தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மக்களவைக்கு நாற்பது உறுப்பினரிகளை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு அடுத்த தேர்த்ல் வரை அவர்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்தார்கள் என்பதை யாரும் கேட்பதில்லை. பாராளுமன்ற இணைய தளத்தில் ஒவ்வொரு உறுப்பினர் பற்றிய தகவல்களை வெளிடுகிறார்கள்.
PRS India ;என்கிற ஒரு அமைப்பு அந்த விவரங்களை தொகுத்து வெளியிருகிறது. அந்த அடிப்படையில், 2010 மார்ச் வரையிலான விவரங்களீன் அடிப்படையில், பிரைம் பாயிண்ட் அறக்கட்டளை, அகில் இந்திய அளவில் அதிக அளவில் விவாதங்களில் பங்கேற்றல், கேள்வி கேட்பதில் முதலாவதாக வந்த திரு ஹன்ஸ்ராஜ் என்கிற மாகராஷ்டிர எம்.பிக்கும், தமிழக அளவில் முதலாவதாக வந்த திருநெல்வேலி எம்.பி திரு எஸ். எஸ். இராமசுப்புவிற்கும் கடந்த மே 1ம் தேதி, விருது அளித்து கவுரவித்தது. (அந்த செய்தி)
PRS India அமைப்பு தற்போது, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றிய முழு விவரத்தையும் வெளியிட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 22 முதல் மே 7 வரை நடந்த 32 அம்ர்வுகளில் எப்படி உறுப்பினர்கள் பங்கேற்றார்கள் என்கிற அனைத்து விவரங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
சிறந்த முறையில் பங்கேற்ற எம்.பிக்கள் :)

திருநெல்வேலி எம்.பி. திரு இராமசுப்பு, இந்த தொடரில், 109 கேள்விகள் கேட்டும், 11 முறை விவாதங்களீல் பங்கேற்றும் தமிழ்நாட்டிலேயே, முதலாவதாக வந்துள்ளார். இது தவிர அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்று 100 சதவிகித வருகையையும் பதிவு செய்துள்ளார். அவரது பணிகளுக்கு, வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தமிழ் நாட்டு மக்கள் சார்பில் தெரிவிக்கிறோம்.
மேலும் தென்காசி உறுப்பினர் திரு லிங்கம் அவர்களும், சென்னை உறுப்பினர் திரு டி. கே. எஸ். இளங்கோவனும், 100 சதவிகித வருகையை ப்திவு செய்துள்ளார்கள்.
கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. திரு சுகவனமும், தேனி தொகுதி எம்.பி. திரு ஆருணும் கேள்வி கேட்பதில் திரு இராமசுப்புவிற்கு அடுத்த அளவில் தமிழ்நாட்டில் வந்துள்ளார்கள்.
கேள்வி கேட்காத எம்.பிக்கள் :(
கள்ளகுறிச்சி எம்.பி. திரு ஆதிசங்கர் இந்த பட்ஜெட் தொடரில் எந்த கேள்வியும் கேட்கவில்லை, விவாதங்களிலும் பங்கேற்கவில்லை.
சிதம்பரம் தொகுதி எம்.பி. திரு திருமாவளவன் 14 சதவிகித வருகையை பதிவு செய்து ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டார்.
திரு தனபால் (திருவண்ணாமலை(, திரு ஓ.எஸ். மணியன் (மயிலாடுதுறை), திரு வேணுகோபால் (திருவள்ளூர்) ஆகிய மூன்று எம்.பிக்களும் த்லா இரண்டு முறை கேள்விகள் அல்லது விவாதங்களில் பங்கேற்றுள்ளார்கள்.
அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்