கடந்த 2006 தேர்தலில், திமுக வெளிய்ட்ட தேர்தல் அறிக்கையில், கலர் டிவி போன்ற இலவசங்கள் இடம் பெற்றதால், அந்த தேர்தல் அறிக்கை, ‘கதாநாயகி’ என்று வர்ணிக்கப்ட்டது. திமுகவின் வெற்றிக்கும் அது ஒரு காரணமாக இருந்தது என்று கூறுபவர்களும் உண்டு. இலவசங்களுக்கு கொடுத்த முன்னுரிமை, தனிப்பட்ட மனிதனின் வருமானத்தை பெருக்குவதற்கும், தமிழக பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் கொடுக்கப்படவில்லை என்று அப்போதே, பல பொருளாதார வல்லுநர்கள் விமர்சித்தார்கள்.
தற்போது, 2011ல், திமுக அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவில், தமிழக அரசின் கடன் சுமை ஒரு லட்சம் கோடியாகி, தமிழ்நாட்டு மக்களை கடனாளியாக்கி விட்டது, மின்வெட்டால் பொருலாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் விமர்சிக்கப்படுகிறது. தமிழக அரசின் ஆண்டு வருமானத்தில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ‘டாஸ்மாக்’ மூலமாக, ‘குடிமகன்கள்’ வழங்கி வருகிறார்கள்.
2011 தேர்தல் தேதிகள் அறிவித்தவுடன், திமுக, அதிமுக மற்றும் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டில், திமுக மற்றும் அதிமுக ஆகியவைகளில் ஒரு கட்சிக்கு தான் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதால், இவர்களது தேர்தல் அறிக்கைகளை மட்டும் அலசலாம் என்று எண்ணியுள்ளேன்.
இந்த இரு தேர்தல் அறிக்கைகளையும், pdf ஃபைலாக என்னுடைய தளத்தில் ஏற்றியுள்ளேன். அவைகளை டவுன்லோடு செய்து கொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
திமுக தேர்தல் அறிக்கை 2011
அண்ணா திமுக தேர்தல் அறிக்கை 2011
நான் சுருக்கமாக இந்த தேர்தல் அறிக்கைகளை விளக்கியிருந்தாலும், வாசகர்கள் இந்த அறிக்கைகளை டவுன்லோடு செய்து, அவைகளை ஒப்பிட்டுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.
திமுகவின் தேர்தல் அறிக்கை 2011
1. 61 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில், 36 பக்கங்களில் மட்டும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், என்ன செய்வார்கள் என்பதை விளக்கியுள்ளார்கள். மற்ற பக்கங்களீல், கலைஞரின் செய்தியும், தங்களுடைய முந்தைய சாதனைகளையும் கூறியுள்ளார்கள்.
2. மிக்சி,கிரைண்டர், லேப்டாப், பஸ் பாஸ், இலவச அரிசி போன்ற இலவசங்களும் இடம் பெற்றுள்ளன.
3. மாநில சுயாட்சி, நதி நீர் பங்க்கீடு, மொழி கொளகை, ஈழ பிரச்சனை, மநில பட்டியலில் கல்வி, நதிகள் தேசிய மயமாக்குதல் மற்றும் பல பிரச்சனைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தவதாக கூறியுள்ளார்கள்.
4, விவசாயத்தை பெருக்க , விவசாய சேவை மையங்களையும், ஒன்றிய அளவில், வேளான் உற்பத்தி கருவிகளுக்கான வங்கி, அதற்கான தொழிற்பேட்டை, இயற்கை வேளாண்மைக்கு ஒரு பிரிவும் அமைக்கப்படும்.
5. வேலை வாய்ப்பை பெருக்க, ‘சிறப்பு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி’ கள் மாவட்டம் தோறும் நட்த்தப்படும்.
6. நிர்வாக சீரமைப்பு, வறுமை ஒழிப்பு, மகளிர் சுய உதவி குழு, தடையில்ல மின்சாரம், நீர்வள மேம்பாட்டு திட்டம்,, மீனவர் நலன், மைனாரிட்டிகளின் நலன், கால்நடை வளம், மக்கள் நலவாழ்வு, மாற்று திறனாளிகளின் நலன், ஆதி திராவிடர்களின் நலன் போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
7. இரண்டு மனநல மருத்துவ மனைகளும், ஒரு காச நோய் மருத்துவ மனையையும் துவக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகளை நிறுவ உறுதி அளித்துள்ளார்கள். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு, இலவச dialysis தரவும் உறுதி அளித்துள்ளார்கள்.
8. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பல்கலைகழகம் நிறுவப்படும்.
9. மதுரை மற்றும் கோவை மாநகரங்களில் மெட்ரோ ரயில் விரிவாக்கம்.
10. கலஞர் வீடு திட்டத்தில் மானியம் ஒரு லட்சம்.
பொதுவாக, இந்த தேர்தல் அறிக்கையில், வாக்குறுதிகளை ஒரு descriptive ஆகவே கொடுத்துள்ளார்கள். வருமானத்தை பெருக்கும் வழிமுறைகள் விளக்கப்படவில்லை. தற்போது ஒரு லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழகத்தை, எப்படி, கடனில்லா மாநிலமாக ஆக்குவது பற்றி எந்த விளக்கமும் இல்லை. எப்படி தடையில்லா மினசாரம் கிடைக்கும் என்பதை விளக்கவில்லை.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை 2011
1. 34 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் 54 பாயிண்ட்களாக தங்கள் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள். இதில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து இலவசங்களும் இடம் பெற்றுள்ளன. இலவசங்கள் தவிர, தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களையும், புள்ளி விவரங்களுடனும், அவைகளை அடையும் வழிமுறைகளை விளக்கியும் அளித்துள்ளார்கள். சில முக்கியமான திட்டஙகள்.
2, இரண்டாம் விவசாய புரட்சி யாக ஆண்டு அரிசி உற்பத்தி 8,6 மில்லியன் டன்னிலிருந்து 13.45 மில்லியன் டன்னாக உயர்த்துவது. இதற்காக, 30,000 ஹெக்டேர் நிலத்தை, சிறப்பு சிறுபாசன் திட்டத்தின் கீழ் கொண்டு வருவது. கரும்பு உற்பத்தியை, 475.5 லட்சம் டன்னிலிருந்து, 1000 லட்சம் டன்னிற்கு உயர்த்துவது.
3. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் தோறும் குடும்பத்திற்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்ப்ட்ட குடிநீர் வழஙக உறுதி அளித்துள்ளார்கள். இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள உருவாகவும், 5.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும், ஒரு லட்சம் பேருக்கு, போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.
4. தமிழ்நாட்டில் 1500 கிராமங்களிலும், 24 மணி நேரமும், தொலை தூர ம்ருத்துவ மையங்கள் (Tele medicine centres) அமைக்கவும், காப்பீட்டு திட்டத்தை சீரமைத்து அமல் படுத்தவும், நடமாடும் மருத்துவ மனைகள் அமைக்கவும் உறுதி அளித்துள்ளார்கள்.
5. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மூன்று லடம் பேருக்கு, 1.80 லடசம் மதிப்புள்ள 300 சதுர அடியில், பசுமை வீடுகள் (Green Houses) இலவசமாக வழங்கப்ப்டும். மற்றும் 40 லட்சம் நடுத்த்ர வகுப்பினருக்கு 1 லட்சம் மனியத்துடம் விரிவாக்கம் செய்யப்படும்.
6. மின்சார திருட்டை ஒழிக்க ஒரு படை அமைத்து, வினியோக முறையில் மாற்றம் செய்து, 3 ஃபேஸ் கரண்ட் தடையில்லாமல் வழங்கப்ப்டும்.
7. தற்போது 4500 மெகா வாட் கரண்ட் உற்பத்தி ஆகிறது. தமிழ்நாட்டிற்கு 6000 மெகா வாட் கரண்ட் தேவைப்படுகிறது. 2013க்குள் 5000 மெகாவாட் மின்சாரம் மேலும் அதிகமாக உற்பத்தி செய்யப்படும். 2012க்குள், 151 நகராட்சிகள் மற்றும் அனைத்து மாநகாரட்சிகளிலும், கழிவுகளிநிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். அந்த நகரங்கள், கார்பன் நியூட்ரல் நகரஙக்ளாக மாற்றப்படும். 2013க்குள், பத்து 300மெகாவாட் சோலார் எனர்ஜி பார்க்குள் உருவாக்கப்பட்டு, 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இது தவிர, இயற்கை எரிவாயு மூலம் 161 கிராம பஞ்சாயத்துகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த இயற்கை எரிவாயு மின்சாரம் தயாரிப்பில், சுமார் 64,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்டும்.
8. தற்போது தினமும் 2.5 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. இதை 10 மில்லியன் லிட்டராக அதிகரிக்க முயற்சிக்கப்படும். இதற்கு, 6000 கிராமங்களில், 60,000 கறவை மாடுகள் இலவசமாக் வழஙகப்பட்டு, சீரமக்கப்பட்ட பால் பண்ணைகள் உருவாக்கப்படும். இதனால் மீண்டும் ஒரு ‘வெண்மை புரட்சி’ உருவாக்கப்படும். இதனால், சுமார் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
10. கால்நடை வளம் பெருக, அடித்தள மக்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.
11. நகர்ப்புற வசதிகள் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டி, 30 அல்லது 40 கிராமங்கள் இணைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும்.
12. மாணவர்கள் இடை நிறுத்தத்தை (school drop out) தவிர்க்க கல்வி உதவி வழங்கப்படும். மற்றும் கற்றல் குறைபாடு (Dyslexia) உள்ள சிறுவர்களுக்கும், சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும்.
13. உயர் கல்வியை உயிர்ப்பிக்க, 12 அம்ச திட்டம் உருவாக்கப்படும்.
14. 150 கிராமப்புற BPOக்கள் உருவாக்கப்படும்.
15. சென்னை, மதுரை, திருச்சி, கோவை நகரங்களில் மோனோ ரயில் அமைக்கப்படும்.
16. அனைத்து திட்டஙகள் வழியாகவும், அரசின் வருமானம் ஐந்து ஆண்டுகளில், 1,20,000 கோடி ரூபாய் அதிகரிக்கும். இந்த அதிக வருமானம் இலவசங்களை சமாளிக்கவும், தற்போதுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை அடைக்கவும் பயன்படும்.
பொதுவாக, அண்ணா திமுக தேர்தல் அறிக்கையில், இலவசங்களுக்கு மக்களை கவரும் வகையில் முன்னுரிமை கொடுத்திருந்தாலும், தங்களது குறிக்கோள்களை, புள்ளிவிவரஙகளூடன் விளக்கியுள்ளதுடன், அதன் வழிமுறைகளையும் விளக்கியுள்ளது மிகவும் சிறப்பு அம்சமாகும். இலவசங்களைமட்டும் பார்த்து விட்டு, அதிமுகவின் தேர்தல் அறிக்கை திமுகவின் ஸெராக்ஸ் காப்பி என்று விமர்சனம் எழுந்தது. அதிமுகவினரும், தங்களது தேர்தல் அறிக்கையை விளக்கமாக மேடைகளில் பேசாததாலும், பத்திரிகைகள் இந்த அறிக்கையை படித்து முழுமையாக விமர்சனம் செயயாததாலும், அதிமுக அறிக்கையைன் நல்ல அம்சங்கள் வெளிவரவில்லை.
அதே சமயம், சென்னையில், மெட்ரோ ரயில் திட்டம் பாதியில் இருக்கும் போது, இந்த அறிக்கையில், மோனோ ரயில் பற்றி இருப்பதால், மக்க்ளுக்கு ஒரு குழப்பம் உருவாகிற்து. எந்த ஆட்சியில் துவங்கினாலும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் நல்ல திட்டங்கள் தொடர வேண்டுமென்று தான் மக்கள் விரும்புகிறார்கள்.
பொதுவாக அதிமுக அறிக்கை பல நாட்கள், ஆராய்சி செய்து, பொருளாதார வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது. அண்ணா திமுக ஆட்சி அமைத்தால், அவர்கள் கூறிய திட்டங்களை, தொய்வு இல்லாமல் நடைமுறைப்படுத்தினால், தமிழ்நாடு இந்தியாவில் ஒரு முன்னணி மாநில மாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், தேர்தல் அறிக்கையை பொருத்தவரை, நடு நிலையாக ஆராயும் போது, திமுக வின் அறிக்கைக்கு 100க்கு 40 மார்க்குகளும், அதிமுகவின் அறிக்கைக்கு 80 மார்க்குகளும் அளிகலாம் என்பது என் கருத்து.
இந்த இரு தேர்தல் அறிக்கைகளையும், pdf ஃபைலாக என்னுடைய தளத்தில் ஏற்றியுள்ளேன். அவைகளை டவுன்லோடு செய்து கொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
திமுக தேர்தல் அறிக்கை 2011
அண்ணா திமுக தேர்தல் அறிக்கை 2011
Thanks for making availbale the manifestos of the major parties contesting elections, 2011.
பதிலளிநீக்குI appreciate your efforts aimed at improving voter awareness.