாவிட்டாலும், 'விடுமுறையை முன்னிட்டு' சிறப்பு நிகழ்ச்சிகள். ( அனைத்து விடுமுறை நாட்களிலும் சிறப்பு நிகழ்ச்சி உண்டா என்று கேட்டு விடாதீர்கள். மதச்சார்பின்மை மாசு பட்டுவிடும்).

ஒவ்வொரு ஆண்டும், சென்னை தி.நகர் வெங்கட்நாராயாணா சாலையிலுள்ள JYM திருமண மண்டப வாசலில் எழுந்தருளப்பட்டுள்ள வினாயகருக்கு ஒரு தனி சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் விதவிதமான முறையில் சிலை செய்து வழிபடுவார்கள். 1008 கிலோ காய்கறிக்ளால் அமைக்கப்பட்டுள்ள இந்த வினாயகரின் எடை சுமார் 2000 கிலோ. 30 தொழிலாளிகள் சுமார் 10 நாட்கள் வேலை செய்து உருவாக்கப்பட்ட 15 அடி உயரமுள்ள இந்த வினாயகரை, இன்று துவக்க நாளன்றே, சுமார் 10 ஆயிரம் பேர் தரிசித்தனர்.

இந்த வினாயகருக்கு, கட்சி வேறுபாடின்றி, அனைத்து கட்சியினரும் பக்தர்களே. மத்திய அமைச்சர் திரு டி.ஆர். பாலு கூட் கட்ந்த ஆண்டுகளில் தரிசிக்க வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தான் வினாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்து வருகிறார்.

வீதிகளில் வினாயகரை வைத்து வழிபடும் முறை சென்னையில், மேற்கு மாம்பலத்தில் அப்போது 15 வயது நிரம்பிய கணேஷ் மற்றும் அவரது நண்பர்களால் 1983ல் துவக்கப்பட்டது. அப்போது 3 இடங்களில் வினாயகரை வைத்து வழிபட்டன்ர். அன்று குட்டியாக இருந்த 'குட்டி கணேஷ்' தான் ஒவ்வொரு ஆண்டும் வெங்கட்நாராயணா சாலையிலுள்ள வினாயகரை அமைத்து வருகிறார்.

தற்போது 25 ஆண்டுகள் கழிந்து வெள்ளி விழா கொண்டாடும் இந்த ஆண்டில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட இடங்களில், வினாயகர் சிலைகளை மக்கள் நிறுவி வழிபட்டு வருகிறார்கள்.

எனக்கு தனிப்பட்ட முறையில் வினாயகப்பெருமானின் மீது ஒரு பக்தி உண்டு. எந்த ஒரு செயலையும் வினாயகனை நினைக்காமல் துவங்க மாட்டேன். வினாயகனை மட்டும் தான், மக்கள் த்ங்களுக்கு விருப்பமான முறையில் அலங்கரித்து வழிபடுவர்கள். அதுதான் வினாயகரின் சிறப்பு.

இந்த தி.நகர் வினாயகரின் சிலை நிறுவப்பட்டுள்ள இந்த இடத்திற்கு அருகில், தி.நகர் பேருந்து நிலையத்தில் தான் 1972ல் தந்தை பெரியார் ஒரு வினாயகர் சிலையை பொது மக்கள் முன்னிலையில் உடைத்து ஒரு பெரிய பரபரப்பை அந்த நாட்களில் உருவாகினார் என்பது சரித்திரம். அன்று உடைபட்ட ஒரு பிள்ளையார் இன்று ஐந்தாயிரம் பிள்ளையாராக பிரும்மாண்டமாக வளர்ந்து, சென்னை முழுவதும் சாலைகளீல் அமர்ந்து, இன்று பெரியார் சீடர்களையே தன்னை வணங்க வைத்துள்ளார்.

அதுதான் வினாயகனின் மகிமை.



புதன், 6 ஆகஸ்ட், 2008

பாரதியின் கண்ணோட்டத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை

வெற்றி குரல் இதழ் 4

பாரதி மங்கை ஜெயஸ்ரீ,  பாரதியின் கண்ணோட்டத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை பற்றி விளக்குகிறார். 



இந்த  ஒலி இதழை கீழ்கண்ட இணைய தளத்திலும் கேட்கலாம்.

http://blip.tv/file/1151484/

http://www.youtube.com/watch?v=QHlRGFziqBI

http://www.podbazaar.com/permalink/144115188075857254

இந்த ஒலி இதழை டவுன்லோடு செய்ய, இந்த லிங்கை வலது கிளிக் செய்து டெஸ்க்டாப்பில் சேமிக்கவும்

சனி, 5 ஜூலை, 2008

அறிவு ஜீவிகளே! அண்ணாந்து பார்த்துக்கொண்டு எச்சில் உமிழாதீர்கள்!

அறிவு ஜீவிகளுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு அறிவு ஜீவிகளூக்கு ஒரு தன்மை உண்டு. தங்களுக்கு தெரியாத ஒன்றை, தெரிந்தது போல் பாவித்து, அதைப்பற்றி விலாவாரியாக வெளுத்து க்ட்டுவார்கள்.

மேலும், ஏதாவது சாதனை புரிந்து, மக்களிடம் பிரபலமாக வேண்டுமென்று நினைக்க மாட்டார்கள். அதற்கு சாதனை புரிய வேண்டும். பல நாட்கள், வருடங்கள் கூட ஆகலாம். அதற்கு குறுக்கு வழி அவர்களுக்கு தெரியும். வழக்கமாக மக்களின் மரபுகளுக்கு மாறாக ஏதாவது செயவார்கள் அல்லது சொல்வார்கள். எல்லாரும் காலால் நடந்தால், நான் மட்டும் கையால் நடப்பேன் என்பார்கள்; ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதுதான் மரபு என்றால், அவர்கள், ஏன் ஆணும் , கரடியும் திருமணம் செய்யக்கூடாது என்பார்கள். இதைதான் 'வக்ரமாக சிந்திப்பது' என்று தமிழிலும், 'pervertion' என்று ஆங்கிலத்திலும் கூறுவதுண்டு. பொதுவாக இந்த அறிவு ஜீவிகள், மக்களின் கவனத்தைத்தான் திருப்ப முடியும். ஆனால், அனைவரும் அதை ஒரு காமெடியாக எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

கடந்த 9.7.2008 தேதியிட்ட 'குமுதம்' வார இதழில், 'ஓ பக்கங்கள்' என்கிற பகுதியில் நண்பர் ஞாநி அவ்ர்கள் "காபபாற்றுங்கள் கலாம் " என்கிற் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். நீலகிரி மலையில் அரசு திட்டமிட்டுள்ள 'நியூட்ரினோ' ஆராய்ச்சி கூடத்தைப்பற்றி விமர்சனம் செய்துள்ளார். அது தவ்றா அல்லது சரியா என்று கூற நான் அறிவு ஜீவி அல்ல. எனக்கு தெரியாத விஞ்ஞான பகுதியில் தலையிட விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை இந்திய அணு சக்தி விஞ்ஞானிகள் உலக தரம் வாய்ந்தவர்கள். விக்ரம் சாராபாய், ஹோமி பாபா முதல் அனவரும் இந்தியாவின் பெருமைமிகு விஞ்ஞானிகளக இருந்து, நாட்டிற்கு நன்மை பயத்தனர்.

என்னுடையவும், மற்ற தேசிய நலனை விரும்பும் பலரது கருத்துகளும், அந்த கட்டுரையில், திரு அப்துல் கலாமை கிண்டலடித்து எழுதியது தான். துவக்கமே இப்படித்தான்:

"எல்லாரையும் கனவு காணச் சொல்லியே உங்கள் குடியரசுத் தலைவர் பதவிக்காலத்தை ஓட்டி முடித்துவிட்டீர்கள். குழந்தைகள் முதல் உங்கள் வயதுக்காரர்கள் வரை கனவு கண்டுகொண்டே இருக்கிறார்கள். எல்லார் கனவுகளையும் தொகுக்க முடியுமானால், அவற்றைப் படித்து ஆராய்ந்து இந்தியாவிலிருந்து இன்னொரு சிக்மண்ட் ஃபிராய்ட் உருவாகும் வாய்ப்பு கூட இருக்கிறது.

உங்கள் கனவுகள் என்ன என்று அறிந்துகொள்வதற்கு எனக்கு எப்போதும் ஆவல்தான். அக்கினிச் சிறகுகள், விஷன் 2020 மாதிரி ஆவணங்களைப் படித்தால் எனக்கு தூக்கம் வந்துவிடுகிறது. அப்புறம் என் கனவுகள் ஆரம்பமாகிவிடுகின்றன. உங்கள் கனவு என்னவென்று தெரியாமலே போய்விடுகிறது."

மற்றொரு இடத்தைல் நண்பர் ஞாநி கூறுகிறார்:

"உங்களை நான் நம்பாவிட்டாலும் எண்ணற்ற இளம் தலைமுறையினர் பெரிதும் நம்புகிறார்கள். அரசியல், நிர்வாகம், அறிவியல் அனைத்து துறையினருக்கும் நீங்கள் ஒரு ரோல் மாடல் என்று இளைஞர்கள் பலர் நம்புகிறார்கள்."

விவேகாநந்தர், மகாத்மா காந்திக்கு பிறகு, இன்று இளைஞர்களை அதிக அளவில் கவர்க்கூடிய தன்மை உடையவர் திரு க்லாம் அவர்கள் மட்டும் தான். ஜனாதிபதி பதவி முடிந்த ஒரு வருடத்தில் மட்டும், அவர் 16 மாநிலங்களுக்கும், 6 வெளிநாடுகளுக்கும் சென்று சுமார் 250 கூட்டங்களில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை சந்தித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களூக்கு முன்பு, 4 மணிக்கு துவங்க இருந்த ஒரு விழாவிற்கு, அவரது பேச்சை கேட்க, 2 மணிமுதல் சென்னை நாரத கான சபாவில் இளைஞர்கள் காத்திருந்தது, பத்திரிகைகளில் வெளியானது. அது அரசியல் கூட்டம் போல் கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. இளைஞர்கள் தாங்களே வரும் கூட்டம்.

நான் இந்தியா விஷன் 2020 என்கிற ஒரு யாஹூ குரூப் நடத்துகிறேன். அதில் சுமார் 2000 இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு இளைஞனின் பின்னால் பல இளைஞர்கள் இருக்கிறார்கள். ப்லரது பேட்டிகளை எடுத்து இந்தியாவிஷன்2020 என்கிற என்னுடைய தளத்திலும் வெளியிட்டுள்ளேன்.

இந்த இளைஞர்கள் கலாமின் செயல் மற்றும் அறிவுரைகளால் கவரப்பட்டு, தங்களால் ஆன சமூக பணிகளை அமைதியாகவும், ஆரவாரமில்லாமலும், செய்து வருகிறார்கள்.

திரு கலாம், 77 வயது தாத்தா. இளைஞர்கள் அவரை ஒரு ரோல் மாடலாக ஏன் எடுத்துக்கொள்ளவெண்டும்? ஏன் நம்பிக்கை வைக்கிறார்கள்? இதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும். சுதந்திரப்போராட்ட காலங்களீல், அந்த கால இளைஞர்கள் ம்காத்மா காந்தி மேல் நம்பிக்கை வைத்தார்கள். இளைஞர்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமானால், அவர்களுக்கு நம்பிகையூட்டும் வகையில் தலைவர்கள் வாழ்ந்து காட்டவேண்டும். அதைத்தான் காந்தியும் செய்தார். கலாமும் செய்கிறார்.

'அப்துல் கலாமின் கன்வுகளைப்பற்றி' கொச்சைப்படுதி எழுதியுள்ளார். கனவுகள் என்பது ஒரு குறிக்கோள். இந்தியா ஒரு வளர்ந்த நாடாக 2020ல் (developed Nation) ஆக வேண்டும் என்று ஒரு குறிக்கோள். அதற்கு வழிமுறைகளையும் இளஞரகளூக்கு வழங்கியுள்ளார். (1) எவ்வாறு கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள இடைவெளியை குறைப்ப்து (2) இளைஞர்கள் எவ்வாறு எழை மாணவர்களுக்கு உதவுவது போன்ற நல்ல திட்டங்களை இளைஞர்களின் மனத்தில் விதைத்துள்ளார். 'இந்தியா 2020' என்கிற் மந்திரத்தை மக்கள் மனத்தில் விதைத்துள்ளார்.

அண்மையில், லண்டன் மெட்ரோ பலகலைகழகத்திலிருந்து (ஐரோப்பாவில் பெரிய பல்கலை கழகம். லண்டனில் உள்ளது) மேலதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பிர்சித்த பெற்ற சாதனையாளர்களை அழைத்து, பன்னாட்டு மாண்வர்களிடையே கலந்துரையாட வைப்பார்கள். இந்த ஆண்டு திரு கலாமை கூப்பிட இருக்கிறோம் என்றார்கள். திரு கலாம் உலக அளவில் மதிக்க்த்தக்க மாபெரும் மனிதராக இருப்பது, தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமையே.

இதனால் தான் , இந்தியா விஷன் இளைஞர்கள், திரு க்லாமை 'இந்தியாவின் நல்லெண்ண தூதுவராக' (Goodwill ambassador or brand ambassador) அரசு அங்கீகரிக்க கோரி, ஒரு கையெழுத்து வேட்டை நடத்துகிறார்கள்.

கட்டுரை ஆசிரிய்ருக்கு நல்ல மனிதர்கள் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். அது அவரது உரிமை. நல்லவர்களை கொச்சைபடுத்தாமல் இருந்தாலே அது ஒரு பெரிய தேச சேவை. பல அறிவு ஜீவிகள் ஒரு சுண்டு விரலை கூட சமுதாயத்திற்காக அசைப்பதில்லை. ஆனால் சுய விளம்பரத்திற்காக, தங்களால் சாதிக்க முடியவில்லை என்றாலும், சாதிப்பவர்களை கேவலப்படுத்துவார்கள். அதனால் தான் நான் தலைப்பில் கூறினேன். " ஆதவனை நோக்கி அண்ணாந்து பார்த்து எச்சில் உமிழ்ந்தால், ஆதவனுக்கு எதுவுமில்லை. அது நம் மீது தான் விழும்".

திரு கலாம் அவர்களே. அவர்களை மன்னியுங்கள். நீங்கள் நீடுழி வாழ்ந்து, இளைஞர்களூக்கு வழிகாட்ட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

ஞாயிறு, 29 ஜூன், 2008

சென்னை தேவி தியேட்டரின் கழிவறைகளின் அவல நிலை

நான் நேற்று மாலை (28 ஜீன் 2008) ஆறு மணி ஷோவிற்கு சென்னை தேவி தியேட்டருக்கு 'தாசாவதாரம்' படம் பார்க்க சென்றேன்.  சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் ஒரு தியேட்டருக்கு சென்றேன்.  என்னுடன் ஒரு வெளிநாட்டு நண்பரும் வந்திருந்தார்.  அவருக்கு த்சாவதாரம் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற் ஆசையில் இருந்தார்.  அத்னால் தான் அங்கு செல்ல வேண்டியிருந்தது.

ஆயிரக்க்ணக்கான மக்கள் வந்து செல்லும் ஒரு முக்கிய மான தியேட்டரில் எவ்வளவு கேவ்லமாக கழிப்பறைக்ளை பராமரிக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.  கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை.  ஒரு துளி தண்ணீரும் குழாய்களில் வருவதில்லை.  கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஊழியர்கள் எவரும் இல்லை. மிகவும் அருவருப்பான நிலையிலிருந்த இந்த கழிவறையைப்பார்த்து அனைவரும் முகம் சுளித்தனர்.  அருகிலிருந்த தியேட்டர் ஊழியரிடம் இதை சொன்னபோது, அவரும் சட்டை செய்யவில்லை.

என்னுடன் வந்திருந்த வெளிநாட்டு  நண்பருக்கு தர்ம சங்கடமாகி விட்டது. அந்த கழிப்பறையை உபயோக்காமல் வேதனையுடன் அவதிப்பட்டார்.  

சென்னையின் பிரதான இடத்திலிருக்கும் ஒரு பிரபல்மான தியேட்டரில் இந்த நிலை என்றால், மற்ற ஊர்கள் எப்படி இருக்கும்?

பணம் சம்பாதிப்பதையே குறிகோளாகக் கொண்ட தியேட்டர் உரிமையாளர்கள், கொஞ்சம் செல்வு செய்து, கழிப்பறைகளை பராமரிக்கக்கூடாtதா?

தியேட்டர்கள் பராமரிப்பை கண்காணிக்கூடிய அரசு அதிகாரிகளுக்கும் மாமூல் கொடுத்துவிடுவதால்,  அவர்களுக்கும் இதில் அக்கரையில்லை.  அரசு மேலதிகரிகளுக்கு சொகுசு வாழ்க்கை.  அவர்களுக்கு பங்கு வந்தாலும் வ்ராவிட்டாலும்,  நாலு சல்யூட்டிற்கும், அதிகார தோரணைகளுக்கும் மயங்கி விடுவார்கள். மக்களை பற்றி அக்கறையில்லை.  ஒரு சில நேர்மையான உயர் அதிகாரிகளுக்கும் செல்வாக்கு இல்லை.

லஞ்ச ஊழலில் உன்னத்மான 74வது  இடத்தில் இந்தியா இருப்பதாக இரண்டு நாட்களூக்கு முன்பு தான் செய்திகள் வ்ந்தன. அதற்கு இதுவே அத்தாட்சி.

ஒருபக்கம் நம் இளைஞர்கள், உலக அளவில் ஐ.டி துறையில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டி கொடி கட்டி பறக்கும்  இந்த நாட்களில், தேவி தியேட்டர் , மற்றும்  தியேட்டரை கண்காணிக்கும் அரசு அதிகாரிகள், வெளிநாட்டினர் முன இந்தியாவை தலை குனிய வைக்கின்றனர்.

இந்த பதிவை படிக்கும் எந்த நண்பராவது, தங்களூக்கு தெரிந்த உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டுகிறேன்.

வெள்ளி, 27 ஜூன், 2008

ஸ்ரீ இராமானுஜர் ஆற்றிய சமூக பணி - நடிகர் கமலின் பார்வையில்

Sri Ramanujarஎனக்கு எப்ப்வுமே ஸ்ரீ இராமானுஜர் மேல் அளவற்ற மதிப்பு உண்டு. அவரது ஆயிரம் ஆண்டு விழா நடைபெற இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் ஒரு பெரிய ஆன்மீக குருவாகவும் விளங்கியவர்.

என்னுடைய நெடுங்கால நண்பர் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு சுதாங்கன் அவருடைய பிளாகில் நடிகர் கமலை சந்தித்ததை குறிப்பிட்டு எழுதியுள்ளார். ஸ்ரீ இராமானுஜர் , நடிகர் கமலையும் எவ்வளவு தூரம் பாதித்துள்ளார் என்பதை பார்க்கும் போது, நெகிழ்வாக இருந்தது.

தலித் மக்களுக்காக 'கண்ணீர்' வடிக்கும் அரசியல்வாதிகள் ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கவேண்டும். சுதாங்கனின் பிளாகிலிருந்து, கமல் கூறிய்தான வரிகள்:

quote

உண்மையிலேயே ஆதி சங்கரரும், ராமானுஜரும்தான் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள். அவங்க தப்பா எடுத்துக்கலைன்னு ஒரு விஷயம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கி.வீரமணியும், தொல்திருமாவளவனும் தங்களை ராமானுஜதாஸன்னு சொல்லிக்கிட்டா கூட தப்பில்ல. ஏன் தெரியுமா ? பண்டை காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுக்காரங்கதான் மூட்டைத் தூக்கிக்கிட்டு போவாங்க. வழியில அவங்களுக்கு முதுகு வலிச்சா, யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. மூட்டையை கீழே தரையில் வெச்சா, மறுபடியும் சுமக்கிறது கஷ்டம். இப்ப கூட கிராமப்பகுதிகள்ள, நீங்க மூணு கல் நட்ட சுமைதாங்கி கல் இருக்கும். இதை நிறுவனம்னு முதல்ல சொன்னவர் யார் தெரியுமா? ராமானுஜர்தான்.இது ராமானுஜர் படம் எடுத்த ஜீ.வி, ஐயர் சொல்லித்தான் எனக்கே தெரியும். ஒரு நாள் ஒரு கிராமத்து பக்கம் இருந்தோம். அப்ப அங்கிருந்த சுமைதாங்கி கல்லை பார்த்து அதை தொட்டு கும்பிட்டார். என்னன்னு கேட்டேன். இது ராமானுஜருடைய ஏற்பாடு என்றார். இதை யாராவது அந்த காலத்தில யோசிச்சிருப்பாங்களா.

unquote

புதன், 25 ஜூன், 2008

பனகல் பார்க் காமெடி

இன்றைய ஹிந்து நாளிதழில் ( 26 ஜீன் 2008) ஒரு செய்தி வந்துள்ளது.
http://www.hindu.com/2008/06/25/stories/2008062557720100.htm

சென்னை பனகல் பார்க் பகுதியில், ப்ல பெரிய நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களை, சட்டதிற்கு புறம்பாக கட்டியுள்ளனர். கட்டிட விதிமுறைகளுக்கு மாறாக கட்டினர். சென்னை ய உயர் நீதிமன்றம், அந்த கட்டிடங்களை இடிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் கட்டிட உரிமையாளர்கள், டில்லி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து, கட்டிடங்களை இடிப்பதற்கு ஒரு தடை உத்தரவு வாங்கி உள்ளார்கள்.

தமிழக அரசு நீதிபதி மோகன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து உள்ளது. நேற்று இந்த கமிஷன் முன்பு, கட்டிட உரிமையாளர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மனு அளித்துள்ளார்கள். இந்த மனுவில் அவர்கள் " சட்டதிற்கு புறம்பாக கட்டிடங்கள், அறியாமையாலும் (ஆச்சரியமாக இருக்கிறதா?) கட்டப்பட்டதாகவும், வியாபாரத்தின் மீதுள்ள உற்சாகத்தாலும் (passion) ( இன்னும் ஆச்சரிய்மாக இருக்கிறதா?) கட்டப்பட்டதாகவும், அதனால், விதிவிலக்கு அளித்து இடிக்காமல் விட்டுவிட வேண்டுமென்றும்' கோரியுள்ளார்கள். இதில் காமெடி என்னவென்றால், விதிமுறைகள் மீறப்பட்டது, 'பேராசையினால்' அல்ல என்றும் மனுவில் கூறியுள்ளார்கள்.

இந்த பெரிய கட்டிட்ங்களை ஒரு கொத்தனார் மட்டும் கட்டியிருக்க முடியாது. பெரிய பெரிய இன்ஜினீயர்களும், ஆர்க்கிடெக்டுகளும் இணைந்து தான் கட்டி இருக்க முடியும். அப்படியென்றால், அந்த கட்டிட பொறியாளர்களுக்கு தண்டனை உண்டா? இல்லை என்றால், அரசு அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து ச்மாளித்து விட்டதாக தோற்றமளிக்காதா? (கட்டிட உரிமையாளர்கள் மனுப்படி அரசு அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சம்பந்தம் இல்லை போன்று தோன்றுகிற்து).

இந்த மனுவை ஏற்றுக்கொண்டால், கொலை செய்தவர்களும், திருடர்களூம் கூட 'அறியாமையாலும், பணம் சேர்க்க வேண்டுமென்ற் உத்வேகத்திலும் (passion) செய்ததாகவும், 'பேராசையினால்' அல்ல என்றும், தங்களை மன்னிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் மனு கொடுத்தால், அந்த மனுவையும் நீதி மன்றம் பரிசீலிக்குமா?

திங்கள், 23 ஜூன், 2008

பிளஸ் டூ முடித்தவர்கள் என்ன படிப்பு படிக்கலாம்? அண்ணா பல்கலைகழக துணைவேந்தருடன் ஒரு பேட்டி

Prof. Radhakrihnan, Vice Chancellor, Anna University, Coimbatoreதற்போது அட்மிஷன் சீசன் ஆரம்பமாகிவிட்டது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் இன்ஜினீயரிங் படிப்பு, அதுவும் ஐ.டி. படிப்பு படித்தால் தான் தங்களுக்கு எதிர்காலம் என்கிற எண்ணத்தில் குழப்பத்தில் இருக்கிறார்கள். மீடியாக்களும், ஐ.டி. படித்த பி.ஈ. மாணவர்களுக்கு தான் எதிர்காலம் போல் தேவையற்ற ஒரு 'hype' ஐ உருவாக்குகிறார்கள். அதனால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்து, டொனேஷன் கொடுத்தாவது கம்பூட்டர் படிக்க வேண்டும் என்று கல்லூரி கல்லூரியாக அலைகிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் பொறியியல் படிப்பிற்கு ஒரு லட்சம் இடங்கள் 300 கல்லுரிகள், தனியார் பல்கலைகழகங்களில் உள்ளன. அதில் 75000 இடங்கள், ஐ.டி. சம்பந்தபட்ட B.E. படிப்பில் உள்ளன. மீதி 25000 இடங்கள் சிவில், மெகானிகல், ஆட்டோமொபைல் படிப்புகளில் உள்ளன.

பிளஸ் டூ முடித்தவுடன் ஐ.டி. படிக்கவில்லை என்றால் வாழ்க்கையே முடிந்து விட்டதாக எண்ணி, ஐ.டி. பொறியியல் படிப்பில் மோதுகிறார்கள். இது தேவையற்ற ஒன்று. ஐ.டி. படிக்கும் மாணவர்கள், 75000 சக மாணவர்களுடன் மோதவேண்டும். சிவில், மெகானிகல் படிப்பவர்களுக்கு போட்டி கம்மி. சிவில் அல்லது மெகானிகல் படித்தவர்கள், ஐ.டி. துறையிலும் பணியாற்ற முடியும். ஆனல், ஐ.டி. மட்டும் படித்தவர்கள், சிவில், மெகானிகல் துறைகளுக்கு போகமுடியாது.

தவிரவும், கலை கல்லூரியில் B.A அல்லது B.Sc படிப்ப்தையும் குறைவாக மதிப்பிடுகிறார்கள். தற்போது, ஒரு டிகிரியுடன், கம்யூட்டர் ஆறிவு இருந்தாலே, ஐ.டி. துறையில் வேலைகள் கிடைக்கின்றன. ஏன்? வங்கி துறைகளுக்கு சாஃப்ட்வேர் த்யாரிக்கும் லேசர் சாஃப்ட் நிறுவனத்தில், பத்தம் வகுப்பு, பிளஸ் டூ படித்தவர்களும் programmers களாக பணியாற்றுகிறார்கள். இது ஒரு புது முன்மாதிரி.

அடுதத வாரத்தில், கவுன்சிலிங் அண்ணா பல்கலைகழகத்தில் துவங்க உள்ளது. இந்த நிலையில், அண்ணா பல்கலைகழ்கம், கோயம்பத்தூரின் துணைவேந்தர் பேராசிரிய்ர் ஆர். இராதாகிருஷ்ணனிடம் தொலைபேசியில் ஒரு பேட்டி எடுத்தேன். இந்த பேட்டியில், மாணவர்களூக்கும் பெற்றோர்களுக்கும் சிறந்த அறிவுரைகளை வழங்குகிறார். அதை நீங்களும் கேளுங்களேன். play பட்டனை கிளிக் செய்து கேட்கவும். (17 நிமிடம் - ஆங்கிலம்)


இந்த பேட்டியை கீழ்கண்ட இணைய தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857185

இந்த பேட்டியை mp3 யாக பதிவிறக்கம் செய்ய விரும்பினால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க் டாப்பில் சேமிக்கவும் (16 mb)

புதன், 18 ஜூன், 2008

மக்கட்பண்புகள் குறைந்து வருகிறதா? - ராஜ் டிவியில் ஒரு நேர்முகம்

live telecast in Raj TV on soft skills of k. srinivasanஇன்று (18 ஜீன் 08) காலை ராஜ் டிவியின் காலை ஒளிபரப்பில், என்னுடைய பேட்டி நேரடியாக ஒளிபரப்பாகியது. ஒரு மணி நேரம் நீடித்த ஒளிபரப்பில், நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. க்ல்லூரி மாணவி நிஷா சிறப்பாக உரையாடலை நடத்தி சென்றார்.

தற்போது, ஏன் இளைஞர்களிடையே மனித பண்புகள் (soft skills) குறைந்து வருகின்ற்ன என்பது பற்றிய உரையாடல். நான் கூறிய ஒரு சில கருத்துக்கள் :

1. பெரும்பாலான நகர்புற இளைஞர்களிடையே நல்ல attitude என்ப்படும் மனப்பாங்கு குறைந்து வருகிற்து. அதிக அளவில் பணம், போட்டி ஆகியவையால், அவர்கள் பழகும் தன்மையும் (inter personal skills) பாதிக்கப்படுகின்றன. கிராமப்புற இளைஞர்களிடையே முன்னேற வேண்டும் என்கிற attitude உள்ளது. ஆனால் தன்னம்பிகை குறைவாக உள்ளது.

2. பெரும்பாலான குடும்பங்களில், பெற்றோர்களும், தங்கள் குழந்தைகள் பாடத்தில் அதிக மார்க் வாங்கவேண்டும் என்கிற எண்ணம் தான் அதிகமாக உள்ளது. பள்ளிகளிலும் மாணவர்களை பரிட்சைக்கு த்யார் செய்வதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். மனித பண்புகளை வளர்ப்பதற்கான சூழ்நிலை குறைவு.

3. soft skills குறைவாக இருப்பதால், மன அழுத்தம் அதிகமாகிற்து. 60 வயதில் வரக்கூடிய வியாதிகள் தற்போது 30 வயது இளைஞர்களை தாக்குகின்ற்ன. இரத்த அழுத்தம், இருதய நோய்கள், சர்க்கரை வியாதி, அமிலத்தன்மை ஆகிய நோய்கள் இளைஞர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகின்றன.

4. மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடியே மனித பண்புகள் வளர பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிக பங்கு உண்டு. சமூக சேவையில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். சமுதாயத்துடன் இணைந்து ப்ணியாற்றும் திறன் மேம்படவேண்டும்.

5. தற்போதுள்ள பாட திட்டங்களில், நீதி போதனைகள் குறைந்து விட்டன அல்லது நீக்கப்பட்டு விட்டன. மேலும், நகர்புறங்களில், கூட்டு குடும்ப முறை குறைந்து விட்டன. அதனால. குழந்தைகள் வீட்டு பெரியவர்களுடன் பழக வாய்ப்புகள் குறைந்து விட்டன. குழந்தைகளுக்கு கதைகள் மூலம் நீதிகளை கூறும் திறமையை வளர்க்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடையே hard skills எனப்படும் அறிவுத்திறன் மட்டும் வளர்வது போதாது. soft skills என்ப்படும் மனிதப்பண்புகள் வளரும் போதுதான, இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.


வெள்ளி, 30 மே, 2008

தமிழ் நடிகர் சிவகுமாரின் கம்பராமாயண சொற்பொழிவு

Tamil Actor Sivakumar talking on Kamba Ramayana அனைவருக்கும் நடிகர் சிவகுமாரை ஒரு நடிகராகவோ அல்லது ஒரு ஓவியராகவோ தான் தெரியும். நேற்று (29 மே) மாலை, பப்ளிக் ரிலேஷன் கவுன்சில் ஆஃப் இந்தியா (Public Relations Council of India - PRCI) சென்னை கிளை தங்களது கூட்டத்தில் பேச நடிகர் சிவகுமாரை அழைத்திருந்தார்கள்.

ஒரு திரைப்பட நடிகர், சினிமா அல்லது டி.வி. பற்றிதான் பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த சமயத்தில், அவர் கம்பராமாயணத்தை பேச ஆரம்பித்தார்.
நல்ல தமிழில், தங்கு தடையின்றி சுமார் 75 கம்ப ராமாயண பாசுரங்களை தன்னுடைய நினைவிலிருந்து கொணர்ந்து (கையில் ஒரு குறிப்பும் இல்லாமல்) பேசியது அனைவருக்கும் வியப்பாக இருந்தது.
கம்பராமாயண பாசுரங்களையும், வசனங்களையும் வாய்ஸ் மாடுலேஷனுடன பேசி அசத்தினார். அவரது அரை மணி பேச்சு முடிந்தவுடன் நண்பர் சிவகாமிநாதன் "ஐயா. நீங்கள் பேசும் போது, நான் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து இருந்தேன். உங்கள் முகம் எனக்கு தெரியவில்லை; ராமனை பார்த்தேன்; பரதனை பார்த்தேன்; சீதையை பார்த்தேன். எங்களை ராமாயண காலத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள்" என்றார்.
நாங்கள் அனுபவித்த அநத ராமாய்ண சொற்பொழிவை அனவரும் அனுபவிக்க எண்ணி, PRCI யின் தலைவர் திரு சுதாங்கன் அவர்களின் அனுமதியுடன், என்னுடைய வெற்றிகுரலில் வெளியிடுகிறேன்.
கிளிக் செய்து அனுபவியுங்கள். (25 நிமிடங்கள்)



கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
இந்த சொற்பொழிவை டவுன்லோடு செய்யவேண்டுமா? இந்த லிங்கை வலது கிளிக் செய்து டெஸ்க்டாப்பில் சேமியுங்கள். (23 mb)

செவ்வாய், 13 மே, 2008

கம்யூனிஸ்ட் தோழர்களின் 'தீண்டாமை ஒழிப்பு' இரட்டை வேடம்

பெத்தான்வலசு கிராமத்தை பற்றிய ஜீனியர் விகடன் ரிப்போர்ட் கடந்த சில நாட்களாக உத்தபுரத்தில், தலித்துக்ளையும், இதர சாதியினரையும் பிரித்து வைத்த ஒரு சுவரை தகர்ப்பதில் கம்யூனிஸ்ட் தொழர்கள் காட்டிய ஆர்வம் மெய்சிலிர்க்க வைத்தது. அகில இந்திய தலைவர் பிரகாஷ் காரத் அவர்களே நேரில் வந்து ஒரு பரபரப்பூடடினார். விஷயம் இதுதான்.

1982ல், உத்தபுரம் கிராமத்தில், சுமார் 2200 தலித் குடும்பங்களும், சுமார் 800 பிற்படுத்தப்பட்ட பிள்ளைமார்கள் குடும்பங்களும் இருந்தன. ஒரு சில சமூக விரோதிகளின் தவறான நடவடிக்கையால், இரு சமூகத்தினருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இரு சமூகத்து பெரியவர்களூம் மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி, இரு பகுதிகளையும் பிரித்து, ஒரு 'சமாதான சுவர்' எழுப்பினர்.

நான் ஒரு சில தலித் தலைவர்களிடம் பேசினேன். கடந்த 26 ஆண்டுகளாக எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. தலித் மக்களும், பிள்ளைமார்கள் வீடுகளில், பண்ணைகளில் வேலை செய்கிறார்கள். இரட்டை குவளை அங்கு இல்லை என்கிறார்கள். அவரவர்கள் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டு வருகிறார்கள்.


அநத 1982 நிகழ்ச்சிக்குப்பிறகு, பிள்ளைமார்கள் குடும்பம் 800லிருந்து தற்போது 200ஆகக் குறைந்துவிட்டது. திடீரென்று நம் கம்யூனிஸ்ட் தோழர்களூக்க 'ஞானோதயம்' வந்தது. 'சமாதான சுவராக' எழுப்பட்ட சுவரை 'தீண்டாமை சுவ்ராக' சித்தரித்து, ஏதோ, தாங்கள் தீண்டாமையை ஒழிக்க வந்த புனிதர்களாக தங்களை மீடியாக்களில் பிரபலப்படுத்திக் கொண்டார்கள்.


அமைதியாக இருந்த உத்தபுரத்தில், 'தீண்டாமை ஒழிப்பு' என்கிற பெயரில், ஒரு மாபெரும் 'தீண்டாமை திணிப்பை' கொடுத்துவிட்டு, குட்டையை குழப்பிவிட்டு குதூகலிக்கிறார்கள்.


இது ஒருபுறம் இருக்க, சிவகங்கை மாவட்டத்தில், தேவக்கோட்டை தாலுக்காவில், 'பெத்தான்வலசு' என்கிற ஒரு கிராமத்தில், உடையார் கிருத்துவர்களும், தலித் கிருத்துவர்களும் வசித்து வருகிறார்கள். இந்துககளிலாவது, சாதி பேதங்கள் இருப்பதை ஒப்புக்கொண்டு அதை தவிர்க்க சட்டரீதியான பாதுகாப்பு த்லித் மக்களூக்கு அளித்துள்ளார்கள்.


ஆனால் கிருத்துவ மதத்தில் ஏது சாதி பிரிவினை? இருந்தாலும், பெத்தான்வலசு கிராமத்தில் இரு சாதி பகுதிகளூக்குமிடையே, ஒரு தடுப்பு உள்ளது. கடந்த வாரம் ஜீனியர் விகடனில் இந்த கிராமத்தைப்பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது.


தற்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், இந்த கிராமத்தை சேர்ந்தவர். அவர் ஒரு தலித் கிருத்தவர். அவர் அண்மையில் இந்த கிராமத்திற்கு செல்லும்போது, இந்த உண்மையான 'தீண்டாமை சுவரை" நீக்க கோரினார். அவருக்கே அங்கு மரியாதை இல்லை. மனம் ஒடிந்து சென்னை திரும்பி விட்டார். 'என்று அங்கு தீண்டாமை ஒழிகிற்தோ, அன்றுதான் அங்கு செல்ல இருப்பதாக' மனம் நொந்து கூறிய்தாக அந்த் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


அண்மையில், பல இடங்களில் தலித் கிருத்தவர்கள் கேவலப்படுத்தப்ப்டுவதை எதிர்த்து, சுமார் 200 குடும்பங்கள் (1000 பேர்) இந்து மதத்திற்கு திருநெல்வேலியில் தாய்மதம் திரும்பும் விழாவாக நடத்தினர். அதேபோன்று, பெத்தான் வலசு கிராமத்திலுள்ள பல தலித் கிருத்துவர்களும் 'தாய் மதம்' திரும்ப இருப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.


ஐயா! கம்யூனிஸ்ட் தோழர்களே! ச்மாதானமாக இருந்த உத்தபுரத்தில் குழப்பத்தை உண்டு பண்ணினீர்களே. உயர்நீதிமன்ற நீதிபதியே மனம் நொந்து வருந்திய பெத்தான்வலசு கிராமத்தில் , தீண்டாமை இல்லை என்று கூறும் கிருத்துவ மதத்தில், தீண்டாமையை தீவிரமாக கடைபிடிக்கும் பெரிய மனிதர்களை ஏன் கண்டிப்பதில்லை. பிரகாஷ் காரத் போன்ற தேசிய தலைவர்களை அழைத்து வந்து பத்திரிக்கைகளில் பரபரப்பாக்கவில்லை.

ஏன் இந்த இரட்டை வேடம்? விளக்க முடியுமா? உங்கள் 'தீண்டாமை ஒழிப்பு' உணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஞாயிறு, 20 ஏப்ரல், 2008

காங்கிரஸ்காரர்களே! ஜால்ராவையும், கோஷ்டி சண்டையையும் சற்றே நிறுத்தி, ராஜீவிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை பாருங்கள்.

இரண்டு நாட்கள் முன்பு, பிரியங்கா காந்தியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியும், வேலூர் சிறையில் இரகசியமாகவும், விதி முறைகளை மீறியும் சந்தித்தது பற்றிய பத்திரிகைகளில் வந்த செய்திகளை குறிப்பிட்டு இருந்தோம். அந்த இடுகையில், ஏன் பிரியங்காவோ, ராஜீவ் குடும்படத்தினரோ, மீடியாவோ அந்த துயர சம்பவத்தில், தீவிரவாததிற்கு பலியான பல குடும்பங்களை ஏன் கண்டு கொள்ளவில்லை என்று எழுதியிருந்தோம்.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா இதை ஒரு பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த செய்தியில், இந்த சம்பவத்தில் உயிர் நீத்த காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் சிலரது உணர்வுகளை வெளியிட்டுள்ளார்கள். மற்றும், உச்ச நீதிமன்றத்தில் தண்ட்னை குறைப்பு அப்பீலில், நீதிபதிகள் 1999ல் வெளியிட்டுள்ள தீர்ப்பையும் குறிப்பிட்டு உள்ளார்கள். அந்த தீர்ப்பில், நீதிபதிகள், இந்த துயர சம்பவத்தில் உயிர் நீத்த மற்றவர்களைப்பற்றி குறிப்பிடு உள்ளார்கள்.

சென்ற ஆட்சியில், ஜெயலலிதா, உயிர் நீத்த அனைத்து காவல் துறையினருக்கும் ஒரு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்திருந்தார். ஆட்சி மாறியது; காட்சிகள் மாறிவிட்டன.

ராஜீவ் காந்தியை ஏன் கொலை செய்தார்கள் என்று அறிய வேண்டுமானால், இந்த வழக்கை புலனாய்வு செய்த கார்த்திகேயனிடமோ அல்லது, உளவுத்துறையிடமோ கேட்டிருக்கலாமே. அதை விட்டு விட்டு, ஏன் விதிமுறைகளை மீறி, இரகசிய்மாக நளினியை சந்திக்க வேண்டும்? இது பல சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளதே!

ராஜீவிற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் பலத்த காயங்களுடன் தப்பிய காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் (ஓரிரு காங்கிரஸ்காரர்கள் உட்பட) ஆகியோரது குடும்பத்தினரை 17 ஆண்டுகளாக ஏன் சோனியா குடும்பத்தினர் சந்திக்கவில்லை. நளினிக்கு மகள் இருப்பதுபோல், பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தில் குழந்தைகள் இல்லையா? தலைவனை இழந்த அந்த குடும்பத்தினர் எவ்வாறு பாடுபட்டிருப்பார்கள்?

ஜால்ரா தட்டுவதிலும், கோஷ்டி சண்டையிலுமே காலத்தை தள்ளும் காங்கிரஸ்காரர்கள் என்ன செய்தார்கள்? (ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று கூறிய அர்ஜுன் சிங்கை, 'sycophant' அதாவது ஜால்ரா என்று ஜெயந்தி நடராஜன் கூறியது குறிப்பிடத்தக்கது)

கோகிலவாணி என்கிற ஒரு சிறிய பெண் குழந்தை, ராஜீவ் பற்றி தான் எழுதிய கவிதையை, ராஜீவிடம் படித்துக்கொண்டிருக்கும் போது, வெடிகுண்டில் சிதறியதே; அந்த பிஞ்சை இழந்த குடும்பம் இது நாள் வரை என்ன வேதனை பட்டுக்கொண்டிருக்கும்.

காங்கிரஸ் காரர்களே! கொஞ்ச நேரம் உங்கள் ஜால்ராவையும் , கொஷ்டி சண்டையையும் நிறுத்துங்கள். உங்கள் தலைவருக்காக உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்ட வர்களது குடும்பங்களை சந்தியுங்கள். புண்ணியமாக இருக்கும்.

கொலை குற்றத்தில் தண்டனை அனுபவிப்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் சோனியா மற்றும் காங்கிரஸ்காரர்கள், பாதிக்க்ப்பட்டவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது வெட்கக்கேடானது.

புதன், 16 ஏப்ரல், 2008

ராஜீவ் காந்தி படுகொலை - அவருக்காக உயிர் நீத்த 30 காவல் துறையினர் என்ன பாவம் செய்தார்கள்?

priyanka gandhi met Nalini at Vellore Prison தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரே பரபரப்பு. ஒரு பக்கம், தலைமை செயலாளர் போனை ஒட்டு கேட்டதாக வரும் செய்திகள். அதே நாளில் பிரியங்கா காந்தி, அண்மையில் வேலுர் சிறையில் நளினியை சந்தித்தாக வரும் செய்திகள்.

பிரியங்கா - நளினி சந்திப்பு அகில இந்திய அளவில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கி விட்டது. காரணம் எதுவாக இருந்தாலும், பல காரணங்கள் கூறப்படுகின்ற்ன. நளினியின் தூக்கு தண்டனை சோனியா காந்தியின் கருணையால் ரத்து செய்யப்பட்டது. நளினிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதால், அதை காரணம் காட்டி, மீடியாவும் கருணை மழையை பொழிந்தது. பிரியங்காவும், தன்னுடைய தகப்பனாரை கொன்றவர்களை மன்னித்து விட்டதாக கூறிவிட்டார். இது போராதா! நம்முடைய மீடியாக்களுக்கு - தலையில் வைத்துக்கொண்டு கூத்தாட!

இதில் நான் கருத்து கூற விரும்பவில்லை. இன்னா செய்தாருக்கும் நன்மை செய்வது அவரவர்கள் விருப்பம்.

ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்த அன்று, அவருடன் சுமார் 30 போலீஸ் காவலர்களும், அதிகாரிகளும் உயிர் துறந்தனரே! யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா! அவர்களுக்கும் குடும்பம் இல்லையா? குழந்தைகள் இல்லையா? பணியில், தீவிரவாததிற்கு பலியான, கடமை வீரரகளுக்காக சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் என்ன செய்தார்கள்? எந்த மீடியாவும் ஏன் வாய் திறக்கவில்லை.

காங்கிரஸ்காரர்கள் அவர்களது கோஷ்டி சண்டையில் செலுத்தும் நேரத்தில், நூற்றில் ஒரு பங்கை, தங்கள் தலைவருக்கு காவல் பணியில் இருந்து உயிர் நீத்த காவல் துறையினருக்காக செலவிடக்கூடாதா?

திங்கள், 14 ஏப்ரல், 2008

பாரதியின் பார்வையில் - மனமே வெற்றிக்கு விதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்வெற்றி குரல் . இதழ் 2

நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சென்ற முதல் இதழில் பாரதி கண்ட புதுமை பெண்ணாக, ஜெயஸ்ரீயை அறிமுகம் செய்து வைத்தோம். மராத்தியை தாய்மெழியாகக் கொண்ட ஜெயஸ்ரீ பாரதிமேல் அளவு கடந்த பக்தி கொண்டு இருப்பதையும் எழுதியிருந்தோம். பாரதி பார்வையில் ப்ல கருத்துக்களை ஏன் ஜெயஸ்ரீ வாயிலாக வெளியிடக்கூடாதா என்ற ஆலோசனைகள் வந்தன.
பெங்களூரில் சாஃப்ட்வேர் பணியிலிருந்தாலும், என்னுடைய் வேண்டுகோளை எற்று, "மனமே வெற்றிக்கு விதையாகும்" என்கிற கருத்தில், பாரதியின் பார்வையை அலசி நான்கு நிமிட ஒலி இதழை அனுப்பி விட்டார்.
கிளிக் செய்து நீங்களும் கேளுங்களேன். தங்கள் கருத்துக்களை என்னுடைய prpoint@gmail.com என்கிற இமெயிலுக்கு அனுப்ப வேண்டுகிறேன்


இந்த ஒலிபதிவை கீழ்கண்ட இணைய தளங்களிலும் கேட்கலாம்


வியாழன், 3 ஏப்ரல், 2008

ஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்!

ஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்
வெற்றி ஒலி - இதழ் 1

மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலிருந்து சென்னை வந்து குடியேறிய, மராத்திய மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் ஜெயஸ்ரீயிடம் பத்து நிமிடம் பேசிப்பாருங்கள். ஆங்கிலம் கலப்பில்லாத அழகு தமிழில் பாரதியாரையும், திருவள்ளுவரையும் நிமிடத்திற்கு ஒருமுறை மேற்கோள் காட்டி ஆரவாரம் இல்லாமல் அசத்துகிறார்.


சென்னையில் பொறியியல் பட்டம் பெற்று, தற்போது பெங்களூரில், சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் இந்த இளம் நங்கை, தமிழ் மொழி மீது அளவில்லா காதல் கொண்டு, பள்ளியில் இரண்டாம் பாடமாக தமிழை எடுத்து படித்தார். திருவல்லிக்கேணியில் இருந்ததாலோ என்னவோ, முண்டாசு கவிஞன் பாரதிமீது பற்று கொண்டு, பாரதி கண்ட ஒரு புதுமை பெண்ணாக வலம் வருகிறார். பாரதி பாடல் அனைத்தும் இவருக்கு மனப்பாடம்.


அவர் படித்த பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் துவக்கி, மானவர்களிடையே தமிழ் ஆர்வத்தை தூண்டினார். 'தமிழ் தமிழ்' என்று நொடிக்கொருமுறை ஆரவாரம் செய்யும் அரசியல் வாதிகளும், அரசும், அண்ணா பல்கலைகழகமும், பொறியியல் கல்லூரிகளில் ஏன் இது போன்று 'தமிழ் மன்றங்களை' துவக்கி, இளஞர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்கவில்லையே என்று இந்த மராத்திய பெண் ஆதங்கப்படுகிறார்.


'Multi faceted personality' என்று கூறுவார்கள். தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறந்த பேச்சாளரான ஜெயஸ்ரீக்கு, தமிழக முதல்வர்கள் திரு கருணாநிதியும், செல்வி ஜெயலலிதாவும் பாராட்டி கவுரத்திருக்கிறார்கள்.


ஜெயா டிவி, விஜய் டிவி, தூர்தர்ஷன் ஆகிய டி.வி.களில் சுமார் 200 நிகழ்ச்சிகளுக்கு மேல் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ஒரு சிறந்த டன்ஸர் கூட. டாகுமெண்டரி படங்களில் நடித்தும் உள்ளார். தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்புகளையும் உதறித் தள்ளிவிட்டு, சாஃப்ட்வேர் தொழிலுக்கு சென்று விட்டார்.


டாகடர் கலாமின் அறிவுரைப்படி, சமூக சேவைகளில் அதிக அளவில் பெங்களூரில் ஈடுபட்டு வருகிறார். கட்டிட தொழிலில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபடுகிறார். வசதியற்ற மக்களின் கல்விப்பணிக்காக பாடுபடுவதே தன்னுடைய வாழ்க்கை இலட்சியமாக கொண்டுள்ளார்.

அவர் அண்மையில் 'இந்தியா விஷன் 2020' பற்றிய ஒரு கூட்டத்திற்கு வந்திருந்தபோது, இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நொடியில் அனைவரையும் தன்னுடைய பேச்சால், கவரக்கூடிய தலைமை பண்புகள் கண்டு வியந்தேன். பாரதி கண்ட ஒரு புதுமை பெண் இவர் தானோ!
வருங்கால இந்தியாவிற்கு ஒரு பெண் தலைவர் உருவாகி வருவதாக எனக்கு தோன்றிய்து. சாதிக்கத்துடிக்கும் இவரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கலாமே என்கிற எண்ணத்தில், உடனே அவரிடம் ஒரு பேட்டி எடுத்தேன். கிளிக் செய்து இந்த பேட்டியை கேட்டு மகிழலாமே! ( 14 நிமிடங்கள்) உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்களேன்.
Video thumbnail. Click to play
Click to play
இந்த ஒலி இதழை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்

செவ்வாய், 1 ஏப்ரல், 2008

தமிழில் இணைய ஒலி இதழ் - "வெற்றி ஒலி" - விரைவில்!

பிரைம் பாயிண்ட்டின் வெற்றி ஒலி, இணைய ஒலி இதழ் பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் சார்பில் இதுவரை, ஆங்கிலத்தில் பாட் யூனிவர்ஸல் (PodUniversal) என்கிற ஒரு இணைய ஒலி இதழை கடந்த ஓராண்டுக்கு மேலாக நடத்திவருகிறேன். இணயத்தில் பிளாக் (blog) போல், இந்த podcast என்கிற இணைய ஒலி இதழ்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. இதுவரை நான் 100 இணைய ஒலி இதழ்களை ஆங்கிலத்தில் பல தலைப்புகளில் வெளியிட்டுள்ளேன்.
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் கலாம் உட்பட பல அறிஞர்களை நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் பேட்டி எடுத்து, இணைய ஒலி இதழாக வெளியிட்டுள்ளேன். http://www.poduniversal.com/ சென்று பார்க்கலாம்.
அதே போன்று தமிழிலும் ஒரு இணைய ஒலி இதழை 'வெற்றி ஒலி' என்கிற தமிழ் ஒலி இதழை இந்த 'வெற்றி படிகளில்' தவழவிடலாம் என்று எண்ணியுள்ளேன். PodUniversal லில் உள்ளது போல், அனவருக்கும் என்றுமே பயன்படக்கூடிய விதத்தில் தரமான் முறையில் இருக்கும்.
ஒரு நான்கு அல்லது ஐந்து நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்களேன். 'வெற்றி ஒலி' கம்பீரமாக ஒலிக்க இருக்கிறது.
இதற்கு இடையில் உங்களுக்கு என்ன தேவை? தமிழில் வேறு யாராவது இந்த podcast என்ப்படும் ஒலி இதழ்களை வெளியிடுகிறார்களா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்களேன். உபயோகமாக இருக்கும்.

செவ்வாய், 18 மார்ச், 2008

நாத்திகர்களுக்கும் கை கொடுக்கும் தில்லை நடராஜர்

தில்லை ந்டராஜர் கோவில் கடந்த சில வாரங்களாக தில்லையில் நடராஜர் முன்னிலையில் தேவாரம் பாடுவது சம்பந்தமாக ஒரு பெரிய சர்ச்சை கிளம்பி, போலீஸ் தடியடி, கைது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிறகு அமைதி திரும்பியது போல் தோன்றுகிறது. இன்றைய பத்திரிகைகளீல் தமிழக முதல்வர், தேவாரம் பாடிய திரு ஆறுமுகசாமி அவர்களுக்கு மாதம் ரூபாய் மூவாயிரம் கருணை தொகையும், ரூபாய் 15 மெடிகல் செலவிற்கும் தருவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நல்ல செய்தி. எந்த நோக்கத்தில் இந்த முடிவு எடுத்தாலும், தில்லையில் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு தமிழக முதல்வர் ஆற்றும் பணி சிறப்பானதே.
இந்த தில்லை நடராஜர் கோவில் விவ்காரம், ஒரு பெரிய உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் தொன்மை வாய்ந்த மொழிகளில் சமஸ்கிருதமும், தமிழும் முதன்மையானவை. இன்றைக்கு தமிழ் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு காரணம், சைவமும், வைணவமுமே. பன்னிரு ஆழ்வார்களும் , அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழில் பாடிய பிரபந்தங்களும், தேவரம் திருவாசகமுமே, தமிழை ஒரு புனிதமான மொழியாக வளர்த்தன. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, இந்த தமிழ் பதிகங்கள் கோவிலில் அதற்குரிய பண்ணுடன் பாடப்படுகின்றன.

இன்றைய தமிழ் வளர்ச்சிக்கு சைவமும், வைணவமுமே 95 சதவிகிதம் காரணம். தமிழ் வளர்ப்பதாக கூறிக்கொள்பவர்கள் செயவது 'ஆரவாரம்' மட்டுமே. தங்கள் பிள்ளைகளை 'கான்வெண்டில்' படிக்கவைத்து, 'மம்மி, டாடி' சொல்ல வைத்து மகிழ்பவர்கள். தமிழ் டி.வி. சேனல்களில் பேசப்படும் தமிழைப்பற்றி பேசாமல் இருப்பதே நல்லது.
தில்லையில் நடந்ததெல்லாம், தமிழ் ஆர்வலர்கள் என்கிற போர்வையில், நாத்திகர்கள் செய்த ஆர்பாட்டம் என்று பத்திரிகைகள் கூறுகின்றன. தில்லை தீட்சிதர்களும் , நாத்திகர்கள் விரித்த வலையில் சிக்கி, சரியாக கையாளத் தெரியாமல், விவகாரத்தை பெரிது படுத்தி விட்டார்கள். ஏதோ, இந்து மதம், குறிப்பாக பிராமணர்கள் தமிழுக்கு எதிரி போன்ற் மாயத்தோற்றத்தை உருவாக்கி விட்டார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு 'தில்லை நடராஜரையும், திருவரங்கம் அரங்கனையும் பீரங்கி கொண்டு பிளக்கப்போவதாக' முழங்கிய நாத்திகர்கள், உண்மையிலே என்ன செய்தார்கள்? தங்கள் கொள்கைகளுக்கு மாறாக 'தேவாரம்' பாட துடிக்கிறார்கள். இப்போது நாத்திகம் பேசினால் யாரும் கேட்பதில்லை.

நாத்திகம் பேசும் பகுத்தறிவுவாதிகளின் முயற்சியால், தமிழ்நாட்டில் ஆன்மீகம் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. பகுத்தறிவு பேசப் பேச, 'தலையில் தேங்காய உடைத்துக்கொள்ளும்' அறிவுசாராத மூடநம்பிக்கைகள் பெருகத் தொடங்கிவிட்ட்ன. இந்தியாவில், தொன்று தொட்டு ஆன்மீகம், அறிவியல் சார்ந்தது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும், தேவையற்ற மூட நம்பிக்கைளை, பகுத்தறிவு வாதிகள் வளர்த்து விட்டனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில், இந்த அளவு மூட நம்பிக்கைகள் இல்லை. காரணம், அங்கு அதிகமாக யாரும் பகுத்தறிவு பேசுவதில்லை.
ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது. நாத்திகம் பேசுபவர்களுக்கும் தில்லை நடராஜர் தான் கைகொடுக்க வேண்டியதாகிவிட்டது. 'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியது' என்று கூறுவார்கள். ' தில்லை நடராஜனை பீரங்கி கொண்டு பிளக்கப்போவதாக முழக்கமிட்டவர்கள், தில்லை அம்பலத்தில் தேவாரம் பாட துடிப்பதை' இன்று பெரியார் உயிருடன் இருந்து பார்த்திருந்தால் என்ன கூறியிருப்பார்?

ஞாயிறு, 16 மார்ச், 2008

சமூக சேவையில் எவரெஸ்ட்டை ஒத்த 'எவரெஸ்ட் டீம்'

கார்த்திபன், டீம் எவரெஸ்ட்தமிழ் நாட்டிலுள்ள ஆரணியில் ஒரு எளிய நடுத்தர குடும்பத்திலிருந்து வரும் கார்த்திபன் (வயது 23) , ஒரு பொறியியல் பட்டதாரி. ஒரு பிரபல ஐ.டி கம்பெனியில் பணியாற்றுகிறார். நாற்பதாயிரம் பேருக்கு மேல் வேலைபுரியும் இந்த கம்பெனியில், சுமார் இரண்டாயிரம் பேரை இணைத்து "டீம் எவரெஸ்ட்" என்கிற சமூக் சேவை அமைப்பை துவக்கி, பல நற்பணிகளை சுமார் 18 மாதங்களாக செய்து வருகிறார்.


"டாக்டர் கலாம் என்கிற மாமனிதரின் தூண்டுதல் இல்லையென்றால், இன்று எங்களைப்போன்ற இளைஞர்கள், சமுதாயத்தைப்பற்றியே சிந்தித்து இருக்க மாட்டோம்." என்று பெருமையுடன் கலாமைப்பற்றி உணர்ச்சிபொங்க கூறும் கார்த்திபன், தன்னுடன் பணிபுரியும் 2000 நண்பர்களையும் இணைத்துக்கொண்டு, தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களிலும் உள்ள கிராமங்களில், கல்விப்பணி ஆற்றுகிறார். நிதி வசதியற்ற, நல்ல மார்க் எடுத்துள்ள ஏழை மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பெற உதவியுள்ளார்கள். அவர்கள் விடுக்கும் ஒரே கண்டிஷன், இந்த மாணவர்கள், தங்கள் கல்வி முடிந்தவுடன், அவர்களும் , தங்களைப்போன்ற மற்ற எழை மாணவர்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்பதே!



இந்த டீமிலுள்ள அனைவரும், விடுமுறை நாட்களில், அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்கும் விஜயம் செய்து, அங்கு உள்ளவர்களுடன் தங்களது அன்பையும் கொடுக்கிறார்கள். "நகரத்திலுள்ள இல்லங்களுக்கு நிதி உதவி தேவையில்லை. அங்கு உள்ள குழந்தைகளுக்கும், முதியோர்களூக்கும் தேவை அன்பு மட்டுமே. ஆனால் கிராமப்புறங்களிலுள்ள அனாதை ஆசிரமங்களூம், முதியோர் இல்லங்களுக்கும் நிதி உதவியும், அன்பும் தேவை" என்கிறார் கார்த்திபன். அதனால், யாருக்கு என்ன தேவையோ, அதை மட்டும் அளிக்கிறார்கள்.


"இந்த உலகில் கடைசி இரண்டு மனிதன் இருக்கும் வரை, யாருமே அனாதை இல்லை" என்று தத்துவமாக பேசி, நெகிழவைக்கிறார்.


இராஜராஜன் கட்டிய கோவிலில் ஒரு டியூப் லைட் போட்டு விட்டு, அதன் வெளிச்சமே தெரியாதவகையில், தங்களுடைய பெயரை பெரிய எழுத்தில் போட்டு அசத்தும், இந்த காலங்களில், ஆரவாரமே இல்லாமல், டாகடர் கலாமின் 2020 கனவுகளை, ந்னவுகளாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்த இரண்டாயிரம் இளைஞர்களும், தங்களுக்குள் கம்பெனியின் 'இண்டிரானெட் பிளாக்" மூலமாக தகவல்களை பறிமாறிக்கொள்கிறார்கள். இது வெளி உலகிற்கும் தெரிய வாய்பில்லை.


"எவரெஸ்ட் பாஸிடிவ்" என்கிற் ஒரு இணைய இதழையும் விரைவில் துவக்கி, பத்திரிகைகளில் வெளிவரும் பாசிடிவான விஷயங்களை (வருகிறதா என்ன?) தொகுத்து, தங்களது உறுப்பினர்களுக்கு இமெயிலில் சர்குலேட் செய்ய இருக்கிறார்கள்.


இந்த இளைஞர்களைப் பார்க்கும் போது, எதிர்கால இந்தியாவைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.


"டீம் எவரெஸ்ட்" இளைஞர்களை வாழ்த்துவோம். இந்த இளைஞர்களை தொடர்பு கொள்ள இமெயில் முகவரி teameverest@yahoo.co.in

சனி, 8 மார்ச், 2008

டாக்டர் அப்துல் கலாமுடன் ஒரு சிறப்பு நேர்முகம் - விஷன் 2020 அடைவதற்கு கார்பொரேட் நிறுவனங்களின் பங்கு

பிரைம்பாயிண்ட் அறக்கட்டளையினால் வெளியிடப்படும் PR-e-Sense என்கிற மாத மின் இதழ் 24 இதழ்களை வெளிட்டு மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. கடந்த பிப்ரவரி 08 இதழ் 'இரண்டாம் ஆண்டு சிரப்பு மலராக' வெளியிடப்பட்டது.

இன்று இந்தியர்கள் அனைவரையும் 'விஷன் 2020' ப்ற்றி தன்னம்பிக்கையுடன் பேசவைத்த பெருமை , 'இந்தியா 2020' புத்த்கம் எழுதிய டாக்டர் அப்துல் கலாமிற்கும், அவரது நண்பர் டாக்டர் ய.சு. ராஜனுக்கும் தான் சேரும்.

பிப்ரவரி 08 இதழை டாக்டர் ய்.சு ராஜன் 'கௌரவ ஆசிரிய்ராக' பொறுப்பேற்று தொகுத்து வழங்கி எங்களுக்கு பெருமை வழங்கினார். இந்த இதழில் டாக்டர் கலாமின் சிறப்பு நேர்முகமும், டாக்டர் ராஜனின் சிறப்பு நேர்முகமும் வெளியாகியுள்ளன.

ஆங்கிலத்திலுள்ள இந்த இதழை கீழ்கண்ட தளத்திலிருந்து டவுன்லோடு செய்து படிக்கவும். இந்த இதழை டவுன் லோடு செய்து மற்றவர்களுக்கும் அனுப்பவும்.

http://www.primepointfoundation.org/presense/presensze0208.pdf

டாக்டர் அப்துல் கலாமின் நேர்முகத்தை (ஆங்கிலம்) கேட்க, இங்கே கிளிக் செய்து கேட்கவும்.


வெள்ளி, 7 மார்ச், 2008

தீவிரவாத எதிர்ப்பும் மக்கள் உரிமையும்

நான் கடந்த மார்ச் 5ம் தேதி பதிவில், FACT என்கிற தீவிர வாத எதிர்ப்பு அமைப்பு நடத்திய ஒரு கண்காட்சி பற்றி கூறியிருந்தேன். 9ம் தேதி வரை நடை பெறவிருந்த அந்த கண்காட்சியை நேற்று (6ம் தேதி) மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த செய்தி இன்றைய (7ம் தேதி) செய்திதாள்களில் வந்துள்ளது.

விஷயம் இதுதான். இரண்டு அல்லது மூன்று இஸ்லாமியர் சென்னை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்து, இந்த கண்காட்சி நீடித்தால் மதக்கலவரம் ஏற்படும் என்றும் கண்காட்சி மனித உரிமைகளள மீறிவிட்டததகவும் புகார் கொடுத்துள்ளனர். உடனே, போலீஸ் அதிகாரிகளூம் களத்தில் இறங்கி, அதிரடியாக சில ஓவியங்களை சேதப்படுத்தியும், அதன் அமைப்பாளர்களை (பெண்கள் உட்பட) கைது செய்தும் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

அதன் அமைப்பாளர்கள் நிகழ்ச்சி துவ்ங்கிய 3ம் தேதி, பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கும், கண்காட்சி துவக்க விழாவிற்கும் அழைத்திருந்தார்கள். (பத்திரிகையாளன் என்கிற முறையில் எனக்கும் அழைப்பு வந்தது). அன்றைய தினம் எந்த பத்திரிகையாளர்களுமே, நான் உட்பட, போகவில்லை. மறுநாளும் அந்த நிகழ்ச்சி செய்தியாகவில்லை. நானும் ஒரு பத்திரிகையாளன் என்கிற வகையில், இரண்டு நாட்கள் கழித்து, அந்த சாலையில் செல்லும்போது, கண்காட்சியில் நுழைந்தேன். அதனால் தான் நான் 5ம் தேதி, என்னுடைய பிளாகில் பதிவு செய்தேன். இந்த போலீஸ் தலையீட்டிற்கு பிறகு, இந்த கண்காட்சி உலக அளவில் செய்தி ஆக்கப்பட்டுவிட்டது.

அவுரங்கசீப்பின் அண்ணன் தாரா சுகோ பற்றி மிகவும் உயர்வாக குறிப்பிட்டு இருந்தார்கள். அவர் மற்ற மதத்தினரை எவ்வாறு மரியாதையுடன் நடத்தினார் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்கள். (படம்). மற்றொரு இடத்தில், அவுரங்கசீப் திருகுரான் மீது பற்று வைத்திருந்த்தார் என்றும் தன்னுடைய குல்லாவை அவரே தைத்துகொண்டதையும் விவரித்து இருந்தார்கள்.

aurangazeb elder borther Dara Shukoh discussing with Vedid Scholars
நல்ல குடும்பத்தில் பிறந்த பலர், வெறியர்களாக இருந்த வரலாறு நிறைய உண்டு. அந்த அமைப்பாளர்களிடம் பேசும் போது அவர்கள், " அவுரங்கசீப்பிற்கு பதிலாக அவரது அண்ணன் தாரா சுகோவே மன்னராக ஆகியிருந்தால், இந்திய நாட்டின் சரித்திரமே மாறியிருக்கும்' என்றார்கள்.

ஒரு சிலரது போலீஸ் கம்ப்ளெயிண்ட்டினால், இதுவரை பேசப்ப்டாத அவுரங்கசீப்பின் அராஜகம் பற்றிய கண்காட்சி இப்போது பெரிய அளவில் உலக அளவில் விவாதிக்கப்படுகிறது. (இந்த கண்காட்சி அமைப்பாளர்கள், கம்ப்ளெயிண்ட் கொடுததவர்களுக்கு நன்றி செலுத்தவேண்டும்)

"பிரபல ஒவியர், எம். எஃப். ஹுசேன் இந்து கடவுள்களை நிர்வாணமாக ஒவியம் வரைந்து காட்சியில் வைத்திருந்தபோது, மனித உரிமை அமைப்பினர் அது 'ஒவியனின் கலை உரிமை' என்று வாதிட்டனர். அப்போது, அவர்கள் மனதில், கோடிககண்க்கான ஆன்மீகத்தில் நம்பிக்கை உடையவர்களின் மனம் புண்படுவ்தைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இந்த அவுரங்கசீப் கண்காட்சியில், மனித உரிமை பறிபோகிவிட்டதாக அவர்கள் வாதிடுவது வியப்பாக இருக்கிறது" என்று இந்து அமைப்பினர் குறை கூறுகின்றனர்.

உலக அளவில் எல்லா மதத்திலும் நல்லவர்களும் உண்டு, தீயவர்களூம் உண்டு. 99.9999999 சதவிகிதத்தினர் நல்லவர்களே. அமைதியானவர்கள். ஒரு சில தீயவர்கள் செய்யும் கொடுமையான செய்கையால், அந்த மதத்தினர் அனனவரையும் குறை கூற முடியாது. அதே சமயம், அனைத்து மதத்தினரும், நல்லவர்களுக்காக வாதாட வேண்டும். தீயவர்களுக்காக வாதாடக்கூடாது.

என்னுடைய நெருங்கிய இஸ்லாமீய நண்பர்கள், (தங்கள் பெயரை வெளியிட விரும்பாமல்), மனம் வருந்தி, ஒரு சிலர், தங்கள் பப்ளிசிடிக்காக, அவுரங்கசீப் போன்ற கொடியவர்களை ஆதரித்து, போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து, எவருமே அறியாத ஒரு கண்காட்சியை உலக அளவில் செய்தியாக்கி, தங்கள் சமூகத்தை சார்ந்த மற்ற நல்லவர்களூம் வன்முறையை ஆதரிப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி விட்டார்களே என்று ஆதங்கப்படுகிறார்கள்.

புதன், 5 மார்ச், 2008

தீவிரவாதத்தின் கொடுமைகளை விளக்கும் ஒரு கண்காட்சி



Foundation against continuing terrorism
FACT என்கிற ஒரு அறக்கட்டளை தீவிரவாதத்தை எதிர்த்து விழிப்புணர்வை உறுவாக்கும் ஒரு அமைப்பு. சென்னையில் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் ஒரு கண்காட்சியை சென்னை லலித்கலா அகடமியில் நடத்தி வருகிறார்கள். 9ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அவுரங்கசீப் காலத்தில் நடந்த வன்முறைகளை, அவர் காலத்தில் எழுதப்பட்ட ஆவணங்கள் மூலமாகவே விவரித்திருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் பிகானீரில், அரசு கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

அவுரங்கசீப்பின் தந்தையார் ஷாஜஹான் மற்றும், மூத்த சகோதரர் தாரா சுகோ, மற்ற மதத்தினரிடம் எவ்வாறு அன்புடன் இருந்தார்கள் என்பதை விவரிக்கும் ஆவணங்களூம், படங்களும் காட்சியில் வைத்துள்ளார்கள்.


அதே சமயம், அவுரங்கசீப் எவ்வளவு கொடுமைக்காரனாக இருந்தார் என்பதை விளக்கும் ஆவணங்களும், படங்களும் காட்சியில் உள்ளன.

சத்ரபதி சிவாஜி அவுரங்கசீப் அவையிலிருந்து வெளியேறுகிறார்
ஒருமுறை ம்ராத்திய மன்னர் சிவாஜி, அவுரங்கசீப்பின் ஐம்ப்தாவது பிறந்த்நாள் விழாவிற்கு சென்று இருந்த சமயம், சிவாஜியை எவ்வர்று அவுரங்கசீப் அவமானப்படுத்தினார் என்பதையும் அதனால், சிவாஜி, அரசபையிலிருந்து வெளியேறியதையும் ஆவணங்கள் மற்றும் படம் மூலம் விவரித்துள்ளார்கள்.

சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குரு தேஜ் பகதூர் சிங், அவுரங்கசீப்பால் மக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதும் படம் மற்றும் ஆவணங்கள் மூலம் விவரித்துள்ளனர். அதனால்தான், தேஜ் பகதூ சிங் அவர்களின் மகன் குரு கோவிந்த சிங் ' கல்சா' என்கிற அமைப்பை 1699ம் ஆண்டு, தீவிரவாததிற்கு எதிராக துவங்கியதாக வரலாறு.


நல்ல குடும்பத்திலிருந்து வ்ந்தாலும், ஒரு சிலரது, அதிகார வெறியில், கொடூரமான தீவிரவாதத்தில் ஈடுபடும்போது, மக்கள் எவ்வாறு அவதிப்படுகிறார்கள் என்பதை இந்த கண்காட்சி அமைதியாக வெளிப்படுத்துகிறது.

சனி, 16 பிப்ரவரி, 2008

டாடா ஸ்டீலின் ஒரு நூற்றாண்டு சாதனையின் ரகசியம்

ஹிந்து ஆசியர் திரு என். ரவி புத்தகத்தை வெளியிட டாக்டர் சுவாமிநாதன் பெறுகிறார். டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநர் திரு முத்துராமன் மற்றும் எழுத்தாளர் ராணிமைந்தன் உடன் இருக்கிறார்கள்
இந்தியாவின் முதன்மை எஃகு நிறுவனமான டாடா ஸ்டீல் கடந்த ஆகஸ்ட் 2007 ல், நூறு ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிற்து. நூற்றாண்டு விழாவை ஒட்டி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திரு ஆர். எம். லாலா எழுதிய "Romance of Tata Steel" என்கிற ஆங்கில் புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகத்தில் டாடா ஸ்டீலின் நூற்றாண்டு சாதனைகளை தெளிவாக திரு லாலா எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பிரபல எழுத்தாளர் திரு ராணிமைந்தன் செய்துள்ளார். "டாடா ஸ்டீல் - இந்தியாவுடன் ஒரு காதல்" என்று பெயரிடப்பட்டுள்ள தமிழ் புத்தகத்தை "ஹிந்து" பத்திரிக்கையின் ஆசிரியர் திரு என். ரவி வெளியிட, பிரபல வேளான் விஞ்ஞானி டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார். டாடா ஸ்டீலின் நிர்வாக இயக்குநர் திரு பி. முத்துராமன் கலந்து கொண்டார். (படம்: இடமிருந்து - திரு முத்துராமன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், திரு என். ரவி, திரு ராணிமைந்தன்). இது ஒரு முன்னுரைதான். இனி விஷயத்திற்கு வருகிறேன்.

இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நூறு ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வருவதுடன், 'கோரஸ்" போன்ற பிரபல மேல் நாட்டு நிறுவனங்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு, உலக அளவில் ஆறாவது இடத்தில் (விரைவில் ஐந்தாவது இடத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது) இருக்கும் இந்த நிறுவனத்தின் சதனையின் ரகசியம் என்ன என்பதை அறிய ஆவல் மிகுதியால் கலந்து கொண்டேன். அங்கு விடை கிடைத்தது.

முதல் ரகசியம்

இந்த விழாவிற்கு, ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரிகளளயும், ஊழியர்களையும் அழைத்திருந்தார்கள். திரு முத்துராமன், அவர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்து பேசிக்கொண்டிருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதாரணமானதாக தோற்றம் அளித்தாலும், தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த செய்கை ஊக்கத்தை அளிக்கும். தான் பணியில் இல்லாவிட்டாலும், தன்னுடைய நிறுவனம் தன்னை மதிக்கும் என்கிற எண்ணமே அவர்களது ஆர்வத்தை தூண்டும். (ஒரு சில நிறுவனங்களைத்தவிர, 99 சதவிகித இந்திய நிறுவனங்கள் பணி ஓய்வு பெற்றவர்களை கண்டு கொள்வதே இல்லை)


இரண்டாவது ரகசியம்

திரு முத்துராமன் பேசுகையில், ஒரு மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவ்னங்களை ஆராய்ச்சி செய்ததாகவும், ஒரு சில நிறுவனங்கள் நானூறு ஆண்டுகளுக்கு மேல் தற்போதும் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அந்த ஆராய்ச்சியாளர், ஒரு நிறுவனம் நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்குவதற்கு நான்கு காரணங்களை கண்டுபிடித்ததாகவும் கூறினார்.

1. மக்களுடன் இணைந்து இருப்பது (oneness with the society),
2. காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளூம் தன்மை (adapatability),
3. நிர்வாகத்தை பரவலாக்குதல் (decentralisation) மற்றும்
4. சிறந்த நிதி நிர்வாகம் (Financial prudence)

ஆகிய இந்த நான்கு தன்மைகளைக்கொண்ட நிறுவனங்கள் பல ஆண்டுகள் வெற்றி நடை போடும் என்பதை திரு முத்துராமன் குறிப்பிட்டார்.

வெகு நாளாய் எனது மனத்தில் இருந்த ஒரு கேள்விக்கு விடை கண்ட மகிழ்ச்சியில் அரஙகத்தை விட்டு வெளிவந்தேன்.

டாடா ஸ்டீல் மட்டும் அல்லாமல், பல இந்திய நிறுவனங்களூம் பெரியாழ்வார் கூறியபடி "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்" ஆண்டுகள் நிலைத்து நின்று மக்கள் பணியாற்றி இந்தியாவிற்கு உலக அரங்கில் ஒரு உன்னத இடத்தை பெற்றுத்தர அனைவரும் வாழ்த்துவோம்.

செவ்வாய், 22 ஜனவரி, 2008

சன் டி.வி.யில் ஒளிபரப்பான "வலைபதிவுகள்' பற்றிய நிகழ்ச்சியின் முழு பதிவு

கடந்த ஜனவரி 13ம் தேதி, சன் நியூஸ் சானலில் 'வலைபதிவுகள்' பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. அந்த நிகழ்ச்சியில் என்னுடைய கருத்துக்களும் இடம் பெற்றன. கடந்த ஜனவரி 18ம் தேதியிட்ட என்னுடைய வலைபதிவில், நான் பங்கேற்ற பகுதியை மட்டும் வெளியிட்டிருந்தேன்.

பல நண்பர்கள், இந்த நிகழ்ச்சியின் முழு ஒளிப்பதிவையும் வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியின் 20 நிமிட முழு பதிவையும் கீழே வெளியிட்டுள்ளேன். தங்கள் கருத்துகளளயும் பதிவு செய்யவும். இதை மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

கிளிக் செய்து பார்க்கவும்


ஞாயிறு, 20 ஜனவரி, 2008

வலை பதிவுகள் (Blogs) மற்றும் வலை ஒலி இதழ்கள் (podcast) - இமயம் டி.வி யில் ஒரு நேர்முகம்

கே. சீனிவாசனுடன் இமயம் டி.விக்காக உரையாடுபவர் ஷில்பா
கடந்த ஜனவரி 17ம் தேதி, இமயம் டி.வியில் "வ்லை பதிவுகள் (Blogs) மற்றும் வ்லை ஒலி இதழ்கள் (podcast) பற்றிய என்னுடைய நேர்முகம் ஒளிபரப்பாகியது.

இந்த நேர்முகத்தில், வலைபதிவுகளை உபயோகப்படுத்துவது பற்றியும், வலை ஒலி இதழ்களை செலவில்லாமல் உருவாகுவது பற்றியும் விளக்கியிருக்கிறேன்.
நேர்முகத்தின் 15 நிமிட ஒலிபதிவினை கிளிக் செய்து கேட்கவும்.



சனி, 19 ஜனவரி, 2008

திருமணமின்றி சேர்ந்து வாழ்வது சரியா? தவறா? - இளைஞர்களின் சிறிய டிஜிடல் திரைப்படம்

digital film Perfect Knot production teamசென்னை அண்ணாபல்கலை கழகத்தின் எலக்ட்ரானிக் மீடியா பயின்ற என்னுடைய முன்னாள் மாணவர்கள் இணைந்து ஒரு புதிய முயற்சியாக ஒரு மணி நேர ஆங்கில திரைப்படம் ஒன்றை DVD டிஜிடல் மார்க்கெட்டிற்காக த்யாரித்துள்ளார்கள். அதன் பிரிவியூ ஷோவிற்கு என்னையும் அழைத்திருந்தாரகள். IDM என்கிற் பேனரில் தயாரிக்கப்ப்ட்ட இந்த டிஜிடல் படத்திற்கு செய்த செலவு ஐம்பது லட்சம் ரூபாய்தான். முழு படத்தையும் இந்த இளைஞர்கள் (தயாரிப்பாளர் அறிவழகனும் ஒரு இளைஞர்தான்) நான்கு மாதத்தில் முடித்துள்ளார்கள். (வழக்க்மாக ஒரு திரைப்படம் தயாரிக்க ஆகும் குறைந்த பட்ச செலவு சுமார் 5 கோடிகள்).


digital film Perfect Knot production team during preview இன்று (19 ஜனவரி 2008) நடந்த பிரிவியூ ஷோவிற்கு இந்த இளஞர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தது சிறப்பாக இருந்தது. அதுவும், துவக்கத்தை இளைஞர்களின் அன்னையர்கள் குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்தது மன நிறைவாக இருந்தது.

இந்த ஆங்கில டிஜிடல் திரைப்படம் "சேர்ந்து வாழ்வதை" (living together) என்கிற கருத்தை மைய்மாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேலை நாடுகளில் 'சேர்ந்து வாழும் கலாசாரம்" கொடி கட்டிப் பறக்கிற்து. அங்கு இருக்கும் பெரியவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் இந்த கலாசாரத்தை ஒழித்து, நம் நாடு போன்று ஒரு குடும்ப க்லாசாரத்தை உருவாக்க பெரும் பாடுபட்டு வருகிறார்கள். துரதிருஷ்டவசமாக, மேல் நாடுகள் எந்த க்லாசாரத்தை அறவே ஒழிக்க முயுற்சி செய்கிறார்களோ, அந்த "சேர்ந்து வாழும்" கலாசாரம் இந்தியாவின் பெரிய ந்கரங்களில் இளைஞர்களிடையே வேகமாக பரவி வருகிற்து.

இந்த கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த "The Perfect knot" என்கிற டிஜிடல் திரைப்படத்தில் ஒரு இளைஞனும் ஒரு இளைஞியும், திருமணமாகாமல் சேர்ந்து வாழ்கிறார்கள். அப்படி வாழும் போது, சமுதாயம் மற்றும் குடும்பத்தினரின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை அருமையாக கூறியிருக்கிறார்கள். ஒரு சர்ச்சைக்குறிய கருத்தை மையமாகக் கொண்டு எடுத்தாலும், மிகவும் மென்மையாக கையாண்டுள்ளார்கள். எந்தவொரு ஆபாசமும் இல்லாமல், குடும்பத்தினருடன் பார்க்ககூடிய அளவிற்கு, அதே சமயம், இளைஞர்களுக்கு ஒரு செய்தியாகவும் உள்ளது.

இந்த இளைஞர்களுக்கு இது ஒரு முதல் படமாக இருந்தாலும், ஒரு சீனியர் டீம் செய்ததைப்போல் இருக்கிற்து. இந்த ப்ரிவியூ ஷோவிற்கும், டி.வி.டி. வெளியீட்டு விழாவிற்கும், பிரபல திரைப்பட எடிட்டர் லெனின், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் ஜாம்பவான் பெரியவர் திரு கோபாலி , மற்றும் அண்ணா பல்கலை கழக பேராசிரியர்கள் வந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த டீமிலிருந்து ஒரு பாலசந்தர், ஒரு பாரதிராஜா, ஒரு பாக்யராஜ், ஒரு ரஹ்மான் உருவாக வாய்ப்புள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் அறிவழகன், இயக்குநர் கவுதம், இசை அமைப்பாளர் விஷால் மற்றும் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு "ஓ" போடுவோம்.

வெள்ளி, 18 ஜனவரி, 2008

இணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்

கடந்த ஜனவரி 13ம் தேதி, சன் நியூஸ் சேனலில், இணையதள வலைபதிவுகளளப் பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. அதில் என்னுடைய கருத்துகளும் இடம் பெற்றன. அந்த நிகழ்சீசியிலிருந்து என்னுடைய பகுதியை கீழே வெளியிட்டுள்ளேன். கிளிக் செய்து பார்க்கவும்.

வியாழன், 10 ஜனவரி, 2008

வெற்றி படிகள் - கேட்கும் திறன், மனப்பாங்கு, நேரப்பங்கீடு

நான் சென்ற பதிவில், இமயம் டி.வி.யில் ஒளிபரப்பப்படும் என்னுடைய தொடர் பேச்சினைப்பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.

கடந்த ஜனவரி 7,8 மற்றும் 9ம் தேதிகளில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் ஒலிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.

ஒவ்வொரு ஒலிப்பதிவையும் 'கிளிக்' செய்து கேட்கவும்.

1. வெற்றிப்படிகள் - மனப்பாங்கு (Attitude)




அல்லது கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857051

இந்த ஒலிப்பதிவை mp3 யில் டவுன்லோடு செய்ய - இந்த லிங்கை வலது கிளிக் செய்து டெஸ்க்டாப்பில் பதிவு செய்யவும்

உங்கள் கருத்துகளை prpoint@gmail.com என்கிற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கருத்துகளளயும் இந்த பதிவின் 'கமெண்ட்' பகுதியிலும் பதிவு செய்யவும்.



அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...