This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

மாநிலங்களவையில் (Rajya Sabha) தமிழநாடு எம்.பிக்க்ள் 2022ம் ஆண்டில் சாதித்தது என்ன? – ஒரு ஆய்வு

 

மாநிலங்களவையில் (Rajya Sabha) தமிழநாடு  எம்.பிக்க்ள் 2022ம் ஆண்டில் சாதித்தது என்ன? – ஒரு ஆய்வு

மாநிலங்களவையில் (Rajya Sabha) தமிழநாடு  எம்.பிக்க்ள் 2022ம் ஆண்டில் சாதித்தது என்ன? – ஒரு ஆய்வு

அனைவருக்கும் சங்கராந்தி மற்றும் தைப் பொங்கல் வாழ்த்துக்க்ள். 

தமிழகத்திலிருந்து 18 எம்.பிக்கள் மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) பணியாற்றுகிறார்கள்.  இவர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பiினர்கள், தங்களுடைய ஆறு ஆண்டு கால பதவி காலம் முடிந்தபின் சுழற்சி முறையில்  ஓய்வு பெறுவார்கள். இது ஒரு நிரந்தர அவையாகும்.   இந்த 18 உறுப்பினர்களில், ஆறு உறுப்பினர்கள், 2022ல் தமிழ் நாடு சட்டசபையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

அனைத்து உறுப்பினர்களும் 2022ம் ஆண்டில் ராஜ்ய சாபாவில் என்ன பணியாற்றினர் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

உறுப்பினர்கள் அவையில் தறாமல் கலந்து கொள்ள வேண்டும்.  தங்கள் தொகுதி, மாநிலம் மற்றும் தேசிய பிரச்சனைகளை மக்களவையில் எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்கபடுகிறது.  விவாதங்கள், தனியார் மசோதா மற்றும் கேள்விகள் மூலம் தங்கள் வாய்ப்பை பயன் படுத்திக்கொள்லாம்.  பூஜ்ய நேரம் என்ப்படும் (Zero Hour) நேரத்தில் அனைத்து எம்.பிக்களும் தங்கள் பிரச்சனைகளை நேரடியாக பேசலாம்.  தாங்களே தயாரித்து பேசுவதை Initiated debates என்பார்கள்.  பிறர்  பேசியதை வழிமொழிந்தால் அதை   Associated Debates என்பர்.  நங்கள்  இந்த ஆய்விற்கு உறுப்பினர்கள் சுய முயற்ச்சியில் பன்கேற்பதை (Initialed debates) மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். 

ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்ததும், பிரைம்பாயிண்ட் ஃபவுண்டேஷன்பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளின்படி, பாரளுமன்ற  உறுப்பின்ர்கள்  ஆற்றிய பணிகளை ஆயுவு செய்து அறிக்கை வெளியிடுகிறது. 

தமிழகத்தில் முதலிடம்

கடந்த 2022ம் ஆண்டில், ராஜ்ய சபாவில் தமிழ்நாட்டு  உறுப்பினர்களில், திருமதி கனிமொழி என்.வி.என். சோமு (திமுக)  அவர்கள் 136 புள்ளிகளுடன் (சுய முயற்சி விவாதங்கள் + தனியார் மசோதாக்கள் + கேள்விகள்) முதல் இடத்தில் இருக்கிறார்.  இவர் 2022ம் ஆண்டில் தமிழக எம்.பிக்களில் ராஜ்ய சபாவில் 125 கேளிகள் எழுப்பி கேள்விகள் பிரிவிலும் முதலிடத்தில் இருக்கிறார். இவர் 77 சதவிகித அமார்வுகளில் பங்கேற்றுள்ளார்.

திரு தம்பி்துரை (அண்ணா திமுக) அவர்கள் 36 சுய முயற்சி விவாதங்களில் பங்கேற்று இந்த பிரிவ்ல் முதலிடம் வகிக்கிறார். திரு வில்சன் (திமுக)  அவர்கள் 3 தனியார் மாசோதாக்களை அறிமுகம் செய்துள்ளார்.

அனைத்து 18 உறுப்பினர்களும் எவ்வாறு பணியாற்றினர் என்பதை கீழே காணலாம். 

MP Name

Term Start Date

Political Party

Debates (Initiated)

Private Member Bills

Questions

Total

Attendance %

Kanimozhi NVN Somu

27-09-21

DMK

11

0

125

136

77

P. Wilson

25-07-19

DMK

17

3

111

131

93

K.R.N. Rajeshkumar

30-06-22

DMK

14

0

115

129

68

M. Mohamed Abdulla

06-09-21

DMK

11

0

106

117

82

M. Shanmugam

25-07-19

DMK

17

0

93

110

84

Tiruchi Siva

03-04-20

DMK

24

1

81

106

95

Vaiko

25-07-19

MDMK

10

0

88

98

48

N.R. Elango

03-04-20

DMK

2

0

58

60

43

Anbumani Ramadoss (RS)

26-07-19

PMK

1

0

49

50

43

R. Girirajan

30-06-22

DMK

2

0

37

39

86

M. Thambidurai

03-04-20

AIADMK

36

0

2

38

86

S. Kalyanasundaram

30-06-22

DMK

1

0

35

36

66

G.K. Vasan

03-04-20

TMC (M)

27

0

0

27

75

P. Chidambaram

30-06-22

INC

4

0

0

4

48

C. Ve. Shanmugam

30-06-22

AIADMK

0

0

0

0

55

N. Chandrasegharan

25-07-19

AIADMK

0

0

0

0

70

P. Selvarasu

03-04-20

DMK

0

0

0

0

41

R. Dharmar

30-06-22

AIADMK

0

0

0

0

52

2022ல் ஓயுவு பெற்ற எம்.பிக்கள்

மாநிலங்களவையில் (Rajya Sabha) தமிழநாடு  எம்.பிக்க்ள் 2022ம் ஆண்டில் சாதித்தது என்ன? – ஒரு ஆய்வு
2022ம் ஆண்டில், கீழ்கண்ட அட்டவணயில் உள்ள 5 உறுப்பினர்கள் ஆறு ஆண்டு காலம் பணியாற்றி ராஜ்ய சபாவிலிருந்து ஒய்வு பெற்ற்னர்.  அவர்கள் தாங்கள் பணியாற்றிய ஆறு ஆண்டு காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை கேழே காணலாம்.

அண்ணா திமுகவைச் சார்ந்த  திரு விஜயகுமர் ஆறு ஆண்டு காலத்தில் 514 புள்ளிகள் பெற்று (விவாதங்கள் + தயார் மசொதாக்கள் + கேள்விகள்) ஒய்வு பெற்ற தமிழக எம்.பிக்களில் முதலிடம் பெறுகிறார். இவர் 84 சதவிகித அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.  

MP Name

Term Start Date

Term End Date

Term

Political Party

Age

Debates latest term

Private Member Bills

Questions

Total

Attendance %

A. Vijayakumar

30-06-2016

29-06-2022

I

AIADMK

65

38

0

476

514

84

A. Navaneethakrishnan

30-06-2016

29-06-2022

II

AIADMK

66

120

0

0

120

87

T.K.S. Elangovan

30-06-2016

29-06-2022

I

DMK

68

95

0

2

97

89

S.R. Balasubramoniyan

30-06-2016

29-06-2022

I

AIADMK

84

45

0

0

45

95

R.S. Bharathi

30-06-2016

29-06-2022

I

DMK

75

40

0

0

40

68

 

சிறப்பாக பணியாற்றிய எம்.பிக்களுக்கு வாழ்த்துக்கள்.

பரைம் பாயிண்ட் சீனிவாசன்

Press Release issued by Prime Point Foundation.  For more details, contact Prime Point Srinivasan over 9176650273

Please download the press release from this link.

https://www.prpoint.com/pressrelease/pressrelease16012023-rajyasabha.pdf


அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...