This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

சனி, 25 ஏப்ரல், 2009

இலங்கை பிரச்சனை தமிழக தேர்தலை பாதிக்குமா?

வெற்றிகுரல் இதழ் 12

தமிழக அரசியல் களம் சூடாகி விட்டது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. அணிகள் மோத தயாராகி விட்டன. இந்த நிலையில், தமிழக மக்களிடையே, எந்தெந்த பிரச்சனைகள் தேர்தல் பிரச்சனைகளாக உருவாகி வருகின்றன என்பது பற்றி விவாதங்கள் மீடியாக்களில் வருகின்ற்ன. அனைத்து கட்சிகளும், இலங்கை பிரச்சனையை பெரிதாக்கி, அதுதான் மக்கள் மனத்தில் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றன.

மேலும் விஜயகாந்த், திமுக அணிக்கு எதிரான வாக்குகளை பிரித்து, திமுக விற்கு ஆதரவாக இருப்பதாகவும் மீடியாக்கள் மத்தியில் ஒரு பேச்சு அடிபடுகிற்து.

தமிழக தேர்தல் பிரச்சனைகள் பற்றி, வெற்றி குரலுக்காக, நான் டெலிகிராப் பத்திரிகையின் இணை ஆசிரியர் திரு ஜி.சி. சேகர் அவர்களை தொலைபேசி மூலம் பேட்டி கண்டேன். திரு சேகர் ஒரு பிரபல பத்திரிகையாளர். கடந்த 30 வருடங்களாக பல வட இந்திய பத்திரிகைகளில் அரசியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறார்.

இந்த பேட்டியை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த ஆடியோ,பிராட் பேண்டுகளில் சீராக வரும். ஏதாவது த்டங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க் டாப்பில் சேமித்து mp3 பிளேயரில் கேட்கலாம்.



அவரது பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://podbazaar.com/permalink/144115188075857400

புதன், 22 ஏப்ரல், 2009

ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் - அடித்து சொல்கிறார் அர்ஜுன் சம்பத்

Arjun Sampath, Hindu Makkal Katchiவெற்றி குரல் - இதழ் 11

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சிகள் அணி அமைத்து விட்டன. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இந்து மக்கள் கட்சி, ஜெயல்லிதாவிற்கு அதிரடியாக ஆதரவு தந்து, பிரச்சாரத்தை துவக்கி விட்டது. பெரியார் சிலை உடைப்பு, தாய் மதம் திரும்புதல் முதலிய நிகழ்ச்சிகள் மூலமாக தமிழக மக்களிடையே பிரபலமானவர் திரு அர்ஜுன் சம்பத். சில மாதங்களுக்கு முன், தமிழக மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டவர். சில நாட்கள், தலைப்பு செய்தியாகி இருந்தவர்.

வெற்றிகுரல் சார்பாக, நான் அவரை தொலைபேசி மூலம் பேட்டி கண்டேன். ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்று அடித்து சொல்லும் அர்ஜுன் சம்பத், அவரது கொள்கைக்கு எதிரான கம்யூனிஸ்ட்டுகளுடன் எவ்வாறு செயல் படுவார் என்று கூறினார். தமிழகத்தில், தேர்தலில் மக்கள் முன் இருக்கும் பிரச்சனைகள், இலங்கை பிரச்சனை, சுவிஸ் வங்கி கணக்குகள், தேர்தலுக்கு பின் அமைய இருக்கும் அரசு ஆகியவை பற்றியெல்லாம் பேசினார். அவரது பரபரப்பான பேட்டியை நீங்களூம் கேளுங்களேன்.

கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை கிளிக் செய்து அவரது பேட்டியை கேட்கவும். (இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க்டாப்பில் சேமித்து, mp3 பிளேயரில் கேட்கவும்) - 15 நிமிடம்.



இந்த பேட்டியை கீழ்கண்டதளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857398



செவ்வாய், 14 ஏப்ரல், 2009

கமலஹாசனைப்பற்றி - ரேடியோ மிர்ச்சி ஆர். ஜே சுஜாதாவின் கலகலப்பான பேட்டி

Radio Mirchi RJ Sujathaவெற்றி குரல் இதழ் 10

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வழக்கமாக எஃப். எம் ரேடியோக்களில் பணிபுரியும் ரேடியோ ஜாக்கிகள் மற்றவர்களைத்தான் பேட்டி காண்பார்கள். ஒரு மாறுதலுக்காக, ரேடியோ மிர்ச்சியில் பணிபுரியும் பிரபலமான ஆர்.ஜே. சுஜதாவை தொலைபேசியில் பேட்டி கண்டேன்.

சுஜாதா, ரேடியோவில் பணிபுரிந்தாலும், கமலஹாசனுடன் இரண்டு படங்களில், உதவி டைரக்ஷன், புரொடக்ஷன், காஸ்டியூம் ஆகிய பணிகளில் இணந்து பணியாற்றியுள்ளார். கமலஹாசனுடன் பணியாற்றும் போது, நடந்த சுவையான சம்பவங்களை கூறினார். கமலஹாசனின் வெற்றிக்கான ரகசியங்களையும் கூறினார். அந்த பேட்டியை நீங்களும் தான் கேட்டு ரசியுங்களேன்.

கீழ்காணும் பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க்டாப்பில் சேமித்து டவுன்லோடு செய்து mp3 பிளேயரில் கேட்கலாம்.



இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857394

புதன், 8 ஏப்ரல், 2009

சிதம்பரத்தை ஷூவினால் தாக்கிய ஜர்னைல் சிஙகிடம் பிரத்தியேக பேட்டி

Jarnail Singh asking question to the Minister, before the incident
நேற்று (7 ஏப்ரல் 09) மதியம், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது, ஜர்னைல் சிங் என்கிற ஒரு இந்தி பத்திரிகை நிருபர், 1984ல் சுமார் 3000 சீக்கியரகளை கொன்ற வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஜகதீஷ் டைட்லரை சி.பி.ஐ விடுவித்தது பற்றி வினவினார். சிதம்பரம் தந்த மழுப்பனான பதிலில் திருப்தி ஆகாத ஜர்னைல் சிங், தனது காலிலிருந்த ஒரு ஷூ வை கழட்டி சிதம்பரத்தை நோக்கி வீசி தன்னுடைய அதிருப்தியை காட்டினார்.

இது அனைத்து டி.வி.க்களிலும், மீடியாக்களிலும் தலைப்பு செய்தியாக இன்று வந்துள்ளது. நான் இன்று மதியம் ஜர்னைல் சிங்கை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பாட்யூனிவர்சலுக்காக ஒரு பேட்டி கண்டேன். அவர் எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்று வினவினேன்.

அவர் தன்னுடைய நடத்தைக்காக மிகவும் வருத்தப்பட்டார். தான் சிதம்பரத்தை தாக்க வேண்டும் என்கிற நோக்கில் ஷூவை வீசவில்லை என்றும், அவரிடம் தன்னுடைய அதிருப்தியை காட்டவும், சிதம்பரத்தின் அருகிலிருந்த ஒரு வெற்றிடத்தை நோக்கி ஷூவை வீசியதாகவும் என்னிடம் தெரிவித்தார். 1984ம் ஆண்டு நடந்த சீக்கியர்களின் படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்று் கூறினார். சிதம்பரத்தை சந்திக்கும்போது, அவரிடம் 'வருத்தம்' தெரிவிப்பதாகவும் கூறினார்.

அவரது முழு ஆங்கில பேட்டியை கீழ்கண்ட தளத்தில் கேட்கலாம்.
http://www.poduniversal.com/2009/04/what-prompted-jarnail-singh-to-throw.html

தமிழக தேர்தல் களம் - ஒரு சூடான அலசல்

M R Venkatesh, Senior journalist, Chennai வெற்றி குரல் இதழ் 9

தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. ஒரளவு பெரிய அனிகள் என்ன என்பது தெரிய வந்துவிட்டது. மதிமுக மட்டும் இன்னும் தொங்கலில் உள்ளது.

தமிழக அரசியலில், எந்த வகையான பிரச்சனைகள் முன்னிறுத்தப்படும் என்பது விவாதிக்கப்படுகிறது. இந்த நிலைமையில், தேசிய தேர்தல் களம் அதிக அளவில் சூடு பிடிக்க ஆரம்பிக்கவிட்டது. வருண் காந்தி விவகாரம் அதற்கு லாலு கொடுத்த மிரட்டல் ஆகியவை பெரிய அளவில் பேசப்படுகிறது.

தமிழக மற்றும் தேசிய தேர்தல் களம் பற்றி, வெற்றி குரலுக்காக திரு எம். ஆர். வெங்கடேஷ் அவர்களை பேட்டி கண்டேன். வெங்கடேஷ் ஒரு மூத்த பத்திரிகையாளர். தற்போது, டில்லியிலிருந்து வெளிவரும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் தமிழக அரசியல் நிருபர்.

அவரது பேட்டியை கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். (இந்த ஆடியோ பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கலிருந்தால், டவுன் லோடு செய்ய இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கவும் )







இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.odeo.com/episodes/24425019-Election-2009-Tamilnadu-and-National-political-trends

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

ஜனநாயகத்தை கொண்டாடுவோம் - FM ரேடியோக்களும் கூட்டணி போடுகின்றன

ChennaiLive FM 104.8அண்மையில் இந்தியாவிஷன் ஆன்லைன் குரூப், "Celebrate Democray - Vote India" என்கிற பிரச்சாரத்தை துவக்கியது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களும், இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்து தன்னுடைய கருத்துகளையும் பதிவு செய்தார். இந்த பிரச்சாரத்தின் நோக்கம், இந்திய குடிமகன் ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என்பதே. தேர்தல் தினத்தன்று, அனைவரும், ஒட்டளிக்கும் இடத்திற்கு சென்று, ஓட்டளிக்க வேண்டும் என்பதே.

நாம் ஒட்டளிக்க வேண்டும் என்பதற்காகத்தான், நம் முன்னோர்கள் 200 ஆண்டுகாலம், அந்நியருடன் போராடி, சிறை சென்று, தங்கள் வாழ்வை தியாகம் செய்தார்கள். அவர்கள் செய்த தியாகத்தின் பலனை இன்று நாம் அனுபவிக்கிறோம். நம்முடைய கடமை, அவர்கள் வாங்கி கொடுத்த ஜனநாயகத்தை சிற்ப்பாக்க வேண்டும்.

ம்காகவி பாரதியார் இந்த சுதந்திர போராட்டங்களை பற்றி கூறுகையில், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா, கண்ணீரால் காத்தோம். கருகத்திருவுளமோ" என்று சுதந்திரம் வருவதற்கு முன்பே பாடினார். நம் முன்னோர்கள், கண்ணீரால் காத்த இந்த சுதந்திரத்தை சிறப்பாக்க வேண்டிய கடமை, அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு உண்டு. இந்த கருத்துகளைத்தான், இந்தியா விஷன் உறுப்பினர்கள், பரப்பி வருகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை (4 ஏப்ரல் 2009), சென்னை லைவ், FM ரேடியோ, என்னை, இதுபற்றி பேட்டி எடுத்தனர். இளைஞர்களான சனோபார் என்கிற தயாரிப்பாளரும், அஜய் என்கிற் ரேடியோ ஜாக்கியும், சென்னை லைவ் FM எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

இந்த பேட்டியை நீங்களும் கேளுங்களேன். கீழ்காணும் பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். ( இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், டவுன்லோடு செய்து, mp3 பிளேயரில் கேட்கலாம்)



இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857388

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...