This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

ஞாயிறு, 16 டிசம்பர், 2007

வெற்றியின் துவக்கம் - தலைமை பண்பு

வெற்றி படிகளுக்கு தலைமை பண்பு தேவை அண்மையில் "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பத்திரிகை "லீட் இந்தியா" போட்டியை அறிவித்துள்ளார்கள். இந்த போட்டியின் நோக்கம் தலைமை பண்புகள் உள்ள ஒரு இளைஞரை தேர்ந்தெடுப்பது. பல கட்டங்களாக நடைபெறும் இந்த போட்டி இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த போட்டியை பற்றி விளம்பரபடுத்துவதற்காக தங்களுடைய "டைம்ஸ் நவ்" டி.வி. யில் தலைமை பண்புகள் பற்றிய ஒரு குறும் படத்தை ஒளிபரப்பி வருகிறார்கள்.

இரண்டு நிமிடமே ஓடும் இந்த குறும் படம் தலைமை பண்புகளை எப்படி வளர்த்து கொள்வது என்பது பற்றி உணர்ச்சி ததும்ப விளக்குகிறது. சாலையில் ஒரு மரம் விழுந்து கிடக்கிறது. அனைவரும் தங்களுக்கு என்ன என்கிற வகையில் இருக்கும் போது, ஒரு பள்ளி மாணவன், ஒரு பெரிய மரத்தை தான் ஒருவனாகவே தள்ள முயற்சிக்கிறான். அதைகண்ட மற்ற சிறுவர்களும் இவனுடன் சேர்ந்து மரத்தை தள்ள முயல்கிறார்கள். மற்ற பெரியவர்களும், சிறுவர்களுடன் சேர்ந்து, மரத்தை அப்புற்படுத்துகிறார்கள். போக்குவரத்து சீராகிறது. இரண்டே நிமிடத்தில் அந்த மெஸேஜை அழகாக செல்கிறார்கள். நல்ல எண்ணங்கள் கொண்டவனை மக்கள் தலைவனாக ஏற்கிறார்கள்.

நீங்களும் அனுபவியுங்களேன். யாரோ யூடியூபில் போட்டிருப்பதை இங்கு தருகிறேன். கிளிக் செய்து பாருங்கள்.

செவ்வாய், 11 டிசம்பர், 2007

தமிழ் பத்திரிகையாளர் எம். எஸ் - அஞ்சலி

மக்கள் குரல் ஆசிரியர் எம்.எஸ்
மக்கள் குரல் ஆசிரியர் திரு எம். சண்முகவேல் (80) இன்று (11.12.2007) அதிகாலை இறைவனடி சேர்ந்தார். தமிழ் பத்திரிகை உலகின் ஜாம்பவானாகிய இவர், எம். எஸ் என்று அனவ்ராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். தினத்தந்தியில் தன்னுடைய பத்திரிகை பணியை துவக்கிய இவர், நவமணி, அலை ஓசை மற்றும் மக்கள் குரலில் பணியாற்றிய்வர்.

தமிழ் பத்திரிகைகளை அடித்தள மக்களுக்கு எடுத்துச் சென்ற் ஒரு சில மூத்த பத்திரிகையாளர்களில் இவரும் முதன்மையானவர். சுமார் 60 ஆண்டுகளாக தமிழ் பத்திரிகை பணிகளுக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட திரு எம். எஸ். இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து பத்திரிகைகளிலும், செய்திகளுக்கு ஒரு தலைப்புதான் கொடுப்பார்கள். ஆனால், திரு எம். எஸ். சில முக்கிய்மான செய்திகளுக்கு மூன்று அல்லது நான்கு அடுக்கு தலைப்புகள் கொடுத்து செய்திகளை சுவாரசியமாக்கி விடுவார். என்றைக்கும், பத்திரிகை உலகில், செய்திகளுக்கு தலைப்பு கொடுப்பதில் இவர் மிகவும் பிரசித்தம்.

கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் குன்றி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை மருத்துவ மனையில் நான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய உடல் நலம் குன்றிய இறுதி நாட்களிலும், மருத்துவ மனையிலிருந்தும் பத்திரிகை பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதை பார்த்ததும் எனக்கு மெய்சிலிர்த்தது.

திரு எம். எஸ் அவர்களின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை தோழர்களுக்கும், அவரது எழுத்தின் ரசிகர்களுக்கும் நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வோம். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

ஞாயிறு, 9 டிசம்பர், 2007

வளரும் கலைஞர்கள் - குறும் படங்களில் சாதனை

இன்று (டிசம்பர் 9, 2007) காலை சென்னை ஃபிலிம் சேம்பரில் டிரீம்ஸ் டே ( dreams day ) என்கிற ஒரு இளைஞர்களின் அமைப்பு பத்து குறும் படங்களை திரையிட்டது. இந்த குறும் படங்களை தயாரித்தவர்களும் இளைஞர்களே. இந்த பத்து குறும் படங்களிலும் அவர்களுடைய துடிப்பும், புதுமையான கருத்துக்களும் வெளிப்பட்டன. சில குறும்படங்களை dreamsday அமைப்பினர் தங்களது இணையதளத்திலும் வெளியிட்டுள்ளார்கள். இந்த குறும் பட்ங்களை தயாரித்த இளைஞர்களை, விழாவின் சிறப்பு விருந்தினர்களுடன் படத்தில் காணலாம்.

ராம் என்கிற இளைஞர் இயக்கிய 'The way" என்கிற ஒரு குறும்படமும், பரத் சிம்மன் (மேல் படத்தில் இடமிருந்து இரண்டாவது) இயக்கிய "பாவி" என்கிற குறும்படமும் என்னை கவர்ந்தன.

குளத்திலிருந்து சாலைக்கு வந்துவிட்ட ஒரு தவளையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'The way' என்கிற படத்தில், எல்லோராலும் அலட்சியப்படுத்தப்பட்ட அந்த தவளையை ஒரு ஏழை சிறுவன், மீண்டும் குளத்தில் எடுத்து விடுகிறான். ஒரு மெசேஜ் அழகாக சொல்லப்பட்டுள்ளது.

பாவி என்கிற படத்தில், ஒருவன் இறந்தபின், அவனுக்கு இறுதி மரியாதை செலுத்த வருபவர்களின் மன ஓட்டத்தை அழகாக சித்தரிக்கிறது.

இந்த பத்து படங்களும், இயக்கிய இளைஞர்களின் வெற்றிப்பயணத்தின் முதல் படி.

இந்த விழாவின் துவக்கத்தில் நான்கு சிறுவர்கள் தங்களது இன்னிசை கச்சேரி செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. படம் (இடமிருந்து வலம் - ராஜப்பா, சிவராமன், அக்ஷயா, சவும்யா). தங்களது வெற்றி பயணத்தின் முதல் படியில் உள்ள இந்த குழந்தைகளையும் வாழ்த்துவோம்.

வியாழன், 15 நவம்பர், 2007

ஜனாதிபதி மாளிகையை விட்ட 100 நாட்களில் டாக்டர் கலாமின் சாதனை


வழக்கமாக, ஒரு அரசியல் தலைவரோ அல்லது ஒரு நிறுவனத்தின் மேலதிகாரியோ பதவி ஏற்ற 100 நாட்கள் கழித்து தங்கள் சாதனைகளை ஒரு பட்டியலிட்டு பார்ப்பது வழக்கம். ஆனால், ஒரு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர், தான் வெளிவந்த 100 நாட்களின் சாதனைகளை நோக்குவதில்லை.

வழக்கமாக பதவியிலிருந்து ஓய்வு பெறும் அனைவரும், தங்கள் வேலை பணிகளை குறைத்து கொள்வ்துதான் வழக்கம். ஆனால் நம் 'மக்கள் ஜனாதிபதி' டாக்டர் கலாம் எதையுமே ஒரு புதுமையாக செய்யப் பழகியவர்.

ஜனாதிபதி மாளிகையிலிருந்ததைவிட அதிக 'பிஸி' ஆகிவிட்டார். அவர் ஓய்வு (?) பெற்ற கடந்த 100 நாட்களில் 90 கூட்டங்களில் பேசியுள்ளார்; மூன்று நாடுகளில் சுற்றுபயணம் செய்துள்ளார்'; சுமார் ஆறு லட்சம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம், மக்கள் அவருக்கு ஜனாதிபதிக்குரிய் மதிப்பையும் மரியாதையையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு நெருங்கிய நண்பரும், விஞ்ஞானியுமான திரு பொன்ராஜ், டாக்டர் கலாமின் ஒவ்வொரு பேச்சையும் பதிவு செய்து, அதை www.abdulkalam.com என்கிற இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார். அது தவிர, ஒரு e-paper ம் துவங்கி அதன் மூலம் கலாமின் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

டாக்டர் கலாமை போன்ற தேசபற்றுள்ள மற்றும் இளைஞர்களை கவரக்கூடிய ஒரு மாமனிதரை பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கிறோம். அவர் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல தேக ஆரோக்கியத்தையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

புதன், 7 நவம்பர், 2007

வெற்றிப்படிகளில் ஏறி வந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு ஒரு சறுக்கல் - குண்டர்களை ஏவி கடன் வசூலித்ததால் கோர்ட் அபராதம்

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி துவங்கிய குறுகிய காலத்திலேயே மாபெறும் வளர்ச்சி பெற்று, பல பிரபல வங்கிகளையும் பின்னுக்குத்தள்ளி முன்னேறி வருகிறது. அவர்களது ப்ரிமிக்கத்தக்க வளர்ச்சி, அவர்களது செருக்கையும் அதிகப்படுத்தி உள்ளது. பல இடங்களில் கொடுத்த கடனை வசூலிப்பதற்கு, அடியாட்களை ஏவியும், மிரட்டியும் வசுலிப்பதாக செய்திகள் வந்தன.

கடந்த நவம்பர் ஆறாம் தேதி, டில்லியிலுள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, தங்களிடம் கடன் வாங்கிய ஒரு வாடிக்கையாளரை குண்டர்கள் மூலம் அடித்ததற்காக 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சென்ற் வாரம், ரிசர்வ் வங்கியின் கவர்னர், தனியார் மற்றும் பன்னாட்டு வங்கிகள் குண்டர்கள் வழியாக கடன் வசூல் செய்வதை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை கீழ்கண்ட யூ.ஆர்.எல்லில் படிக்கலாம்.

http://www.signonsandiego.com/news/business/20071106-0006-india-loancollectorbeating.html

வெற்றிபடிகளில் ஏறும் போது , செருக்கு தலையில் ஏறுகிறது. அந்த இறுமாப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்களை செய்ய தூண்டுகிற்து. அங்குதான,் சறுக்கலின் முதல் படி துவங்குகிற்து.

மீண்டும் சந்திப்போம். அனவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 4 நவம்பர், 2007

உடல் ஊனம் வெற்றிக்கு தடையில்லை

எனது நெருங்கிய நண்பர் திரு ஜெயகுமாரின் மகன் திரு சித்தார்த், சிறு வயது முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். தன்னுடைய ஒவ்வொரு சோதனைகளையும், தன் விடா முயற்சியால் முறியடித்து, சாதனைக்ளாக்கி வாழ்க்கையில் வெற்றி பெற்றுவருகிறார். தற்போது ஒரு பன்னாட்டு வங்கியில் ஒரு அதிகாரியாக பனியாற்றி வருகிறார்.

டாக்டர் கலாம் அவர்கள் , குடியரசுத்தலைவராக இருந்த போது , சித்தார்த்தை அழைத்து அவருடன் பேசி மகிழ்ந்துள்ளார். ஒரு விழாவில், டாக்டர் கலாம் அவர்கள், சித்தார்த்தைப்பற்றி குறிப்பிட்டு பேசியுள்ளார்.

டாக்டர் கலாம் அவர்கள் பேசியதை, நீங்களும் கேளுங்களேன்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2007

டாக்டர் கலாம் மாணவர்களுக்கு கூறும் ஆறிவுரை

சென்ற பதிவில் டாக்டர் கலாமின் நேர்முக பேட்டியின் முதல் பாகத்தை வெளியிட்டேன். தற்போது டாக்டர் கலாமின் நேர்முக பேட்டியின் இரண்டாவது பாகத்தை வெளிடுகிறேன்.

இதில், அவர் சிறுவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். 'click to play' பட்டனை அழுத்தி, அவரது பேட்டியினை கேட்கவும்.


இந்த பேட்டியினை டவுன்லோடு செய்ய, இதை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொள்ளவும். ( wmv format - விண்டோஸ் மீடியா பிளேயரில் கேட்கமுடியும்)

பாரத ரத்னா டாக்டர் கலாமுடன் ஒரு நேர்முகம்

நான் சென்ற் பதிவில் கூறியிருந்த்படி, சாதனையாளர்களின் கருத்துகளை பெற்று எழுத எண்ணுகிறேன். நான் பாட்யுனிவர்சல் (PodUniversal) என்கிற ஒரு இணைய் ஒலி இதழை வெளிட்டு வருகிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 60 வது சுதந்திர தினத்தை ஒட்டி முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் க்லாமிடம் தொலைபேசி மூலம் ஒரு சிறப்பு பேட்டி எடுத்திருந்தேன். அனைத்து இளைஞர்களுக்கும் புரிவதற்காக, ஆங்கிலத்தில் எடுத்திருந்தேன்.

இந்த பேட்டியில் டாக்டர் கலாம் அவர்கள் இந்தியாவை எதிர் நோக்கியுள்ள பத்து ச்வால்களையும் அந்த சவால்களை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு ஏழு அறிவுரைகளையும் தருகிறார்.

டாக்டர் கலாமின் பேட்டியின் முதல் பாகத்தை 'Click to play' என்கிற button ஐ அழுத்தி கேட்கவும்.



டாக்டர் கலாமின் பேட்டியினை டவுன்லோடு செய்ய (wmv file - விண்டோஸ் மீடியா பிளேயரில் கேட்கமுடியும்) , இதை வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் பதிவு் செய்து கொள்ளவும். (4.15 mb)

சனி, 20 அக்டோபர், 2007

வெற்றிப்பயணம் துவங்குகிறது

வெகுநாட்களாகவே எனக்கு தமிழில் ஒரு பிளாக் துவங்கவேண்டுமென்று ஒரு ஆசை. ஏதோ தள்ளிப்போட்டுக்கொண்டு வந்து விட்டேன். இந்த வாரம், காத்தோலிக் சிரியன் வங்கியின் தகவல் தொழில் நுட்ப துறையின் துணை பொது மேலாளர் திரு டி.பி. ஆர். ஜோஸப் அவர்களள சந்தித்தேன். தன்னுடைய பல அலுவலக பணிகளிடையே தமிழில் மூன்று பிளாக வைத்திருப்பது கண்டு வியப்புற்றேன். அவரது ஆர்வம் என்னை தூண்டிவிட்டது.


இனி நான் தழிழ் பிளாக் ஆரம்பிபபதற்கு கால தாமதம் செய்வது எனக்கே மிகவும் வெட்கமாக இருந்தது. இனி தமிழிலும் முயற்சி செய்வது எனறு முடிவு செய்தேன்.


நான் ஒரு மக்கள் தொடர்பு மற்றும் கம்யூனிகேஷன் ஆலோசகர். சென்ற ஆண்டு ஆனந்த விகடனில் "வெற்றிக்கு ஏழு படிகள்" என்கிற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைகள் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அந்த க்ட்டுரைகள் ஆனந்த விகடன் பதிப்பகத்தால் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டு, அதிக அளவில் விற்பனனயாகிக் கொண்டிருக்கிறது.


அதன் பின்னணியில் இந்த புதிய பிளாகிற்கும் "வெற்றிப்படிகள்" என்று பெயர் சூட்டினேன். விஜயதசமி (இதுவும் ஒரு வெற்றி திருநாள்) அன்று துவங்குகிறேன்.


உங்கள் வாழ்த்துகள் மற்றும் ஆசிகளுடன் முயற்சிக்கிறேன் எழுத்துப் பயணத்தை துவங்குகிறேன்.




அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...