அண்மையில், பிரபல இயக்குநர் கவுதம் மேனனின் இயக்கத்தில், ‘நடுநிசி நாய்கள்’ என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. அதில், மனநோயாளியான ஒருவன், தன்னுடைய வளர்ப்பு தாயுடன் தகாத உறவு கொள்வதாக அமைத்துள்ளார்கள்.
அர்ஜுன் சம்பத் |
இந்த படம் வெளியானவுடன், இந்து மக்கள் கட்சியினர், இந்த் காட்சி, தமிழர்கள் பண்பாட்டையும், இந்திய கலாச்சாரத்தையும் இழிவு படுத்துவதாக கூறி ஒரு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் குறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில த்லைவர் அர்ஜுன் சம்பத்திடம் கேட்டபோது, “மனநோயாளி என்கிற போர்வையில், வக்கிரங்களை அனுமதித்தால், அது ஒரு பெரிய கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
இதே கவுதம் மேனன், வாரணமாயிரம் படத்தில், ஒரு தந்தையின் பெருமைகளை விளக்கியிருந்தார். ஒரு சிறந்த இயக்குநர், கருத்துரிமை என்கிற பெயரில், கலாச்சார சீரழிவிற்கும், வக்கிரமத்திற்கும் வழி வகுத்தது, பல நடுநிலையாளர்களூக்கும் மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது.
இன்றைய இளைஞர்களுக்கு, இண்டர்நெட், சினிமா, டிவி, மீடியா, நண்பர்கள் மூலமாக பல தேவையற்ற தகவல்கள் வந்து சேரும் போது, கவுதம் மேனன் போன்ற இயக்குநர்கள், மேலும் சமுதாய பொருப்புடன் நட்ந்து கொண்டால், நாட்டிற்கு நல்லது.
அர்ஜுன் சம்பத்தின் பேட்டியை, கீழ்கண்ட பிளேயரில், கேட்கலாம்.
இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக