This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

செவ்வாய், 29 மார்ச், 2011

தமிழக தேர்தல் 2011 - தேர்தல் அறிக்கையின் இலவசங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.  வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன.  அரசியல் தலைவர்கள் தங்கள் சூறாவளி சுற்று பயணங்களை துவக்கி விட்டனர்.

அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.  முக்கிய அரசியல் கட்சிகளான திமுகவும் அஇஅதிமுகவும் வெளியிடுள்ள அறிக்கைகள் மக்களிடையே விவாதிக்கப்பட்டு வருகின்றன.

2006 தேர்தலில், ‘கதாநாயகன்’ என்று வர்ணிக்கப்பட்ட திமுகவும் தேர்தல் அறிக்கை, கலர் டி.வி. உட்பர பல இலவசங்களை கவர்ச்சிகரமாக வெளியிட்டது.  அதனால் திமுக ஆட்சிக்கு வந்தது.

ஒரு பக்கம், கலர் டிவி கொடுத்து, மக்களை மகிழ்ச்சிப்படுத்தினாலும், இதன் பின்னணீயில், கலைஞரின் இராஜ தந்திரம் உள்ளது என்று விமர்சிப்பவர்களூம் உண்டு.  ஒரு கோடியே அறுபது லட்சம் கலர் டிவி களை கொள்முதல் செய்ததில், சுமார் 100 கோடி ரூபாய் கமிஷனாக கலைஞர் குடும்பத்திற்கு கிடைத்தது என்று கூறுபவர்களூம் உண்டு.  விஞ்ஞான பூர்வமாக ஊழல் செயவதில் வல்லுநர் என்று நீதிபதி சர்க்காரியாவினால் பாராட்டு பெற்றவராக இருப்பதால், கலைஞருக்கு 100 கோடி கமிஷன் கிடைத்திருக்கும் என்று நம்புவர்களூம் உண்டு.

இது தவிர, கலர் டிவி பெற்ற அனைவருக்கும், அரசு இலவச கேபிள் இணைப்பு கொடுக்கவில்லை.  அனைவரும் சன் டிவியின் குழுமத்தை சார்ந்த சுமங்கலி மூலம் தான் கேபிள் இணைப்பு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள்ப்பட்டார்கள்.  இதன் மூலம் சுமார் 40 கோடி முதல் 50 கோடி வரை மாத வருமானம் சன் குழுமத்திற்கு லாபம் வந்ததாக கூறுகிறார்கள்.

க்லைஞர் காப்பீட்டு திட்டட்த்தின் மூலம் அளிகப்பட்ட வசதிகளும் கலைஞருக்கு வேண்டப்பட்ட 2ஜி யில் சம்மந்தப்பட்ட ஸ்டார் இன்ஷுயூரன்ஸ் நிறுவனம் மூலமாக அளிக்கப்பட்டது.  இதிலும் பல சர்ச்சைகள் உள்ளன.

கலைஞர் அறிவித்த அனைத்து இலவசங்களின் பின்னணியிலும், அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் நல்ல வருமான்ம் இருந்ததாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 2011 தேர்தலுக்கும், திமுக பல இலவசங்களை அறிவித்துள்ளது.  இதே போல்,  அதிமுகவும் பல இலவசங்களை அறிவித்துள்ளது.  “ஏற்பது இகழ்ச்சி” என்று வாழ்ந்த இந்த தமிழ் இனத்தை, இந்த இரு கழகங்களூம், கேவலப்படுத்துவாக அமைந்துள்ளது. வளர்ச்சி திட்டங்கள் அதிக அளவில் இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

2006ல் இலவசங்களை அறிவித்த கலைஞர், 2011ல், ஒரு லட்சம் கோடிக்கு மேல், கடனை மக்களுக்கு அளித்துள்ளார்.  இதனால் வரும் வருமானத்தை, தனது குடும்பத்திற்கு அளித்துள்ளார்.

இந்தியாவின் எந்த பகுதிகளிலும், இது போன்று இலவசங்கள் இல்லை.  குஜராத் தேர்தலின் போது, காங்கிரஸ், இலவச மின்சாரம் அறிவித்த போது, நரேந்திர மோடி, இலவச மின்சாரம் தருவதில்லை என்றும், தடையில்லா மினசாரம் தருவதாக வாக்குறுதி அளித்தார்.  மோடி தான் வெற்றி பெற்றார்.  இது நாள் வரை, குஜராத்தில் தடையில்லா மின்சாரம் அளிக்கப்படுகிறது. குஜராத் மக்களும் இலவசத்திற்கு அலைவதில்லை.  குஜராத்தில் ‘டாஸ்மாக்’ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது குஜராத், ஒரு லட்சம் கோடி, இருப்பு வைத்துள்ளது.

இந்த இலவசங்களைப்பற்றி, இந்து மக்கட் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத்துடன் ஒரு பேட்டி கண்டேன்.  அவரது கருத்துக்களை, ‘பிளே’ பட்டனை சொடுக்கி, கேட்கவும்.


இந்த பேட்டியை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=ZY4B6nddtI0

புதன், 2 மார்ச், 2011

கவுதம் மேனனின் நடுநிசி நாய்கள், தமிழர் பண்பாட்டை இழிவு படுத்துகிறதா?

அண்மையில், பிரபல இயக்குநர் கவுதம் மேனனின் இயக்கத்தில், ‘நடுநிசி நாய்கள்’ என்கிற ஒரு திரைப்படம் வெளியானது.  அதில், மனநோயாளியான ஒருவன், தன்னுடைய வளர்ப்பு தாயுடன் தகாத உறவு கொள்வதாக அமைத்துள்ளார்கள்.
அர்ஜுன் சம்பத்
இந்த படம் வெளியானவுடன், இந்து மக்கள் கட்சியினர், இந்த் காட்சி, தமிழர்கள் பண்பாட்டையும், இந்திய கலாச்சாரத்தையும் இழிவு படுத்துவதாக கூறி ஒரு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் குறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில த்லைவர் அர்ஜுன் சம்பத்திடம் கேட்டபோது, “மனநோயாளி என்கிற போர்வையில், வக்கிரங்களை அனுமதித்தால், அது ஒரு பெரிய கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
இதே கவுதம் மேனன், வாரணமாயிரம் படத்தில், ஒரு தந்தையின் பெருமைகளை விளக்கியிருந்தார்.  ஒரு சிறந்த இயக்குநர், கருத்துரிமை என்கிற பெயரில், கலாச்சார சீரழிவிற்கும், வக்கிரமத்திற்கும்  வழி வகுத்தது, பல நடுநிலையாளர்களூக்கும் மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது.
இன்றைய இளைஞர்களுக்கு, இண்டர்நெட், சினிமா, டிவி, மீடியா, நண்பர்கள் மூலமாக பல தேவையற்ற தகவல்கள் வந்து சேரும் போது,  கவுதம் மேனன் போன்ற இயக்குநர்கள், மேலும் சமுதாய பொருப்புடன் நட்ந்து கொண்டால்,  நாட்டிற்கு நல்லது.
அர்ஜுன் சம்பத்தின் பேட்டியை, கீழ்கண்ட பிளேயரில், கேட்கலாம்.
இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...