சென்னை ஆல் இந்தியா ரேடியோ எஃப்.எம் ரெயின்போ (101.4 MHz) அலை வரிசையில் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் 11 மணிக்கு இளைஞர்களுக்காக ‘அடுத்தது என்ன’ என்கிற ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறார்கள். ஒரு மணி நேரம நடக்கும், இந்த நிகழ்ச்சியில், பல துறைகளிலிருந்தும் அனுபவம் பெற்ற வல்லுநர்களை அழைத்து, நேயர்கள் தொலைபேசி மூலம் கேட்கும் சந்தேகங்களூக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.
சரவணனன் (RJ) மற்றும் கே. சீனிவாசன் |
இந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு பயனுள்ள ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து ரெயின்போவிலும் மறு ஒலிபரப்பு செய்கிறார்கள்..
கடந்த பிப்ரவரி 19ம் தேதி (2011) காலைக்கான நேரடி ஒலிபரப்பிற்கு, என்னை அழைத்திருந்தார்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான திறமைகள் என்ன என்பதைப்பற்றியும், அந்த திறமைக்ளை எவ்வாறு வளர்ப்பது பற்றியும், நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
திரு அண்ணாமலை பாண்டியன் தயாரித்த இந்த நிகழ்ச்சியை ஆர். ஜே சரவணன் சுவையாக தொகுத்து வழங்கினார். ஒரு மணீ நேரம் நேரடி ஒலிபரப்பான இந்த் நிகழ்ச்சியை, 35 ந்மிடங்களுக்கு சுருக்கி, முக்கியமான கருத்துக்களை மட்டும், நான் கீழே கொடுத்துள்ளேன். கீழ்காணும் பிளாஷ் பிளேயரில், ‘பிளே’ பட்டனை அழுத்தி, கேட்கலாம். இந்த நிகழ்ச்சி கிராம்ப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் நான் சொன்ன கருத்துக்கள் தொடர்பாக, ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், என்னை prpoint@gmail.com என்கிற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
ஆடியோவில் கேட்க:
இந்த நிகழ்ச்சியை MP3 ஃபைலாக பதிவிறக்கம் செய்ய, இந்த லிங்கை, வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் சேமிக்கலாம் (35 MB).
இந்த நிகழ்ச்சியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.