திரு டி.கே.ரங்கராஜனின் பாரளுமன்ற பேச்சுக்கள் புத்தக வடிவில் - அனவரும் படிக்க வேண்டிய் ஒரு அற்புதமான புத்தகம்
தமிழக எம்.பிக்களில் அகில் இந்திய அளவில் அனத்து அரசியல் கட்சியினராலும் அதிகம் மதிக்கப்பட்டவர் காலஞ்சென்ற திரு இரா. செழியன் அவர்கள். இன்றைய தலைமுறை இளைஞ்ர்கள் திரு செழியனை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவருடன் பலமுறை சந்தித்து விவாதித்து இருக்கிறேன். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் பாரளுமன்ற நடைமுறைகளில் ஒரு அதாரிட்டி என்று சொல்லலாம்.
திரு செழியனுக்கு பிறகு இன்றைய தலைமுறை இளைஞர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பாராளுமன்றவாதியாக டிகேஆர் என்று அன்புடன் அழைக்கப்படும் திரு டி.கே. ரங்கராஜன் இருக்கிறார். சுமார் 63 ஆண்டுகளாக தன்னை பொது வாழ்வில் ஈருபடுத்திக் கொண்டுள்ளார். சிறுவயது முதல் மார்க்ஸீய சிந்தாத்தத்தில் இணைந்து, தொழிற்சங்க தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தன் அரசிய்ல் வாழ்வில், பாமர மக்களுடன் அதிகம் பழகியதால், மக்களின் மனநிலையை நங்கு அறிந்தவர். அதை பாரளுமன்றத்திலும் எதிரொலித்தார். அது தவிர திரு செழியன் போன்று இவரும் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் பாரளுமன்ற நடைமுறைகளில் ஒரு நிபுணர்.
இவர் ஒரு கம்யூனிச தலைவராக இருந்தாலும், அனத்து கட்சியினரும், எதிர் கருத்துடைய பி.ஜே.பி உள்பட, இவரிடம் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். பொதுவாகவே, பாரளுமனறத்திலும், மாநில சட்ட சபைகளிலும், கம்யூனிச உறுப்பினர்கள் நிறைய ஆராய்ச்சி செய்து, தரவுகளுடன் நன்றாக பேசுவார்கள். மத்தியில், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், சில கம்யூனிச தலைவர்கள் பேசுவதை பிரதம மந்திரியும், அரசாங்கமும் கூர்ந்து கவனிப்பார்கள் அந்த சில தலைவர்களில், திரு டிகேஆரும் ஒருவர்.
மாநிலங்களவையில் 12 ஆண்டுகள் மார்க்ஸிஸ்ட் கட்சி சார்பில் பணியாற்றியபோது, அவர் பல பொதுமக்கள் பிரச்சனைகளை தரவுகளுடன் ஆராய்ச்சி செய்து பேசியுள்ளார்.
அவரது ஆங்கிலப் பேச்சை தமிழில் எளிமையான முறையில் மொழிபெயர்த்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள். மாநிலங்களவையில், திரு டிகேஆர் அவர்கள், தமிழ்நாடு மற்றும் பாரத நாட்டிற்கு தெவையான அனைத்து விஷ்யங்களைப் பற்றியும் பேசியுள்ளார். மாணவர்களுக்கான கல்விக் கடன் பிரச்சனை, விவச்சயிகள் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, தலித் மற்றும் பழங்குடியினர் பிரச்சனைகள் போன்ற தேவையான கருத்துக்களைப் பற்றி பேசியுள்ளார். அவரது பேச்சுக்களில் 101ஐ தேர்ந்தெடுத்து, தமிழில் மொழி பெயர்த்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். எளிமையான முறையில் மொழி பெயர்த்த திரு வீரமணி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஒரு கம்யூனிச தலைவர் பேச்சாக இருந்தாலும், இவரது பாரளுமன்ற பேச்சிக்கள், மாற்றுக்கருத்து உள்ளவர்களையும் சிந்திக்கத் தூண்டும். அரசியலில் இருக்கும் தலைவர்களும், அரசியலில் ஆரவ்முள்ள இளைஞர்களும், கல்லூரிகளும், நூலகங்களும் இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்குமாறு பரிந்துரை செயிகிறேன்.
இந்த பதிவின் மூலம் இணைய தளம் வழியாக வாங்குவோருக்கு 25 சதவிகித தள்ளுபடி தருவதாக பதிப்பாளர்கள் கூறியுள்ளனர். PVE899GB-TKR என்கிற கூப்பன் கோடை கீழ்கண்ட தளத்தில் உபயோகித்து, இந்த புத்தகத்தை சலுகை விலையில் பெறலாம்.
https://thamizhbooks.com/product/tkr-manilangalavai-uraikal-kadithangal/
இன்றைய அரசியல் தலைவர்களில், சிந்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு, நான் பெரிதும் மmதிக்கும் தலைவர்களில் ஒருவர் திரு டி.கே.ரங்கராஜன் அவர்கள். எவருடைய மனதையும் புண்படுத்தாமல், மாற்றுக் கருத்துக்களையும் தெளிவாக எடுத்துக் கூறும் வல்லமை பெற்றவர்.
81 வயதிலும் அவரது சுறுசுறுப்பு மற்றும் எளிமை என்னை வியக்க வைக்கிறது. அவர் பல்லாண்டு பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்யவும் இளைஞர்களுக்கு வழிகாட்டவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
திரு டிகேஆரின் பாரளுமன்ற பேச்சுக்களை எளிமையான தமிழில் மொழிபெய்ர்த்து வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத்தினருக்கு பாராட்டுக்கள்.
இந்த பதிவை தயவு செய்து ந்ண்பர்களுடன் பகிரவும்.
பிரைம் பாயிண்ட் சீனிவாசன்.
நிறுவனர் தலைவர்
பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன்