This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

சனி, 16 பிப்ரவரி, 2008

டாடா ஸ்டீலின் ஒரு நூற்றாண்டு சாதனையின் ரகசியம்

ஹிந்து ஆசியர் திரு என். ரவி புத்தகத்தை வெளியிட டாக்டர் சுவாமிநாதன் பெறுகிறார். டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநர் திரு முத்துராமன் மற்றும் எழுத்தாளர் ராணிமைந்தன் உடன் இருக்கிறார்கள்
இந்தியாவின் முதன்மை எஃகு நிறுவனமான டாடா ஸ்டீல் கடந்த ஆகஸ்ட் 2007 ல், நூறு ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிற்து. நூற்றாண்டு விழாவை ஒட்டி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திரு ஆர். எம். லாலா எழுதிய "Romance of Tata Steel" என்கிற ஆங்கில் புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகத்தில் டாடா ஸ்டீலின் நூற்றாண்டு சாதனைகளை தெளிவாக திரு லாலா எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பிரபல எழுத்தாளர் திரு ராணிமைந்தன் செய்துள்ளார். "டாடா ஸ்டீல் - இந்தியாவுடன் ஒரு காதல்" என்று பெயரிடப்பட்டுள்ள தமிழ் புத்தகத்தை "ஹிந்து" பத்திரிக்கையின் ஆசிரியர் திரு என். ரவி வெளியிட, பிரபல வேளான் விஞ்ஞானி டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் பெற்றுக்கொண்டார். டாடா ஸ்டீலின் நிர்வாக இயக்குநர் திரு பி. முத்துராமன் கலந்து கொண்டார். (படம்: இடமிருந்து - திரு முத்துராமன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், திரு என். ரவி, திரு ராணிமைந்தன்). இது ஒரு முன்னுரைதான். இனி விஷயத்திற்கு வருகிறேன்.

இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நூறு ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வருவதுடன், 'கோரஸ்" போன்ற பிரபல மேல் நாட்டு நிறுவனங்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு, உலக அளவில் ஆறாவது இடத்தில் (விரைவில் ஐந்தாவது இடத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது) இருக்கும் இந்த நிறுவனத்தின் சதனையின் ரகசியம் என்ன என்பதை அறிய ஆவல் மிகுதியால் கலந்து கொண்டேன். அங்கு விடை கிடைத்தது.

முதல் ரகசியம்

இந்த விழாவிற்கு, ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரிகளளயும், ஊழியர்களையும் அழைத்திருந்தார்கள். திரு முத்துராமன், அவர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்து பேசிக்கொண்டிருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதாரணமானதாக தோற்றம் அளித்தாலும், தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்த செய்கை ஊக்கத்தை அளிக்கும். தான் பணியில் இல்லாவிட்டாலும், தன்னுடைய நிறுவனம் தன்னை மதிக்கும் என்கிற எண்ணமே அவர்களது ஆர்வத்தை தூண்டும். (ஒரு சில நிறுவனங்களைத்தவிர, 99 சதவிகித இந்திய நிறுவனங்கள் பணி ஓய்வு பெற்றவர்களை கண்டு கொள்வதே இல்லை)


இரண்டாவது ரகசியம்

திரு முத்துராமன் பேசுகையில், ஒரு மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவ்னங்களை ஆராய்ச்சி செய்ததாகவும், ஒரு சில நிறுவனங்கள் நானூறு ஆண்டுகளுக்கு மேல் தற்போதும் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அந்த ஆராய்ச்சியாளர், ஒரு நிறுவனம் நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்குவதற்கு நான்கு காரணங்களை கண்டுபிடித்ததாகவும் கூறினார்.

1. மக்களுடன் இணைந்து இருப்பது (oneness with the society),
2. காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளூம் தன்மை (adapatability),
3. நிர்வாகத்தை பரவலாக்குதல் (decentralisation) மற்றும்
4. சிறந்த நிதி நிர்வாகம் (Financial prudence)

ஆகிய இந்த நான்கு தன்மைகளைக்கொண்ட நிறுவனங்கள் பல ஆண்டுகள் வெற்றி நடை போடும் என்பதை திரு முத்துராமன் குறிப்பிட்டார்.

வெகு நாளாய் எனது மனத்தில் இருந்த ஒரு கேள்விக்கு விடை கண்ட மகிழ்ச்சியில் அரஙகத்தை விட்டு வெளிவந்தேன்.

டாடா ஸ்டீல் மட்டும் அல்லாமல், பல இந்திய நிறுவனங்களூம் பெரியாழ்வார் கூறியபடி "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்" ஆண்டுகள் நிலைத்து நின்று மக்கள் பணியாற்றி இந்தியாவிற்கு உலக அரங்கில் ஒரு உன்னத இடத்தை பெற்றுத்தர அனைவரும் வாழ்த்துவோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...