வெகுநாட்களாகவே எனக்கு தமிழில் ஒரு பிளாக் துவங்கவேண்டுமென்று ஒரு ஆசை. ஏதோ தள்ளிப்போட்டுக்கொண்டு வந்து விட்டேன். இந்த வாரம், காத்தோலிக் சிரியன் வங்கியின் தகவல் தொழில் நுட்ப துறையின் துணை பொது மேலாளர் திரு டி.பி. ஆர். ஜோஸப் அவர்களள சந்தித்தேன். தன்னுடைய பல அலுவலக பணிகளிடையே தமிழில் மூன்று பிளாக வைத்திருப்பது கண்டு வியப்புற்றேன். அவரது ஆர்வம் என்னை தூண்டிவிட்டது.
இனி நான் தழிழ் பிளாக் ஆரம்பிபபதற்கு கால தாமதம் செய்வது எனக்கே மிகவும் வெட்கமாக இருந்தது. இனி தமிழிலும் முயற்சி செய்வது எனறு முடிவு செய்தேன்.
நான் ஒரு மக்கள் தொடர்பு மற்றும் கம்யூனிகேஷன் ஆலோசகர். சென்ற ஆண்டு ஆனந்த விகடனில் "வெற்றிக்கு ஏழு படிகள்" என்கிற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைகள் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அந்த க்ட்டுரைகள் ஆனந்த விகடன் பதிப்பகத்தால் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டு, அதிக அளவில் விற்பனனயாகிக் கொண்டிருக்கிறது.
அதன் பின்னணியில் இந்த புதிய பிளாகிற்கும் "வெற்றிப்படிகள்" என்று பெயர் சூட்டினேன். விஜயதசமி (இதுவும் ஒரு வெற்றி திருநாள்) அன்று துவங்குகிறேன்.
உங்கள் வாழ்த்துகள் மற்றும் ஆசிகளுடன் முயற்சிக்கிறேன் எழுத்துப் பயணத்தை துவங்குகிறேன்.
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதமிழ்ல இளைஞர்களுக்கான எழுத்துக்கள் (excluding காதல் கவிதை, கதை .. ) ரொம்ப குறைவு ... தொடர்ச்சியா எழுதுங்க.
வாழ்த்துக்கள்,
பதிலளிநீக்குவிக்கி சொன்னதுபோல் இளைஞர்களுக்கு பயனுள்ள பதிவுகள் மிகவும் குறைவு.
துவக்கத்தில் வாசகர்களோ அல்லது பின்னூட்டங்களோ அதிகம் வரவில்லையென்றாலும் நிறுத்திவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
//"வெற்றிக்கு ஏழு படிகள்" என்கிற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைகள் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. //
பதிலளிநீக்குவாருங்கள் நண்பரே...வலைப்பூக்களிலும் வெற்றி பெறுவீர்கள்.
தங்கள் பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅடிக்கடி வருவேன், பின்னூட்டமிடலைன்னாலும், சும்மா படித்துவிட்டுப்போய்விடுவேன்... அப்படியே நீங்களும் நம்ப வலைப்பதிவுப்பக்கம் வந்து பார்வையிடுங்க.. உங்க பொன்னான கமெண்ட்ஸையும் கொடுங்க :)