This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

சனி, 14 ஜனவரி, 2023

தமிழநாடு மக்களவை (Lok Sabha) எம்.பிக்க்ள் 17வது மக்களவையில் துவக்கம் முதல் குளிர்கால கூட்டத்தொடர் 2022 முடிய சாதித்தது என்ன? – ஒரு ஆய்வு

தமிழநாடு  மக்களவை (Lok Sabha) எம்.பிக்க்ள் 17வது மக்களவையில் துவக்கம் முதல் குளிர்கால கூட்டத்தொடர்  2022 முடிய சாதித்தது என்ன? – ஒரு ஆய்வு

PRESS RELEASE

தமிழநாடு  மக்களவை (Lok Sabha) எம்.பிக்க்ள் 17வது மக்களவையில் துவக்கம் முதல் குளிர்கால கூட்டத்தொடர்  2022 முடிய சாதித்தது என்ன? – ஒரு ஆய்வு 

அனைவருக்கும் சங்கராந்தி மற்றும் தைப் பொங்கல் வாழ்த்துக்க்ள்.  

தமிழகத்திலிருந்து 39 எம்.பிக்கள் மக்களவையில் பணியாற்றுகிறார்கள்.  இந்த 17வது மக்களவையில் அவர்கள் ஜீன் 2019 முதல் நடந்து முடிந்த  குளிர் காலக் கூட்டத்தொடர் 2022 முடிய என்ன பணியாற்றினர் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

உறுப்பினர்கள் அவையில் தறாமல் கலந்து கொள்ள வேண்டும்.  தங்கள் தொகுதி, மாநிலம் மற்றும் தேசிய பிரச்சனைகளை மக்களவையில் எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்கபடுகிறது.  விவாதங்கள், தனியார் மசோதா மற்றும் கேள்விகள் மூலம் தங்கள் வாய்ப்பை பயன் படுத்திக்கொள்லாம்.  பூஜ்ய நேரம் என்ப்படும் (Zero Hour) நேரத்தில் அனைத்து எம்.பிக்களும் தங்கள் பிரச்சனைகளை நேரடியாக பேசலாம்.  தாங்களே தயாரித்து பேசுவதை Initiated debates என்பார்கள்.  பிறர்  பேசியதை வழிமொழிந்தால் அதை   Associated Debates என்பர்.  நங்கள்  இந்த ஆய்விற்கு உறுப்பினர்கள் சுய முயற்ச்சியில் பன்கேற்பதை (Initialed debates) மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.  

ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்ததும், பிரைம்பாயிண்ட் ஃபவுண்டேஷன்,  பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளின்படி, பாரளுமன்ற  உறுப்பின்ர்கள்  ஆற்றிய பணிகளை ஆயுவு செய்து அறிக்கை வெளியிடுகிறது.  அது தவிர , ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய அளவில் சிறந்த பணியாற்றிய உறுப்பினர்களுக்கு சன்சத் ரத்னா (Sansad Ratna Award)  விருது வழங்கி கவுரவிக்கிறது.  கடந்த 12 ஆண்டுகளில், 86 சிறந்த உறுப்பினர்கள அகில இந்திய அளவில் கவுரவிக்கப்ப்ட்டு இருக்கிறார்கள். 

உலக அளவில், நமட்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு , அவர்களின் பாராளுமன்ற செயல்பாடுகளின் அடிப்படையில் சிவில் சமூகத்தால் வழங்கப்படும்  ஒரே விருதாகும். இது இந்தியா புக் ஆஃப் ரிகார்ட்ஸால் அங்கீகரிக்ப்பட்டுள்ளது.  2014க்கு பிறகு, தமிழ்நாட்டிலிருந்து எவரும் இந்த விருதை பெறவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.  

தமிழகத்தில் முதலிடம்

தமிழ்நாட்டு எம்.பிகளில் டாக்டர்  செந்தில் குமார் (திமுக - தர்மபுரி) 453  புள்ளிகளுடன் (சுய முயற்சி விவாதங்கள் + தனியார் மசோதா + கேள்விகள்) தமிழ்நாட்டில்  முதலிடத்தில்  இருக்கிறார்.  அகில இந்திய அளவில் 17ம் இடத்தில் இருக்கிறார்.   கடந்த குளிர் கால  கூட்டத்தொர் 2021ல், அகில் இந்திய அளவில் இவர் 25ம் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பத்தக்கது.   

 தமிழ் நாட்டில், தென்காசி எம்.பி திரு தனுஷ் குமார் 409 புள்ளிகளுடன் இரண்டம் இடத்தில் இருக்கிறார்.  திரு செந்தில் குமார், திரு தனுஷ் குமார் இருவரும் முறையே  384 மற்றும் 375 கேள்விகள் எழுப்பி  தமிழ்நாட்டில் கேள்விகள் பிரிவிலும்  முதல் இரண்டு இடத்தை பெறுகிறார்கள்.  இருவருமே இதுவரை 100 சதவிகிர அமர்வுகளில் பங்கேற்று பணியாற்றி இருக்கிறார்.   திரு தனுஷ் குமார் அகில இந்திய அளவில் 29ம் இடத்தில் இருக்கிறார். 

அகில் இந்திய அளவில் திருமதி சுப்ரியா சுலே (என்.சி.பி - மகாரஷ்டிரா) 652 புள்ளிகளுடன் முதல் இடமும்,   திரு ஷீரங் அப்பா பார்னே  (சிவசேனா - மாகாராஷ்டிரா) , 573 புள்ளிகளுடன் இரண்டம் இடம் பெறுகிறார், 

விவாதங்கள

தேனி எம்.பி திரு ரவீந்திரநாத் இதுவரை 97 சுய முயற்சி விவாதங்களில் (Initiated debates)  பங்கேற்று  தமிழக எம்.பிக்களில்  விவாதங்களில்  முதலிடம் பெறுகிறார். . இவர் 246  புள்ளிகள்  (விவாதங்கள் + தனியார் மசோதா + கேள்விகள்) தமிழ்நாட்டில்  பெற்று இருக்கிறார்.  62 சதவிகித அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

அகில இந்திய அளவில் திரு அதிர் ரஞஜன் சவுதரி (மேற்கு வங்கம்) 199 சுய முயற்சி விவாதங்களில் பங்கேற்று முதலிடத்திலும், திரு என்.கே. பிரேம சந்திரன் (கேரளா) 189 சுய  முயற்சி விவாதங்களில் பங்கேற்று இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள். 

தனிநார் மசோதாக்கள்

சென்னை தெற்கு  எம்.பி திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்   8 தனி நபர் மசோதாக்களை அறிமுகம் செய்து  தமிழ் நாட்டு எம்.பிக்களில் தனி நபர் ம்சோதா பிரிவில்  முதலிடம் பெறுகிறார்.  இவர் 274  புள்ளிகள்  (விவாதங்கள் + தனியார் மசோதா + கேள்விகள்) தமிழ்நாட்டில்  பெற்று இருக்கிறார்.  80 சதவிகிர அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

அதில இந்திய அளவில், திரு கோபால் சின்னய்ய ஷெட்டி (பி.ஜே.பி, மாகாரஷ்டிரா) 17 தனிநபார் மசோதாக்கள் தாக்கல் செய்து இந்த பிரிவில் முதலிடம் பெறுகிறார்.. 

சிறப்பாக பணியாற்றிய எம்.பிக்களுக்கு வாழ்த்துக்கள். 

நாளை மாநிலங்களவையில் (Rajya Sabha) தமிழ்நாடு எம்.பிககள் ஆற்றிய    பணி பற்றிய அறிக்கை வெளியிடப்படும். 

பரைம் பாயிண்ட் சீனிவாசன்

This Press Release can be downloaded in pdf format from the following link

https://www.prpoint.com/pressrelease/pressrelease-15012023.pdf 

Performance of Tamil Nadu Lok Sabha MPs from the first sitting of 17th Lok Sabha till the end of Winter Session 2022

MP Name

Constituency

Debates (Total)

Debates (Initiated)

Debates (Associated)

Private Member Bills

Questions

Total

Attendance %

DNV Senthilkumar S.

Dharmapuri

260

66

194

3

384

453

100

Dhanush M Kumar

Tenkasi

117

32

85

2

375

409

100

C.N. Annadurai

Tiruvannamalai

42

42

0

0

316

358

75

Gautham Sigamani Pon

Kallakurichi

44

42

2

0

304

346

90

G. Selvam

Kancheepuram

16

11

5

0

316

327

81

Su Thirunavukkarasar

Tiruchirappalli

25

23

2

0

280

303

65

Manicka Tagore

Virudhunagar

86

50

36

0

248

298

88

Sumathy Thamizhachi Thangapandian

Chennai South

50

49

1

8

217

274

80

K. Navaskani

Ramanthapuram

121

53

68

3

217

273

87

V. Kalanidhi

Chennai North

53

52

1

1

214

267

84

S.R. Parthiban

Salem

35

35

0

0

216

251

86

P. Raveendranath Kumar

Theni

97

97

0

0

149

246

62

M. Selvaraj

Nagapattinam

55

55

0

0

190

245

61

Andimuthu Raja

Nilgiris

37

37

0

2

201

240

73

P.R. Natarajan

Coimbatore

45

45

0

0

191

236

84

A. Ganeshamurthi

Erode

25

25

0

1

200

226

67

A.K.P. Chinraj

Namakkal

11

11

0

0

211

222

71

Thalikkottai Rajuthevar Baalu

Sriperumbudur

50

50

0

0

171

221

84

S. Venkatesan

Madurai

28

28

0

0

191

219

74

T.R. Paarivendhar

Perambalur

31

31

0

2

185

218

59

D.M. Kathir Anand

Vellore

21

21

0

5

189

215

62

D. Ravikumar

Viluppuram

52

52

0

5

156

213

72

S. Jagathrakshakan

Arakkonam

13

13

0

0

198

211

33

M.K. Vishnu Prasad

Arani

28

28

0

2

181

211

78

K. Shanmugasundaram

Pollachi

19

19

0

0

183

202

86

S. Gnanathiraviam

Tirunelveli

18

18

0

0

177

195

59

S. Jothimani

Karur

36

36

0

2

144

182

73

Kanimozhi Karunanidhi

Thoothukkudi

60

39

21

2

140

181

73

K. Subbarayan

Tiruppur

44

44

0

0

129

173

57

P. Velusamy

Dindigul

15

15

0

0

152

167

80

A. Chellakumar

Krisnagiri

24

24

0

0

141

165

61

Thirumaa Valavan Thol

Chidambaram

59

59

0

6

100

165

71

H. Vasanthakumar

Kanniyakumari

40

40

0

2

104

146

88

Vijayakumar alias Vijay Vasanth

Kanniyakumari

15

14

1

0

131

145

88

Karti P. Chidambaram

Sivaganga

18

18

0

1

107

126

75

T.R.V.S. Ramesh

Cuddalore

5

5

0

0

112

117

52

S. Ramalingam

Mayiladuthurai

12

12

0

0

104

116

68

Dayanidhi Maran

Chennai Central

18

18

0

0

97

115

80

K. Jayakumar

Tiruvallur

25

25

0

0

9

34

87

S.S. Palanimanickam

Thanjavur

4

4

0

0

0

4

43

 

Data Source : PRS India


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...