This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வியாழன், 15 ஜூலை, 2010

கம்யூனிகேஷன் திறமையை வளர்ப்பது பற்றிய ஒரு ஜெயா டிவி நேர்முகம்

கடந்த ஜூலை 7ம் தேதி, (07/07/2010) அன்று, மதியம் 12 மணிக்கு என்னுடைய பேட்டி ஜெயா டிவியில் நேரலையாக "டயல் ஜெயா டிவி" என்கிற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சியில், நேயர்கள் தங்கள் தொலைபேசி மூலம் கேள்விகள் கேடகவும் வசதி செய்து கொடுத்துள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் 'கம்யூனிகேஷன் திறமைகளை' வளர்ப்பது பற்றிய ஒரு கலந்துரையாடலுக்கு என்னை இதன் தயாரிப்பாளர் திரு சரவணராஜு அழைத்திருந்தார்கள்.  பிரபல தொகுப்பாளர் வினோ சுப்ரஜா இந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒளிப்பதிவை கிளிக் செய்து பார்க்கவும்.  (22 நிமிடங்கள்)
இந்த வீடியோ, பிராட்பேண்டில் சீராக வரும்.  ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை, வலது கிளிக் செய்து, உங்கள் டெஸ்க்டாப்பில் பதிவிறக்கம் செய்து பார்க்கவும். 



இந்த வீடியோவை, கீழ்கண்ட தளத்திலும் பார்க்கலாம்
http://blip.tv/file/3890035
இதன் ஆடியோவை மட்டும் கேட்க வேண்டுமானால், கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
பாட்பஸார்
ஓடியோ

செவ்வாய், 13 ஜூலை, 2010

பாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி

"பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை " என்று சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பாரதி கண்ட கனவு இப்போது நடைமுறையில் வரத்துவங்கி விட்டது.  பாரதி,  புதுமை பெண், ஆணுக்கு நிகராக கல்வி  மற்றும் ஆளுமையில் இருக்க வேண்டும் என்று விரும்பினான்.

மகாகவி பாரதியின் கனவுகளை நனவாக்கும் விதத்தில், பவிகா பாரதி (படத்தில் இட புறம் இருப்பவர்)  என்கிற இளம் நங்கை (21 வயது), தற்போது உலகின் இளம் விமானியாக திகழ்கிறார்.  தன்னுடைய 16 வ்யதில், பிள்ஸ் 2 முடித்தவுடன், விமானியாவதற்கான பயிற்சிகளில் இறங்கினார்.  18 வயதில், விமானம் ஒட்ட உரிமம் பெற்றார்.  தன்னுடைய 21 வது வயதில், கமாண்டர் ஆவதற்கும் தகுதி பெற்று கேப்டன் பவிகா பாரதி ஆனார்.  இதுவரை 2100 மணிகள் விமானம் ஓட்டியுள்ளார்.  இவரது சாதனனகள் லிம்கா சாதனைகள் புத்தகத்திலும் வெளியிடப்ப்ட்டுள்ளன. 

இதில் மற்றொரு முக்கியத்துவம் என்னவென்றால், அவரது தாயார் திருமதி  ஜுடித் ஜெஸ்லின் பாரதியும் (படத்தில் வலது புறம் இருப்பவர்) , ப்விகாவுடன் விமான பயிற்சி பெற்று, அவரும், பவிகா இருக்கும் அதே விமான கம்பெனியில் விமானியாக பணிபுரிகிறார். 

பவிகாவின் தந்தை வழி பாட்டனார் திரு தாமஸ், முண்டாசு கவிஞன் பாரதியாரின் ஒரு பக்தர்.  அதனால், அவரது குடும்பத்தில் உள்ள அனைவரது பெயருக்கும் பாரதி என்கிற பெயரை இணைத்து விட்டார்.  அதனால் தானோ என்னவோ பவிகாவும் அவரது தாயும் இணைந்து பயிற்சி எடுத்து, சாதனை படைக்கிறார்கள்.

பவிகா மற்றும் அவரது தாயாரின் ஆங்கில பேட்டியை,  கிளிக் செய்து கேட்கவும்.  இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும்.  ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க் டாப்பில் டவுன் லோடு செய்து, கேட்கவும்.  (12 நிமிடங்கள்)


இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளங்களிலும் கேட்கலாம்.
பாட்பஸார்
ஓடியோ 

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...